Type Here to Get Search Results !

JC VBS 2023 | Day 8 | பயப்படாததில் உறுதி | Be Sure Not To Be Afraid | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி
விடுமுறை வேதாகமப்பள்ளி – 2023

நாள் – 8
தலைப்பு: பயப்படாததில் உறுதி
அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்
நோக்கம்:
    கடவுளின் பிள்ளைகள் அவரை உறுதியாய் நம்பி வாழ்கின்ற போது பயப்படாமல் இருக்க வேண்டும். நம்மை விழச்செய்கின்ற சூழ்நிலை ஏற்பட்டாலும் பயப்படாமல் கடவுள் என்னுடன் இருக்கிறார் என்ற விசுவாசத்துடன் முன்னேற வேண்டும்.

வேதபகுதி:
    அப்சலோம் தாவீதை எதிர்த்து நிற்பது.
    தனக்கென்று ஒரு இராஜியத்தை ஏமாற்றி ஏற்படுத்தியது
    தாவீது அப்சலோமை நேசித்தது

பின்னனி:
    அப்சலோம் தாவீதின் குமாரனாகிய அம்னோனை கொன்று விட்டு 3 ஆண்டுகள் கேரூறுக்கு ஓடிப்போய் இருந்தான். (காரணம் வேண்டாம்) 1 சாமுவேல் 13:38,39
    தாவீது அப்சலோமை மூன்று ஆண்டிற்கு பின்னர் கொண்டுவர சொன்னது
    அப்சலோம் 2 ஆண்டுகள் எருசலேமில் இருந்தாலும் சந்திக்கவில்லை

தாவீதின் மன்னிப்பு:
    2 சாமுவேல் 1:1, 2 சாமுவேல் 14:23-33, 2 சாமுவேல் 15:1-12
    அப்சலோம் தன்னை ராஜாவாக அறிவித்ததும் தாவீது எருசலேமை விட்டு ஓட்டம். 2 சாமுவேல் 13:1-37
    அப்சலோமின் அழிவு. 2 சாமுவேல் 18:6-32
    தாவீதின் துக்கம். 2 சாமுவுல் 18:33- 19:4

மனப்பாட வசனம்:
ஏசாயா 33:6
    பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும். கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.

வேதபாட முன்னேற்றம்:
    அப்சலோம் தன்னை அரசாக, தானே ஏற்படுத்தியது (தாவீதின் மகன்)
    அப்சலோம் தாவீதை எதிர்த்து, தனக்கென்று ஒரு கூட்ட மக்களை சேர்த்தார்.
    மகனுக்கு பயந்து தாவீது எருசலேமை விட்டு ஒரு வனாந்தரத்தில் வாழ்ந்த நாட்கள்.

