Type Here to Get Search Results !

Genesis 48 Forty Eight Bible Question & Answer in Tamil | ஆதியாகமம் 41 கேள்வி பதில்கள் தமிழில் | Bible Study Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Forty Eight (48)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து எட்டாம் (48) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. இஸ்ரவேல் வருத்தமாயிருக்கிறார் என்று யாருக்கு சொல்லி அனுப்பினார்கள்?
    A) ரூபன்
    B) யோசேப்பு
    C) சிமியோன்
Answer: B) யோசேப்பு
    (ஆதியாகமம் 48:1)

02. இஸ்ரவேல்: யோசேப்பு வந்ததைக் கண்டு தன்னை திடப்படுத்திக் கொண்டு உட்கார்ந்த இடம் எது?
    A) பாறை
    B) நாற்காலி
    C) கட்டில்
Answer: C) கட்டில்
    (ஆதியாகமம் 48:2)

03. கானான் தேசத்தில் உள்ள லூஸ் என்னும் இடத்தில் தேவன் யாரை ஆசீர்வதித்தார்?
    A) ஆபிரகாம்
    B) ஈசாக்கு
    C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
    (ஆதியாகமம் 48:3)

04. யோசேப்பின் குமாரர் என்னுடைய குமாரர் என்றது யார்?
    A) பார்வோன்
    B) வீட்டு விசாரனைக்காரன்
    C) இஸ்ரவேல்
Answer: C) இஸ்ரவேல்
    (ஆதியாகமம் 48:5)

05. எப்பிராயீம், மனாசேயை இஸ்ரவேல் யாருக்கு ஒப்பிட்டான்?
    A) லேவி, சிமியோன்
    B) யோசேப்பு, பென்யமீன்
    C) ரூபன், சிமியோன்
Answer: C) ரூபன், சிமியோன்
    (ஆதியாகமம் 48:5)


06. யோசேப்பு தன் குமாரரை இஸ்ரவேலிடம் கூட்டிச்செல்கையில் யோசேப்பின் வலது கை பக்கம் இருந்தது யார்?
    A) மனாசே
    B) எப்பிராயீம்
    C) இஸ்ரவேல்
Answer: B) எப்பிராயீம்
    (ஆதியாகமம் 48:13)

07. யோசேப்பு தன் குமாரரை இஸ்ரவேலிடம் கூட்டிச்செல்கையில் யோசேப்பின் இடது கை பக்கம் இருந்தது யார்?
    A) மனாசே
    B) எப்பிராயீம்
    C) இஸ்ரவேல்
Answer: A) மனாசே
    (ஆதியாகமம் 48:13)

08. யோசேப்பு தன் குமாரரை இஸ்ரவேலிடம் கூட்டிச்செல்கையில் இஸ்ரவேலின் வலது கைக்கு நேராய் இருந்தது?
    A) மனாசே
    B) எப்பிராயீம்
    C) யோசேப்பு
Answer: A) மனாசே
    (ஆதியாகமம் 48:13)

09. யோசேப்பு தன் குமாரரை இஸ்ரவேலிடம் கூட்டிச்செல்கையில் இஸ்ரவேலின் இடது கைக்கு நேராய் இருந்தது?
    A) மனாசே
    B) எப்பிராயீம்
    C) யோசேப்பு
Answer: B) எப்பிராயீம்
    (ஆதியாகமம் 48:13)

10. இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரை ஆசீர்வதிக்கையில் தன் வலதுகையை யார் மேல் வைத்தான்?
    A) மனாசே
    B) எப்பிராயீம்
    C) யோசேப்பு
Answer: B) எப்பிராயீம்
    (ஆதியாகமம் 48:14)


11. இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரை ஆசீர்வதிக்கையில் தன் இடது கையை யார் மேல் வைத்தான்?
    A) மனாசே
    B) எப்பிராயீம்
    C) யோசேப்பு
Answer: A) மனாசே
    (ஆதியாகமம் 48:14)

12. அது எனக்கு தெரியும், என் மகனே, எனக்கு தெரியும் என்றது யார்?
    A) பார்வோன்
    B) இஸ்ரவேல்
    C) யோசேப்பு
Answer: B) இஸ்ரவேல்
    (ஆதியாகமம் 48:19)

13. மனாசேயை விட எப்பிராயீம் அதிகம் பெருகுவான் என்றது யார்?
    A) தேவன்
    B) இஸ்ரவேல்
    C) யோசேப்பு
Answer: B) இஸ்ரவேல்
    (ஆதியாகமம் 48:19)

14. இஸ்ரவேல் தன் பட்டயத்தாலும் தன் வில்லாலும் யாரிடம் நிலத்தை சம்பாதித்தான்?
    A) எமோரியர்
    B) கானானியர்
    C) எகிப்தியர்
Answer: 
A) எமோரியர்
    (ஆதியாகமம் 48:22)

15. இஸ்ரவேல் எமோரியரிடமிருந்து சம்பாதித்த நிலத்தை யாருக்கு கொடுத்தான்?
    A) ரூபன்
    B) யோசேப்பு
    C) பார்வோன்
Answer: B) யோசேப்பு
    (ஆதியாகமம் 48:22)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.