Type Here to Get Search Results !

JC VBS 2023 Director's & Teacher's Important Instructions | விடுமுறை வேதாகம பள்ளி இயக்குநனர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆலோசனை | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி
விடுமுறை வேதாகமப்பள்ளி – 2023 

 

ஆசிரியர்கள், இயக்குநர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான  ஆலோசனை
விடுமுறை வேதாகமப்பள்ளி உருவாவதற்கான அடித்தள வசனம்:
உபாகமம் 6:6,7
            6. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது.
            7. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்து பேசி.
            முதலாவதாக கருத்தாய் போதிக்க (Teach) வேண்டும்.
            இரண்டாவதாக அவைகளைக் குறித்து பேச (Touch) வேண்டும்.
            உபாகமம் புத்தகம் ஒரு கட்டளையின் புத்தகமாகும்.  உலகில் எத்தனையோவிதமான ஊழியங்கள் நடைபெறுகின்றன.  அவை அனைத்தும் கட்டாயமான ஊழியங்கள் அல்ல.  ஆனால், சிறுவர் ஊழியம் என்பது கட்டாயமான ஊழியம்.
            சிறுவர் ஊழியத்தை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற கட்டளையை ஆண்டவர் திருச்சபைக்குக் கொடுத்திருக்கிறார்.
 
எபேசியர் 4:11-13
            11. மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும்,
            12. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
            13. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசியாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.
            சபை பக்திவிருத்தி அடைவதற்காக ஆண்டவர் ஊழியங்களை ஐந்து விதமாக பிரித்திருக்கிறார்.  கடைசியாக கூறப்படும் ஊழியம் போதக ஊழியம்.  போதக ஊழியம் என்பது போதகர்களை (குருவானவர்) குறிப்பது அல்ல, போதிக்கிறவர்களை அதாவது கற்றுக்கொடுக்கிறவர்களை குறிக்கிறது.
            மத்தேயு 28:20-ல் நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் என்று எழுதப்பட்டுள்ளது.  அதாவது போதகம் பண்ணுங்கள், கற்றுக்கொடுங்கள் என்றே ஆண்டவர் சொல்லுகிறார்.
            மத்தேயு 28:19-ல் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.  சகல ஜாதிகள் என்றால், அவற்றில் சிறுவர்களும் அடங்குவார்கள்.  அவர்களுக்கும் கருத்தாய் போதிப்பது நம்முடைய கடமையாய் இருக்கிறது.
 
            கற்றுக்கொடுத்தல் என்பதன் எபிரெய பதம் DIDACAE என்பதாகும்.  இதன் பொருள் தோண்டி எடு என்பதாகும்.
            நான் கற்றுக்கொண்டதை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பது கற்றுக்கொடுத்தல் அல்ல.  பிள்ளைகளிடம் இருந்து தோண்டி எடுப்பதே சிறந்த கற்றுக்கொடுக்கும் முறை ஆகும்.
            பிள்ளைகளிடம் என்ன திறமை இருக்கிறது என்று கண்டுபிடித்து, அதை வெளிக்கொண்டு வருகிறவரே சிறந்த ஆசிரியர்.
 
மாற்கு 2:1-5 (திமிர்வாதக்காரன் சுகமடைதல்)
            இந்த வேத பகுதியில் ஒரு திமிர்வாதக்காரனை நான்கு நபர்கள் இயேசுவினிடத்தில் கொண்டு வந்தார்கள்.  திமிர்வாதக்காரனின் விசுவாசத்தைப் பார்த்து அல்ல, அந்த நால்வரின் விசுவாசத்தைக் கண்டே ஆண்டவர் திமிர்வாதக்கரனுக்கு சுகமளித்தார்.

1. பெயர் பிரஷ்தாபம்
            மிகவும் பிரயாசப்பட்டு அந்த நால்வரும் திமிர்வாதக்காரனை இயேசு கிறிஸ்துவிடம் சுமந்து வந்தார்கள்.  ஆனால் அந்த நாள்வரின் பெயர்கள் வேதாகமத்தில் இடம் பெறவில்லை.  நாமும் இந்த நால்வரைப்போல மிகவும் பிரயாசப்பட்டு சிறுபிள்ளைகளுக்கு வசனத்தை போதிக்க வேண்டும்.  நான் தான் அதிய முயற்சி எடுக்கிறேன், என்னை தான் அனைவரும் பாராட்ட வேண்டும், என்னை முதன்மைபடுத்தினால் தான் காரியம் சிறப்பாய் முடியும் என்று நாம் யோசிக்க கூடாது.  எந்த ஒரு சிறந்த தலைவனும் தன்னுடைய பெயர் முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்ப மாட்டான்.
    உண்மையாய் உழைக்கிறவர்கள் மனிதர்கள் மத்தியில் அங்கிகரிக்கப்படமாட்டார்கள்.  ஆனால் கர்த்தர் கணக்க வைத்திருப்பார்.  நான் மனிதர்களால் அங்கிகரிக்கப்படவில்லையே என்று கவலைப்படவோ, எரிச்சலடையவோ தேவையில்லை.  

