Type Here to Get Search Results !

JC VBS 2024 | Day 1 | எண்ணுகிறேன் | Jesus Sam

நாள் 1: எண்ணுகிறேன்
(பிலிப்பியர் 3:11)
===============
நோக்கம்:
பிள்ளைகள் இவ்வுலக வாழ்வில் கிறிஸ்துவுடன் வாழ, தங்களுடைய சுயத்தை தாழ்த்தவும், சுயத்தின் மீது உள்ள தங்கள் நம்பிக்கையை அற்பமாக எண்ணுவதற்கும் அவர்களை வழிநடத்த வேண்டும்.  இன்றைய சூழலில் “தான்” என்கிற சுயம் சார்ந்த வாழ்க்கையைவிட கிறிஸ்துவுடன் சேர்ந்த வாழ்க்கையே சிறந்தது.  லாபமானது.  மேன்மையானது என எண்ணுவதற்கு (எண்ணங்களில் பரிணாம மாற்றம்) அவர்களை வழிநடத்த வேண்டும்.  கிறிஸ்வுடன் நம் வாழ்வு துவங்கியவுடன் கிறிஸ்துவுக்கு முன் அவைகள் எல்லாம் குப்பை எனவும், கிறிஸ்துவே லாபம் எனவும் உணர்ந்து வாழ்வு குறித்த தங்கள் கண்ணோட்டங்களை மாற்றி கிறிஸ்துவிடம் தங்களை ஒப்படைக்க வேண்டும்.

வேதபகுதி: 
    அப்போஸ்தலர் 8:1
    அப்போஸ்தலர் 9:1-8
    அப்போஸ்தலர் 22:1-21
    பிலிப்பியர் 3:5,6 (பவுலின் ஒப்படைப்பு)

பாட சுருக்கம்:
யூத பாரம்பரியத்தினராகவும், நியாயப்பிரமாணத்தில் தேறினவராகவும், பரிசேயராகவும், மிகச் சிறந்த கல்விமானாகவும் காணப்பட்ட சவுல், ஆதி திருச்சபை கிறிஸ்தவர்களை துன்பப்படுத்துகிறவராக இருந்தார்.  ஆனால், தமஸ்கு செல்லும் வழியில் கிறிஸ்துவை தன் தனிப்பட்ட அநுபவத்தில் சந்தித்த பின்னர் பவுலாக மாற்றம் பெற்றார்.  கிறிஸ்துவின் வாழ்வு, மரணம், உயிர்த்தெழுதலை விசுவாசித்தார்.  எனவே அவர் தன் பாரம்பரியம், தன் பதவி, கல்வி, அறிவு போன்றவற்றை கிறிஸ்துவுக்கு முன் ஒன்றுமில்லை என உணர்ந்து தன்னை ஒப்படைத்தது போல பிள்ளைகள் தங்கள் வாழ்வின் சிறப்பானவைகளை அற்பமானதாக எண்ணும் கண்ணோட்டத்துடன் தங்களை கடவுளிடம் ஒப்படைக்க தூண்ட வேண்டும்.

மனன வசனம்:
பிலிப்பியர் 3:8
    ...என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.









0r






கவன ஈர்ப்பு:


பிள்ளைகளிடம் “TAKE DIVERSION” அடையாளக் குறியீட்டை காண்பித்து அதைப்பற்றி விளக்கும் படி கூறவும்.  நாம் போகும் இலக்கிலிருந்து மாறி மாற்று பாதையில் செல்ல வழி காட்டுகிறது.  இதே போல தவறான பாதையில் சென்ற ஒருவர் சரியான பாதையில் செல்ல வழி நடத்தப்பட்ட அநுபவத்தை காண்போம்.

பாட விளக்கம்:
ஒரு ஓநாய் படத்தைக் காண்பித்து அது என்னவென்று கேட்க வேண்டும்.  

சிலர் அதை நாய் எனக் கூறினாலும் பலர் அது ஓநாய் என்று கூறுவர்.  பின்பு இஸ்ரவேலர்களில் 12 பிரிவினர் உண்டு என்பதையும், அதில் பென்யமீன் பிரிவினரின் அடையாளமாக இந்த ஓநாய் உள்ளது எனக் கூற வேண்டும்.  இஸ்ரவேலரின் முதல் அரசரான சவுல் இந்த பிரிவை சேர்ந்தவர்.  அதினால் மற்றவர்களால் இவர்கள் சிறப்பானவர்கள் என எண்ணப்பட்டனர்.  நாம் காணப்போகும் நபரும் இந்த பென்யமீன் பிரிவைச் சார்ந்தவர்.

