Type Here to Get Search Results !

JC VBS 2024 | Theme Intro | எண்ணுகிறேன் | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை முகவை பேராயம்
இளையோர் திருச்சபை விடுமுறை வேதாகமப்பள்ளி - 2024
=================
தலைப்பு அறிமுகம்
“எண்ணுகிறேன்!” (பிலிப்பியர் 3:11)

இந்த ஆண்டு இளையோர் திருச்சபை விடுமுறை வேதாமப்பள்ளியின் தலைப்பு எண்ணுகிறேன்.  பவுல் அடிகளார் தன் வாழ்வில் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் யாதெனில் நம்மைக் காட்டிலும் கிறிஸ்து பெரியவர் என்பதாகும்.  கிறிஸ்துவுக்கு முன் நம்முடையவைகள் எல்லாம் நஷ்டம் என எண்ணி கிறிஸ்துவே நமக்கு லாபம் என்று கொள்வதே வாழ்க்கை குறித்த தன் கண்ணோட்டமாக கொண்டார்.  தான் கற்றுக்கொண்ட இந்த அனுபவத்தைத் தான் கிறிஸ்துவை பின்பற்ற துவங்கி முப்பது ஆண்டுகள் கழித்து பிலிப்பு திருச்சபைக்கு பகிர்ந்து கொள்கிறார்.

இந்த செய்தியை பிள்ளைகள், தாங்கள் கிறிஸ்துவை நம்பி தங்கள் வாழ்வை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தால் அதுவே  லாபமாகவும் மேன்மையுள்ளதாகவும் காணப்படும் என்ற கண்ணோட்டத்தை அடைய ”எண்ணுகிறேன்” என்கிற தலைப்பின் கீழ் கற்றுக்கொடுக்கவும், அதன் பலனாக பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவினிடத்தில் ஒப்படைக்கவும், அர்ப்பணிக்கவும் கடவுள் நம்மை பயன்படுத்துவாராக.  


VBS விடுமுறை வேதாகம பள்ளி உருவான வரலாறு
VBS - Vocation Bible School
விடுமுறை வேதாகமப்பள்ளியானது 1952-ல் தமிழ்நாட்டில் உள்ள கோயில்பட்டி என்ற இடத்தில் 72 பிள்ளைகளையும், 5 ஆசிரியர்களையும் கொண்டு துவங்கப்பட்டது.  இந்த ஐந்து ஆசிரியர்களில் P. சாமுவேல், தியோட்டர் வில்லியம்ஸ், கொர்னலியூஸ் என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆரம்பித்தவர் Mrs. Mary Hamiltion (Bible College Staff).  இவர் மிஷனெரியாகவும் பணியாற்றினார்.  
இன்று விடுமுறை வேதாகமப் பள்ளியானது 13 மாநிலங்களில் 17 மொழிகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வருகிறது.

இந்திய சிறுவர்கள் இயேசுவை அறிய வேண்டும் என்பதே விடுமுறை வேதாகமப் பள்ளியின் தரினம் ஆகும்.

VBS-ன் தரிசன வசனம்
உபாகமம் 6:7
    நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்து பேசி,
இந்த வசனத்தை ஆண்டவர் வேண்டுகோளாக வைக்கவில்லை, கட்டளையாக சொல்லுகிறார்.  முடிந்தால் நீ இந்த சிறுவர் ஊழியத்தைச் செய்ய, முடியவில்லை என்றால் செய்யவேண்டாம் என்று இயேசு சொல்லவில்லை.  சிறுவர் ஊழியம் என்பது கட்டாயமான ஊழியம்.
கசுத்தாய் போதிக்கவேண்டும் என்று ஆண்டவர் கற்றுக்கொடுக்கிறார்.  பின்பு அவைகளைக் குறித்து பேச வேண்டும் என்று ஆண்டவர் கற்றுக்கொடுக்கிறார்.  போதிப்பற்கும், பேசுவதற்கும் அதிக வித்தியாசம் உண்டு.

போதி - பேசு (Teach - Talk)
ஆபிரகாமுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தால், அவன் அந்த குழந்தைக்கு என்னைக் (கடவுள்) குறித்து கற்றுக்கொடுப்பான் என்பதை கடவுள் அறிந்து வைத்திருந்தார் (ஆதியாகமம் 18:19)

விடுமுறை வேதாகமப் பள்ளியில் கற்றுக்கொடுக்கப்படும் பாடல்கள், கதைகள், நாடகங்கள், விளையாட்டுகள் அனைத்தும் வேத சத்தியத்தின்படியே இருக்க வேண்டும்.



