Type Here to Get Search Results !

உலக ஞாயிறு பள்ளி தினம் வழிபாட்டு முறை | World Sunday School Day Liturgy | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை - கிறிஸ்தவ கல்லித் துறை
உலக ஞாயிறு பள்ளி தினம்
வழிபாட்டு முறை

தொடக்க பாடல்:
சிறுபிள்ளைகள் பலவிதமான பொருட்களை ஆராதனை தொடங்கும்போது வரும் பவனியில் கொண்டு வந்து பலிபீடத்தின் முன் படைக்கலாம்.

வழிபாட்டிற்கு அழைப்பு:
கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான சகோதர, சகோதரிகளே,

நாங்கள் நல்ல பாடகர்களாகவோ, கவனிப்பவர்களாகவோ, கதை சொல்லுபவர்களாகவோ மற்றும் கைவினை வல்லுநர்களாகவோ இல்லாதபோதிலும் திருச்சபையால் நாங்கள் மிகவும் நேசிக்கப்பட்டுள்ளோம். இயேசு சிறுபிள்ளைகளை நேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அந்த செயலால் ஏமாற்றம் அடைந்தார்கள் என்று கேட்டிருக்கிறேன்.

இயேசு உங்கள் இருதயத்தில் வாழ்வதன் மூலம் உங்கள் வாழ்வை மாற்றினார் என்பதை உங்களிடமிருந்து நாங்கள் கேட்டிருக்கிறோம். இதை நாங்கள் விசுவாசிக்கிறோம். இயேசு எங்கள் வாழ்க்கையையும் மாற்ற வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.

எங்களது ஞாயிறுபள்ளி உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களால் சிரிப்பால், மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. நம்மிடையே உள்ள தூரத்தைக் குறைத்து நட்பை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கிறது.

சில நேரங்களில், சோக இதயத்துடன் நாங்கள் ஞாயிறு பள்ளிக்கு வந்தபோது நீங்கள் எங்களை அரவணைத்தீர். எங்களோடு பேசினீர். எங்களுக்கு தைரியத்தை கொடுத்தீர். அதன்மூலம் எங்கள் இதயத்தில் உள்ள சோகம் நீங்கி, நாங்கள் நன்றாக உணர்ந்தோம்.

இப்போதுதான் நாங்கள் விசுவாசத்தைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறோம். எங்கள் விசுவாசம் உங்கள் விசுவாசத்தைப் போல் அல்ல. ஆனாலும் இயேசு சொல்லுகிறார், “பெரியவர்கள் குழந்தைகளைப் போல் விசுவாசமுடையவர்களாயிருக்க வேண்டும் என்று“. அது சில அர்த்தங்களை நமக்கு உணர்த்துகிறது. நீங்களும் எங்களுடன் ஒரு சிறுபிள்ளையைப் போல இருப்பதற்காக நன்றி.

பெரியவர்களுக்கு இருக்கும் சிந்தனைகள் மற்றும் உடற்திறன் இல்லாமல் நாங்கள் இங்கு வரும்போது, நீங்கள் குழந்தைகளின் பார்வையில் இருந்து உலகை எங்களுக்குக் காட்டுகிறீர்கள்.

எப்போதும் உட்கார்ந்து கேட்பதற்கு, நகர்வதற்கு, பேசுவதற்கு, பார்ப்பதற்கு, வரைவதற்கு பதிலாக நாங்கள் முன் செல்வதற்கு எங்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள். நாங்கள் நகரும்போது சுற்றிலும் உள்ள நல்ல விஷயங்களைச் செய்ய கற்றுக் கொள்கிறோம்.

கர்த்தரைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள நீங்கள் எங்களுக்கு உதவுவதால் எங்கள் இருதயத்தின் ஆழத்தில் இருந்து நாங்கள் மிகவும் மகிழ்கிறோம். கர்த்தருடைய அன்பைப் பற்றியும், எங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள நீங்கள் எங்களுக்கு உதவுகிறீர்கள். நீங்கள் இங்கு வந்திருப்பதற்கு நன்றி கூறி உங்களை வரவேற்கிறோம். இந்த சிறப்பு ஆராதனையில் நீங்களும் இணைந்து சர்வவல்ல கர்த்தரை வழிபட உங்களை அழைக்கிறோம்.

