Type Here to Get Search Results !

King David Bible Question & Answer | தாவீது கேள்வி பதில்கள் | Jesus Sam

======================
தாவீதைப் பற்றிய முப்பது கேள்வி பதில்கள்
======================

01. தாவீது வீழ்த்திய கோலியாத்தின் உயரம் என்ன?
A) ஐந்து முழம் ஒரு ஜாண்
B) ஆறு முழம் ஒரு ஜாண்
C) ஆறு முழம் இரண்டு ஜாண்
Answer: B) ஆறு முழம் ஒரு ஜாண்
(1 சாமுவேல் 17:4)

02. தாவீது தன் சகோதரரை பார்க்க வந்தபோது கொண்டுவந்த ”வறுத்த பயற்றையும், அப்பங்களையும் யாரிடம் கொடுத்தான்?
A) தன் சகோதரரிடம் கொடுத்தான்
B) ஆயிரம் பேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்தான்
C) ரஸ்துக்களை காக்கிறவனிடம் கொடுத்தான்
Answer: C) ரஸ்துக்களை காக்கிறவனிடம் கொடுத்தான்
(1 சாமுவேல் 17:22)

03. தாவீது எத்தனை ஆடுகளை மேய்த்தான்?
A) கொஞ்சம் ஆடு
B) அநேகம் ஆடு
C) ஆடு மேய்க்கவில்லை
Answer: A) கொஞ்சம் ஆடு
(1 சாமுவேல் 17:28)

04. தாவீது கோலியாத்தை வீழ்த்த கூழாங்கல்லுகளை எங்கிருந்து எடுத்தான்? எத்தனை கல்லுகளை எடுத்தான்?
A) ஆற்றிலிருந்து எடுத்தான், ஐந்து கல்லுகள்
B) பாளயத்திலிருந்து எடுத்தான், ஐந்து கல்லுகள்
C) பாளயத்திலிருந்து எடுத்தான், ஏழு கல்லுகள்
Answer: A) ஆற்றிலிருந்து எடுத்தான், ஐந்து கல்லுகள்
(1 சாமுவேல் 17:39)

05. தாவீதை தன் உயிரைப்போல சிநேகித்தது யார்?
A) சவுல்
B) யோனத்தான்
C) ஈசாய்
Answer: B) யோனத்தான்
(1 சாமுவேல் 18:1)

06. அதுல்லாம் குகையில் தாவீதோடு இருந்தது எத்தனை பேர்?
A) இருநூறு பேர்
B) முன்னூறு பேர்
C) நானூறு பேர்
Answer: C) நானூறு பேர்
(1 சாமுவேல் 22:2)

07. சவுலின் கைக்கு தப்பிய தாவீது தன் தாய் தகப்பனை எங்கு தங்கியிருக்க வைத்தான்?
A) மோவாப் தேசம்
B) பெலிஸ்தியர் தேசம்
C) அம்மோன் தேசம்
Answer: A) மோவாப் தேசம்
(1 சாமுவேல் 22:4)

08. கோலியாத்தின் பட்டயத்தை தாவீதுக்குக் கொடுத்தது யார்?
A) சவுல்
B) அகிமெலேக்கு
C) சாமுவேல்
Answer: B) அகிமெலேக்கு
(1 சாமுவேல் 22:9,10)

09. மகா தந்திரவாதி என்று பெயர் பெற்றவர்கள் யார்?
A) சவுல், யோனத்தான்
B) அப்சலோம், அம்னோன்
C) தாவீது, யோனதாப்
Answer: C) தாவீது, யோனதாப்
(1 சாமுவேல் 23: 22) (2 சாமுவேல் 13:3)

10. சவுல் தாவீதைப் பிடிக்க என்கேதின் வனாந்தரத்திற்கு எத்தனைபேரோடு போனான்?
A) நானூறு பேர்
B) ஆயிரம் பேர்
C) மூவாயிரம் பேர்
Answer: C) மூவாயிரம் பேர்
(1 சாமுவேல் 24:1,2)

11. ”நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்” யார் யாரிடம் சொன்னது?
A) சாமுவேல் - சவுல்
B) சவுல் - தாவீது
C) சாமுவேல் - தாவீது
Answer: A) சவுல் - தாவீது
(1 சாமுவேல் 24:17)

12. தாவீது சவுலின் தலைமாட்டிலிருந்த எதை எடுத்துக்கொண்டு போனார்?
A) ஈட்டி, சால்வை
B) தண்ணீர் செம்பு, சால்வை
C) ஈட்டி, தண்ணீர் செம்பு
Answer: C) ஈட்டி, தண்ணீர் செம்பு
(1 சாமுவேல் 26:12)