தலைப்பு அறிமுகம்:
    நான்கு புறமும் நான்கு மூடப்பட்ட இரண்டு அட்டைப் பெட்டியில் ஒரு கை மட்டும் நுழையும் அளவிற்கு துளையை உருவாக்கி ஆயத்தம் செய்துகொள்ளுங்கள். அதில் ஒரு பெட்டியில் பிசுபிசுப்பான மற்றும் வழுவழுப்பான தன்மையுடைய 3 பொருட்களை வைக்கவும். (உதாரணமாக: பிசுபிசுப்பான களிமண், நன்கு பழுத்த பாழைப்பழம், பிசுபிசுப்பான தன்மையுடன் மஞ்ச் சாக்லேட்)
    இரண்டாவது அட்டை பெட்டியில் கடினத் தன்மை உள்ள சில பொருட்களை வைக்கவும். (உதாரமாக: உடைந்த செங்கல், விளையாட்டுப் பொருட்கள்)
    Junior வகுப்பிலிருந்து ஒரு தம்பியையும் ஒரு தங்கையையும் முன்பாக அழைத்து, அவர்களுடைய கண்களை கட்டிவிட்டு அவர்களுக்கு முன்பாக இரண்டு அட்டைப்பெட்டிகளையும் வைத்து ஒருவர் பின் ஒருவராக வந்து அட்டை பெட்டிக்குள் கையை விட்டு உள்ளே இருக்கும் பொருளைத் தொட்டு அது என்ன பொருள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். யார் அதிக பொருட்களை கண்டுபிடிக்கிறார்கள் என்பதை பார்த்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கலாம்.
    (விளையாட்டின் முடிவு இரண்டு பெட்டிகளையும திறந்து உள்ளே இருக்கும் பொருட்கள் என்ன என்பதை அனைவருக்கும் காட்ட வேண்டும். இவர்கள் இருவரும் உள்ளே கைகளை விடும்பொழுது வழுவழுப்பான பொருட்களை தொடும் பொழுதும் சொரசொரப்பான பொருட்களை தொடும்பொழுதும் ஒருவிதமான பயம் அவர்களுக்குள்ளாக இருந்திருக்கும்.
    இரண்டாவது பெட்டிக்குள் கையை விடுவதற்கு யோசித்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது பெட்டிக்குள் என்ன இருந்தது என்பதை அவர்கள் அறிந்த பின்பு அந்த பயம் அவர்களை விட்டு போயிருக்கும். இதேபோன்று தான் நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலவிதமான சூழ்நிலைகள் பிரச்சனைகள் பயத்தை உருவாக்குவதாக இருக்கலாம் ஆனால் உண்மையாகவே அது ஒரு பிரச்சனையாக இருக்காது கர்த்தர் அதை மேற்கொள்வதற்கு உதவி செய்வார் என்ற தைரியம் நமக்குள்ளாக இருக்க வேண்டும்)