ஜெபம்:
“சிறுபிள்ளைகள் என்னிடத்திற்கு வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களைத் தடைபண்ணாதிருங்கள். பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது“ என்று உரைத்த கர்த்தாவே, நாங்கள் உங்கள் முன்பு ஜெபத்தில் நிற்கும்போது எங்களை ஆசீர்வதியும். உம்முடைய அன்பின் ஆழத்தை நாங்கள் புரிந்து அறிந்து கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். உமது நாமத்திற்குப் பயந்து, உமது மகிமைக்காக வாழும்படியான பெலத்தில் வளரும்படி, உம்முடைய கிருபையினாலும், ஞானத்தினாலும் எங்களை நிரப்பியருளும். ஜீவ வழியை எங்களுக்கு போதிப்பதையும், பயிற்சியளிப்பதையும் எங்கள் திருச்சபை செயல்படுத்த வேண்டுமென்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். உம்முடைய தெய்வீக ஞானத்தினாலும், அறிவாலும் எங்கள் அனைவரையும் நிரப்பும். உம்முடைய பரிசுத்த ஆவியானவர் எம்மை என்றென்றைக்கும் மகிமைப்படுத்தவும் பகிர்ந்து கொள்ளவும் எங்களுக்கு உதவி செய்வீராக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.

வெளிச்சத்திற்கான ஜெபம்:
நடத்துபவர்: வார்த்தையாகிய உம்மிடத்திற்கு வரும்போது, நாங்கள் பாத்திரங்களாக வருகிறோம்.

சபையார்: உம்முடைய வார்த்தை மறுபடியும் மறுபடியும் எங்கள்மேல் ஊற்றப்படுவற்க்கும், உம்முடைய வார்த்தையால் நிரப்பப்படுவதற்கும் நாங்கள் ஆயத்தமாக உள்ளோம்.

நடத்துபவர்: மாணவனைப் போல நாங்கள் உம்மிடத்தில் வருகிறோம்.

சபையார்: கற்றுக்கொள்ளும்படியாக எங்கள் இருதயத்தைத் திறந்தருளும். அதனால் நாங்கள் மற்றவர்களுக்கும் அதைக் கற்பிப்போம்.

நடத்துபவர்: நாங்கள் கருவிகளாக உம்மிடத்தில் வருகிறோம்.

சபையார்: மெல்லிய இசையை வழங்கும்படியாக நீர் எங்களை இசைக்க காத்திருக்கிறோம்.

நடத்துபவர்: நாங்கள் உம்மிடம் கருவியாக வருகிறோம்.

சபையார்: நீர் எங்களைக் கூர்மைப்படுத்தும். அதனால் நாங்கள் திறம்பட மற்றும் துல்லியமாக செயலாற்ற முடியும்.

அனைவரும்: எங்களுடைய தலை மற்றும் கைகள், இருதயம் மற்றும் ஆவி, அறிவு மற்றும் உணர்வுகள் போன்ற எல்லா பகுதிகளையும் இப்பொழுதும் எப்பொழுதும் உமக்கு அர்ப்பணிக்கிறோம். ஆமென்.

பாவ அறிக்கைக்கு அழைப்பு:
தவறு செய்வது சரியல்ல என்று எங்கள் சிறுவயது முதல் கற்பிக்கப்பட்டிருக்கிறது. நாம் தவறு செய்யும்போது நம்முடைய பெற்றோரிடம், நம்முடைய குடும்பத்தாரிடம், நம்முடைய நண்பர்களிடம் மற்றும் நம்முடைய அண்டை அயலகத்தாரிடம் மன்னிப்புக் கேட்பது சரியென்று நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய அனுதின வாழ்வில் நாம் மன்னிப்பு கேட்பதுபோலவே ஒவ்வொரு ஞாயிறன்றும் தேவாலயத்தில் இங்கே நாம் கர்த்தரிடத்தில் மன்னிப்புக் கேட்கிறோம். ஆகவே, நாம் அனைவரும் கர்த்தருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு நாம் செய்த தவறுகளுக்காகவும், நற்செயல்களை செய்யாமல் இருந்ததற்காகவும் மன்னிப்பு கேட்கக்கடவோம்.