2. அன்பு, கரிசனை
            திமிர்வாதக்காரனை சுமந்து வந்த நால்வரும் அவனுக்கு உறவினர்களா, நண்பர்களா என்று நமக்கு தெரியாது.  ஆனால் அந்த நால்வரும் திமிர்வாதக்காரன் மீது அன்பும், கரிசனையும், இரக்கமும் வைத்திருந்தார்கள்.  நாமும் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும்போது அவர்கள் மீது அன்புள்ளவர்களாக, கரிசனையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாம் அன்போடு பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும்போது மாத்திரமே பிள்ளைகள் கடவுளுடைய வார்த்தைகளை நன்கு கற்றுக்கொள்ளுவார்கள்.

3. ஒற்றுமை:
            திமிர்வாதக்காரனை சுமந்து வந்த நல்வரிடமும் ஒற்றுமை இருந்தது.  ஒற்றுமையில்லாவிட்டால் அவர்களால் திமிர்வாதக்காரன; இயேசு கிறிஸ்துவிடம் சுமந்து வந்திருக்க முடியாது.  சிறுபிள்ளைகளுக்கு வசனத்தை அதாவது கடவுளுடைய வார்த்தைகளை போதிக்கின்ற ஆசிரியர்களாகிய நம்மிடம் ஒற்றுமை காணப்பட வேண்டும்.

4. புதிய வழியை உருவாக்கினர்:
            அந்த நால்வரும் திமிர்வாதக்காரனை இயேசுவிடம் சுமந்து வந்தபோது அவர்களுக்கு தடையாக, இயேசுவானவர் இருந்த வீடு முழுவதும் ஜனக்கூட்டத்தால் நிறைந்திருந்தது.  ஜனக்கூட்டம் மிகுதியாய் இருப்பதால் இயேவை சந்திக்க முடியாது.  நம்முடைய முயற்சி தோல்வியடைந்து விட்டது என்று நல்வரும் சேர்ந்து போகவில்லை.  வீட்டின் மேல் கூரையை பிரித்து திறப்பாக்கி, திமிர்வாதக்காரனை வீட்டிற்குள்ளே இரக்கினார்கள்.  இந்த நால்வரும் தடைகளை உடைத்து புதிய வழியை எற்படுத்தினார்கள்.  நாமும் சிறுபிள்ளைகளுக்கு வார்த்தையை கற்றுக்கொடுக்கும்போது பிசாசானவன் அநேக தடைகளை கொண்டு வருவான்.  நாமும் தடைகளை உடைத்து பிள்ளைகளுக்கு வார்த்தையை கருத்தாய் போதிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
            திமிர்வாதக்காரனின் சுகத்திற்கு காரணமான நால்வரிடம் காணப்பட்ட அன்பு, கரிசனை, ஒற்றுமை, தடைகளை உடைத்து புதிய வழியை கண்டு பிடிக்கும் திறன் இவையனைத்தும் நம்மிடமும் காணப்படும்போது நாமும் சிறந்த ஆசிரியராக உருவாக முடியும்.
 
            ஆசிரியர்களாகிய நாம் விடுமுறை வேதாகமபள்ளிக்கென ஜெப நேரத்தை தெரிவு செய்ய வேண்டும்.  அந்த நேரத்தில் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து விடுமுறை வேதாகம பள்ளிக்காக ஜெபிக்க வேண்டும்.
 