பாட விளக்கம்:
    தாவீது உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை தனக்கு மனைவியாக்கிக் கொண்டார் என்றும் அதினால் அவர் தேவ கோபத்திற்கு உள்ளாகி மன்னிப்புக் கேட்டார் என்றும் நேற்று படித்தோம் அல்லவா? தாவீதின் இந்த தவற்றிற்குப் பின் அவரது மகன் அம்னோன் தனது சகோதரியாகிய தாமாரிடம் முறைகேடாக நடந்துகொண்டார். தாவீதின் பாவம் அவரது குடும்பத்தை தொடர்ந்தது. அம்னோனின் செயலால் ஆத்திரமடைந்த தாமாரின் சொந்த சகோதரன் அப்சலோம் அம்னோனை கொன்று போட்டார். இதனால் தாவீது அப்சலோமின் மேல் கோபம் கொள்ள அப்சலோம் கேரூரின் ராஜாவிடம் தஞ்சமடைந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு யோவாப் என்ற படைத்தலைவர் தாவீதின் கோபத்தை ஆற்றி கேரூரில் இருக்கின்ற அப்சலோமை எருசலேமுக்கு அழைத்துவந்தார். இதற்கு பின்பு அப்சலோம் தந்தையிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி அரசிடம் செல்பவர்களை இடைமறித்து ராஜாவிடம் உன் பிரச்சனையை கேட்பதற்கு ஆள் இல்லை என்று சொல்லி அவர்களுக்கு தீர்வு செல்வதாககூறி தன் செல்வாக்கை உயர்த்திக்கொண்டார். மக்களில் அநேகர் அவரது செயலால் கவரப்பட்டனர். ஒருநாள் அப்சலோம் தனது பொருத்தனைகளை செலுத்துவதற்காக எப்ரோனுக்கு செல்ல தன் தந்தையும் அரசனுமாகிய தாவீதிடம் அனுமதிகேட்டுச் சென்றார்.
    அவர் இஸ்ரவேலின் பட்டணங்களுக்கும் வேவுக்காரை அனுப்பி எக்காள சத்தம் கேட்கும்போது அப்சலோம் ராஜாவானார் என்று சொல்லும்படி ஆட்களை நியமித்து வைத்திருந்தார். அதன்படி அவர்கள் அப்சலோம் எருசலேமில் அரசனானார் என்று அறிவித்தார்கள். மக்களில் பலரும் அவருக்கு ஆதரவளிக்கத் துவங்கினர். இச்செய்தி தாவீதுக்கு தெரியவந்தபோது தன்னிமித்தம் எருசலேமுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்று தன் மறுமனையாட்டிகளான பத்து பெண்களை வீட்டை பராமரிப்பதற்காக வைத்துவிட்டு வெளியேறினார். அவருடன் சில மக்களும் புறப்பட்டுச் சென்றனர். அப்சலோம் அகித்தோப்பேல் என்பவருடைய ஆலோசனைப்படி தாவீது தன் வீட்டில் வைத்துப்போயிருந்த பெண்களை ஊர் அறிய பாழாக்கினார். தாவீது மறைவாக செய்த பாவம் இப்போது ஊர் அறிய அவரது குடும்பம் அவமானப்படுத்தப்பட்டது. பாவம் கொடிய வியாதியைப்போன்றது. அது பாவம் செய்தவர்களை மட்டுமல்ல பிறருக்கும் துன்பத்தை வருவிக்கக்கூடியது என்பதை தாவீதின் வாழ்வின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.
    தாவீது அப்சலோமுக்கு பயந்து ஓடிப்போகும்போது சவுல் குடும்பத்தைச் சேர்ந்த சிமேயி என்பவர் அவரை நிந்தித்து அவர் மீது கல்லெறிந்தார். தாவீதின் உடன் சென்றவர்கள் அவரை வெட்டிப்போடுவோம் என்றார்கள். அப்போது தாவீது அவன் என்னை தூஷிக்கட்டும் என்று கர்த்தர் அனுமதித்திருக்கிறார். ஆகவே அவரை எதுவும் கேட்க வேண்டாம் என்று தாவீது கூறினார். தன்னை எதிர்த்த சவுலுக்கு மட்டுமல்ல இந்த சிமேயினையும் தாவீது கொல்ல விரும்பவில்லை. ஏனெனில், இந்த சூழ்நிலையிலும் தாவீதின் மனது கர்த்தரைச் சார்ந்தும் கர்த்தர் அனுமதிக்காமல் எதும் நடக்காது என்றும் உறுதியாக இருந்தார். அப்சலோம் தாவீதைக் கொல்ல தனது போர்வீரர்களுடன் வந்தான். தாவீது இந்த போரில் யாரும் அவரைக் கொல்ல வேண்டாம், அவர் உங்களிடம் பிடிபட்டால் கனிவுடன் நடத்துங்கள் என்றார். போரில் அப்சலோம் படைவீரர்கள் தோற்றுப்போயினர். அப்சலோம் தப்பியோடும்போது அவரது தலைமுடி பெரிய கர்வாலி மரத்தில் சிக்கிக்கொண்டது. அவர் ஏறிவந்து கோவேறு கழுதை ஓடிவிட்டதால் அவர் தொங்கிக்கொண்டிருந்தார். அப்போது தாவீதின் படைவீரன் யோவாப் அவரைக் கொன்றுபோட்டான். தாவீது பாவத்தில் வீழ்ந்த போதும் அதில் நிலைத்திருக்கவில்லை தனது தவற்றை உணர்ந்து ஆண்டவரிடம் மன்னிப்பை கேட்டபோதிலும் அவரது பாவத்தின் விளைவாக துன்பமும் அவமானமும் அவருக்கு ஏற்பட்டது. இந்த நிலையிலும் அவர் ஆண்டவரை முறுமுறுக்காமல் தனக்கு நேரிட்ட அவமானம், துன்பங்களை பொருத்துக்கொண்டு ஆண்டவருக்குப் பிரியமாக வாழ்வதில் உறுதியாக இருந்தார். ஆகவே ஆண்டவர் அவரை என் இருதயத்திற்கு ஏற்றவர் என்று கூறினார். மனுக்குலத்தை மீட்பதற்கு அவரது குடும்பத்திலேயே பிறப்பதற்கு கர்த்தர் திட்டம் பண்ணினார். நாமும் கூடபாவத்தில் விழுந்து விட்டால் அதில் நிலைத்திராமல் ஆண்டவரிடம் திரும்புவோம். ஆண்டவருக்குப் பிரியமாக வாழ தொடர்ந்து முயற்சி செய்வோம்.

