Type Here to Get Search Results !

JC VBS 2023 | Day 10 | நித்தியத்தில் உறுதி | Assured in Eternity | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி
விடுமுறை வேதாகமப்பள்ளி – 2023

நாள் – 10
தலைப்பு: நித்தியத்தில் உறுதி

நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்


நோக்கம்:
    கடவுளை உறுதியாய் பற்றி பிடித்துக் கொண்டவர்களை கடவுள் ஒருபோதும் உதறுவது இல்லை. அவர்களை நித்திய கீர்த்தியுடன் அவரை மகிமைப்படுத்துகிற ஒரு வாழ்வை கர்த்தர் அருளுகின்றார். நம் வாழ்வும் கீர்த்தியாய் அமைய வேண்டும்.

வேதபகுதி:
    சங்கீதம் 23
    2 சாமுவேல் 23:1-7
    1 இராஜாக்கள் 2:1-10

மனப்பாட வசனம்:
எபிரெயர் 3:6
    நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம்.

வேதபாட முன்னேற்றம்:
    ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் முடிவு முக்கியம்.
    தாவீது தன் முதிர்வயது வரை அவரின் பாவங்களில் மீண்டும் ஈடுபடவில்லை. அதாவது தொடரவில்லை.
    அவன் தன் முதிர்வயதில் பூரணமான ஒரு அரசனாக, தன்னை காட்டினார்.
    மரத்திலும், மரண தறுவாயிலும் பயப்படாமல் கடவுளை உறுதியாய் பற்றி பிடித்தவராய (சங்கீதம் 23) தன் ஆவியை கடவுளிடம் ஒப்படைத்தார்.

தலைப்பு அறிமுகம்:
    முதுமை என்பது எல்லோரும் வரவேற்க்க விரும்பவேண்டிய ஒன்று. நீங்கள் எத்தனை வயது வரை வாழ விரும்புகிறீர்கள். நீங்கள் ஒரு முதியவரை அல்லது மூதாட்டியை பார்த்தால் கேட்க விரும்பும் கேள்வி என்ன?
    முதுமையடையும் போது நாம் அழகாக இருக்கிறோமா? அல்லது நம் வாழ்க்கையில் நம் பொறுப்புகளை சரியாக செய்திருக்கின்றோமா என சிந்திக்கவேண்டும்.