Time Table:
08:30 AM - 09:00AM - Teacher's Devotion
09:00 AM - 09:45 AM - General Assembly
09:45 AM - 10:30 AM - Class One
10:30 AM - 10:45 AM - Interval
10:45 AM - 11:30 AM - Class Two
11:30 AM - 12:15 PM - Closing Assembly
12:15 PM - 12:45 PM Teacher's Discussion


Section:
KG, 1, 2 - Beginner
3, 4, 5 - Primary
6, 7, 8 - Junior
9, 10 - Intermediate
11, 12 - Senior
 
Post Modern Generation:
            இக்கால குழந்தைகள் அதிக புத்திசாலிகள்.  யாருடைய ஆலோசனையையும் அவர்கள் கேட்க தயாராக இல்லை.  My Life My Rules என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு நாம் கடவுளுடைய வார்த்தைகளை கற்றுக்கொடுக்கும்போது மிகவும் ஞானத்தோடு கற்றுக்கொடுக்க வேண்டும்.
1. விடுமுறை வேதாகமப்பள்ளி ஆசிரியர் பணியை அல்லது இயக்குநர் பணியை நாம் விரும்பி செய்ய வேண்டும்.  இயக்குநராக ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்ட நமக்கு சில காரியங்கள் அத்தியாவசியமானதாக இருக்கும்.  சில காரியங்கள் தேவையானதாக இருக்கும்.  அத்தியாவசியமான காரியங்கள் இருந்தால் மாத்திரமே நாம் இப்பணியை சிறப்பாய் செய்ய முடியும்.  ஆனால் எனக்கு தேவைப்படுகின்ற நான் ஆசைப்படுகின்ற எல்லா காரியங்களும் இருந்தால் தான் நான் இப்பணியை செய்வேன் என்று சொல்லுவது முட்டாள்தனமாகும்.
2. நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும்போது பிள்ளைகள் அநேக கேள்விகள் கேட்பார்கள்.  பிள்ளைகளின் எல்லா கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இயேசு கிறிஸ்துவிடம் அநேகர் அநேக கேள்விகள் கேட்டார்கள்.  எல்லா கேள்விகளுக்கும் இயேசு கிறிஸ்து பதில் சொல்லவில்லை.
இரண்டு வார்த்தைகள்  1. சத்தியம்  2. உண்மை
 
உண்மை:
            உம்மையை நம்மால் நிரூபிக்க முடியும்.
            எ.கா: நாம் உடல் பரிசோனைக்காக மருத்துவரை அனுகும்போது அவர் நமக்கு ஒரு சான்றிதழை தறுவார். இது உண்மையாதாகும்.
            நான் கல்லூரி படிப்பை முடிக்கிறேன் என்றால், அந்தக் கல்லூரியிலிருந்து எனக்கு சான்றிதழ் வழங்குவார்கள்.   யாரேனும் என்னிடம் வந்து, நீ கல்லூரி படிப்பை முடிக்கவில்லை என்று சொன்னால், நான் என்னுடைய சான்றிதழை வைத்து, நான் கல்லூரி படிப்பை முடித்து விட்டேன் என்று என்னால் நிரூபிக்க முடியும்.
 
சத்தியம்:
            உண்மையை நிரூபிப்பது போல சத்தியத்தை நிரூபிக்க முடியாது.  ஆனால் சத்தியத்தை நம்ப வேண்டும்.
            இயேசு கிறிஸ்து ஒரு ராஜா.  மனுஷ குமாரன்.   அவர் தான் கடவுள்.  ஆனால் அதை நிரூபிக்க முடியாது.  ஆனால் நாம் இயேசுவை கடவுள் என்று நம்ப வேண்டும்.  அதாவது விசுவாசிக்க வேண்டும்.
            சத்தியத்தை நாம் நிரூபிக்க முயற்சிப்போனாமல் தோல்வியே மிஞ்சும்.
            இயேசு கிறிஸ்து குற்றவாளியாக பிலாத்துவினிடத்தில் நின்றபோது, பிலாத்து இயேசுவைப் பார்த்து: நீ ராஜாவா என்று கேட்டான்.  அதற்கு இயேசு (சத்தியத்தின்படி) நான் ராஜாதான் என்றார்.   இயேசு கிறிஸ்து ராஜா என்பதை பிலாத்து விசுவாசிக்கவில்லை.  அவன் உண்மையை நம்புகிறவனாக இருந்தான்.  எனவே, பிலாத்து சத்தியமானவரை அறிந்துகொள்ள முடியாமல் நீ ராஜா என்பதை எனக்கு நிரூபி என்று இயேசுவிடம் கேட்டான்.  (சத்தியமாவது என்ன?) பிலாத்து சத்தியத்தை உண்மை என நினைத்து நிரூபிக்க சொன்னான்.  பிலாத்துவால் சத்தியத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காக இயேசு பிலாத்துவுக்கு சத்தியத்தை குறித்து விளக்கப்படுத்தவில்லை.  சத்தியத்தை நாம் விளக்கப்படுத்த தேவையில்லை.  சத்தியத்தை நாம் விசுவாசிக்க வேண்டும்.
 