இரட்சிப்பின் சிந்தனை:
    பாவம் உன் வீட்டு வாசற்படியில் படுத்திருக்கிறது என்றபடி, நம் பாவங்களின் விளைவுகள் நம்மை சிலுவையில் சிந்திய இரத்தம், அவரால் கொடுக்கப்பட்ட மீட்பு நம்மை பாவத்தின் விளைவுகளில் இருந்தும், பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்கிறது. இது கிறிஸ்துவின் இரக்கம், கிருபை ஆகும்.

கதை:
    தாவீதுக்கு அநேக மனைவிகளும், அநேக பிள்ளைகளும் இருந்தார்கள்.  தாவீதின் மகன் அம்னோன் தாவீதின் மகள் தாமாரின் மேல் மோகம் கொண்டான்.  அம்னோனுக்கும், தாமாருக்கும் தகப்பன் தாவீதாய் இருந்தாலும் வெவ்வேறு தாய்க்குப் பிறந்தவர்கள்.  தாமாரின் தாயின் வையிற்றில் பிறந்த ஒரு சகோதரன் தாமாருக்கு இருந்தான்.  அவன் பெயர் அப்சலோம்.  தாவீது உரியாவின் மனைவியாகிய பத்சேபாளினிமித்தம் தவறு செய்ததன் விளைவாக, தாவீதின் மகன் அம்னோன் தாவீதின் மகள் தாமாரின் மேல் மேகங்கொண்டான்.
    அம்னோன் தன் சகோதரியாகிய தாமாரை வஞ்சனையாக தன் வீட்டிற்கு அழைத்து அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.  (2 சாமுவேல் 13:14)  பிற்பாடு அம்னோன் தாமாரை மிகவும் வெறுததான்.
    நடந்ததை தாவீது கேள்விப்பட்டு அம்னோன் மீது மிகவும் கோபம்கொண்டான். (2 சாமுவேல் 13:21)  தாமாரின் சகோதரனாகிய அப்சலோம் இதினிமித்தம் அம்னோனை பகைத்தான்.
    இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு அப்சலோம் வஞ்சனையான முறையில் அம்மோனை கொலை செய்தான்.
    தாவீது செய்த பாவம், அவர்கள் பிள்ளைகளையும் பாதித்தது.

