Type Here to Get Search Results !

நெகேமியா ஒன்பதாம் 9 அதிகாரம் வினா விடைகள் | Nehemiah Chapter Nine 9 Bible Question & Answer | Bible Quiz in Tamil | Jesus Sam

================
நெகேமியா அதிகாரம் ஒன்பது (9)
பைபிள் கேள்வி பதில்கள்
Book of NEHEMIAH Bible Quiz
Nehemiah Bible Quiz Question & Answer Chapter Nine (9)
==================


01. இஸ்ரவேல் புத்திரர் எந்த தேதியில் உபவாசம் பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள் மேல் புழுதியைப் போட்டுக்கொண்டார்கள்?

A) பன்னிரண்டாம் தேதி

B) இருபத்து நாலாம் தேதி

C) முப்பதாம் தேதி

Answer: B) இருபத்து நாலாம் தேதி

            (நெகேமியா 9:1)

 

02. இஸ்ரவேல் சந்ததியார் யாரை விட்டு பிரிந்து, தங்கள் பாவங்களையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள்?

A) குழந்தைகளை விட்டுப் பிரிந்து

B) மறு ஜாதியாரையெல்லாம் விட்டு பிரிந்து

C) அடிமைகளை விட்டுப் பிரிந்து

Answer: B) மறு ஜாதியாரையெல்லாம் விட்டு பிரிந்து

            (நெகேமியா 9:2)

 

03. எத்தனை ஜாமம் மட்டும் கர்த்தருடைய நியாயப்பிரமாணம் வாசிக்கப்பட்டது?

A) ஒரு ஜாமம்

B) மூன்று ஜாமம்

C) ஏழு ஜாமம்

Answer: A) ஒரு ஜாமம்

            (நெகேமியா 9:3)

 

04. எத்தனை ஜாமம் மட்டும் ஜனங்கள் பாவ அறிக்கை பண்ணி, கர்த்தரைப் பணிந்து கொண்டார்கள்?

A) ஒரு ஜாமம்

B) மூன்று ஜாமம்

C) ஏழு ஜாமம்

Answer: A) ஒரு ஜாமம்

            (நெகேமியா 9:3)

 

05. எத்தனை பேர் லேவியருடைய படிகளின்மேல் நின்று, தங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாய் ஓலமிட்டார்கள்?

A) ஏழு பேர்

B) எட்டு பேர்

C) பத்து பேர்

Answer: B) எட்டு பேர்

            (நெகேமியா 9:4)

 

06. ஆபிராமை ஆண்டவர் எந்த பட்டணத்திலிருந்து அழைத்தார்?

A) ஊர் என்னும் கல்தேயர் பட்டணம்

B) ஆரான் என்னும் கல்தேயர் பட்டணம்

C) ஊர் என்னும் ஆரான் பட்டணம்

Answer: A) ஊர் என்னும் கல்தேயர் பட்டணம்

            (நெகேமியா 9:7)

 

07. ஆபிராமின் பெயரை ஆண்டவர் எப்படி மாற்றினார்?

A) ஆபிரகாம்

B) விசுவாசிகளின் தகப்பன்

C) அபிரகாம்

Answer: A) ஆபிரகாம்

            (நெகேமியா 9:7)

 

08. கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை யாருடைய சந்ததிக்கு கொடுப்பதாக ஆண்டவர் உடன்படிக்கை பண்ணினார்?

A) நோவா

B) ஆபிரகாம்

C) மோசே

Answer: B) ஆபிரகாம்

            (நெகேமியா 9:8)

 

09. கர்த்தருடைய ஜனத்தை அகந்தையாய் நடத்தியவர்கள் யார்?

A) எகிப்தியர்

B) கானானியர்

C) ஏதோமியர்

Answer: A) எகிப்தியர்

            (நெகேமியா 9:10)

 

10. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை பகலிலே மேகஸ்தம்பத்தினாலும், இரவில் ---------------- வழிநடத்தினார்.

A) அக்கினிஜுவாலையினாலும்

B) அக்கினிஸ்தம்பத்தினாலும்

C) அக்கினியாஸ்திரக்களினாலும்

Answer: B) அக்கினிஸ்தம்பத்தினாலும்

            (நெகேமியா 9:12)

 

11. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு செம்மையான நீதி நியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களை எங்கு கொடுத்தார்?

A) ஓரேப் மலை

B) அரராத் மலை

C) சீனாய் மலை

Answer: C) சீனாய் மலை

            (நெகேமியா 9:13)

 

12. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு யார் மூலமாக கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தார்?
A) மோசே

B) சாமுவேல்

C) தாவீது

Answer: A) மோசே

            (நெகேமியா 9:14)

 

13. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் கொடுத்தார்?

A) கன்மலையிலிருந்து

B) நீரோடைகளிலிருந்து

C) செங்கடலிலிருந்து

Answer: A) கன்மலையிலிருந்து

            (நெகேமியா 9:15)

 

14. இஸ்ரவேல் புத்திரர் அகங்காரமாய் நடந்து, எதைக் கடினப்படுத்தி, கர்த்தருடைய கற்பனைகளுக்குச் செவிகொடாதே போனார்கள்?

A) தலையை கடினப்படுத்தி

B) கழுத்தை கடினப்படுத்தி

C) உள்ளத்தைக் கடினப்படுத்தி

Answer: B) கழுத்தை கடினப்படுத்தி

            (நெகேமியா 9:16)

 

15. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எத்தனை வருஷம் வனாந்தரத்தில் ஒன்றும் குறைவுபடாமல் பராமரித்தார்?

A) இருபது வருஷம்

B) நாற்பது வருஷம்

C) என்பது வருஷம்

Answer: B) நாற்பது வருஷம்

            (நெகேமியா 9:21)

 

16. வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரின் வஸ்திரங்கள் -----------, கால்கள் ---------- .

A) வஸ்திரம் – கிழிவுமில்லை, கால்கள் - பழுதடையவுமில்லை

B) வஸ்திரம் - பழமையாய் போகவுமில்லை, கால்கள் - வீங்கவுமில்லை

C) வஸ்திரம்  - நிறம் மாறவுமில்லை, கால்கள் – பெலன் குறைவுமில்லை

Answer: B) வஸ்திரம் - பழமையாய் போகவுமில்லை, கால்கள் - வீங்கவுமில்லை

            (நெகேமியா 9:21)

 

17. கர்த்தர் தம்முடைய ஜனங்களை எப்படி கடிந்துகொண்டார்?

A) இராஜாக்கள் மூலமாக

B) நியாயப்பிரமாணத்தின் மூலமாக

C) தீர்க்கதரிசிகள் மூலமாக

Answer: C) தீர்க்கதரிசிகள் மூலமாக

            (நெகேமியா 9:30)

 

18. நீர் உண்மையாய் நடப்பித்தீர்.  நாங்களோ ----------- .

A) ஆகடியம் பண்ணினோம்

B) ஆகாமியம் பண்ணினோம்

C) கீழ்ப்படியாமற்போனோம்

Answer: B) ஆகாமியம் பண்ணினோம்

            (நெகேமியா 9:33)

 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.