13. சவுலை கொலை செய்தது யார்?
A) தாவீது
B) அமலேக்கியன்
C) அகித்தோப்பேல்
Answer: B) அமலேக்கியன்
(2 சாமுவேல் 1:8,10)

14. தாவீது ராஜாவாகும்போது எத்தனை வயதாயிருந்தான்?
A) முப்பது
B) நாற்பது
C) ஐம்பது
Answer: A) முப்பது
(2 சாமுவேல் 5:5)

15. தாவீது எருசலேமிலே சமஸ்த இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?
A) ஏழு வருஷம் ஆறு மாதம்
B) முப்பத்து மூன்று வருஷம்
C) நாற்பது வருஷம்
Answer: B) முப்பத்து மூன்று வருஷம்
(2 சாமுவேல் 5:5)

16. தாவீதின் நகரம் எது?
A) சீயோன்
B) இஸ்ரவேல்
C) பெத்லகேம்
Answer: A) சீயோன்
(2 சாமுவேல் 5:7) (1 நாளாகமம் 11:5)

17. தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல தாவீதின் சத்துருக்கள் ஓடிய இடம் எது?
A) சிக்லாக்
B) பாகால்பிராசீம்
C) ரெப்பாயீம்
Answer: B) பாகால்பிராசீம்
(2 சாமுவேல் 5:20)

18. தேவனுடைய பெட்டியை பிடித்ததினால் செத்தது யார்?
A) ஊசா
B) ஓபேத்ஏதோம்
C) ஏசா
Answer: A) ஊசா
(2 சாமுவேல் 6:6,7)

19. கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்று தாவீது யாரிடம் சொன்னான்?
A) நாத்தான்
B) நாத்தான்வேல்
C) அகிதோப்பேல்
Answer: அ) நாத்தான்
(2 சாமுவேல் 7:2)

20. தாவீதின் பந்தியில் நித்தம் அப்பம் புசித்தது யார்?
A) சீபா
B) மேவிபோசேத்
C) மேவிபேசேத்
Answer: B) மேவிபோசேத்
(2 சாமுவேல் 9:6,7)

21. பத்சேபாளின் தகப்பன் பெயர் என்ன?
A) உரியா
B) அகித்தோப்பேல்
C) எலியாம்
Answer: C) எலியாம்
(2 சாமுவேல் 11:3)

22. தன்னுடைய மரணசாசனத்தை தானே சுமந்து சென்ற வீரன் யார்?
A) உரியா
B) அகித்தோப்பேல்
C) எலியாம்
Answer: A) உரியா
(2 சாமுவேல் 11:14,15)

23. தன் சகோதரியின் மேல் மோகம் கொண்டது யார்?
A) அம்னோன்
B) அப்சலோம்
C) யோனதாப்
Answer: A) அம்னோன்
(2 சாமுவேல் 13:1)

24. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் ஒரு பழுதும் இல்லாதவன் யார்?
A) தாவீது
B) அப்சலோம்
C) சாலொமோன்
Answer: B) அப்சலோம்
(2 சாமுவேல் 14:25)

25. யாருடைய ஆலோசனையை பைத்தியமாக்கிவிடும் என்று தாவீது ஜெபித்தான்?
A) யோவாப்
B) அகித்தோப்பேல்
C) அப்சலோம்
Answer: B) அகித்தோப்பேல்
(2 சாமுவேல் 15:31)

26. அப்சலோமின் வீரருக்கும், தாவீதின் வீரருக்கும் யுத்தம் நடைபெற்ற இடம் எது?
A) பகூரிம்
B) எருசலேம்
C) எப்பீராயீம்
Answer: C) எப்பீராயீம்
(2 சாமுவேல் 18:6)

27. மகா பெரிய மனுஷன் யார்?
A) ஈசாய்
B) தாவீது
C) பர்சிலா
Answer: C) பர்சிலா
(2 சாமுவேல் 19:32)

28. இயேசு கிறிஸ்துவை தாவீதின் குமாரனே என்று அழைத்தவர்களின் பெயர்களை பட்டியலிடுக? (குறைந்தது இரண்டு)
Answer: இரண்டு குருடர் (மத்தேயு 9:27)
கானானிய ஸ்திரீ (மத்தேயு 15:22)
இரண்டு குருடர் (மத்தேயு 20:30)
பர்திமேயு (மாற்கு 10:47)

29. புதிய ஏற்பாட்டில் தாவீதின் குமாரன் என்று அழைக்கப்பட்ட மனிதன் யார்?
Answer: யோசேப்பு
(மத்தேயு 1:20)

30. தாவீதைக்குறித்து கடவுள் கொடுத்த சாட்சி என்ன?
Answer: என் இருதயத்திற்கு ஏற்றவன்
(அப்போஸ்தலர் 13:28)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.