ரோமர் குடியுரிமைப் பெற்றவர். (செல்வந்தர்கள் மற்றும் அரசியல் அதிகாரம் உடையவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படுவது)

ஒரு ஆசிரியரின் படத்தைக் காண்பிக்கவும்.

அது யார் என கேட்கவும்? பின்பு இது போல எபிரேயம், கிரேக்கம், பாரசீகம் மொழியில் சிறந்தவரும், மூன்று தலைமுறையாக ஆசிரியர் பணி செய்கிறவரும், சனகெரிப் சங்க தலைவரும் (Legislative Assembly Leader) அனைவராலும் போற்றக் கூடிய யூத அதிகாரியாகவும் இருந்த கமாலியேல் என்பவரிடம் சிறு வயது முதல் கல்வி பெற்ற கல்விமான்.

Law படத்தைக் காண்பிக்கவும்.  இது என்ன? எனக் கேட்கவும்.

யூதர்களின் சட்ட நூல்களான நியாயப்பிரமாணங்களை கற்றவரும் அதை மீறாமல் நடக்கும் மனிதர்.

Lawyer அடையாள குறியீட்டுப்படத்தை காண்பிக்கவும்.

சட்ட வல்லுநர்களான பரிசேயர் (யூதசமய இயக்கத்தினர்) யூத சட்டங்களை வடிவமைப்பவர்கள்.  யூத சமுதாயத்தில் மிகவும் அதிகாரம் உடையவர்கள் எனப்பட்டவர்களில் ஒருவர்.

சட்டப்படி யாராலும் குற்றம் சாட்டப்பட முடியாதவர்.

அதிகமான மத வைராக்கியம் உடையவர்.

நாம் பார்க்கும் நபர்:
    அரசர்கள் மரபைச் சார்ந்தவர்.
    செல்வந்ததர்.
    சிறந்த கல்வி அறிவு உடையவர். (பேச்சாற்றல், இலக்கிய ஆற்றல் பெற்றவர்)
    சட்ட வல்லுநர்.
    அதிகாரம் உடையவர்.
    இதையே தன் பெருமையாக எண்ணிக்கொண்டவர்.

இயேசு உயிரோடு எழுந்த சில நாட்களில் அநேகர் கிறிஸ்துவை பின்பற்றினர்.  அவர்கள் செய்வது யூத சட்டப்படி குற்றம் என பவுல் எண்ணினார்.  அதினால் சில யூத சட்ட வல்லுநர்கள் யூத சட்டப்படி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.  (இன்று தவறு செய்பவர்களை சிறையில் தள்ள உத்தரவிடுவது போல).  சிலரை கொல்லவும் செய்தனர்.  அவ்வாறு ஸ்தேவானை கல்லெறிந்து கொல்லும்போது ஒரு நபர் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.


அவர் தான் சவுல் என்னும் மத வைராக்கியம் கொண்ட பரிசேய இளைஞர்.  எருசலேமில் இருந்து யூத தலைவர்களுக்கு பயந்த கிறிஸ்தவர்கள் பலர் அருகில் உள்ள தமஸ்கு எனும் பட்டணத்திற்கு சென்றனர்.  அவர்களை கைது செய்ய அதிகாரம் பெற்ற கடிதத்தோடு சவுல் தமஸ்கு சென்றார்.  அவ்வழியில் ஒரு பெரிய வெளிச்சம் அவரை தடுத்தது.  நிலை தடுமாறி விழுகிறார்.  அப்பொழுது வானத்தில் இருந்து, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்? என ஒரு சத்தம் கேட்டது.  அதற்கு சவுல்: நீர் யார்? என்று கேட்டார்.  இயேசு சவுலிடம்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே என்று கூறினார்.


    ஆனால் உண்மையில் சவுல் இயேசுவை அடிக்கவில்லை, கல்லெறியவில்லை, ஆனாலும் மற்ற மனிதர்களை துன்பப்படுத்தினது தன்னை துன்பப்படுத்துவதாக கடவுள் எண்ணுகிறார்.  நாமும் பலரை திட்டுகிறோம், அடிக்கின்றோம்.  அவர்களை வெறுக்கிறோம்.  இவையெல்லாம் கடவுளை துன்பப்படுத்தும் அல்லாவா?  ஏன் நாம் அவ்வாறு செய்கிறோம்? நாம் மற்றவர்களை விட அந்தஸ்து, படிப்பு, செல்வம், திறமை, பெற்றோரின் பின்னணியம் போன்றவற்றில் பெரியவர்கள் எனவும், தான் செய்வது தான் சரி என்ற எண்ணமும் நம்மை பிறரை தாழ்வாக எண்ண வைக்கிறது.  அதினாலே அவர்களை துன்பப்படுத்துகிறோம்.  பிறரை துன்புறுத்தும் போது கடவுள் நம்மிடமும் கேட்கும் கேள்வி “நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?”


