Type Here to Get Search Results !

Good Friday Service | Seven words spoken by Jesus Christ on the cross Explanation | புனித வெள்ளி ஆராதனை | இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகள் விளக்கம் | Jesus Sam

==================
புனித வெள்ளி ஆராதனை முறைமைகள்
==================
ஆரம்ப ஜெபம்:
ஆரம்ப பாடல்: (பாமாலை 103)
என் அருள் நாதா
1. என் அருள் நாதா இயேசுவே!
சிலுவைக் காட்சி பார்க்கையில்,
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்

2. என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்?
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்

3. கை, தலை, காலிலும், இதோ!
பேரன்பும் துன்பம் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?
முள்முடியும் ஒப்பற்றதே

4. சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்!
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்

5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே,
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே!




முதலாம் வார்த்தை
பாடல்: (பாமாலை 115)
பிதாவே, இவர்களுக்கு மன்னியும்
தாங்கள் செய்கிறது இன்னதென்று
அறியாதிருக்கிறார்களே

1. கூர் ஆணி தேகம் பாய
மா வேதனைப்பட்டார்
“பிதாவே, இவர்கட்கு
மன்னியும்“ என்றார்

2. தம் ரத்தம் சிந்தினோரை
நல் மீட்பர் நித்தியர்
மா தெய்வ நேசத்தோடு
இவ்வாறு ஜெபித்தார்

3. எனக்கே அவ்வுருக்கம்
எனக்கே அச்செபம்
அவ்வித மன்னிப்பையே
எனக்கும் அருளும்

வேதபாடம்:
லூக்கா 23:33-35
     33. கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அவரையும், அவருடைய வலப்பக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
      34. அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
     35. ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனே கூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால் தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.

செய்தி:
மன்னிப்பின் வார்த்தை
தலைப்பு: மன்னிப்பு எனும் மலர்ச்செண்டு
லூக்கா 23:34
     பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.

1. கர்த்தர் மன்னிக்கிறவர்
     மறுவாழ்வு அளிக்கிறவர்

யாத்திராகமம் 34:7
     ஆயிரம் தலைமுறை மட்டும் மன்னிக்கிறவர்.
சங்கீதம் 86:5
ஏசாயா 55:7
தானியேல் 9:10
1 யோவான் 2:2
எபேசியர் 1:7

2. கர்த்தர் மன்னித்தவர்
மனந்திரும்ப செய்தவர்

யோவான் 8:11
     நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே.
லூக்கா 7:48 (37-48)
மத்தேயு 9:2

3. கர்த்தர் மன்னிப்பவர்
மன்னிக்கச் சொன்னவர்

யோவான் 18:22 (20-35)
      ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் மன்னிக்க வேண்டும்
மாற்கு 11:25
மத்தேயு 6:14
எபேசியர் 4:32
கொலோசெயர் 3:13



இரண்டாம் வார்த்தை
பாடல்: (பாமாலை 115)
4. நீர் சிலுவையில் சாக
செய்ததென அகந்தை;
கடாவினேன், இயேசுவே,
நானுங் கூர் ஆணியை

5. உம் சாந்தக் கண்டிதத்தை
நான் நித்தம் இகழ்ந்தேன்
உனக்கும் மன்னிப்பீயும்
எண்ணாமல் நான் செய்தேன்

6. ஆ, இன்ப நேச ஆழி!
ஆ, திவ்விய உருக்கம்!
நிந்திப்போர் அறியாமல்
செய் பாவம் மன்னியும்

வேதபாடம்:
லூக்க 23:36-43
     36. போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
     37. நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
     38. இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
     39. அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
     40. மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
     41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம். இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
     42. இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
     43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

செய்தி:
இரட்சிப்பின் வார்த்தை
தலைப்பு: நம்பிக்கை எனும் ஒளிக்கீற்று
லூக்கா 23:43
     இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 14:3
யோவான் 17:24
யோவான் 12:26

1. கர்த்தர் இரட்சிப்பு
எபேசியர் 1:7
     அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
யோவான் 3:18
யோவான் 1:12
ரோமர் 3:24
எபேசியர் 2:8

2. கர்த்தரால் இரட்சிப்பு
அப்போஸ்தலர் 4:12
     அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை
ஏசாயா 43:11
ஓசியா 13:4
சங்கீதம் 62:1
எரேமியா 3:23

3. கர்த்தரிடத்தில் இரட்சிப்பு
சங்கீதம் 130:7
     இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
நீதிமொழிகள் 28:13
லூக்கா 14:7
லூக்கா 19:9,10
புலம்பல் 3:26



மூன்றாம் வார்த்தை
பாடல்: (பாமாலை 118)
என் கடவுளே, என் கடவுளே;
ஏன் என்னைக் கைவிட்டீர்?

1. துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே;
எண்ணிறந்த துன்பம் நீர்
மௌனமாகச் சகித்தீர்

2. பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
மூன்று மணி நேரமாய்
துணையின்றி மௌனமாய்
பேயோடே போராடினீர்

வேதபாடம்:
யோவான் 19:25-27
     25. இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
     26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ உன் மகன் என்றார்.
     27. பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரத்தில் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.

செய்தி:
அரவனைப்பின் வார்த்தை
தலைப்பு: புதிய உறவு எனும் பூபாளம்
யோவான் 19:26,27
     இயேசு தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன்.
     இயேசு சீஷனை நோக்கி: அதோ, உன் தாய்

1. பெற்றோரை கனம்பண்ணுங்கள்
யாத்திராகமம் 20:12
உபாகமம் 5:16
எபேசியர் 6:2,3
     உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
மத்தேயு 15:4
மத்தேயு 19:19
யாத்திராகமம் 21:15,17
லேவியராகமம் 20:9
உபாகமம் 27:16

2. பெற்றோரை கவனித்துக்கொள்ளுங்கள்
நீதிமொழிகள் 23:22
     உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு. உன் தாய் வயது சென்றவளாகும்போது அவனை அசட்டைபண்ணாதே.
மாற்கு 7:10-13
ஆதியாகமம் 47:12

3. பெற்றோரை காத்துக்கொள்ளுங்கள்
லேவியராகமம் 19:3
     உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை ஆசரிக்கவும் கடவீர்கள். நான் உன் தேவனாகிய கர்த்தர்.
நீதிமொழிகள் 4:3
நீதிமொழிகள் 1:8
நீதிமொழிகள் 6:20





நான்காம் வார்த்தை
பாடல்: (பாமாலை 118)
3. தெய்வ ஏக மைந்தனார்,
அபிஷேக நாதனார்,
“தேவனே, என் தேவனே,
என்தனை ஏன் கைவிட்டீர்?“
கேள், இருண்ட ராகசியம்!

4. துயர் திகில் இருண்டே
சூழும்போது, தாசரே
கைவிடாதபடி நீர்
கைவிடப்பட்டிருந்தீர்;
இக்கட்டில் சமீபம் நீர்
என்றிதாலே கற்பிப்பீர்

வேதபாடம்:
மத்தேயு 27:45-47
     45. ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
     46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
     47. அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.

செய்தி:
தத்தளிப்பின் வார்த்தை
தலைப்பு: இறை ஒன்றிப்பின் இன்னோசை
மத்தேயு 27:46
     ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி
     என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்

1. பாவமறியாதவர் நமக்காக பாவமானார்
2 கொரிந்தியர் 5:21
      நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
எபிரெயர் 4:15
1 யோவான் 3:5
ரோமர் 8:3
யோவான் 1:9

2. ஒன்றாயிருந்தவர் நமக்காக தனிமையானார்
ஏசாயா 59:2
     உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
யோவான் 10:30
யோவான் 8:29
யோவான் 16:32

3. அருகிலிருந்தவர் நமக்காக தூரமானார்
சங்கீதம் 22:11-19
     என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து நெருங்கியிருக்கிறது, சகாயரும் இல்லை.
அப்போஸ்தலர் 17:27




ஐந்தாம் வார்த்தை
பாடல்: (கீர்த்தனை 59)
1. உருகாயோ நெஞ்சமே
குருசினில் அந்தோ பார்!
கரங்கால்கள் ஆணியேறித்
திருமேனி நையுதே!

2. மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனாம்,
இந்நிலமெல் லாம் புரக்க
ஈன குரு சேறினார்

வேதபாடம்:
யோவான் 19:28,29
     28. அதற்கு பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்
     30. காடி நிறைந்த பாத்திரம் அங்கு வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.

