Type Here to Get Search Results !

JC VBS 2024 | Day 7 | விசுவாசிப்பதையே எண்ணுகிறேன் | Jesus Sam

நாள் 7: விசுவாசிப்பதையே எண்ணுகிறேன்
(பிலிப்பியர் 3:9)
====================
நோக்கம்:
பிள்ளைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவும் அதையே நீதியாக எண்ணி, அதை மட்டுமே நம்பிக்கையாக கொண்டு வாழவும் வேண்டும் என்பதை உணர வேண்டும்.  இருந்தாலும் அதைவிட வேதம் வாசிப்பதை மேன்மையாக எண்ணி கடவுளிடம் தங்களை ஒப்படைக்க வேண்டும்.

வேதபகுதி:
    மத்தேயு 15:21-28 (கானானிய ஸ்திரீயின் ஒப்படைப்பு)

மனன வசனம்:
எபிரெயர் 11:6
    ...அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.


பாட சுருக்கம்:
கானானிய ஸ்திரீ இயேசுவால் தன் மகளை குணமாக்க முடியும் என்பதை விசுவாசித்து, புறக்கணிக்கப்பட்ட போதும், கடவுள் முன் தாம் சிறியவர் என உணர்ந்து, கடவுளிடம் தன்னை தாழ்த்தி அவர் மேல் நம்பிக்கை வைத்து, அவரை விடாமல் வேண்டிக் கொண்டதால் நன்மை பெற்றார்.  இயேசுவே அவரின் விசுவாசத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.  பிள்ளைகளும் கடவுள் உன்னதமானவர் என விசுவாசித்து, தங்களை தாழ்த்தி அவரிடம் தங்களை ஒப்படைக்க தூண்ட வேண்டும்.

கவன ஈர்ப்பு:
”நீங்கள் ஒரு ஓவியப் போட்டிக்கு வேறு பள்ளிக்கு செல்கிறீர்கள் அது மிகவும் முக்கியமான போட்டி, அதில் வென்றால் பெரிய பாராட்டும், பல சலுகைகளும் கிடைக்கும்.  போட்டி நடக்கும் பள்ளி ஒரு தனிமையான இடத்தில் உள்ளது.  நீங்கள் உங்கள் பையை சோதித்துப் பார்க்கிறீர்கள் உங்கள் பென்சில் எங்கோ தவறி இருக்கிறது.  நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று பிள்ளைகளிடம் கேட்கவும்.  தேடுவோம் அல்லது அருகில் உள்ள கடையில் வாங்குவோம் என்று கூறுவார்கள்.  அருகில் ஒரு சிறு கடை கூட கிடையாது, பென்சில் வாங்க வழியே இல்லை, ஆனால் அங்கு "May I Help You" desk-ல் போட்டியாளர் பெயரை பதிவு செய்பவர் நான் தான்.  என்னிடம் இரண்டு பெரிய பென்சிலும் ஒரு அரை பென்சிலும் வைத்து இருக்கிறேன்.  இப்பொழுது என்ன செய்வீர்கள்? எனக் கேட்டு இரண்டு முழு பென்சில்களையும் ஒரு அரை பென்சிலையும் காட்டவும்.  பின்பு “என்னிடம் வந்து என் பென்சில் தொலைந்து விட்டது Please Sir/Madam எனக்கு ஒரு பென்சில் கொடுக்க முடியுமா?” என்று கேட்பீர்கள் அல்லவா? நான் Sorry நான் எழுதுவதற்கு கொடுத்திருக்கிறார்கள் அதற்கு தேவைப்படுமே, என்றால் என்ன செய்வீர்கள்?  எனக் கேட்கவும்.  “நீங்கள் 2 பெரிய பென்சில்கள் வைத்திருக்கிறீர்களே எனக்கு அந்த சிறிய பென்சிலையாவது கொடுங்கள் Please.........? என்ன கேட்பீர்கள் அல்லவா?  நீங்கள் வருந்தி கேட்கும் போது நான் தருவேன் அல்லவா?  அதுபோல தனக்கு தேவைப்பட்ட ஒரு காரியத்தை இயேசுவிடம் வேண்டி பெற்றுக்கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி காண்போம்.

