Type Here to Get Search Results !

JOHN 5 Bible Quiz in Tamil | யோவான் ஐந்தாம் அதிகாரம் கேள்வி பதில்கள் | Bible Question With Answer | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் ஐந்தாம் அதிகாரம்
The Gospel of JOHN 5
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. பெதஸ்தா என்பது எந்த மொழி வார்த்தை?
A) கிரேக்க வார்த்தை
B) லத்தீன் வார்த்தை
C) எபிரெய வார்த்தை
Answer: C) எபிரெய வார்த்தை
    (யோவான் 5:2)

02. பெதஸ்தா குளம் இருந்த இடம் எது?
A) எருசலேம்
B) கலிலேயா
C) சமாரியா
Answer: A) எருசலேம்
    (யோவான் 5:2)

03. பெதஸ்தா குளத்திற்கு எத்தனை மண்டபங்கள் இருந்தது?
A) மூன்று மண்டபம்
B) ஐந்து மண்டபம்
C) ஏழு மண்டபம்
Answer: B) ஐந்து மண்டபம்
    (யோவான் 5:2)

04. பெதஸ்தா குளத்தில் படுத்திருந்தது யார்?
A) ஏழைகள்
B) முதியோர்
C) வியாதிக்காரர்
Answer: C) வியாதிக்காரர்
    (யோவான் 5:3)

05. பெதஸ்தா குளத்து தண்ணீர் யாரால் கலக்கப்படும்?
A) தேவதூதரால்
B) தேவனால்
C) காபிரியேல் தூதனால்
Answer: A) தேவதூதரால்
    (யோவான் 5:4)


06. பெதஸ்தா குளத்தில் எத்தனை வருடம் வியாதிப்பட்ட மனுஷனை இயேசு கண்டார்?
A) பதினெட்டு
B) இருபத்து எட்டு
C) முப்பது எட்டு
Answer: C) முப்பது எட்டு
    (யோவான் 5:5)

07. பெதஸ்தா குளத்தில் இயேசு அற்புதம் செய்த நாள் எந்த நாள்?
A) ஓய்வு நாள்
B) ஆயத்த நாள்
C) மூன்றாம் நாள்
Answer: A) ஓய்வு நாள்
    (யோவான் 5:9)

08. பெதஸ்தா குளத்தில் சப்பாணியை இயேசு சுகமாக்கியதால் இயேசுவை கொலை செய்ய வகை தேடியது யார்?
A) யூதர்கள்
B) ரோமர்கள்
C) கிரேக்கர்கள்
Answer: A) யூதர்கள்
    (யோவான் 5:16)

09. தேவனை சொந்த பிதா என்று சொன்னது யார்?
A) மோசே
B) இயேசு
C) யோவான்
Answer: B) இயேசு
    (யோவான் 5:18)

10. நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம் உடையவர் யார்?
A) தேவன்
B) தீர்க்கதரிசி
C) குமாரன்
Answer: C) குமாரன்
    (யோவான் 5:22,27)


11. யார் தேவ குமாரனின் சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்?
A) மரித்தோர்
B) ஜீவனுள்ளோர்
C) உண்மையுள்ளோர்
Answer: A) மரித்தோர்
    (யோவான் 5:25)

12. நன்மை செய்தவர்கள் __________ அடைவர்.
A) தீமை அடைவார்கள்
B) ஆக்கினையடைவார்கள்
C) ஜீவன் அடைவார்கள்
Answer: C) ஜீவன் அடைவார்கள்
    (யோவான் 5:29)

13. தீமை செய்தவர்கள் __________ அடைவர்.
A) தீமை அடைவார்கள்
B) ஆக்கினையை அடைவார்கள்
C) ஜீவன் அடைவார்கள்
Answer: B) ஆக்கினையை அடைவார்கள்
    (யோவான் 5:29)

14. நாம் யாருடைய சத்தத்தைக் கேட்டதுமில்லை, ரூபத்தைக் கண்டதுமில்லை?
A) பிதா
B) பிசாசு
C) மனிதன்
Answer: A) பிதா
    (யோவான் 5:37)

15. இயேசுவைக் குறித்து சாட்சி கொடுத்தது யார்?
A) பிதா
B) மோசே
C) தீர்க்கதரிசி
Answer: A) பிதா
    (யோவான் 5:37)

16. பிதாவினிடத்தில் நம்மை குற்றம் சாட்டுவது யார்?
A) எலியா
B) மோசே
C) தீர்க்கதரிசி
Answer: B) மோசே
    (யோவான் 5:45)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.