செய்தி:
தவிப்பின் வார்த்தை
தலைப்பு: புனித ஏக்கங்களின் இளிய வெளிப்பாடு
யோவான் 19:28
     தாகமாயிருக்கிறேன்

1. தாகமாய் இருக்கிறவர்
மத்தேயு 27:48
மாற்கு 15:36
     உடனே அவர்களில் ஒருவன் ஓடி. கடற்காளனை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
சங்கீதம் 69:21
யோவான் 4:8,14

2. தாகத்தைத் தீர்க்கிறவர்
யோவான் 7:37,38
     37. இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.
     38. வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்
வெளிப்படுத்தல் 21:6
வெளிப்படுத்தல் 22:17

3. தாகம் தீர்க்க சொன்னவர்
மத்தேயு 25:35 (31-46)
     பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள். தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்.
நீதிமொழிகள் 25:21
ரோமர் 12:20



ஆறாம் வார்த்தை:
பாடல்: (கீர்த்தனை 59)
3. தாகமிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே,
ஏகபரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்

4. மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ?
சாவு வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்

வேதபாடம்:
யோவான் 19:29,30
     29. காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது: அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.
     30. இயேசு காடியை வாங்கின பின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

செய்தி:
அர்ப்பணிப்பின் வார்த்தை
தலைப்பு: வெற்றி வாழ்வின் வீர முழக்கம்
யோவான் 19:30
      முடிந்தது

1. பிதாவின் சித்தத்தை முடிந்தார்
யோவான் 4:34
     நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
யோவான் 17:4

2. பிசாசை ஜெயித்து முடித்தார்
1 யோவான் 3:8
     பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்
ரோமர் 16:20
யோவான் 16:33

3. பாவத்தை சுமந்து முடித்தார்
யோவான் 1:29
     யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவஆட்டுக்குட்டி என்றார்.
1 பேதுரு 2:24
ரோமர் 8:3
எபிரெயர் 9:26
1 யோவான் 3:5
1 யோவான் 4:10



ஏழாம் வார்த்தை
பாடல்: (கீர்த்தனை 59)
7. வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்,
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம் பாக்கி னார் அன்றோ?

வேதபாடம்:
லூக்கா 23:44-46
     44. அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.
     45. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
     46. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார். இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.

செய்தி:
ஒப்படைப்பின் வார்த்தை
தலைப்பு: இறை அர்ப்பணிப்பின் நிறைவு அறிக்கை
லூக்கா 23:46
     பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்

1. பலியாக தம்மை ஒப்புக்கொடுத்தார்
எபிரெயர் 9:14
      நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைப் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்
எபேசியர் 5:2
ஏசாயா 53:10
சங்கீதம் 31:5
அப்போஸ்தலர் 7:59
ரோமர் 12:1

2. பரிசுத்தமாக தம்மை ஒப்புக்கொடுத்தார்
எபேசியர் 5:27
     கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்கு முன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
தீத்து 2:14
1 பேதுரு 2:23

3. பாதுகாப்பாக தம்மை ஒப்புக்கொடுத்தார்
யோவான் 10:18,29
     ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள மாட்டான். நானே அதைக்கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

2 தீமோத்தேயு 1:12




காணிக்கைப்பாடல் (பாமாலை 350)
1. பிளவுண்டமலையே
புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும்,
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும்
நீக்கும்படி அருளும்

2. எந்த கிரியை செய்துமே,
உந்தன் நீதி கிட்டாதே;
கண்ணீர் நித்தம் சொரிந்தும்
கஷ்ட தவம் புரிந்தும்,
பாவம் நீங்க மாட்டாதே;
நீரே மீட்பர் இயேசுவே

3. யாதுமற்ற ஏழை நான்,
நாதியற்ற நீசன் தான்;
உம் சிலுவை தஞ்சமே,
உந்தன் நீதிய ஆடையே;
தூய ஊற்றை அண்டினேன்,
தூய்மையாய்க்கேல் மாளுவேன்

4. நிழல் போன்ற வாழ்விலே
கண்ணை மூடும் சாவிலே,
கண்ணுக்கெட்டா லோகத்தில்,
நடுத்தீர்வைத் தினத்தில்,
பிளவுண்ட மலையே,
புகலிடம் ஈயுமே

முடிவு ஜெபம்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.