பாட விளக்கம்:
    ஆடுகளை மேய்த்துவந்த தாவீது ஆண்டவரால் அரசராக உயர்த்தப்பட்டதும் அல்லாமல் அவரது அறியனை கடவுளின் அறியனை என்று கர்த்தர் சொல்லும் அளவிற்கு கர்த்தரால் மகிமைப்படுத்தப்பட்டார். தனது ஆடுகளை நேசித்த மற்றும் தனது ஆடுகளை மேய்க்கும் அனுபவத்தை தனக்கும் கர்த்தருக்கும் இடையே உள்ள உறவோடும் ஒப்பிட்டுப்பார்த்து மகிழ்ந்தார். கர்த்தர் என் மேய்ப்பராக இருப்பதால் நான் திருப்தியாக வாழ்கிறேன். காரணம் நான் கேட்பதை அல்ல எனக்கு எது தேவை என்று என் ஆண்டவர் அறிந்து அதை எனக்குத் தருகின்றார் என்று உறுதியாக நம்பினார். உன் வாழ்க்கையில் அப்படிப்பட்ட உறுதி உண்டா? அல்லது நீ கேட்டதை நீ விரும்பியதை ஆண்டவர் உனக்குத் தரவில்லை என்று ஆண்டவரிடம் முறுமுறுக்கிறாயா?
    கர்த்தர் தனக்கு மேய்பராக இருப்பதால் அவர் தன்னை நடத்திச் செல்லும் மகிழ்ச்சியான புல்லுள்ள இடம் அமர்ந்த நீரோடைப் பகுதியில் மட்டுமல்ல மரண பயத்தை ஏற்படுத்தும் இருள் சூழ்ந்த இடத்திலும் நான் பயப்படமாட்டேன். ஏனெனில் ஆண்டவர் எப்போதும் எங்கேயும் என்னோடிருக்கிறார் என்கிற உறுதியைக் கொண்டிருந்தார். பல நேரங்களில் நாம் மகிழ்ச்சியான அனுபவங்களில் ஆண்டவர் நம்முடன் இருப்பதாகவும் துன்பமான நிலையில் அவர் நம்மைக் கைவிட்டுவிட்டார் என்றும் எண்ணுகிறோம் அல்லவா? நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்கு பாதுகாப்பான இடத்தில் மட்டுமல்ல அவைகளுக்கு ஆபத்து வரும்போதும் கூடவே இருப்பார்.
    சிங்கமும் கரடியும் தன் ஆடுகளைக் கொல்ல வந்தபோது தாவீது ஓடிவிடாமல் அவைகளுடன் சண்டையிட்டு தன் ஆடுகளைக் காப்பாற்றினார். இந்த ஆண்டவரே காரணமின்றி தன்னைப் பகைத்த சவுல், பெலிஸ்திய அரசர்கள், தன் மகன் அப்சலோம், தன்னை தூஷித்து கல்லெறிந்த சிமேயி ஆகியோரிடமிருந்தும் தன்னைப் பாதுகாப்பார் என்று உறுதியாக நம்பி வாழ்ந்தார். வாழ்வில் வேதனைகளையும் கண்ணீரையும் வரவழைத்த அனுபவங்கள் அது மரண இருளின் பள்ளத்தாக்கு போன்றதுதான். ஆனாலும் கர்த்தர் அங்கேயும் கூட இருந்து காப்பாற்றினார்.
    தன்னை பகைத்தவரும் அவர் நல்லவர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தாவீதின் வாழ்வு இருந்தது. அவரைப் பகைத்தவரும் அவருடன் ஒப்புறவாகும்படி ஆண்டவர் தாவீதுக்காக செயல்பட்டார். தாவீதைப் பகைத்த சவுல் நீ எனனைப் பார்க்கிலும் நீதிமான். நீ நிச்சயமாக ராஜாவாக இருப்பாய் என்று கூறினார். இதை அனுபவித்த தாவீது என் பகைவருக்கு முன்பாக எனக்கு ஒரு விருந்தை ஆயத்தப்படுத்தி கர்த்தர் என்னை கனம் பண்ணுகிறார் என்று கூறினார்.
   நிறைவாக தன் வாழ்நாள் முழுவதும் நன்மையும் கிருபையும் தன்னைத் தொடரும் தான் கர்த்தருடைய வீட்டிலே நிலைத்திருப்பேன் என்ற உறுதியுடன் தன் வாழ்வின் ஓட்டத்தை தாவீது நிறைவு செய்தார். நன்மைகளை இவ்வுலக வாழ்வின் ஆசீர்வாதமாக ஆண்டவர் தருகின்றார். ஆனால் பரலோக வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த நன்மை உதவாது என்று தாவீது உறுதியாக அறிந்திருந்தார். ஆகவே தான் இவ்வுலக அரச பதவி, பொன் வெள்ளி போன்றவற்றில் ஆர்வம் கொள்ளாமல் கர்த்தருஐடய வீட்டில் தங்கியிருப்பதையே நாடுவேன். அநேகம் பொன் வெள்ளியை விட ஆண்டவரது வார்த்தையே எனக்கு உயர்ந்த பொக்கிஷம் என்று கூறுகிறார். மேலும் பரலோக வாழ்வு என்கிற நித்திய வாழ்வைப் பெருவதற்கு கிருபையே உதவும் என்பதை அறிந்திருந்தார்.
    ஆகவே தான் செய்த தவற்றை உணர்ந்து ஆண்டவரிடம் மன்றாடும்போது தன்னை தண்டிக்கவேண்டாம் என்று மன்றாடாமல் கிருபையின்படி எனக்கு இரங்கும் என்று மன்றாடுகிறார். மன்னிக்கப்படாத பாவங்களை் கர்த்தருடைய கிருபையை இழந்துபோகச்செய்யும். நாம் ஆண்டவரிடத்திலிருந்து இவ்வுலக வாழ்க்கையிலே எவ்வளவு நன்மைகளைப் பெற்றிருந்தாலும் அவரது கிருபை இல்லாமல் நித்திய வாழ்வைப் பெற முடியாது. ஆண்டவர் இலவசமாக தமது கிருபையைத் தருகின்றார். அந்த கிருபை நம்மிலே செயல்படுவதற்கு அவர் நமக்காக சிலுவையில் மரித்தார் என்பதையும் அவரது திரு இரத்தம் நம் பாவத்தை கழுவி சுத்திகரிக்கிறது என்றும் விசுவாசிக்க வேண்டும். மேலும் அவர் நம்மைக் கழுவி சுத்திகரிக்க நம்மை ஒப்புக்கொடுக்கும்போது தாவீதைப்போல எல்லா சூழ்நிலைகளிலும் உறுதியான மனதுடன் வாழ்வோம்.

இரட்சிப்பின் சிந்தனை:
    நம் வாழ்வு பூரணப்பட வேண்டும். நம் வாழ்வு நித்தியத்தில் தொடரவேண்டும். நாமும் மரணத்தை மகிழ்ச்சியோடும் பயமில்லாமல் சந்திக்க வேண்டும். நமக்கு குறிக்கப்பட்ட மரண நாளுக்கு முன்பாக நாம் மரிக்க கூடாது. கடவுளின் உண்மையான திட்டங்களை நம் வாழ்வில் நிறைவேற்ற வேண்டும்.

கதை:
  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.