    இயேசு சவுலிடம் பேசின பின்பு சவுல் தான் சரியென்று எண்ணி செய்த காரியங்கள் எல்லாம் தவறு என உணர்ந்து கொண்டார்.  இதுவரை யூத தலைவர்களின் உத்தரவைக் கேட்டு செயல்பட்ட சவுல் கடவுளிடம் தான் என்ன செய்ய வேண்டும் எனக்கேட்கிறார்.  கடவுளின் சத்தம் கேட்ட அவர் தான் அதிகாரம் உடையவர், செல்வந்தர், கல்விமான், பெரியவர் என்ற எண்ணம் முழுவதும் அழிந்து தான் கடவுள் முன் ஒன்றும் அற்றவன் என எண்ணினார்.  கடவுளை எஜமானராக எண்ணி உத்தரவு கேட்கிறார்.  தன் சுயம் யாவும் குப்பை என மனமாற்றம் அடைகிறார்.  அவரே பவுல் என அழைக்கப்படும் பின்னாளில் ஒரு சிறந்த இறைப்பணியாளர் ஆகிறார்.


வாழ்க்கைக்கு படிப்பினை:
நாம் Church, Sunday School, JC VBS செல்வதினாலும், அநேக வசனங்களை படிப்பதினாலும் கடவுள் விரும்பும் வாழ்வை வாழ்கிறோம் என பொருள் இல்லை.  நான் மற்றவர்களை விட உயர்ந்தவன்/உயர்ந்தவள் என்கிற மனநிலையை மறந்து கடவுள் முன் நாம் சிறியவர்கள், அவருக்கு நாம் அனைவரும் ஒன்றே, என் பெருமைக்குரிய காரியங்கள் ஒன்றுமில்லை எனவும், அவைகள் குப்பை எனவும் கடவுளுடன் வாழ்வது தான் நமக்கு மேன்மையானது எனவும் எண்ண வேண்டும்.

சவுல் இயேசுவை சந்தித்த போது மன மாற்றம் பெற்றார்.  தன் சிந்தையில் வாழ்க்கை குறித்த கண்ணோட்டத்தில் மாற்றம் பெற்றார்.  கடவுளிடம் தம்மை ஒப்புக்கொடுத்தார்.  தன் அறிவாற்றல்கள் பின்னணியங்கள், அதிகாரங்கள் எல்லாம் கடவுள் முன்பாக மிக அற்பமானது என எண்ணினார்.  இப்படி தான் பெற்ற அனுபவங்களை முப்பது ஆண்டுகளுக்கு பின்பு பிலிப்பு பட்டணத்தாருக்கு ஒரு கடிதமாக ரோமாபுரியிலிருந்து பவுல் எழுதினார்.  அந்த கடிதத்தின் மூன்றாம் அதிகாரத்தில் 5-11 வசனங்களின் அடிப்படையில் நம் பத்து நாள் தியானங்களும் இருக்கும்.































நாள் 1 - எண்ணுகிறேன்
குரு நாடகம்
ஒருவர் மகிழுந்து (Car) இயக்க பழகுவதற்கு ஓட்டுநர் பயிச்சி பள்ளிக்கு செல்கிறார்.  அங்கு வாகனம் ஓட்ட பழகும் போது பயிற்சியாளர் வாகனத்தைப் பற்றியும் ஓட்டும் முறை பற்றியும் விளக்க முயற்சி செய்யும்போது பயிற்சி பெறுபவர் இவைகள் எல்லாம் நான் புத்தகத்தில் படித்திருக்கிறேன்.  எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லி, முன்னமே அந்த காரியங்களைக் குறித்து விளக்குவார்.  தன்னுடைய அறிவுத்திறனை நிரூபிக்க அவர் அப்படி செய்து கொண்டே இருப்பார்.  மகிழுந்து பற்றி அனைத்தையும் தான் கற்று அறிந்ததாகவே எண்ணுகிறார்.  கடைசியில் வாகனத்தை இயக்கும்போது மோதிவிடுகிறார்.  பின்ப பயிற்சியாளர் “புத்தகத்தில் படித்து நீங்கள் அறிவை வளர்த்துக் கொள்வது நல்லது ஆனால் அதனால் மட்டுமே நீங்கள் எல்லாம் அறிந்தவராக முடியாது.  அவர்கள் புத்தகத்தில் கற்றதை நடைமுறையில் பயன்படுத்த அனுபவம் வாய்ந்த ஒருவரின் வழிநடத்தல் தேவை” என்கிறார்.  பயிற்சி பெறுபவரும் “நான் மகிழுந்து பற்றி அநேக புத்தகங்களை படித்ததால் நான் உங்களை விட புத்திசாலி என நினைத்தேன்.  ஆனால் நான் அறிந்தது மிகவும் குறைவுதான், அது வாகனத்தை சரியாக இயக்க போதாது, வானகத்தைப்பற்றி நன்கு அறிந்த உங்கள் வழிநடத்துதலே எனக்கு சரியாக வாகனத்தை இயக்க உதவும் என புரிந்துகொண்டேன்” என்கிறார்.

