Type Here to Get Search Results !

John 7 Bible Quiz | The Gospel Of John Bible Question And Answer | யோவான் பைபிள் கேள்வி பதில்கள் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் ஏழாம் அதிகாரம்
The Gospel of JOHN 7
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. யூதர்கள் இயேசுவை கொலை செய்ய வகை தேடியதால் இயேசு எங்கே சஞ்சரித்தார்?
A) எருசலேம்
B) பெத்லகேம்
C) கலிலேயா
Answer: C) கலிலேயா
    (யோவான் 7:1)

02. பிரபலமாய் இருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்ய மாட்டான் என்றது யார்?
A) பரிசேயர்
B) இயேசுவின் சகோதரர்
C) சீஷர்கள்
Answer: B) இயேசுவின் சகோதரர்
    (யோவான் 7:3,4)

03. இயேசு அந்தரங்கமாய் கலந்து கொண்ட பண்டிகை எது?
A) பஸ்கா பண்டிகை
B) கூடார பண்டிகை
C) பெந்தகோஸ்தே பண்டிகை
Answer: B) கூடார பண்டிகை
    (யோவான் 7:2,10)

04. யாருக்கு பயந்ததினால் இயேசுவை குறித்து ஒருவனும் தாராளமாய் பேசவில்லை?
A) யூதருக்கு பயந்ததினால்
B) கலிலேயருக்குப் பயந்ததினால்
C) ரோமருக்குப் பயந்ததினால்
Answer: A) யூதருக்கு பயந்ததினால்
    (யோவான் 7:13)

05. இஸ்ரவேலருக்கு நியாயப் பிரமாணத்தை கொடுத்தது யார்?
A) மோசே
B) ஆபிரகாம்
C) தாவீது
Answer: A) மோசே
    (யோவான் 7:19)



06. நீ பிசாசுபிடித்தவன் என்று இயேசுவை பார்த்து சொன்னது யார்?
A) ஜனங்கள்
B) பிரதான ஆசாரியர்
C) வேதபாரகர்
Answer: A) ஜனங்கள்
    (யோவான் 7:20)

07. இயேசு கிறிஸ்து எப்படி தீர்ப்பு செய்ய வேண்டும் என்றார்?
A) நீதியின்படி
B) தோற்றத்தின்படி
C) ஆவியின்படி
Answer: A) நீதியின்படி
    (யோவான் 7:24)

08. இவனையல்லவா கொலை செய்ய தேடுகிறார்கள். இவன் (இயேசு) தாராளமாய் பேசுகிறானே என்றது யார்?
A) யூதர்கள்
B) எருசலேம் நகரத்தாரில் சிலர்
C) சேவகர்
Answer: B) எருசலேம் நகரத்தாரில் சிலர்
    (யோவான் 7:25,26)

09. இயேசுவை பிடித்துக்கொண்டு வரும்படி பரிசேயரும் பிரதான ஆசாரியரும் யாரை அனுப்பினார்கள்?
A) காவலர்
B) நூற்றுக்கு அதிபதி
C) சேவகர்
Answer: C) சேவகர்
    (யோவான் 7:32)

10. இயேசு கிரேக்கருக்கு உபதேசம் பண்ண போவாரோ என்று எண்ணியது யார்?
A) பரிசேயர்
B) எருசலேம் நகரத்தார்
C) யூதர்கள்
Answer: C) யூதர்கள்
    (யோவான் 7:35,36)


11. தாவீது இருந்த ஊர் எது?
A) நாசரேத்
B) பெத்லகேம்
C) எருசலேம்
Answer: B) பெத்லகேம்
    (யோவான் 7:42)

12. அந்த மனுஷன் (இயேசு) பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றது யார்?
A) பரிசேயர்
B) யூதர்கள்
C) சேவகர்
Answer: C) சேவகர்
    (யோவான் 7:46)

13. நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா என்றது யார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) இயேசு கிறிஸ்து
Answer: A) பரிசேயர்
    (யோவான் 7:47)

14. வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றது யார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) மனுஷகுமாரன்
Answer: A) பரிசேயர்
    (யோவான் 7:47,49)

15. இராத்திரியிலே இயேசுவிடம் வந்த பரிசேயன் யார்?
A) நிக்கோதேமு
B) நாத்தான்வேல்
C) கிலெயோப்பா
Answer: A) நிக்கோதேமு
    (யோவான் 7:50)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.