பாட விளக்கம்:
இயேசு கிறிஸ்து கெனெசரேத்திலிருந்து மேல் நோக்கி கானானின் எல்லை பகுதிக்குச் சென்றார்.  தீரு மற்றும் சீதோன் பட்டணங்கள் கடற்கரைப் பட்டணங்கள் ஆகும்.  அவை பேனிக்கியா ஆளுகை பகுதிகளாக இருந்தன.  அப்பகுதியில் கானானியர்கள் மற்றும் கிரேக்கர்கள் அதிகமாக குடியிருந்தார்கள்.  இஸ்ரவேலர்கள் கானானியர்களை வெறுத்தனர்.  கானானியர்களும் இஸ்ரவேலர்களை வெறுத்தனர்.  இயேசு பிறப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் கானான் தேசத்தில் வாழ்ந்தவர்கள் தான் கானானியர்கள்.  மோசே வாழ்ந்த நாட்களில் அவர்கள் மிகவும் தவறான வழியில் வாழ்ந்தார்கள்.  மூட நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்.  தங்களுக்கு செல்வம் பெருக வேண்டுமென்பதற்காக சிறு பிள்ளைகளைக் கூடபலி செலுத்தினார்கள்.

கடவுள் சிறுவர்களுக்கு துன்பம் வருவதை விரும்புகிறவர் அல்ல.  அதினால் தான் யோசுவா தலைமையின் மூலம் இஸ்ரவேலர்கள் கானானியர்களை போர் செய்து வெற்றி பெறுகிறார்கள்.  அதிலிருந்து தப்பியவர்கள் இஸ்ரவேல் எல்லையை தாண்டி வாழ்ந்தனர்.  இஸ்ரவேலர்கள் அவர்களுடன் பேசுவதை விரும்பவில்லை.  அதை தீட்டாக எண்ணினார்கள்.  ஆனால் இயேசு அவர்கள் பகுதிக்கும் சென்றார்.

இயேசு வந்ததை ஒரு பெண் அறிகிறார்.  அவர் தீருவில் வாழ்ந்த கிரேக்கர் ஆதிக்கம் நிறைந்த பேனிக்கியா பகுதியை சார்ந்தவர்.  அவரின் மகள் வியாதியோடு இருந்தார்.  இயேசுவின் வல்லமையை அறிந்த அந்த பெண் இயேசு இஸ்ரவேலர் என அறிந்தும் அவரிடம் உதவி கேட்டுச் சென்றார்.  இயேசுவே தாவீதின் குமாரனே என்று அழைத்தார்.  மேசியா தாவீதின் வம்சத்தில் வருவார் என்பது இஸ்ரவேலர்களுக்கு உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம்.  அந்த பெண் இயேசுவை மீட்பர் (மேசியா) என்று நம்பி அழைத்தார்.  ஆனால் ஆண்டவர் அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை.  சில நேரங்களில் நாம் ஜெபிக்கும் போது கூட நாம் கேட்பது கிடைப்பதில்லை.  அப்பொழுது நாம் சோர்ந்து போய் ஜெபிப்பதை விட்டுவிடுவோம் அல்லவா?  ஆனால் அந்த பெண் அப்படி செய்யவில்லை.  அவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்.  அவர்கள் சீஷர்கள் அவர் தொந்தரவு செய்வதால் அவரை அனுப்பிவிடும்படி கூறினர்.


அந்த சீஷர்களும், அங்கிருந்த மற்ற இஸ்ரவேலர்களும் கானானிய ஸ்திரீ அவரை தொந்தரவு செய்வதை விரும்பவில்லை.  ஆனால் இயேசுவுக்கு அந்த பெண்ணின் விசுவாசம் பிடித்திருந்தது.  அதினால் அவர் தான் இஸ்ரவேலர்களுக்கே உதவ வந்தேன் எனக் கூறினார்.  அங்கிருந்தவர்கள் இயேசு நமக்கு மட்டுமே ஆ்ண்டவர் என மகிழ்ந்திருப்பார்கள்.

