Type Here to Get Search Results !

John 8 Bible Quiz | The Gospel of JOHN Bible Question & Answer | யோவான் 8-ம் அதிகாரம் கேள்வி பதில்கள் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் எட்டாம் அதிகாரம்
The Gospel of JOHN 8
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. விபச்சாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்திரீயை இயேசுவினிடத்தில் கொண்டு வந்தது யார்?
A) ஜனங்கள்
B) வேதபாரகர், பரிசேயர்
C) சீஷர்கள்
Answer: B) வேதபாரகர், பரிசேயர்
    (யோவான் 8:3)

02. விபச்சார ஸ்திரீயை கல்லெறிந்து கொல்லவேண்டும் என்றது கட்டளையிட்டது யார்?
A) தேவன்
B) மனுஷகுமாரன்
C) மோசே
Answer: C) மோசே
    (யோவான் 8:5)

03. நீ போ இனி பாவம் செய்யாதே என்று இயேசு யாரிடம் சொன்னார்?
A) சப்பாணி
B) விபச்சார ஸ்திரீ
C) பிறவி குருடன்
Answer: B) விபச்சார ஸ்திரீ
    (யோவான் 8:11)

04. உன்னை குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய் உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றது யார்?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) சதுசேயர்
Answer: A) பரிசேயர்
    (யோவான் 8:13)

05. எத்தனை பேருடைய சாட்சிகள் உண்மை என்று நியாயப்பிரமாணம் கூறுகிறது?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: B) இரண்டு
    (யோவான் 8:17)



06. தேவாலயத்தில் எங்கு இருந்து 'இயேசு, நான் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன்' என்று பிரசங்கித்தார்?
A) மண்டபம்
B) தர்மபெட்டி இருக்கும் இடம்
C) நுழைவு வாயில்
Answer: B) தர்மபெட்டி இருக்கும் இடம்
    (யோவான் 8:20)

07. சத்தியத்தையும் அறிவீர்கள் __________ உங்களை விடுதலையாக்கும்.
A) கிருபை
B) சத்தியம்
C) உண்மை
Answer: B) சத்தியம்
    (யோவான் 8:32)

08. பாவம் செய்கிற எவனும் எதற்கு அடிமையாயிருக்கிறான்?
A) தேவனுக்கு அடிமையாயிருக்கிறான்
B) சாத்தானுக்கு அடிமையாயிருக்கிறான்
C) பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்
Answer: C) பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்
    (யோவான் 8:34)

09. யார் விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்?
A) பிதா விடுதலையாக்கினால்
B) தகப்பன் விடுதலையாக்கினால்
C) குமாரன் விடுதலையாக்கினால்
Answer: C) குமாரன் விடுதலையாக்கினால்
    (யோவான் 8:36)

10. பொய்யனும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறது யார்?
A) பிசாசு
B) சாத்தான்
C) சர்ப்பம்
Answer: A) பிசாசு
    (யோவான் 8:44)


11. என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னை குற்றப்படுத்த கூடும் என்றது யார்?
A) தேவன்
B) பிரதான ஆசாரியன்
C) மனுஷகுமாரன்
Answer: C) மனுஷகுமாரன்
    (யோவான் 8:46)

12. இயேசுவை: சமாரியன், பிசாசு பிடித்தவன் என்றது யார்?
A) யூதர்கள்
B) வேதபாரகர்
C) பரிசேயர்
Answer: A) யூதர்கள்
    (யோவான் 8:48)

13. இயேசு: நான் யாரை அறியேனென்று சொல்வேனாகில் நானும் உங்களைப் போல பொய்யனாயிருப்பேன் என்றார்?
A) பிதா
B) ஆபிரகாம்
C) தாவீது
Answer: A) பிதா
    (யோவான் 8:55)

14. ஆபிரகாம் யாருடைய நாளை காண ஆசையாயிருந்தார்?
A) தாவீது
B) தீர்க்கதரிசிகள்
C) மனுஷகுமாரன்
Answer: C) மனுஷகுமாரன்
    (யோவான் 8:56)
    
15. உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லை நீ ஆபிரகாமை கண்டாயோ என்றது யார்?
A) யூதர்கள்
B) வேதபாரகர்
C) பரிசேயர்
Answer: A) யூதர்கள்
    (யோவான் 8:57)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.