நாள் 7: வாய்ப்புகளுக்கான தயார் நிலை
மனன வசனம்
i. ஆண்டு
1901-1905
ii. இடம்
டோனாவூர், தமிழ்நாடு (Dohnavur, Village in Tamil Nadu)
iii. கதை முக்கிய கருத்து
அதிகமான குழந்தைகள் வரத் தொடங்கியதும் ஏமியும் அவரது குழுவினரும் வீடுகள், பள்ளிகள், தோட்டங்களை உருவாக்கினர். ஏமி அனைவரின் கருத்தையும் கவனமாகக் கேட்டு, கனிவுடன் வழிநடத்தினார். தலைமைத்துவம் என்பது கட்டுப்படுத்துவது அல்ல, அக்கறை காட்டுவதே என்று அவர் நம்பினார்.
iv. தலைப்பு செய்தி
சிறந்த தலைவர்கள் மற்றவர்கள் வளர உதவுகிறார்கள்.
v. மையக்கருத்து
தலைமைத்துவம், திட்டமிடல், அக்கறை
vi. நோக்கம்
ஆயத்தமும் பொறுப்பும் வாழ்க்கையில் வெற்றிக்கு வழி என்பதைக் கற்றுத் தருதல்.
vii. வேதாகம பகுதி
ஆதியாகமம் 41:1-41
viii. மனப்பாட வசனம்
நீதிமொழிகள் 21:5
ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
I. நோக்கம்
காத்திருப்பு காலத்தில் சோர்ந்து போகாமல் நம்மை தயார் செய்து கொள்ளுவதின் அவசியத்தை பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். எப்போது வேண்டுமானாலும் வாய்ப்புகள் வரலாம். அவ்வாறு வாய்ப்பு வரும் போது எப்படி அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். திட்டமிடுதலின் அவசியத்தை பிள்ளைகள் உணர செய்ய வேண்டும். தலைமைத்துவத்தை பற்றிய புரிதலை பிள்ளைகளுக்கு வலியுறுத்த வேண்டும். தன்னம்பிக்கையோடும், பொறுப்புணர்வோடும் இருப்பதன் தேவையை கற்றுக் கொடுக்க வேண்டும்
II. இலக்குகள்
- ஆயத்தம் முக்கியம் என்பதை புரிந்து கொள்வது
- பணிவுடன் திறமைகளை பயன்படுத்த கற்றுக் கொள்வது
- பொறுப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்வது
III. ஏமி கார்மைக்கேல் : ஞானத்துடன் வழிநடத்துதல்
அதிகமான குழந்தைகள் வரத் தொடங்கியதும், ஏமியும் அவரது குழுவினரும் வீடுகள், பள்ளிகள் மற்றும் தோட்டங்களை உருவாக்கினர். அவர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றினர். ஏமி அனைவரின் கருத்தையும் கவனமாகக் கேட்டு, கனிவுடன் வழிநடத்தினார். தலைமைத்துவம் என்பது மற்றவர்களைக் கட்டுப்படுத்துவது அல்ல, மற்றவர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டுவதே என்று அவர் நம்பினார். சிறந்த தலைவர்கள் மற்றவர்கள் வளர உதவுகிறார்கள்.
IV. பாடவிளக்கம்
யோசேப்பு சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு வாரம் சென்ற பின்பு, பார்வோன் ஒரு கனவு கண்டார். அது என்னவென்றால், அவர் நதியண்டையிலே நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறி வந்து புல் மேய்ந்தது. அவைகளின் பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது. அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப் போட்டது. இப்படிப் பார்வோன் சொப்பனம் கண்டு விழித்துக் கொண்டார்.
மறுபடியும் அவன் தூங்கும்போது, இரண்டாம்முறை ஒரு கனவு கண்டார். நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது. பின்பு, சாவியானதும் கீழ்க்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது. சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப் போட்டது. அப்பொழுது பார்வோன் விழித்துக் கொண்டு, அது கனவு என்று அறிந்தார்.
பார்வோனுடைய மனம் கலக்கங் கொண்டிருந்தது. அப்பொழுது அவர் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் கனவைச் சொன்னார். ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக் கூடாமற்போயிற்று. அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் பார்வோனிடம் யோசேப்பை பற்றி சொல்ல, சிறையிலிருந்த யோசேப்பு அழைத்து வரப்பட்டு கனவுக்கான அர்த்தம் கேட்கப்பட்டது. யோசேப்பு அந்த கனவிற்கான அர்த்தத்தை சொன்னார். அந்த ஏழு நல்ல பசுக்களும் ஏழு வருஷங்களாம். அந்த ஏழு நல்ல கதிர்களும் ஏழு வருஷங்களாம். அவைகளின் பின் ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருஷமாம் கீழ்காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாம் இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருஷமாம். எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும். அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும் அப்பொழுது எகிப்து தேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம் அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும். ஆகையால் விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்த கேட்டுக் கொண்டார்.
அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்று சொல்லி யோசேப்பிடம் கடவுள் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய், உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள் என்று சொல்லி எகிப்து தேசம் முழுமைக்கும் யோசேப்பை அதிகாரியாக்கினார்.
V. வாழ்விற்கு படிப்பினை
யோசேப்பு தான் செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவித்த போதிலும் மிகுந்த பொறுமையோடும், சகிப்புத் தன்மையோடும், தன்னம்பிக்கையோடும் காத்திருந்ததாலும், அந்த காத்திருப்பு காலத்தில் தன்னை தயார் படுத்திக்கொண்டதாலும், தனது துன்பத்தின் மத்தியிலும் பிறருக்கு உதவியதாலும், ஏற்ற வாய்ப்புகள் வரும் போது அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டதாலும் தலைமைத்துவதைப் பெற முடிந்தது. இந்த பொறுமையை, சகிப்புத்தன்மையை, தன்னம்பிக்கையை, சேவை மனப்பான்மையை இந்நிகழ்வின் மூலம் கற்றுக் கொள்வதோடு பணிவுடன் திறமையை பயன்படுத்தினால் தலைவராக முடியும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
VI. வலியுறுத்த வேண்டியது
- வாய்ப்பு திடீரென வரும்
- தயாராக இருப்பது முக்கியம்
- பணிவுடன் திறமையைப் பயன்படுத்துதல்
VII. தவிர்க்க வேண்டியது
- "வெற்றி என்றால் ஆசீர்வாதம்" என்ற மொழி
- அதிஷ்டக் கோட்பாடு
VIII. கற்றல் நோக்கம்
- தயார் நிலை
- பொறுப்புணர்வு
- தன்னம்பிக்கை
IX. வழிகாட்டி கேள்வி
- நாளைய வாய்ப்புக்காக இன்று குழந்தைகள் என்ன செய்யலாம்?





இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.