ஆனால் இயேசு ஒரு சமாரியப் பெண்ணை சந்தித்தார்.  அவர் கிராம மக்களும் அவரை ஏற்றுக் கொண்டனர்.  அப்படி இருக்க இயேசு எல்லாருக்குமான ஆண்டவர் அல்லவா.  நாம் ஒரு காரியத்திற்காக ஜெபிக்கும் போது நமக்கு அவமானம் தரும் காரியம் நடைபெற்றால் நாம் என்ன செய்வோம்? கடவுள் மீதே கோபம் கொள்வோம் அல்லவா? ஆனால் அந்த பெண் அவரை பணிந்து கொண்டார் (முழங்கால் படியிட்டு வணங்குவது).  அவர் தன்னை எந்த விதத்திலும் பெரியவர் என எண்ணவில்லை. தன்னை கடவுள் முன் சிறியவராக எண்ணி தாழ்த்தினார்.


ஆண்டவர் மேலும் அவரை சோதிக்கும்படியாக “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய் குட்டிகளுக்கு போடுகிறது நல்லது அல்ல” என்றார்.  யூத மரபின் படி பாவம் நிறைந்த நாட்டினரை நாய்கள் என அழைப்பது வழக்கம்.  அவர்கள் நம்பிக்கையின் படி இஸ்ரவேலர்கள் மட்டுமே கடவுளின் பிள்ளைகள் என எண்ணினர்.  மேலும் அந்த நாட்களில் பெண்கள் பொது சபைகளில் ஆண்கள் மத்தியில் பேசுவது தவறான செயலாக பார்க்கப்பட்டது.  இயேசு நாய் என்று அவரை சொல்லவில்லை.  அவர் சொன்னது ஒரு உருவகம் மற்றும் சொலவடை (பேச்சு வழக்கில் உள்ள வாக்கியம்) ஆகும்.  அதன் பொருள் தன் மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கு நன்மை செய்வேன், மற்றவர்களுக்கு (குறிப்பாக கானானியர்களுக்கு) நன்மை செய்வது யூத மரபின்படி குற்றம் என்ற நம்பிக்கை இஸ்ரவேலர்களிடம் இருக்கிறது என்பதாகும்.  தான் அப்படி சொல்வது அங்கிருந்த இஸ்ரவேலர்களுக்கு ஒரு வித மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கும் என்று இயேசு அறிந்திருப்பார்.  இவ்வாறு நம்மிடம் யாராவது பேசியிருந்தால் நாம் என்ன செய்திருப்போம்.  நாம் அவரிடம் கோபித்து சென்று இருப்போம் தானே! ஆனால் இந்த கானானிய பெண் இயேசுவிடம் “சிறு பிள்ளைகள் சாப்பிடும்போது சிந்தும் அப்பத்தின் துண்டுகளை நாய்கள் தின்னுமே” என்றார்.  அதன் பொருளானது இஸ்ரவேர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் கடவுளிடமிருந்து உதவிக் கிடைக்கும் என்பதே.

மேசியா எல்லாருக்குமானவர், எல்லாருக்கும் உதவி செய்பவர் என்பதை இந்த கானானிய பெண் மூலம் அங்கிருந்த மற்ற இஸ்ரவேலர்களுக்கு இயேசு உணர்த்தினார்.  இயேசு அந்த பெண்ணை பார்த்து “உன் விசுவாசம் பெரியது” என்று பாராட்டினார்.  இதன் மூலம் அங்கிருந்த மற்ற இஸ்ரவேலர்களை காட்டிலும் இவர் விசுவாசம் பெரிது என்று உணர்த்தினார்.


