Type Here to Get Search Results !

நெகேமியா எட்டாம் 8 அதிகாரம் கேள்வி பதில் | Nehemiah Bible Question with Answer in Tamil | விவிலிய வினா போட்டிகள் | Jesus Sam

================
நெகேமியா அதிகாரம் எட்டு (8)
பைபிள் கேள்வி பதில்கள்
Book of NEHEMIAH Bible Quiz
Nehemiah Bible Quiz Question & Answer Chapter Night (8)
==================

01. மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தை கொண்டுவரவேண்டுமென்று ஜனங்கள் யாரிடம் சொன்னார்கள்?

A) எஸ்றா

B) நெகேமியா

C) ஆனான்

Answer: A) எஸ்றா

            (நெகேமியா 8:1)

 

02. எஸ்றா ஒரு ------------- .

A) ஆசாரியன்

B) வேதபாரகன்

C) A) & B) இரண்டும் சரி

Answer: C) A) & B) இரண்டும் சரி

            (நெகேமியா 8:1,9)

 

03. புருஷரும், ஸ்திரீகளும் கேட்டு அறியத்தக்க எஸ்றா நியாயப்பிரமாணத்தை வாசித்த நாள் எந்த நாள்?

A) ஏழாம் மாதம் முதல் தேதி

B) எலூல் மாதம் இருபத்தைந்தாம் தேதி

C) கிஸ்லேயு மாதம் முதல் தேதி

Answer: A) ஏழாம் மாதம் முதல் தேதி

            (நெகேமியா 8:2)

 

04. எஸ்றா நியாயப்பிரமாணத்தை எங்கிருந்து வாசித்தான்?

A) ஆட்டு வாசலுக்கு முன்பாக

B) தண்ணீர் வாசலுக்கு முன்பாக

C) எப்பீராயீம் வாசலுக்கு முன்பாக

Answer: B) தண்ணீர் வாசலுக்கு முன்பாக

            (நெகேமியா 8:3)

 

05. எஸ்றா நியாயப்பிரமாணத்தை எவ்வளவு நேரம் வாசித்தான்?

A) காலமே தொடங்கி மத்தியானம் மட்டும்

B) காலமே தொடங்கி சாயங்காலம் மட்டும்

C) காலமே தொடங்கி இராத்திரி மட்டும்

Answer: A) காலமே தொடங்கி மத்தியானம் மட்டும்

            (நெகேமியா 8:3)

 

06. பிரசங்க பீடம் எதினால் செய்யப்பட்டது?

A) மரம்

B) தங்கள்

C) இரும்பு

Answer: A) மரம்

            (நெகேமியா 8:4)

 

07. பிரசங்க பீடத்தின் மேல் நின்றது யார்?

A) எஸ்றா

B) நெகேமியா

C) யெசுவா

Answer: A) எஸ்றா

            (நெகேமியா 8:4)

 

08. எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரமாக நின்று, சகல ஜனங்கள் காணப் புத்தகத்தை திறந்த போது ஜனங்கள் என்ன செய்தார்கள்?

A) எழுந்து நின்றார்கள்

B) முகங்குப்புற விழுந்தார்கள்

C) ஆமென், ஆமென் என்று சொன்னார்கள்

Answer: A) எழுந்து நின்றார்கள்

            (நெகேமியா 8:5)

 

09. நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை கேட்டபோது ஜனங்கள் என்ன செய்தார்கள்?

A) அழுதார்கள்

B) சந்தோஷப்பட்டார்கள்

C) துக்கப்பட்டார்கள்

Answer: A) அழுதார்கள்

            (நெகேமியா 8:9)

 

10. எஸ்றா வாசித்த நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளக்கிக் காட்டியது யார்?

A) லேவியர்

B) ஜனத்தின் அதிகாரிகள்

C) பாடகர்கள்

Answer: A) லேவியர்

            (நெகேமியா 8:9)

 

11. இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்.  நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றது யார்?

A) எஸ்றா

B) நெகேமியா

C) லேவியர்

D) A), B) & C) மூன்றும் சரி

Answer: D) A), B) & C) மூன்றும் சரி

            (நெகேமியா 8:9)

 

12. கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே உங்களுடைய -------- .

A) நலன்

B) பெலன்

C) சுகம்

Answer: B) பெலன்

            (நெகேமியா 8:10)

 

13. நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ள வேண்டுமென்று வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும் யாரிடம் கேட்டார்கள்?

A) எஸ்றா

B) நெகேமியா

C) யோசபாத்

Answer: A) எஸ்றா

            (நெகேமியா 8:13)

 

14. ஏழாம் மாதத்தின் பண்டிகையில் ஜனங்கள் எங்கு குடியிருக்க வேண்டும் என்று கர்த்தர் மோசேக்கு கற்பித்தார்?

A) கூடாரத்தில்

B) தேவாலயத்தில்

C) புறஜாதியாரோடு

Answer: A) கூடாரத்தில்

            (நெகேமியா 8:14)

 

15. ஜனங்கள் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும், பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டுவந்து என்ன செய்தார்கள்?

A) உணவு சமைத்தார்கள்

B) ஆலயத்தை அலங்கரித்தார்கள்

C) கூடாரம் போட்டார்கள்

Answer: C) கூடாரம் போட்டார்கள்

            (நெகேமியா 8:15,16)

 

16. நூனின் குமாரன் பெயர் என்ன?

A) எஸ்றா

B) நெகேமியா

C) யோசுவா

Answer: C) யோசுவா

            (நெகேமியா 8:17)

 

17. யாருடைய நாள் முதல் நெகேமியாவின் நாள் வரை ஜனங்கள் கூடாரப்பண்டிகையை அனுசரிக்காமல் இருந்தார்கள்?

A) மோசேயின் நாள் முதல்

B) யோசுவாவின் நாள் முதல்

C) தாவீதின் நாள் முதல்

Answer: B) யோசுவாவின் நாள் முதல்

            (நெகேமியா 8:17)

 

18. எத்தனையாவது நாள் விசேஷித்த ஆசாரிப்பு நாளாய் இருந்தது?

A) ஆறாம் நாள்

B) ஏழாம் நாள்

C) எட்டாம் நாள்

Answer: C) எட்டாம் நாள்

            (நெகேமியா 8:18)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.