    அப்சலோம் அம்னோனை கொலைசெய்துவிட்டு, கேசூருக்கு ஓடிப்போய் அங்கே மூன்று ஆண்டுகள் இருந்தான். (2 சாமுவேல் 13:37,28)  அப்சலோம் தன் சகோதரனாகிய அம்னோனை கொலை செய்ததினால் தாவீது அப்சலோமின்மேல் கோபங்கொண்டான்.  மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு யோவாபின் தந்திரமான ஆலோசனையினால் தாவீது அப்சலோமை மன்னித்து, மீண்டும் தன்னிடமாய் சேர்த்துக்கொண்டான். (2 சாமுவேல் 14:19)
    கேசூரில் இருந்து வந்த அப்சலோம் இரண்டு ஆண்டுகளாக தன் தகப்பனை பார்க்காதிருந்தான்.(2 சாமுவேல் 14:28)  இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு அப்சலோம் பட்டணத்து வசலின் ஓரத்தில் நின்று, எவனாவது தனக்கு இருக்கின்ற வழக்கில் நியாயம் கேட்கும்படி ராஜாவினிடத்தில் சென்றால், அவனை அழைத்து, நீ ராஜாவிடம் சென்றால் உனக்கு சரியான தீர்ப்பு கிடைக்காது.  நான் உனக்கு சரியான தீர்ப்பு வழங்குகிறேன் என்று சொல்லுவான்.  இப்படி சொல்லி அப்சலோம் தனக்கான ஒரு கூட்டத்தைச் சம்பாதித்தான். (2 சாமுவேல் 15:2-5)
    ஒரு நாள் அப்சலோம் தாவீதிடம் சென்று, நான் கர்த்தருக்கு பண்ணின பொருத்தனையை நிறைவேற்ற எப்ரோனுக்கு போகிறேன் என்றான்.  தாவீது எதற்காக போகிறாய் என்று கேட்டபோது, அப்சலோம் நான் மீண்டும் எருசலேமுக்கு வந்தால் கர்த்தருக்கு ஆராதனை செலுத்துவேன் என்று கேசூரில் குடியிருக்கும்போது பொருத்தனை பண்ணினேன் என்றான்.  (2 சாமுவேல் 15:7-9)
    தாவீது அப்சலோம் எப்ரோனுக்குச் செல்லவும், கர்த்தருக்கு தன் பொருத்தனையை நிறைவேற்றவும் அனுமதி கொடுத்தான்.  ஆனால் அப்சலோம் பொருத்தனையை நிறைவேற்ற எப்ரோன் செல்லவில்லை.  தன்னை ராஜாவாக பிரகடனம் செய்ய எப்ரோன் என்றான்.  அப்சலோமுக்க இந்த ஆலோசனையை வழங்கினவன் அகித்தோப்பேல்
    அப்சலோம் இஸ்வேல் தேசம் எங்கும் வேறுக்காரரை நிறுத்தி, எக்காளத்தொனியை கேட்கும்போது நீங்கள், அப்சலோம் எபரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று முன்னமே சொல்லிவைத்திருந்தான். (2 சாமுவேல் 15:10)
    அப்சலோம் எருசலேமில் ராஜாவானபோது, தாவீது தன்னால் எருசலேமுக்கும் தன் மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று, அரண்மனையை விட்டு வெளியேறினான்.  அரண்மனையை பாதுகாக்க தன் மறுமனையாட்டிகள் பத்து பேரை மாத்திரம் அரண்மனையில் வைத்துவிட்டு தன் மனுஷர் அனைவரையும் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டு புறப்பட்டான். (2 சாமுவேல் 15:16)
    தாவீது விட்டுச் சென்ற மறுமளையாட்டிகள் அரமனையில் இருந்தார்கள்.  அப்சலோம் அகித்தோப்பேலின் ஆலோசனைப்படி, சகல ஜனங்களின் கண்களும் பார்க்கும்படி, உப்பரிகையின்மேல் ஒரு கூடாரம் போட்டு, தாவீதின் மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான். (2 சாமுவேல் 16:21,22)

    தாவீது எருசலேமிலிருந்து கால்நடையாய் மலையுச்சிக்குப்போனான்.  தாவீது மலையிலிருந்து பகூரிம் மட்டும் வந்தபோது, பென்யமீனியனான சவுலின் வீட்டு சம்சத்தான் சீமேயி தாவீதிதை தூஷித்து, தாவீதின் மேலும், தாவீதின் ஊழிக்காரர் மேலும் கற்களை எறிந்தான்.
    அப்பொழுது அபிசாய் என்வன் தாவீதை நோக்கி: அந்த செத்த நாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.
    அதற்கு தாவீது சீமேயி என்னை தூஷிக்கட்டும்.  அவன் என்னை தூஷிக்கும்படி கர்த்தர் அவனுக்கு அனுமதித்திருக்கிறார் என்று, தாவீது சீமேயியை மன்னித்து விட்டார்.
    தன்ன கொலை செய்ய துடித்த பென்யமீனியனாகிய சவுலை தாவீது மன்னித்ததுபோலவே, இந்த பென்யமீனியனான சீமேயியையும் தாவீது மன்னித்தார்.  (2 சாமுவேல் 16:10)
    தன்னுடைய கஷ்டத்தின் மத்தியிலும், பாடுகளின் மத்தியிலும், இழப்புகளின் மத்தியில் தாவீது தன்னை விரோதித்தர்களை மன்னக்கிறவனாக இருந்தான்.  நாமும் எல்லா சூழ்நிலைகளிலும் மற்றவர்களை மன்னிக்க வேண்டும்.  நாம் மன்னிக்கும்போதே மன்னிப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