வாழ்க்கைக்கு படிப்பினை:
இயேசு எல்லோருக்குமானவர்.  அவரிடம் கிறிஸ்தவர், கிறிஸ்தவர் அல்லாதவர், பெரியவர், சிறியவர், இந்தியர், இஸ்ரவேலர், பாக்கிஸ்தானியர், தமிழர், கன்னடர் என்று யார் வேண்டுமானாலும் விசுவாசத்தோடு உதவி கேட்கலாம்.  அவர் எல்லோருக்கும் பதில் தருகிறவர்.  சில நேரம் பதில் கிடைக்க தாமதமாகும், சில நேரங்களில் பிரச்சனைகளோ, அவமானங்களோ வரலாம்.  ஆனால் அப்பொழுதும் நம்மை தாழ்த்தி அவரையே நம்பி ஜெபிக்கும் போது அவர் நன்மையான காரியங்களை செய்வார்.  அவரையே விசுவாசித்து அவரிடம் நம்மை ஒப்படைக்க வேண்டும்.



நாள் 7 - விசுவாசிப்பதையே எண்ணுகிறேன்

குறுநாடகம்
ஒரு சிறுவன் தந்தையிடம் தினமும் பெரும் பத்து ரூபாயை உண்டியலில் போடுகிறார்.  தான் இன்னும் நூறு ரூபாய் சேர்ந்தால் இன்னும் இருபது நாளில் தான் அசைப்பட்ட சைக்கிள் வாங்க முடியும் என கூறுகிறார்.  தந்தை தினசரிப் பத்திரிக்கையை வாசிக்க தொடர்கிறார்.  அதில் ஒரு இயற்கை பேரழிவு செய்தியை வாசிக்கிறார்.  அதைக் கேட்டுக் கொண்டிருந்த சிறுவன் தன் உண்டியலை தன் தகப்பனிடம் கொடுத்து, அதை அந்த பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க சொல்லுகிறார்.  தந்தையோ நீ பல மாதங்களாக சை்ககிள் வாங்க சேர்த்தப்பணம் அல்லவா அதை கொடுக்கிறேன் என்கிறாயே, சைக்கிள் வாங்க என்ன செய்வாய் என்றுக் கேட்டார்.  சிறுவனோ இந்த பணம் இப்பொழுது என்னைவிட அந்த மக்களுக்கு முக்கியம்.  மேலும் கடவுள் நிச்சயம் சைக்கிள் வாங்க தேவையான பண்தைக் கொடுப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது.  என்ன அதற்கு சில மாதங்கள் ஆகும்.  அவ்வளவு தான் என்றார்.  தந்தை தன் மகனின் நல்ல மனதைக் கண்டு மகிழ்ந்தார்.  அந்த உண்டியலை எடுத்துக் கெண்டு அவனை வெளியே அழைத்துச் செல்வதாக கூறினார்.  அந்த சிறுவன் என்னை ஏன் அழைக்கிறீர்கள் எனக் கேட்டதும், உன் கையாலே நீ அந்த பணத்தைக் கொடு என்றார்.  மேலும் அவர் நாம் அப்படியே சைக்கிள் கடை சென்று உனக்கு புது சைக்கிள் வாங்குவோம் என்றார்.  இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

படிப்பினை:
விசுவாசம் இல்லாததால் நம் வாழ்வில் சில காரியங்களை இழக்கும் போது வருந்துகிறோம்.  ஆனால் விசுவாசம் இருந்தால் நாம் இழந்தவைகளை கடவுள் திரும்பவும் தருவார் என்னும் நம்பிக்கை இருக்கும்.



Day7 - விசுவாசிப்பதையே எண்ணுகிறேன்
கானானியர் யார்?

கானானியரை இயேசு நாய் என்று சொல்லுவது சரியா?

இயேசு இங்கே அப்பம் என்று சுகத்தைக் குறிப்பிடுகிறார்.

இயேசு ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு அதாவது மக்களுக்கு (யூதர்களுக்கு) மாத்திரம் வந்த தெய்வம் அல்ல, அவர் எல்லோரையும் நேசிக்கிறார் என்று பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.