பாவ அறிக்கை:
கர்த்தாவே, குற்றவாளியை போல நாங்கள் உம்மிடத்தில் வருகிறோம். நாங்கள் தகுதியற்றவர்கள் என்பதை அறிந்தும் உம்மிடம் மன்னிப்புக்காக வருகிறோம். நாங்கள் பணிபுரியும் இடத்தில் எங்களைப் போன்ற நம்பிக்கையில்லாத மக்களை நாங்கள் புறக்கணித்திருக்கிறோம். தங்களுடைய சொந்த தேவைகளை சந்திக்க இயலாத மக்கள், தங்கள் பசியை நீக்குவதற்காக கைகளை நீட்டும் மக்களிடமிருந்து நாங்கள் விலகி சென்றிருக்கிறோம். எங்களிடம் அன்பை தேடி வரும் சகமனிதர்களிடமும், எங்கள் அன்புக்குரியவர்களிடமும் எங்களுடைய மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறோம்.

அன்பான பெற்றோரைப் போல நீர் உம்முடைய கரங்களை நீட்டி ஆறுதல் அரவணைப்புடன் நாங்கள் மன்னிக்கப்பட்டோம் என்று எங்களுக்கு சொல்லுகிற கர்த்தாவே. நாங்களும் மற்றவர்களை அவர்களின் பன்முகத் தன்மையில் அரவணைக்க உதவும். எங்களுடைய விருந்தோம்பலின் வெளிச்சத்தில் அந்நியர்களை நாங்கள் வரவேற்க பெலன் தாரும். எங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் நேசிக்கவும், அவர்களைப் பராமரிக்கவும், ஒரு நண்பரைப்போல அவர்களுடைய கரங்களைப் பிடிக்கவும், எங்களுடைய நேரத்தை அவர்களுடன் செலவிடவும் எங்களுக்கு பெலன் தாரும். நீர் எங்களுக்கு மன்னித்தது போல நாங்களும் ஒருவரையொருவர் மன்னிக்க எங்களுக்கு உதவி செய்யும். கர்த்தாவே. உம்முடைய ராஜ்யத்தின் பிள்ளைகளாக இருந்து சாந்தமாகவும், நிதானமாகவும், நீதியாகவும் வாழ எங்களை வழிநடத்தும். மன்னிப்பின் அவதாரமாக வந்த இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

பாவமன்னிப்பின் உறுதி:
சர்வவல்லமையுள்ள பரலோக பிதாவே, தங்களுடைய பாவத்தை விட்டு மனந்திரும்புகிறவர்களுக்கு பாவ மன்னிப்பை அளிப்பேன் என்று தம்முடைய அளவில்லாத கிருபையினால் வாக்களித்திருக்கிறவரே, எங்கள்மேல் இரக்கமாயிரும். எங்கள் பாவங்கள் அனைத்தையும மன்னியும். இயேசுவின் மன்னிப்பின் நற்செய்தியை அறிவிக்க, புதுப்பிக்கப்பட்டவர்களாக, புத்துணர்ச்சியூட்டப்பட்டவர்களாக விசுவாச பயணத்தில் இந்த உலகத்திற்குள் செல்ல எங்களை அனுப்பும். ஆமென்.

ஆண்டவரே, உமக்கு நன்றி.

வேதபாடம்:
சங்கிதம் 127
நீதிமொழிகள் 23:15-26
எபேசியர் 6:10-18
மத்தேயு 18:1-6

குழந்தைகளின் சிறப்பு நிகழ்ச்சிகள்
    ஏதேனும் இருப்பின்…..

பாமாலை:

தேவசெய்தி:



அப்போஸ்தலர் விசுவாசிப்பிரமாணம்
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வவல்லமையுள்ள பிதாவாகிய கடவுளை விசுவாசிக்கிறேன். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார். மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்து, பரமண்டலத்துக்கு ஏறி, சர்வவல்லமையுள்ள பிதாவாகிய கடவுளின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.

பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும், பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும், பாவ மன்னிப்பும், மரித்தோர் உயிர்த்தெழுதலும், நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.

அறிவிப்பு:

காணிக்கைப் பாடல்:

காணிக்கை ஜெபம்:

கிறிஸ்தவ கல்வியாளர்கள், சபைத் தலைவர்கள் மற்றும் ஞாயிறுபள்ளி பிள்ளைகளுக்காக பரிந்துரை ஜெபம்:
நடத்துபவர்: அன்பின் ஆண்டவரே, கவனிப்பு மற்றும் ஆதரவு, வழிநடத்துதல் மற்றும் பின்பற்றுதலின் கற்பித்தல் மற்றும் கற்றலின் அழகை கொண்டாட உம்முடைய பிரசன்னத்தில் நாங்கள் இங்கே கூடியுள்ளோாம்.