படிப்பினை:
நம் வாழ்வும் அந்த மகிழுந்தை இயக்குவது போலத்தான்.  நாம் கற்றுக்கொண்ட பல காரியங்கள் நாம் பெற்றுக்கொண்ட பல காரியங்களைக் கொண்டு வாழ்வை சிறப்பாக நடத்த முடியும் என எண்ணுகிறோம்.  ஆனால் நம் அறிவு கடவுளின் வழிநடத்தும் வார்த்தைகளுக்கு முன் ஒன்றுமில்லை என எண்ண வேண்டும்.  அவர் வழிநடத்துதலே நம்மை சிறப்பாக வாழ வழி செய்யும்.


Day - 1
இந்த கதையை சொல்ல துவங்கும்போது, Tourch Light பயன்படுத்தி துவங்கலாம்.  (தமஸ்கு வீதியில் இயேசு பவுலை சந்தித்ததைக் குறிக்கும் விதமாக)

கத்தியை பயன்படுத்தி இக்கதையை துவங்கலாம்.  (கிறிஸ்தவர்களை துன்பப்படுத்திய பவுலாக பவுலை அறிமுகப்படுத்தி கதையை சொல்லலாம்)

கேள்வி பதில்கள் மூலமாக கதையைத் துவங்கலாம்.  (பவுலைப் பற்றி நமக்கு தெரிந்த ஒரு சில கேள்விகளைக் கேட்டு, அப்படிப்பட்ட மனிதர் யார் என கேட்கலாம்)
எ.கா. 1) வேதாகமத்தில் தலை சிறந்த கல்விமான்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
2) வேத புத்தகத்தில் அதிக கடிதங்களை எழுதியவர் யார்?
3) கமாலியேல் என்ற பேராசிரியரிடம் பாடம் கற்றுக்கொண்ட சிலரில், மிகவும் குறிப்பிடத்தக்கவர் யார்?
Or
1) தனக்க லாபமாய் இருந்த எல்லாற்றையும் கிறிஸ்துவுக்காக நஷ்டமும் குப்பையுமாக எண்ணியவர் யார்? (பிலிப்பியர் 3:11)
2) யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டது யார்? (2 கொரிந்தியர் 11:24)
3) யாருடைய கச்சைகளிலிருந்து வியாதியஸ்தர்கள் சுகம் பெற்றக்கொண்டனர்? (அப்போஸ்தலர் 19:12)


ஒரு தராசில் சவுலின் படிப்பு, வேலை, தொழில் ஆகியவற்றை ஒருபுறமும்,  மறுபுறம் இயேசு கிறிஸ்துவை வைத்தால், இவை எல்லாவற்றையும் விட இயேசுவே பெரியவர் என பவுல் உணர்ந்து கொண்டார்.

Activity
பவுல் தனக்கென ஒரு Visiting Card தயாரிப்பாரானால் அவர் எப்படி தயாரிப்பார் என்ற மாதிரியை உருவாக்கவும்.  

ஒரு பெரிய சாட் போப்பரை அறிவிப்பு பலகையில் ஒட்டி, அதில் பவுலைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை எழுதுங்கள் என்று சொல்லி பிள்ளைகளை உற்சாகப்படுத்தலாம்.  
1) பவுலைப் பற்றிய கேள்விகள் எழுதுதல்
2) பவுலைப் பற்றிய Jocks எழுதுதல்



ஆசிரியர் கூடுகை
வேதபகுதி: பிலிப்பியர் 3:
பவுல்:
மல்யுத்த வீரர்,
ஓட்டப்பந்தைய வீரர்,
கல்வியியல் நிபுணர் (தலைசிறந்த ஞானியான கமாலியேலிடம் பாடம் கற்றவர்)
ரோம குடியுரிமை பெற்றவர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.