யோவான் 18:37
            37. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான்.  இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்.  சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன்.  இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்.  சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
            38. அதற்கு பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான்.
 
 
3. Tolarance vs Normalization
            கடவுள் – Infalible God.  கடவுளை நம்மால் அளவிட முடியாது. 
            Bible is the Infalible Word of God.  கடவுளுடைய வார்த்தைகளை ஒரு சில வரிகளில் நம்மால் அடக்கிவிட முடியாது.  கர்த்தருடைய வார்த்தையானது (பரிசுத்த வேதாகமம்) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய காரியங்களை நம்மோடு பேசும்.
            பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கிற நாம், நான் ஒரு சிறந்த மேடைப்பேச்சாளன் என்று நினைக்கக்கூடாது.  நான் வசனத்தை நன்றாய் கற்றுக்கொடுப்பவன் என்றே யோசிக்க வேண்டும்.  (I am not performance.  I am a educater.
 
 
4. Caltural vs Context
            வேதத்ததை வாசிக்கின்ற நாம் அதிலுள்ள மாற்றுக்கருத்துக்களை யோசிக்க வேண்டும். புதிய கருத்துக்களை கண்டுபிடிக்க வேண்டும்.  புதிய கண்ணோட்டத்தோடு வேதத்தை வாசிக்க வேண்டும்.
            நான் ஒரு சிறந்த மனிதன், என்னால் எல்லா காரியங்களையும் சிறப்பாய் செய்யது முடிக்க முடியும் என்று யோசிக்காமல் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு ஒவ்வொரு நாளும் ஊழியத்தின் பாதையில் முன்னேறிச்செல்ல வேண்டும்.
 
 Activities:
            மாணவர்களை குழுக்கலாக பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு காகிதத்தை கொடுத்து ஒரு படம் வரைய செல்ல வேண்டும்.  முதல் நபர் படம் வரைய துவங்கிய சில நிமிடங்களில் Next என்று சொன்னதும், அடுத்த நபர் அதே காகித்தில் அந்த படத்தை தொடரவேண்டும்.  மீண்டும் Next என்று சொன்னதும் மூன்றாவது நபர் அதேபடத்தில் தன் விருப்பப்படி படம் வரையே வேண்டும்.
            ஒருவர் படம் வரையும்போது நான் இந்த காரியத்தை நினைத்து தான் இந்த படம் வரைகிறேன் என்று குழுவில் உள்ள மற்ற நபர்களுக்கு சொல்ல கூடாது.
            முதல் நபர் தான் விரும்பிய ஏதாவது ஒரு படத்தை வரைய துவங்கியிருப்பார்.  இரண்டாவது நபர், முதல் நபர் விட்ட இடத்திலிருந்து மற்றும் ஒரு கண்ணோட்டத்தில் படத்தை வரைந்திருப்பார்.  கடைசி நபரைப் பார்த்தால் அவரால் சுயமாக யோசித்து அந்த காகிதத்தில் படம் வரைய முடியாது.  காகிதத்தில் முன்னமே வரைந்திருந்த படத்திற்கே மேலும் அழகு சேர்க்க முடியும்.  புதிதாக ஒன்றை அவர்களால் உருவாக்க முடியாது.
 
Activities:
மாணவனிர்களிடம் ஒரு காணிதத்தை கொடுத்து மூன்று தலைப்புகளின் அடிப்படையில் மூன்று படங்கள் வரைய சொல்ல வேண்டும்.
1.       நான் எப்படி இருந்தேன்
2.       நான் எப்படி இருக்கின்றேன்
3.       நான் எப்படி இருப்பேன்
இவ்வாறு பிள்ளைகளை நாம் உற்சாகப்படுத்தும்போது பிள்ளைகளின் மூளை, இருதயம், கைகள் ஆகிய அனைத்தும் செயல்பட துவங்குகின்றன.
 
Activities:
            ஒரு பொருளை பிள்ளைகளுக்கு தெரியாமல் மறைத்து வைத்து, என் கையில் என்ன இருக்கிறது சொல்லுங்கள் என்று கேட்பதன் மூலம் பிள்ளைகளின் ஆர்வத்தை நாம் அதிகப்படுத்த முடியும்.
 
            பிள்ளைகளின் திறமைகளை கண்டு பிடிக்கவே நாம் போட்டிகளை நடத்த வேண்டும்.  பிள்ளைகளின் திறமைகளை போட்டியாக்கக்கூடாது.
 