சபையார்: ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

நடத்துபவர்: இந்தத் திருச்சபையின் ஊழியத்தில் சேவை செய்ய தங்களை அர்ப்பணித்து, இன்று வரை புதியவற்றை கற்றுக்கொண்டு, அந்த கற்றலின் வழியில் எங்கள் சிறுபிள்ளைகளை வழிநடத்துகின்ற ஆண், பெண் மற்றும் வாலிபர், வாயோதிபரை உம் சமூகத்தில் கொண்டுவந்து அவர்களுக்காக ஜெபிக்கிறோம்.

சபையார்: அன்பின் ஆண்டவரே, பரிசுத்த ஆவியானவர் புதியவ்ற்றை எங்களுக்கு கற்றுக்கொடுத்து வழிநடத்தும்படி மன்றாடுகிறோம்.

நடத்துபவர்: அன்பின் ஆண்டவரே, தெய்வீக ஞானத்தோடு உம்முடைய விசுவாசத்தில் எங்கள் பிள்ளைகளை வளர்க்கும் கிறிஸ்தவ கல்வியாளர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் உம்மிடம் மன்றாடுகிறோம். கிறிஸ்தவ நெறிமுறைகள் மற்றும் மதிப்புகளை பொருட்கள், பாடத்திட்டம் மற்றும் இடம் மூலம் உள்வாங்குகிற ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளை உம்முடைய நித்திய ராஜ்யத்தில் உயர்த்தும்.

சபையார்: அன்பின் ஆண்டவரே, உம்மால் அழைக்கப்பட்ட மக்களுக்கு உம்முடைய ஆதரவை வழங்குமாறு உம்மிடம் மன்றாடுகிறோம்.

நடத்துபவர்: அன்பின் ஆண்டவரே, கிறிஸ்துவின் சரீரத்தில் அவயங்களாயிருந்து உம்முடைய ஞானம், அன்பு, இரக்கம் மற்றும் ஐக்கியத்தை பகிர்ந்து கொடுக்கிறவர்கள் சுறுசுறுப்பாக பங்கேற்கும்படி உம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறோம். விசுவாசத்தில் நிலைத்திருந்து கிறிஸ்துவின் மாதிரியை காண்பித்து, குழந்தைகளை கடவுளுடைய ராஜ்யத்தின் சுதந்தரவாளியாக உருவாக்க மன்றாடுகிறோம்.

சபையார்: அன்பின் ஆண்டவரே, குழந்தைகளின் முன்பு கிறிஸ்துவின் அன்பின் முன்மாதிரியாக நாங்கள் இருக்க எங்களுக்கு உதவும்படி ஜெபிக்கிறோம்.

நடத்துபவர்: அன்பின் ஆண்டவரே, எங்கள் சிறு பிள்ளைகளுக்கும், வாலிப பிள்ளைகளுக்கும், திருச்சபையில் உம்மைப் பற்றிக் கற்றுக்கொள்கிறவர்களுக்கும் உம்முடைய கிருபையையும் ஆசீர்வாதத்தையும் வெளிப்படுத்தும். ஞாயிறு பள்ளியில் உம்முடைய வழிகளை கற்றுக்கொடுக்கிற ஒவ்வொருவரையும், மாறாத உம்முடைய வார்த்தையின் சத்தியத்தில் வழிநடத்துகிற ஒவ்வொருவருக்கும் உம்முடைய கிருபையையும் ஆசீர்வாதத்தையும் வெளிப்படுத்தும்.

சபையார்: அன்பின் ஆண்டவரே, உமது போதனைகளால் எங்கள் பிள்ளைகள் தெளிவடைய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

நடத்துபவர்: அன்பின் ஆண்டவரே, எங்களுடைய பாவங்களுக்காக மரித்து, பாவத்தின் வல்லமையை முறித்து மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் கிருபையின் நற்செய்தியைப் பெற்று, எங்கள் பிள்ளைகள் கர்த்தருடைய அனைத்து போதனைகளிலும் வளர, உயர்த்தப்பட மன்றாடுகிறோம்.

