Type Here to Get Search Results !

பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த ஓர் சிறிய விளக்கம் | Bible Short Information Tamil | Jesus Sam

பரிசுத்த வேதாகமம்

பரிசுத்த வேதாகமத்தில் உள்ள மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை அறுபத்து ஆறு (66). (ஆதியாகமம் – வெளிப்படுத்தல்)

            பழைய ஏற்பாட்டில் உள்ள மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை முப்பத்து ஒன்பது (39). (ஆதியாகமம் – மல்கியா)

            புதிய ஏற்பாட்டில் உள்ள மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை இருபத்து ஏழு (27).  (மத்தேயு  - வெளிப்படுத்தல்)

            பரிசுத்த வேதாகமம் ஏறக்குறைய நாற்பது நபர்களால் எழுதப்பட்டது.  வேதாகமத்தை எழுத சுமார் ஆயிரத்து அறநூறு (1600) ஆண்டுகளாயின என்று நம்பப்படுகிறது.

 


பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பிரிவுகள்:

பழைய ஏற்பாடு:

I. தோரா அல்லது நியாப்பிரமாணம்: (சட்ட புத்தகங்கள்)

            1. ஆதியாகமம்

            2. யாத்திராகமம்

            3. லேவியராகமம்

            4. எண்ணாகமம்

            5. உபாகமம்

            அவற்றை ஐந்து ஆகமங்கள் என்றும் அழைப்பர். 

 

II. சரித்திர புத்தகங்கள்:

            6. யோசுவா

            7. நியாயாதிபதிகள்

            8. ரூத்

            9. 1 சாமுவேல்

            10. 2 சாமுவேல்

            11. 1 இராஜாக்கள்

            12. 2 இராஜாக்கள்

            13. 1 நாளாகமம்

            14. 2 நாளாகமம்

            15. எஸ்றா

            16. நெகேமியா

            17. எஸ்தர்

            மொத்த சரித்திர புத்தகங்களின் எண்ணிக்கை பனிரெண்டு (12).

 

III. கவிதைப் புத்தகங்கள்:

            18. யோபு

            19. சங்கீதம்

            20. நீதிமொழிகள்

            21. பிரசங்கி

            22. உன்னதப்பாட்டு

            மொத்த கவிதைப் புத்தகங்களின் எண்ணிக்கை ஐந்து (5).

 

IV. தீர்க்கதரிசன புத்தகங்கள்:

            இஸ்ரவேல் ஜனங்களை நல்வழிப்படுத்தவும், அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டவும் ஆண்டவர் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தீர்க்கதரிசகளை பயன்படுத்தினார்.  தீர்க்க தரிசன புத்தகங்களை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம்.

            1. பெரிய தீர்க்கதரிசன புத்தகம்         2. சிறிய தீர்க்கதரிசன புத்தகம்

1. பெரிய தீர்க்கதரிசன புத்தகம்

            23. ஏசாயா

            24. எரேமியா

            25. புலம்பல்

            26. எசேக்கியேல்

            27. தானியேல்

            பெரிய தீர்க்கதரிசன புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்து (5)

2. சிறிய தீர்க்கதரிசன புத்தகங்கள்:

            28. ஓசியா

            29. யோவேல்

            30. ஆமோஸ்

            31. ஒபதியா

            32. யோனா

            33. மீகா

            34. நாகூம்

            35. ஆபகூக்

            36. செப்பனியா

            37. ஆகாய்

            38. சகரியா

            39. மல்கியா

            சிறிய தீர்க்கதரிசன புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை பனிரெண்டு (12)

 

 

புதிய ஏற்பாடு

I. சுவிசேஷப் புத்தகங்கள்:

            சுவிசேஷ நூல் அல்லது நற்செய்தி நூல் என்று அழைக்கப்படும் இந்த புத்தகங்களில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.   மொத்தம் நான்கு சுவிசே புத்தகங்கள் உள்ளது.

            40. மத்தேயு

            41. மாற்கு

            42. லூக்கா

            43. யோவான்

 

II. சரித்திர புத்தகம்:

            இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு சென்ற பின்பு, சீஷர்கள் எப்படி ஊழியத்தை ஆரம்பித்தார்கள், அவர்களுக்கு எப்படிப்பட்ட எதிர்ப்பு வந்தது, பவுல் எப்படி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஊழியம் செய்ய துவங்கினார் போன்ற சரித்திர குறிப்பகள் இந்த அப்போஸ்தலர் நடபடிகளில் எழுதப்பட்டுள்ளது.

            44. அப்போஸ்தலர் நடபடிகள்

 

III. கடிதங்கள்:

            கடிதங்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

            1. அப்போஸ்தலனாகிய பவுல் திருச்சபைகளுக்கு எழுதின கடிதங்கள்

            2. அப்போஸ்தலனாகிய பவுல் தனி நபருக்கு எழுதின கடிதங்கள்

            3. தனிநபர்கள் எழுதிய கடிதங்கள்

1. திருச்சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதங்கள்:

            45. ரோமர்

            46. 1 கொரிந்தியர்

            47. 2 கொரிந்தியர்

            48. கலாத்தியர்

            49. எபேசியர்

            50. பிலிப்பியர்

            51. கொலோசெயர்

            52. 1 தெசலோனிக்கேயர்

            53. 2 தெசலோனிக்கேயர்

            அப்போஸ்தலனாகிய பவுல் ஏழு திருச்சபைகளுக்கு மொத்தம் ஒன்பது கடிதங்களை எழுதுகிறார்

 

2. தனி நபருக்கு எழுதப்பட்ட கடிதங்கள்:

            54. 1 தீமோத்தேயு

            55. 2 தீமோத்தேயு

            56. தீத்து

            57. பிலேமோன்

            58. எபிரெயர்

            அப்போஸ்தலனாகிய பவுல் நான்கு நபர்களுக்கு ஐந்து கடிதங்களை எழுதுகிறார்.

 

3. தனி நபர் எழுதிய கடிதங்கள்:

            59. யாக்கோபு

            60. 1 பேதுரு

            61. 2 பேதுரு

            62. 1 யோவான்

            63. 2 யோவான்

            64. 3 யோவான்

            65. யூதா

            தனிநபர்கள் எழுதிய கடிதங்கள் மொத்தம் ஏழு. ஏழுதிய நபர்கள் நான்கு பேர்.

 

IV. தீர்க்கதரிசன புத்தகங்கள்:

            எதிர்காலத்தில் என்ன நடைபெறும்.  கடைசி காலத்தில் என்னென்ன அடையாளங்கள் பூமியில் தோன்றும் போன்ற குறிப்புகளை யோவான் தரிசனத்தின் மூலமாக கண்டு எழுதுகிறார்.

            66. அப்போஸ்தலனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம்

 

            இந்த தொகுப்பின் மூலமாக பரிசுத்த வேதாகமம் எதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டும்.  இதன் மூலமாக நாம் வேதத்தை வாசிக்கும்போது வேதத்தைக் குறித்த புரிதல் நமக்கு கிடைக்கம்.

            ஆண்வர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.