 
 
மனன வசனம்:
            1. KNOW IT
            2. KEEP IT
            3. USE IT
            4. GIVE IT
பிள்ளைகளுக்கு நாம் மனப்பாட வசனத்தை கற்றுக்கொடுக்கும்போது இந்த நான்கு காரியங்களின் அடிப்படையில் கற்றுக்கொடுக்க வேண்டும்.
 
 
            விடுமுறை வேதாகமப்பள்ளியில் இரண்டு பொதுக்கூடுகைகள் இடம் பெறும்.  முதல் பொதுக் கூடுகைக்கு பின்பு பிள்ளைகள் தங்கள் வகுப்பிற்கு பிரிந்து சொல்லுவார்கள்.  வகுப்பு நேரம் முடிந்ததும் இரண்டாவது பொதுக்கூடுகைக்காக பிள்ளைகள் ஒன்று கூடுவார்கள்.
 
கதை:
            முதல் பொதுக்கூடுகையில் கதை சொல்ல வேண்டும்.  கதையோடு சேர்த்து கடவுளின் வார்த்தைகளுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  கதைகளை பிள்ளைகள் புரிந்துகொள்ளும் படி தெரிவாக, நேர்த்தியாக சொல்ல வேண்டும்.
            பிள்ளைகளுக்கு நாம் கதை சொல்லும்போது Mind Map மூலமாகவும் கற்றுக்கொடுக்கலாம்.  நாம் இப்படி கற்றுக்கொடுக்கும்போது கதை பிள்ளைகளின் மனத்தில் ஆழமாக பதிவாகும்.
 
கதை சொல்லும் விதம்:
1.       Beginning of the Story
2.       Body of the Story
3.       Conclusions of the Story
4.       Application
ஒரு கதையில் இவை அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும்.  முதலாவது நல்ல துவக்கம் வேண்டும்.  நாம் கதையை சரியான இடத்தில் துவங்கினால் மட்டுமே நேர்த்தியாக நிறைவு முடிக்க முடியும்.  இரண்டாவதாக கதையின் உடல் அமைப்பு சிறப்பானதாக இருக்க வேண்டும்.  மூன்றாவதாக கதையின் முடிவு பிள்ளைகளை உற்சாகப்படுத்துகின்றதாக இருக்க வேண்டும்.  கடைசியாக இக்கதையின் மூலமாக பிள்ளைகளுக்கு நாம் எந்த சத்தியத்தை கற்றுக்கொடுக்கின்றோம் என்பதை ஆழமாக பிள்ளைகள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
 
            இரண்டாவது பொதுக்கூடுகையில் பாடல், நாடகம், விளையாட்டு போன்றவற்றை கற்றுக்கொடுக்கலாம்.
            பாடல் வேலையின் போது நடனம் மிக மிக முக்கியமானதாகும்.  நடனம் கற்றுத்தறுகிறேன் என்ற பெயரில் தவறான முறைகளை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதை தவிற்க வேண்டும்.  நாம் கற்றுக்கொடுக்கும் நடனங்கள் பிள்ளைகளின் உறங்கும் உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடியதாக இருக்கக்கூடாது.
 
            பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கின்ற நாம் நம்மைவிட பொறுப்பில் உயர்ந்திருப்பவர்களை மதிக்க வேண்டும்.  எ.கா: Respect to the chair.  ஒரு நாற்காலியில் ஒரு எலியை உட்கார வைத்தாலும் நாம் அதற்கு மதிப்பு கொடுத்துதான் ஆக வேண்டும்.  நாம் எலியை மதிக்காவிட்டாலும், எலி அர்ந்திருக்கின்ற நாற்காலியை மதிக்க வேண்டும்.
            நம்மை விட உயர் பொறுப்புகளில் இருக்கின்றவர்கள் நம்மைவிட அனுபவத்திலும், கல்வியிலும், திறமையிலும் குறைந்தவர்களாக இருந்தாலும் நாம் அவர்களை மதிக்க, அவர்களுக்குறிய மறியாதையை செலுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.
 
            விடுமுறை வேதாகமப்பள்ளியில் கலந்துகொண்ட பிள்ளைகளுக்கு நாம் கடைசி நாளில் பரிசு பொருட்கள் வாங்கிக்கொடுப்போம்.  அந்த பரிசு பொருட்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் பொருட்களாக இருந்தால் நல்லது.  பெரும்பாலும் நாம் கொடுக்கின்ற பரிசு பொருட்கள் சமையல் அறைக்கு பயன்படுகின்ற பொருட்களாகவே இருக்கின்றன.
 