பாட திட்ட உருவாக்கம்:
விடுமுறை வேதாகமப் பள்ளிக்கான பாட திட்டத்தை நான் உருவாக்கினால், அதை எப்படி உருவாக்க வேண்டும்.  எதன் அடிப்படையில் பாட திட்டம் அமைய வேண்டும்.

தலைப்பு:
நன்றாக ஜெபித்து, எதன் அடிப்படையில் நாம் பாடதிட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு திட்டமிடுதல் வேண்டும்.  எந்த தலைப்பின் அடிப்படையில் நாம் பாட திட்டத்தை உருவாக்கப்போகிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வேதபகுதி:
ஒரே வேதபகுதியிலிருந்து பாடதிட்டத்தை நாம் எடுக்காமல், ஒரு கதையை எடுக்கிறோம் என்றால், இரண்டு அல்லது மூன்று வேதபகுதிகளை சேர்த்து உருவாக்குவது மிகவும் ஆசீர்வாதமானதாக இருக்கும்.

மனன வசனம்:
ஒரு கதைக்கான மனன வசனத்தை நாம் எடுக்கிறோம் என்றால், அந்த மனன வசனத்தை நாம் முதலில் மனப்பாடம் செய்ய வேண்டும்.

நாம் எந்த கதை எடுத்திருக்கிறோமோ, அந்த கதைக்குறிய வேதபகுதியிலிருந்தே மனன வசனம் எடுப்பது சிறந்தது.  சில நேரங்களில் இப்படி அமைவது கடினமாக இருக்கலாம்.

கவன ஈர்ப்பு:
ஒவ்வொரு கதையை நாம் எழுத துங்கும்போது, அதாவது சொல்ல துவங்கும்போது, பிள்ளைகளுடைய மனதை கவரும் விதத்தில் நம்முடைய துவக்கம் இருக்க வேண்டும்.  

Body of the Story:
ஒரு கதையை சொல்லுகிறோம் என்றால், அதில் வரும் பெயர்கள், இடங்கள், முக்கிய நிகழ்வுகளை ஒவ்வொன்றாக சரியாக, நேர்த்தியாக சொல்ல வேண்டும்.  வேதத்தில் இல்லாத தவறான எதை குறிப்பையும் பிள்ளைகளிடத்தில் நாம் சொல்லிவிடக் கூடாது.

முடிவுரை:
கதையின் துவக்கம் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு கதையின் முடிவு மிக, மிக முக்கியம்.  

Application:
கடைசியில் அந்த கதை மூலமாக பிள்ளைகளுக்கு நாம் எதைக் கற்றுக்கொடுக்க வந்தோமோ, அந்த கருத்தை தெளிவாக, நேர்த்தியாக சொல்ல வேண்டும்.  அந்த கதையின் மூலமாக பிள்ளைகள் தங்கள் வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் என்ன? விட்டுவிட வேண்டிய தவறான காரியங்கள் என்ன? என்பதை மிக நேர்த்தியாகக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

பத்து நாள் பாட திட்ட உருவாக்கம்:
நாள் 1
முதல் நாள் பாடம், கடவுளின் அன்பைப் பற்றியதாக இருக்க வேண்டும்.  கடவுள் நம்மை எப்படியெல்லாம் நேசிக்கிறார்? ஏன் நேசிக்கிறார்? என்ற குறிப்புகள் கொண்ட வேதபகுதி கதையாக இருக்க வேண்டும்.  God is Love.  God is Good.

நாள் 2
இரண்டாம் நாள் பாடம், பிள்ளைகள் தாங்கள் யார்? (நான் யார்?) என அறிந்துகொள்ளும் வித்தில் இருக்க வேண்டும்.  பிள்ளைகள் தங்கள் வாழ்வை கடவுளோடு ஒப்பிட்டு பார்க்கும் விதத்தில் இருக்க வேண்டும்.

நாள் 3
மூன்றாம் நாள் பிள்ளைகள் கடவுளோடு உள்ள உறவில் தவறினால், அதை எப்படி சரிசெய்து கொள்வது?  அதற்கான வழி என்ன? என்பது பற்றிய வேதபகுதியை கதையாக எடுக்க வேண்டும்.
அதாவது இரட்சிப்பை அடையாளப்படுத்தும் கதையாக இருக்க வேண்டும்.
மூன்றாம் நாள் சுத்தத்தின் நாளாகவும் அனுசரிக்கலாம்.
அந்த நாளில் வெளிப்புற மற்றும் உட்புற சுத்தத்தைக் குறித்து பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம்.

