Type Here to Get Search Results !

JC VBS 2023 | Day 9 | மகிமையில் உறுதி | Assured in Glory | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி
விடுமுறை வேதாகமப்பள்ளி – 2023

நாள் – 9
தலைப்பு: மகிமையில் உறுதி

அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும், அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்

நோக்கம்:
    கடவுளுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் சோர்வுகளும் சரிவுகளும் ஏற்பட்டாலும் நாம் தளராமல் இருக்கும்போது கர்த்தர் நம் வாழ்வை மகிமைப்படுத்துவார். நாம் இழந்தவைகளும், நம்மைவிட்டு போனவர்களும் நம்மோடு இணைந்து கொள்வார்கள். கடவுள் நம்மை உயர்த்தும்பொழுது அது அநேகருக்கு கடவுளின் சாட்சியாகவும், நம் வாழ்வு மற்றவர்களுக்கு கடவுளின் நற்செய்தியாகவும் அமையும்.

வேதபகுதி:
    2 சாமுவேல் 19:8-43 & 2 சாமுவேல் 22:1-51 & 2 சாமுவேல் 21:1-41 தாவீதின் வாக்குறுதி மற்றும் ஜெபம்.

மனப்பாட வசனம்:
கொலோசெயர் 2:5
    உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின் மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.

வேதபாட முன்னேற்றம்:
    கடவுளின் கிருபை மிகப் பெரியது. அது நம்மை அவருடன் உறுதியாய் நிலைத்திருக்க உதவுகிறது. மறுபடியும் எருசலேமிற்கு ராஜாவாக ஏற்படுத்தப்பட்டார்.
    (மறுமனையாட்டிகளுடன் ஒருபோதும் செல்லவில்லை)

தலைப்பு அறிமுகம்:
    பிள்ளைகளே நீங்கள் உங்கள் வகுப்பில் அமர்ந்து விளையாடும் கிரிக்கெட் அணியில் ஒருமுறை தலைவராக இருந்த பின் மீண்டும் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? நீங்கள் என்ன எண்ணுவீர்கள்!
    நீங்கள் இழந்த ஒன்று உங்களுக்கு மீண்டும் கிடைத்தால் உங்கள் உணர்வு எப்படி இருக்கும்?