            ஒரு சிறந்த இயக்குநர் அல்லது ஆசிரியர் என்பவர் விடுமுறை வேதாகமப்பள்ளியில் உள்ள அனைத்து நபர்களிடமும் பேச வேண்டும்.  விடுமுறை வேதாகம பள்ளிக்கு 500 பிள்ளைகள் வருகிறார்கள் என்றால், ஒரு சிறந்த இயக்குநர் அல்லது சிறந்த ஆசிரியர் என்பவர் தனக்கு கொடுக்கப்பட்ட பத்து நாட்களில் அத்துனை பிள்ளைகளிடமும் கட்டயம் ஒரு வார்த்தையாவது பேசியிருக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் முடிவு ஜெபம் செய்யும் போது ஏதேனும் ஒரு ஜெபக்குறிப்பை சொல்லி அதற்காக ஊக்கமாக ஜெபிக்கும்படி பிள்ளைகளை உற்சாகப்படுத்தலாம்.  ஜெபத்தைக் குறித்த முக்கியத்துவத்தை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
 
பிள்ளைகள் மனத்தில் நாம் சொல்லும் காரியங்கள் ஆழமாக பதிய இவற்றை நடைமுறைபடுத்த வேண்டும்:
1. Direct Experience
2. Made up situation
3. Drama (Mine, Choreography)
4. Demonstration
5. Feld Trips
6. Expressions
7. Motion Picture
8. Audio
9. Visualize
10.

வகுப்பறை:
    பொதுக்கூடுகை முடிந்ததும் பிள்ளைகளை நாம் தனித்தனி குழுவாக பிரித்து அமரச்செய்து பாடங்கள் கற்றுக்கொடுப்போம்.
    ஒவ்வொரு குழுவினருக்கும் ஒரு பெயரைக் கொடுத்து நாம் அவர்களை உற்சாகப்படுத்தலாம்.
    எ.கா: நமக்கு தெரிந்த மிஷனெரிகளின் பெயர்களை ஒவ்வொரு குழுவிற்கும் வைக்கலாம்.
    வேதாகம கதாப்பாத்திரங்ளை ஒவ்வொரு குழுவிற்கும் பெயராக வைக்கலாம்.  எ.கா ஆபிரகாம், மோசே, தாவீது, 
    விடுமுறை வேதாகமபள்ளியில் மொத்தம் ஒன்பது குழுக்கழுக்கு குறைவான குழுக்கள் இருப்பார்கள் என்றால் ஆவியின் கனிகளை பெயராக வைக்கலாம்.


விளையாட்டுப்போட்டிகள்:
பிகுனர்:
    ஒரு அட்டைப்பெட்டியை முன்பதாக வைத்துவிட்டு, பிள்ளைகளிடம் ஐந்து பிளாஸ்டிக் பந்துகளைக் கொடுத்துவிட வேண்டும்.  யார் அதிகபடியான பந்துகளை பெட்டியி்ல் போடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
    ஒவ்வொரு நபராக பெட்டியில் பந்துகளை போட வேண்டும்.  ஒவ்வொரு நபர்களும் எத்தனை பந்துகளை போடுகிறார்கள் என்று எழுதிவைக்க வேண்டும். அதிகபடியான பந்துகளை பெட்டியில் போடுபவரே வெற்றியாளர் ஆவார்.

பிரைமரி:
    ஒரு பெரிய பாத்திரத்தில் வலையல்ளை போட்டு வைக்க வேண்டும்.  தூரத்தில் ஐந்து பாத்திரங்களை வைக்க வேண்டும்.  பிள்ளைகள் இடது கையை பயன்படுத்தாமல் வலது கையில் கிளிப்பை பயன்படுத்தி பெரிய பாத்திரத்தில் இருக்கின்ற வளையல்களை தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.  குறிக்கப்பட்ட 60 வினாடிக்குள் யார் அதிக வளையல்களை தங்களுடைய பாத்திரத்தில் போட்டிருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.