நாள் 4-10
நான்காம் நாள் முதல் பத்தாம் நாள் வரை இரட்சிக்கப்பட்ட பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் எப்படி வாழ வேண்டும்? எப்படி தங்கள் வாழ்வை கட்டமைக்க வேண்டும்? என்பது பற்றிய கதைகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.
அதாவது சீஷத்துவதைப் பற்றிய கதையை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

நாள் 4
நான்காம் நாள் கதையின் மூலம் பிள்ளைக்கு நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன் என்ற நம்பிக்கை வரவேண்டும்.  இதன் அடிப்படையில் உள்ள வேதாகமக் கதையை நான்காம் நாள் பாடத்தில் கற்று்ககொடுப்பது சிறந்தது.

நாள் 5
ஐந்தாம் நாள் கதை வேத வாசிப்பு சம்பந்தமாக இருக்க வேண்டும்.
இந்த நாட்களில் அநேக கிறிஸ்தவர்களுடைய கண்களே அடைபட்டு இருக்கிறது.  காரணம், சரியான வேத வாசிப்பு அவர்களிடத்தில் இல்லை.  பிள்ளைகள் வேதவாசிப்பை தங்கள் வாழ்நாளின் பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.  கடவுள் நம்மோடு பேசுவதற்கான ஒரே வழி வேதவாசிப்பு மாத்திரமே என்பதை ஆழமாக பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் கதையை ஆயத்தப்படுத்த வேண்டும்.

நாள் 6
ஆறாம் நாள் கதையின் மூலமாக பிள்ளைகள் ஆண்டவரிடத்தில் எப்படி ஜெபிக்க வேண்டும்? என்று கற்றுக்கொள்ள வேண்டும்.
எது ஆண்டவருக்கு பிரியமான ஜெபம்.  எப்படிப்பட்ட ஜெபத்தின் மேல் ஆண்டவர் பிரியமாய் இருக்கிறார்? என்பதைப் பற்றிய கதையைபிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

நாள் 7
ஒருவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வாரானால், ஆசீர்வாதமும், செழிப்பும் உண்டாகும் என்று சொல்வதைவிட, கிறிஸ்துவை பின்பற்றும்போது பாடுகளும், உபத்திரவங்களும், சோர்வுகளும் வரும்.  அதை நாம் சகித்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய கதையை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
பாடுகள், போராட்டங்கள், உபத்திரவங்கள் மத்தியில் கடவுளோடு உள்ள ஐக்கியத்தை எப்படி பிள்ளைகள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய கதை ஏழாம் நாளில் இடம் பெற வேண்டும்.
எத்தனை பொருப்புகள், வேலைகள், கடமைகள் இருந்தாளும் பிள்ளைகள் ஞாயிறு ஆரானையிலும், ஞாயிறு பாட சாலையிலும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.  இதன் அடிப்படையிலேயே ஏழாம் நாள் பாடம் அமைய வேண்டும்.

நாள் 8
எட்டாம் நாள் பாடம், கொடுக்கம் நாளாக அனுசரிப்பது சிறந்தது.  பிள்ளைகள் தங்களிடம் உள்ள சிறந்ததை கர்த்தருக்கென்று படைக்க தூண்டும் விதத்தில் கதையை கற்றுக்கொடுக்க வேண்டும்.
நாம் கடவுளுக்கு கொடுப்பதினால், அவர் ஏழை அல்ல என்பதை பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.
கிறிஸ்தவர்கள் மாத்திரமே உதவி செய்கிறார்கள் என்று நாம் நினைப்பது தவறு.  ஆண்டவரைப் பற்றி அறியாதவர்களும் மக்களுக்கு உதவி செய்யத்தான் செய்கிறார்கள்.  
பெங்களூரில் உள்ள ஒரு இந்து அறக்கட்டளை மூலமாக ஒரு நாளைக்கு சுமார் 1000 இருதய அறுவை சிகிச்சை இலவசமாக நடைபெறுகிறது.  அநேக ஏழைகள் இதன் மூலம் பயன்படுகிறார்கள்.  இப்படிப்பட்ட ஒரு காரியத்தை எந்த கிறிஸ்தவ நிறுவனமும் செய்வதில்லை.