சபையார்: அன்பின் ஆண்டவரே, எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் மற்ற அண்டைவீட்டாரைக் கொண்டுவர மன்றாடுகிறோம். உம்மீது அன்பும், உம்மைப் பற்றிய அந்தப் பிள்ளைகளுக்கு உண்டாகவும், மதம் மற்றும் தவறான போதனைகளிலிருந்து அந்தப் பிள்ளைகளின் இருதயங்களும், சிந்தனைகளும் பாதுகாக்கப்படும்படி மன்றாடுகிறோம்.

சபையார்: அன்பின் ஆண்டவரே, சத்தியத்தைதக் கைக்கொள்ள எங்கள் பிள்ளைகளுடைய இருதயத்தை திறக்கும்படியாக மன்றாடுகிறோம்.

நடத்துபவர்: ஜெபம் செய்வோம்.
அன்பின் ஆண்டவரே, நீர் எங்களுக்குத் தந்த இந்த வாழ்க்கை என்ற பரிசுக்காகவும், குழந்தைகள் என்ற பரிசுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். விசேஷமாக எங்களுடைய ஞாயிறுபள்ளி பிள்ளைகள், எங்கள் ஆசிரியர்கள், எங்கள் போதகர், எங்கள் சபையின் மூப்பர் மற்றும் திருச்சபையின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரையும் உம்முன்னே நாங்கள் படைக்கிறோம். உம்மை அறிந்து கொள்ளவும், உமக்குச் சேவை செய்யும்படியாக எங்கள் வாழ்கையை அர்ப்பணிக்கவும் எங்களை ஆசீர்வதியும். எங்கள் ஒவ்வொரு நாளின் ஆரம்பம் முதல் முடிவு வரை நாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் உமது அன்பால் நிரப்பப்படட்டும். இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி வளரட்டும். ஆண்டவரே, இளம்வயதினர்கள் கர்த்தருக்குள் வளரும்படி நாங்கள் கற்பிக்கும்போது எங்களை நீர் வழிநடத்தும்படியாக வேண்டுகிறோம். இயேசுவின் மாதிரியைப் பின்பற்ற எப்பொழுதும் எங்களை உணர்வையும். பிள்ளைகள் எங்கள் கைகளில் இருக்கும் போது அவர்களை பாதுகாக்கவும், வழிநடத்தவும் உமது பரிசுத்த ஆவியை அனுப்பியருளும். தங்கள் அனுதின வாழ்வில் நல்ல பாத்திரங்களாக இருப்பதற்கு தேவையான பெலனை எங்களுக்குத் தாரும். நீர் சிறுபிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் நல்ல திட்டங்களை வைத்திருக்கிறீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அந்த தேவனுடைய திட்டத்தின் ஒருபகுதியாக நாங்கள் இருப்பதற்கு எங்களுக்கு உதவியதால் உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் ஒவ்வொருவரையும் உமது நிறைவான ஆசீர்வாதங்களால் ஆசீர்வதியும். இயேசுவின் இணையற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.

பரமண்டல ஜெபம்:
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.  உம்முடைய ராஜ்யம் வருவதாக.  உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.  எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.  எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.  எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும் வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.  ஆமென்.  

ஆசீர்வாதம்:
கொண்டாட உலகத்திற்குள் செல்லுங்கள், வாழ்க்கையை கொண்டாடுங்கள்.

கற்றுக்கொள்வதையும், இயேசுவைப் பற்றி புதியவற்றை கற்றுக்கொடுப்பதையும் கொண்டாடுங்கள்.

கர்த்தரோடுள்ள ஐக்கியத்தைக் கொண்டாடுங்கள். கர்த்தரை நேசிப்பவர்களோடு உங்களுக்குள்ள உறவை புதுப்பியுங்கள். நீங்கள் கொண்டாடும்போது அது உங்களுக்குத் தெரியும்.

உங்களை நேசிக்கும் சர்வவல்லமையுள்ள கர்த்தர் எங்களுக்கு கற்பிக்கிறார்.

உங்களை இரட்சிக்கும் இயேசு கிறிஸ்து, தெய்வீக வாழ்க்கையை வாழ உங்களுக்கு உதவுகிறார்.

விசுவாச பயணத்தைத் தொடர உங்களில் நிலைத்திருக்கும் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உத்வேகம் அளிக்கிறார்.

சமாதானத்தோடு செல்லுங்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனின் ஐக்கியம் இன்றும் என்றும் எப்பொழுதும் உங்களோடு தங்கி நிலைத்திருப்பதாக. ஆமென்.. ஆமென்… ஆமென்….

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.