ஜீனியர்:
    மாணவர்களை அனைவரையும் முன்பதாக அழைக்க வேண்டும்.  இரண்டு இரண்டு பேராக நிற்க்க வைக்க வேண்டும்.  அவர்கள் இருவரின் கைகளையும் கட்ட வேண்டும்.  ஒரு பெரிய பாத்திரத்தில் பிளாஸ்டிக் பந்துகளை போட்டுவைக்க வேண்டும்.  குறிப்பிட்ட தூரத்தில் சிறிய பாத்திரம் ஐந்தினை வைக்கவும்.  போட்டி துவங்கியதும் கைகள் கட்டப்பட்ட இருவரும் இணைந்து பெரிய பாத்திரத்தில் உள்ள பந்தை எடுத்து தங்களுக்கு குறிக்கப்பட்ட பாத்திரத்தில் போட வேண்டும்.
    60 வினாடிகளில் யார் அதிகபடியான பந்துகளை போடுகிறார்களோ அவர்களே வெள்ளியார்கள்.

வெற்றிபெற்றவர்களுக்கான போட்டி
    ஒவ்வொருவரிடமும் ஒரு பேனா கொடுக்க வேண்டும்.  மாணவர்கள் ஒரு கையை மட்டுமே பயன்படுத்தி பேனாவின் மூடியை கழற்றி போனாவின் பின் புறத்தில் மாட்டிவிட்டு, உறுதி என்று காகிதத்தில் எழுத வேண்டும்.  மீண்டும் பின்னால் இருக்கின்ற பேனாவின் மூடியை கழற்றி போனாவை மூட வேண்டும்.  இவையனைத்து ஒரு கையை பயன்படுத்தியே செய்ய வேண்டும்.  20 வினாடிக்குள் செய்து முடிக்க வேண்டும்.  போனா மூடி கீழே விழுந்த நபர் விளையாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும்.


இண்டர்
    மாணவர்களை அனைவரையும் முன்பதாக அழைக்க வேண்டும்.  இரண்டு இரண்டு பேராக நிற்க்க வைக்க வேண்டும்.  அவர்கள் இருவரின் கால்களையும் கட்ட வேண்டும்.  ஒரு பெரிய பாத்திரத்தில் பிளாஸ்டிக் பந்துகளை போட்டுவைக்க வேண்டும்.  குறிப்பிட்ட தூரத்தில் சிறிய பாத்திரம் ஐந்தினை வைக்கவும்.  போட்டி துவங்கியதும் கால்கள் கட்டப்பட்ட இருவரும் இணைந்து பெரிய பாத்திரத்தில் உள்ள பந்தை எடுத்து தங்களுக்கு குறிக்கப்பட்ட பாத்திரத்தில் போட வேண்டும்.
    60 வினாடிகளில் யார் அதிகபடியான பந்துகளை பாத்திரத்தில் போடுகிறார்களோ அவர்களே வெள்ளியார்கள்.    

வெற்றிபெற்றவர்களுக்கான போட்டி
    போட்டியில் கலந்துகொள்ளுகிறவர்களை நாற்காலியில் அமர வைத்து, வானத்தை பார்க்க சொல்ல வேண்டும்.  அவர்கள் கைகள் இரண்டையும் பின்னால் கட்ட வேண்டும்.  மாணவர்களின் நெற்றியில் பிஸ்கட் ஒன்றை வைக்க வேண்டும்.  அவர்கள் தங்கள் முக அசைவின் மூலமாகவே பிஸ்கட்டை சாப்பிட வேண்டும்.  பிஸ்கட் கீழே விழுந்தால் அவர்கள் போட்டியிலிருந்து வெளியேற வேண்டும்.
    
சீனியார்:
    சீனியர் மாணவர்களை இரண்டு பிரிவாக பிரிக்க வேண்டும்.  ஒரு பெரிய பாத்திரத்தில் வளையல்களை போட்டு வைக்க வேண்டும்.  தூரத்தில் இரண்டு பாத்திரத்தை வைக்க வேண்டும்.  இரண்டு குழுவில் உள்ளவர்கள் அனைவருக்கும் Strae கொடுக்க வேண்டும்.  குழுவில் உள்ள மாணவர்கள் ஒருவர் பின்னால் ஒருவராக நிற்க்க வேண்டும்.  அனைத்து மாணவர்களும் Straeவை வாயில் வைத்துக்கொள்ள வேண்டும்.  போட்டி துவங்கியதும் பெரிய பெட்டியில் இருக்கும் வளையளை Strae வை வாயில் வைத்துக்கொண்டு குழுவில் உள்ள ஒருவர் எடுத்து மற்றவரிடம் கோடுக்க வேண்டும்.  இப்படியாக குழுவில் உள்ள அனைவரிடமும் மாற்றப்பட வேண்டும்.  குழுவில் உள்ள கடைசி நபர் அதை தங்கள் பாத்திரத்தில் போட வேண்டும்.  60 வினாடிகளில் எந்த குழுவினர் அதிக என்னிக்கையிலான வளையல்களை போடுகிறார்களோ அவர்களே வெற்றிபெற்றவர்கள்.