நாள் 9
ஒன்பதாம் நாள் சாட்சியின் நாளாக அனுசரிக்கலாம்.
சாட்சி தொடர்புடைய கதையை அந்த நாளில் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

நாள் 10
பிள்ளைகளை பரலோகத்திற்கு நேராக ஆதாயப்படுத்தும் கதையை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.



JC VBS
JC VBS என்றால் மதுரை இராமநாதபுரம் திருமண்டிலத்தை மையமாகக் கொண்டு, இளையோர் திருச்சபை என்ற குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு விடுமுறை வேதாகமப் பள்ளி ஆகும்.
JC VBS விடுமுறை வேதாகமப் பள்ளியானது 2011-ம் ஆண்டு பாக்கியமான வாழ்வு என்ற தலைப்பை மையமாகக் கொண்டு ஆரம்பமானது.  அன்று முதல் இந்த 2024-ம் ஆண்டு வரை மிகவும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் இளையோர் திருச்சபை விடுமுறை வேதாகமப் பள்ளி நடைபெற்று வருகிறது.

JC VBS 2011 - பாக்கியமான வாழ்வு
JC VBS 2012 - துதியின் உடை
JC VBS 2013 - ஜீவனுள்ள கற்கள்
JC VBS 2014 - நிலைத்திருங்கள்
JC VBS 2015 - வாழ்வு தரும் நீரூற்று
JC VBS 2016 - எவ்வளவு அழகானவைகள்
JC VBS 2017 - மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே
JC VBS 2018 - எல்லாவற்றிலும் சுகமாயிரு
JC VBS 2019 - வழிபடுவோம் வாழ்ந்து காட்டுவோம்
JC VBS 2020 - Cure 91
JC VBS 2021 - அதிகமாய்
JC VBS 2022 - காண்பாய்
JC VBS 2023 - உறுதி
JC VBS 2024 - ?

இயக்குநரின் முக்கிய பணிகள்:
இயக்குநர் என்பவர் புதிய மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
ஒரு இயக்குநர் எந்த பகுதியில் விடுமுறை வேதாகமப் பள்ளி நடத்தச் சென்றாலும், அங்கிருந்து குறைந்தபட்சம் மூன்று இயக்குநர்களையாவது உருவாக்க வேண்டும்.
இயக்குநர் புதிய விடுமுறை வேதாகமப்பள்ளி மையங்களை உருவாக்க வேண்டும்.  அநேக ஆண்டுகளாக எந்த பகுதிகளில் விடுமுறை வேதாகமப்பள்ளி நடைபெற்றதோ, அங்கு தான் இன்றும் விடுமுறை வேதாகமப் பள்ளி நடைபெறுகின்றது.  புதிய மையங்கள் உருவாவது அரிதாக இருக்கின்றது.
இயக்குநர் என்பவர் ஒவ்வொரு பிள்ளைகளிடமும் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும்.  ஒரு மையத்தில் 500 - 600 பிள்ளைகள் இருந்தாலும், பத்து நாள் விடுமுறை வேதாகமப் பள்ளி முடிவதற்குள் அந்த இயக்கநர் அங்குள்ள அனைத்து பிள்ளைகளிடமும் ஒருமுறையாவது, ஒரு வார்த்தையாவது பேசியிருக்க வேண்டும்.
விடுமுறை வேதாகம பள்ளியில் வகுப்புக்களை ஐந்து பிரிவுகளாக நாம் பிரித்து நடத்துகிறோம்.  (பிகுனர், பிரைமரி, ஜீனியர், இன்டர், சீனியர்)
இந்த ஐந்து வகுப்பு பாடங்களைக் குறித்த மேலான கண்ணோட்டம் ஒரு இயக்குநருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  நான் இயக்குநர், இயக்கநருக்கறிய பாட புத்தகங்களை மாத்திரமே தியானிப்பேன் என்று சொல்லக்கூடாது.