பாட விளக்கம்:
    தாவீது தன் சிறு வயது முதல் கர்த்தருக்குப் பிரியமாக வாழ்வதில் உற்சாகம் கொண்டவர். சில தருணங்களில் அவர் தவறினாலும் தன்னை சரிசெய்துகொண்டு ஆண்டவருக்குப் பயந்தும் அவருக்குப் பிரியமாகவும் வாழ்ந்து வந்தார். ஆகவே தான் ஆண்டவரும் அவருக்கு வாக்குக் கொடுக்கும்போது தனது கிருபையை சவுலைவிட்டு விலக்கியதுபோல உன்னை விட்டு விலக்கமாட்டேன் என்று தாவீதுக்கு வாக்குப்பண்ணியிருந்தார். (2 சாமுவேல் 7:15)
    அப்சலோமின் மரணத்திற்குப் பின் தாவீது மீண்டும் எருசலேமுக்குத் திரும்பி வந்து அரசனாக செயல்பட்டார். அவரை தூஷிதத சீமேயி தாவீதிடம் மன்னிப்பு கேட்டார்.  தாவீதும் அவருக்கு மன்னிப்பு கொடுத்து தான் அவரை கொல்லப்போவதில்லை என்று வாக்குக்கொடுத்தார். தாவீதை மீண்டும் அழைத்து வருவதற்கு யூதா கோத்திரத்தார் முந்திக்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த சேபா என்பவர் கலகம் செய்து இஸ்ரவேல் மக்களை தாவீதை விட்டு விலகச் செய்யும்படி முற்பாட்டார். ஆகையால் தாவீதின் சேவகர் அவரை பிடிக்க முற்பட்டனர். அவர் ஆபேல் என்கிற பட்டணத்தில் தஞ்சம் புகுந்தபோது தாவீதின் போர் வீரர்கள் யோவாப் என்கிற படைத்தலைவரின் தலைமையில் முற்றுகைபோட்டனர். அப்போது அந்த பட்டணத்தைச் சேர்ந்த புத்தியுள்ள பெண் ஒருவர் இது பூர்வீக பட்டணம் இதை அழிக்க வேண்டாம் என்று கூறி தன் பட்டணத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசி சேபாவின் தலையை துண்டித்து யோவாபிடம் கொடுத்தார்கள்.
    தாவீது அநேகரால் பகைக்கப்பட்ட போதும் கர்த்தரில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். தனது வாழ்வின் வேதனையான சூழ்நிலைகளில் அவர் தனது கஷ்டங்களை ஆண்டவரிடம் தெரிவித்தார். அவர் ஒருபோதும் ஆண்டவரை விட்டு விலக நினைக்கவில்லை. தன் வேதனைகளில் அநேகப் பாடல்களைப் பாடியுள்ளார். அவைகளை வேதத்திலே 2 சாமுவேல் புத்தகத்திலும், சங்கீதங்கின் புத்தகத்திலும் நாம் காணலாம். தனது பாடுகளில் கர்த்தர் தனக்காக யுத்தம் செய்கிறார் என்பதை மட்டுமல்ல தன்னை ஆண்டவர் சரிசெய்து தனக்கான வழியைச் செவ்வைப்படுத்துகிறார் என்றும் கூறுகின்றார் தாவீது.  தாவீதைப் பகைத்த அனைவருமே தாவீதிடம் மன்னிப்புக் கோரினர். தாவீதை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோனார்கள். தாவீது கர்த்தரால் அபிஷேகிக்கப்பட்ட சவுலை மட்டுமல்ல தன்னை தூஷித்த சிமேயியையும் கொல்லாமல் விட்டுவிட்டார். அவருக்கு எதிராக செயல்பட்டவர்களை கர்த்தர் பார்த்துக்கொண்டார். ஆகவேதான் எனக்கு எதிராக பெரும் படையே வந்தாலும் பயப்படேன் ஏனெனில் கர்த்தர் என்னுடனே இருக்கிறார் என்று தாவீது சொன்னார்.
    அப்சலோமின் மரணத்திற்குப் பின் எருசலேம் வந்த தாவீது தன் வாழ்வை சரிப்படுத்திக்கொண்டு ஆண்டவருக்குப் பிரியமாக வாழ்ந்தார். அப்சலோமினால் பாழாக்கப்பட்ட தன் மறுமனையாட்டிகளை தனியாக ஓரிடத்தில் வைத்து பராமரித்தார். மனந்திரும்பிய தாவீதை கர்த்தர் கனப்படுத்தினார். நீயும் மனந்திரும்பி வாழும்போது கர்த்தர் உன் வாழ்விலும் வெற்றி தருவார். நீ அவரைச் சார்ந்து வாழும்போது பாவம் உட்பட எல்லாத் தீங்கிற்கும் அவர் உன்னை விலக்கிக் காப்பார். அவர் உன்னை எல்லோருக்கும் முன்பாக சாட்சியாக நிறுத்துவார்.

இரட்சிப்பின் சிந்தனை:
    நம் இரட்சிப்பு, நிறைவேற நாம் ஒத்துழைக்க வேண்டும். பிரையாசப்பட வேண்டும். நாம் விட்டுவிட்ட தவறான பழக்கங்கள், பாவங்கள் இவைகள் அனைத்தையும் மீண்டும் தொடரக்கூடாது. கடவுளின் ஒத்தாசையுடன் இதை செய்ய வேண்டும்.