வெற்றிபெற்றவர்களுக்கான போட்டி
    ஒரு பெரிய பாத்திரத்தில் ரப்பர் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.  வெற்றி பெற்றவர்களின் இலக்கத்திற்கு ஏற்ப தூரத்தில் பாத்திரங்களை வைத்துக்காள்ள வேண்டும்.  போட்டி துவங்கியதும் மாணவர்கள் பெட்டியில் இருக்கும் ரப்பரை வாயில் Stare வைத்துக்கொண்டு எடுத்து தங்கள் பெட்டிகளில் போட வேண்டும்.  யார் அதிக ரப்பர்களை தங்கள் பெட்டியில் போடுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.  போட்டிக்கான நேரம் 60 வினாடிகள்.


ஆசிரியர்கள்:
1. ஆசியிர்களை இரண்டு குழுக்கலாக பிரித்து, கயிறு இழுத்தல் போட்டி வைக்க வேண்டும்.
    வெற்றி பெற்ற குழுவை முன்பதாக அழைத்து, அவர்களிடம் வேதத்திலிருந்து ஒரு கேள்வி கேட்கப்படும்.  ஆசிரியர்களின் அருகாமையில் பாகற்காய் சூப் வைக்கப்பட்டிருக்கும்.  கேள்வி கேட்ட உடனே எந்த ஆசிரியர் பாகற்காய் சூப்பை குடித்துவிட்டு பதில் சொல்லுகிறாரோ அவரே வெற்றியாளராக கருதப்படுவார்.

2. பலூன் மற்றும் தண்ணீர் கப்பை எடுத்துகொள்ளவும்.
    ஒரு நபருக்கு ஒரு பலூனும் மூன்று தண்ணீர் கப்பும் கொடுக்க வேண்டும்.  ஆசிரியர் பலூனை தண்ணீர் கப்புக்குள் வைத்து ஊதி,தண்ணீர் கப்பை தூக்க வேண்டும்.  இப்படியாக முதல் இரண்டு கப்புகளை அருகருகே வைத்துவிட்டு, மூன்றாம் கப்பை இரண்டு கப்பிற்கும் மேலாக வைக்க வேண்டும்.  ஆசிரியர் தண்ணீர் கப்பை தொடக்கூடாது.  பலூனை மாத்திரமே தொட வேண்டும்.


அனைவருக்குமான விளையாட்டு போட்டி:
    வேதாகமத்தில் இருந்து ஒரு வசனத்தை தலைவர் சொல்ல வேண்டும்.  அந்த வசனத்தில் என்ன பொருள் இருக்கின்றதோ, பிள்ளைகள் அந்த பொருளை எடுத்துக்கொண்டு வர வேண்டும்.
1. புல் (அல்லது) பூ - யாக்கோபு 1:10
2. ஈ - பிரசங்கி 10:1
3. எறும்பு - நீதிமொழிகள் 6:6
4. முடி (அல்லது) மயிர் - மத்தேயு 10:30
5. ஜலம் (அல்லது) தண்ணீர் - மத்தேயு 3:16
6. உப்பு - மத்தேயு 5:13
7. கடுகு - மத்தேயு 13:31
8. முத்து, பாசி - மத்தேயு 13:45
9. பணம் - மத்தேயு 17:24
10. எண்ணெய் - மத்தேயு 25:4
11. கிளை - மாற்கு 4:32
12. வஸ்திரம் - மாற்கு 9:3
13. காசு - மாற்கு 12:42
14. வேதம் - சங்கீதம் 1:2
15. கம்பளம் (போர்வை) - மாற்கு 14:15
16. தைலம் - மாற்கு 14:8
17. குடம் - மாற்கு 14:13
18. பாத்திரம் - மாற்கு 14:23
19. கத்தி - மாற்கு 14:47
20. சிலுவை - மாற்கு 15:21
21. கோல் (குச்சி) - மாற்கு 15:19
22. செங்கல் - ஆதியாகமம் 11:3
23. கல் - ஆகாய் 2:15
24. இலை - மாற்கு 11:13
25. மோதிரம் - யாக்கோபு 2:2
26. காலணி (பாதரட்சை) - எசேக்கியேல் 24:23
27. இரும்பு - மீகா 4:13
28. களிமண் - 1 இராஜாக்கள் 7:46
29. புத்தகம் -  அப்போஸ்தலர் 7:43

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.