Activity 
இரண்டு மெழுகுவர்த்தியை எடுத்துக்கொள்ளவும்.  ஒரு மெழுகுவர்த்தி சிறியதாக இருக்க வேண்டும்.  ஒரு மெழுகுவர்த்தி பெரியதாக இருக்க வேண்டும்.
இந்த இரு மெழுகுவர்த்திகளில் பெரிய மெழுகுவர்த்தி என்பது சிறுவர்களைக் குறிக்கிறது.  சிறிய மெழுகுவர்த்தி என்பது வயதானவர்களைக் குறிக்கிறது.
சிறிய மெழுகுவர்த்தி இன்னும் கொஞ்ச நாட்களில் மடிந்துவிடும்.  ஆனால் பெரிய மெழுகுவர்த்தி இன்னும் அதிக நாட்கள் பயன்படக்கூடிய ஒன்று.
இன்று கிறிஸ்தவ உலகில் பெரிய மெழுகுவர்த்தியை விட, சிறிய மெழுகுவர்த்திக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  சிறிய மெழுகுவர்த்தி தான் அதிக நாட்கள் பயன்படப்போகிறது.  அதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆட்கள் இல்லை.
சிறுவர் ஊழியத்தைச் செய்ய யாருக்கும் விருப்பம் இல்லை.  அதற்கான ஆட்களை ஆண்டவர் தேடிக்கொண்டிருக்கிறார்.


JC VBS - 2024 
கருப்பொருள்: எண்ணுகிறேன்
வேதபகுதி:
    பிலிப்பியர் 3:5-15
இந்த பகுதியில் அதிகமாக எந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தியானிக்கவும்.
இந்த பகுதியில் அப்போஸ்தலனாகிய பவுல் எவைகளையெல்லாம் வெறுத்து ஒதுக்கக்கற்றுக்கொடுக்கிறார் என்று தியானிக்கவும்.

இந்த வேதபகுதியில் எண்ணுகிறேன் என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறதை நம்மால் பார்க்க முடியும்.  மிகப்பெரிய கல்வி ஞானமும், திறமையும், செல்வமும் படைத்த பவுல் எல்லாவற்றையும் நஷ்டமும் குப்பையும் என எண்ணி தன் வாழ்க்கை முழுவதையும் கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்தார்.  நாமும் நம்முடைய வாழ்வை கர்த்தரிடத்தில் ஒப்படைக்க வேண்டுமானால், நமக்கு லாபமாக தோன்றும் எல்லாவற்றையும் கிறிஸ்து இயேசுவுக்காக நஷ்டமென்று, குப்பை என்று என்ன வேண்டும்.  நமக்கு லாபமாய் தோன்றும் அனைத்தையும் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்ற எண்ணும்போது, கிறஸ்து நம்மைக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்ய வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

ஒரு மனிதனுடைய என்னமே செயலாக மாறுகின்றது.  நாம் பிள்ளைகளின் செயல்களை மாற்ற நினைக்கிறோம்.  பிள்ளைகளின் எங்களை நாம் மாற்றினால், அவர்களின் செயல்கள் தானாக மாறிவிடும்.  ஆசிரியர்களாகிய நாம் மாற்ற வேண்டியது பிள்ளைகளின் செயல்களை அல்ல, எண்ணங்களை.

எல்லாம் வேண்டும் என்று நினைப்பதைவிட, இருப்பதை எப்படி பயன்படுத்துகிறேன் என்பதில் நாம் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

15-பெல்சில்கள் வைத்திருந்தும் அதை பயன்படுத்த தெரியாமல், பயன்படுத்தாமல் இருப்பதைவிட, ஒரு பென்சிலை சரியாக பயன்படுத்துவது சிறந்ததாகும்.



முன் ஆயத்த ஆசிரியர் கூடுகை:
ஆரம்ப ஜெபம்

பாடல்
    கடந்த ஆண்டு JC VBS பாடல்களில் ஒன்று அல்லது இரண்டு

ஆசிரியர்கள் அனைவரின் பெயரையும் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய பெயரையும் அறிமுகம் செய்ய வேண்டும்.

தியானம்:
உபாகமம் 6:6,7அ
6. 
7. நீ அவைகளை உண் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து,
சிறுவர் ஊழியத்தை முடிந்தால் நீ செய், முடியவில்லை என்றால் செய்ய வேண்டாம் என்று ஆண்டவர் சொல்லவில்லை.  
கிறிஸ்தவ உலகில் எத்தனையோ விதமான ஊழியங்கள், எத்தனையோ விதமான ஊழிய நிறுவனங்கள் இருக்கின்றன.  இவை அனைத்தும் கட்டாயமான ஊழியங்கள் அல்ல.  ஆனால் சிறுவர் ஊழியம் என்பது கட்டாயமான ஊழியம்.  அந்த கனமான ஊழியத்திற்காகவே ஆண்டவர் நம்மை அழைத்திருக்கிறார்.

அழைப்பு
எபிரெயர் 5:4
மேலும், ஆரோனைப் போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறவதில்லை.

