Type Here to Get Search Results !

Exam Time Prayer | தேர்வு கால ஜெபம் | Jesus Sam

================
தேர்வு கால ஜெபம்
=================
    எல்லாம் வல்ல கடவுளே இந்த நல்ல நேரத்திற்காய் உமக்கு ஸ்தோத்திரம். எனக்கு உம்முடைய இரக்கமும், தயவும், ஞானமும், அவசியமாயிருக்கிறது. தயவு கூர்ந்து எனக்கு உதவி செய்யும். ஆண்டவரே, கஷ்டப்பட்டு பல மாதங்களாக என்னால் இயன்றவரை நான் படித்திருக்கிறேன். அநேக நேரங்கள் என்னுடைய பயத்தின் மிகுதியினால், கஷ்டப்பட்டு படித்த பாடங்களை மறந்து போக நேரிடுகிறது. என்னுடைய சரீரத்தில் யாதொரு சுகவீனம் தோன்றாமல் உம் துணையால் என்னை காத்துக்கொள்ளும். நல்ல சுகம பெலன் தந்து நல்ல ஞானத்தையும், ஞாபகசக்தியையும் தந்து தேர்வை வெற்றியோடு எழுதிமுடிக்க எனக்கு உதவி செய்யும். நான் எழுதவேண்டிய எல்லா விடைகளையும் சரியாக, தெளிவாக, குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி முடிக்க உதவி செய்யும். நீர் எனக்கு வைத்திருக்கிற எதிர்காலத்திற்கு ஏற்ற நல்ல மதிப்பெண்களைப்பெற எனக்கு உதவி செய்யும். என்னுடைய விடைத்தாள்கள் சரியான விதத்தில் மதிப்பீடு செய்ய உதவி செய்யும். ”குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும், ஜெயமோ கர்த்தரால் வரும்” என்ற உம்முடைய வசனத்தின் படி நான் இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று உமக்கு சாட்சியாக வாழ எனக்கு அருள்தாரும். இயேசுராஜாவின் வழியாய்க் கேட்கிறேன், ஜெபம் கேளும் நல்ல பிதாவே. ஆமென்!


மாணவர்கள் தேர்வு எழுதும்போது கவனிக்கவேண்டியவைகள்

1. தேர்வு எழுதுவதற்கு முன் ஒரு நிமிடம் ஆண்டவருடைய கிருபையையும் உதவியையும் கேட்டு ஜெபியுங்கள்.

2. முதலில் கேள்வித்தாள் முழுவதையும் பதற்றமில்லாமல், அவசரமில்லாமல் வாசியுங்கள்.

3. உங்களுக்கு நன்றாகத் தெரிந்த பதில்களை முதலில் சரியாக எழுதுங்கள்.

4. கேள்வித்தாளின் பரிவு எண்ணும், வரிசை எண்ணும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

5. பதில்களை பெரிய எழுத்தில் தெளிவாக, அழகாக எழுதுங்கள். முக்கியமான வார்த்தைகளை, வாக்கியங்களை அடிக்கோடிடுங்கள்.

6. நேரத்தை கணக்கிட்டு திட்டமிட்டு பதில்களை எழுதுங்கள்.

7. எழுதினவைகளை திருப்பிப் பார்க்க ஒரு சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

8. கடைசி பத்து நிமிடங்களுக்கு முன்னதாக விடைத்தாள்களை பக்கம் சரிபார்த்து கட்டிவிடுங்கள்.

9. இரண்டில் ஒன்று அல்லது மூன்றில் ஒன்று என்ற கேள்விக்கான பதிலை சரியாக எழுதியிருகு்கிறீர்களா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

10. வரைபடங்களை அழகாக வரைந்து விடுங்கள், பாகங்களை நேருக்கு நேராய் குறிப்பிட வேண்டும்.

11. சில சமயங்களில் ஒன்றுமே தெரியாததுபோல் இருக்கலாம். சற்று அமைதியாக யோசித்துப் பார்த்தால் பதில் வந்துவிடும்.

12. உங்களுக்காக பலரும் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டவர் உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிக்கிறார். ”காரியசித்தியோ கர்த்தரால் வரும” என்ற வசனத்தின்படி உங்களை திடப்படுத்திக்கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.