கதை:
    தாவீது தான் செய்த தவறின் நிமித்தமாக தான் கைப்பற்றிய எருசலேம் நகரத்தை விட்டு துரத்தப்பட்டார்.  தன் மகனாகயி அப்சலோம் மரித்த பின்பு, தாவீது மீண்டும் எருசலேமிற்கு வந்து அரசனாக பதிவியேற்றார்.
    தாவீதை மீண்டுமாக எருசலேமிற்கு வரவேற்க யூதா மனுஷர் முந்திக்கொண்டார்கள்.  தாவீது மீண்டும் இஸ்வேலின் மேல் ராஜாவாக ஏற்றுக்கொள்ள முடியாத பென்யமீனியனாகிய சேபா என்பவன், தாவீதுக்கு எங்களிடத்தில் பங்கும் இல்லை, பாகமும் இல்லை என்று சொன்னான்.  சேபாவின் வார்த்தைகளைக் கேட்டு இஸ்ரவேலர் அனைவரும் தாவீதை தங்கள்மேல் ராஜாவாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.  யூதா மனுஷர் தாவீதை மீண்டும் தங்கள் ராஜாவாக ஏற்றுக்கொண்டார்கள். (2 சாமுவேல் 20:2)
    தாவீது மீண்டும் எருசலேமின் மேல் ராஜாவாய் வந்தபோது, ஒரு புதிய மனுஷனாக எருசலேமிற்குள் நுழைந்தான்.  தன்னுடைய பழைய பாவ வாழக்கைகளை விட்டுவிட்டு புதிய வாழ்க்கையை மகிமையான வாழ்க்கையை வாழ ஆண்டவருக்கு தன்னை அர்ப்பணித்தான்.
    தாவீது மீ்ண்டும் எருசலேமிற்கு வந்ததும், தன் மறுமனையாட்டிகளை தனித்தனி வீடுகளில் காவல்பண்ணுவித்து பராமரிததான்.  அதன் பின்பு தாவீது அவர்களோடு சேரவில்லை.  மரிக்கும்வரை அவர்கள் விதவைகளாகவே இருந்தார்கள். (2 சாமுவேல் 20:3)
    தாவீது மீண்டும் இஸ்ரவேலுக்கு ராஜாவாய் ஏற்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ளாத பென்யமீனியனாகிய சேபா, அப்சலோமைப் பார்க்கிலும் தனக்கு அதிக பொல்லாப்பு செய்வான் என்று நினைத்து, அவனை அழிக்கும்படி தன் படைகளுக்கு கட்டளையிட்டான்.  (2 சாமுவேல் 20:6)
    யோவான் சில மனுஷரோடே எருசலேமிலிருந்து சேபாவை பிடிக்க புறப்பட்டான்.  சேபா ஆபேலிலே இருக்கிறான் என்று கேள்விப்பட்ட யோவாப் பட்டணம் முழுவதையும் அழித்துப்போட எத்தனமாயிருந்தார்கள். (2 சாமுவேல் 20:15)
    அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து யோவாபைப் பார்த்து: இது பூர்வீக பட்டணம்.  தயவுகூர்ந்து இதை அழிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டாள்.
    அப்பொழுது யோவாப்: பட்டணத்தை அழிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அல்ல, சேபா என்பவன், ராஜாவாகிய தாவீதுக்கு விரோதமாக செயல்பட்டான்.  அவனை மாத்திரம் என்னோடு அனுப்பிவையுங்கள்.  நான் பட்டணத்தை அழிக்க மாட்டேன் என்றான்.
    அப்பொழுது அந்த ஸ்திரீ: ஆபேலின் மனுஷரிடத்தில் புத்தியாய் பேசி சேபாவை கொலை செய்தாள்.  பிற்பாடு யோவாபும், அவன் மனுஷரும் தங்கள் இடத்திற்கு திரும்பிப்போனார்கள்.

    தாவீது தன் தவற்றை உணர்ந்து, கர்த்தரிடத்தில் மன்னி்ப்பு கேட்டபோது, கர்த்தர் அவனை மன்னித்து, அவனுடைய எதிரிகள் எல்லோரையும் அழித்துப்போட்டார்.
    தாவீதை பகைத்தவர்கள் அவனிடம் மன்னிப்பு கேட்டார்கள்.  தாவீதை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோனார்கள்.  இப்படியாக கர்த்தர் தாவீதுக்கு நீதி செய்தார்.
    நாமும் கர்த்தருடைய வழியை விட்டு பின்வாங்கியிருப்போமானால், இந்த நாளில் ஆண்டவருடைய சமுகத்தில் மன்னிப்பு கேட்டு, அவருடைய பிள்ளைகளாய் நாம் மாறும்போது, அவர் நம்முடைய பகைவர்கள் எல்லேரையும் நம்மோடு ஒப்புரவாகச் செய்வார்.   மகிமையான விதத்திலே நம்மை வழிநடத்துவார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.