    அப்சலோம் யுத்த மனுஷரை அழைத்துக்கொண்டு தாவீதை கொலை செய்ய புறப்பட்டான்.  தாவீதின் மனுஷர் தாவீதைப் பார்த்து, நீர் இங்கேயே தங்கியிரும்.  நாங்கள் அப்சலோமோடு யுத்தத்திற்கு புறப்படுகின்றோம் என்றார்கள்.  (2 சாமுவேல் 18:3)
    தாவீது யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் பார்த்து: என் மகனாகிய அப்சலோம் மிகவும் நல்லவன்.  அகித்தோப்பேலின் தவறான ஆலோசனைப் படியே அவன் கெட்டுப்போனான்.  மற்றபடி அவன் மிகவும் திறமைசாலி, நல்ல உள்ளம் படைத்தவன்.  எனவே, போரில் அவனை மாத்திரம் எப்படியாவது உயிரோடு காப்பாற்றி என்னிடம் கொண்டு வாருங்கள் என்று சொன்னான். (2 சாமுவேல் 18:5)
    அப்சலோமிற்கும், தாவீதின் மனுஷருக்கும் இடையே எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடைபெற்றது.  இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறியடிக்கப்பட்டார்கள்.  அன்றைய தினம் ஐம்பதினாயிரம் பேர் மடிந்தார்கள். (2 சாமுவேல் 18:6)
    அப்சலோம் தாவீதின் சேவகருக்குப் பயந்ததினால் தன் உயிரைக் காப்பாற்ற கோவேறு கழுதையை விரைந்து செலுத்தினான்.   கழுதை ஒரு பெரிய கர்வாலி மரத்திற்கு கீழே வந்தபோது, அப்சலோமின் முடி மரத்தில் சிக்கிக்ககொண்டது.  கழுதை ஓடிவிட்டது.  அப்சலோமின் முடி மரத்தில் சிக்கிக்கொண்டாதால் மரத்திற்கும் பூமிக்கும் நடுவே தொங்கிக் கொண்டிருந்தான். (2 சாமுவேல் 18:9)
    அப்பொழுது யோவான் என்பவன் அப்சலோமைக் குத்தினன்.  பின்பு யோவாபின் ஆயுததாரிகள் பத்து பேர் அப்சலோமை கொன்றுபோட்டார்கள்.

பாவத்தின் விளைவு:
    தாவீது தன் செய்த பாவத்திற்கான தண்டனையை அவனுக்குக் கொடுத்தார்.  தாவீதின் தவறு மூலமாய் பிறந்த முதல் குழந்தை இறந்துபோனது.
    தாவீதின் மகன் அம்னோன், தன் சகோதரன் அப்சலோமினாலேயே கொலைசெய்யப்பட்டான்.
    அப்சலோம் தனது படைவீரன் யோவாப்பினால் கொலை செய்யப்பட்டான். 
    இதற்கு காரணம் தாவீது செய்த தவறுகள்.  நாமும் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்யும்போது ஆண்டவருடைய கோபத்திற்கு ஆழாக்கப்படுவோம்.
    இன்றே நம்முடைய குற்றங்களை ஆண்டவருடைய சமுகத்தில் அறிக்கையிட்டு, மனந்திருப்பி, கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேட்கும்போது அவர் மன்னிக்க தயையுள்ளவராய் இருக்கிறார்.

மனன வசனம்




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.