இயக்குநராய் இருக்கட்டும், ஆசிரியர்களாய் இருக்கட்டும் நம் அனைவரும் மனிதர்கள் இந்த சிறுவர் ஊழியத்திற்கு ஏற்படுத்தப்படவில்லை.  அந்நாட்களில் ஆண்டவர் ஆரோனை அழைத்ததுபோல, இந்த கனமான ஊழியத்திற்கு நம்மை அழைத்திருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எனது சபையின் ஊழியர் அழைத்தார், எனது பெற்றோர் கட்டாயப்படுத்தினார்கள், எனது நண்பர்கள் அழைத்தார்கள் போன்ற பல காரணங்களினால் நாம் இந்த சிறுவர் ஊழியத்திற்கு வந்திருந்தாலும், நம்மை அழைத்தவர்கள் இவர்கள் அல்ல கர்த்தரே நம்மை அழைத்திருக்கிறார் என்பதை நாம் ஆழமான மனதில் பதித்துக்கொள்ள வேண்டும்.

ஏன் ஆண்டவர் என்னை தெரிந்தெடுக்க வேண்டும்:
1 தீமோத்தேயு 1:12
என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.
    
பவுல் சொல்லுவதைப் போன்று, நான் இந்த சிறுவர் ஊழியத்தை உண்மையுடனும், நேர்மையுடனும், கர்த்தருடைய சித்தப்படி நிறைவேற்றுவேன் என்று எண்ணி ஆண்டவர் என்னை இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தியிருக்கிறார்.  விடுமுறை வேதாகமப் பள்ளியின் முதல் நாள் அல்லது கடைசி நாள் மாத்திரம் அல்ல, பத்து நாட்களும் கடவுளுக்கு உண்மையாய் ஊழியம் செய்ய நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும்.

நேரம்
ஆசிரியர்களாகிய நாம் அனைவரும் கட்டாயமாக நேரத்தைக் சரியாய் கடைபிடித்தே ஆக வேண்டும்.
குடும்ப பொறுப்பு, சமுதாயப் பொறுப்பு அநேகம் இருந்தாலும், சரியாய நேரத்திற்கு விடுமுறை வேதாகமப் பள்ளிக்கு வரவேண்டியது கட்டாயம்.

ஒழுக்கம்:
பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியது ஆசிரியரின் கடமை.  விடுமுறை வேதாகமப் பள்ளிக்கு Mobile Phone கொண்டு வராமல் இருப்பது சிறந்தது.  தவிர்க்க முடியாத சில காரணங்களால் கொண்டுவரும் பட்சத்தில், பிள்ளைகளுக்கு முன்பாக பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.  (ஆலய வலாகத்திற்குள் நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ Chat செய்யாமல் இருப்பது நல்லது)




விடுமுறை வேதாகமப் பள்ளி நடைபெறும் ஒழுங்கு முறைகளைக் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
    Time Table:
08:30 AM - 09:00AM - Teacher's Devotion
09:00 AM - 09:45 AM - General Assembly
09:45 AM - 10:30 AM - Class One
10:30 AM - 10:45 AM - Interval
10:45 AM - 11:30 AM - Class Two
11:30 AM - 12:15 PM - Closing Assembly
12:15 PM - 12:45 PM Teacher's Discussion
ஒவ்வொரு பகுதி (மையம்) அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நேரங்கள் வித்தியாசப்படும்.  ஆசிரியர்களிடம் இதுகுறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும்.

வகுப்புக்களை எந்த முறையில் பிரிப்பார்கள் என்று ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்
Section:
KG, 1, 2 - Beginner
3, 4, 5 - Primary
6, 7, 8 - Junior
9, 10 - Intermediate
11, 12 - Senior

சிறப்பு நாட்கள்:
ஒவ்வொரு ஆண்டும் நாம் சிறப்பு நாட்களை நியமிப்பது உண்டு.  அவைகளில் கட்டாயம் அனுசரிக்க வேண்டிய சிறப்பு நாட்கள்,
    அன்பின் விருந்து,
    கொடுக்கும் நாள்,
இந்த தினங்களை எப்போது அனுசரிக்கலாம் என்று கேட்க வேண்டும்.
வேறு என்ன சிறப்பு நாட்களை அனுசரிக்கலாம், கடந்த ஆண்டு என்ன என்ன சிறப்பு நாட்களை அனுசரித்தீர்கள் என்று கேட்க வேண்டும்.

ஆசிரியர் தினம் நடத்தலாமா என்று ஆலோசனை செய்யவும்.  அந்த நாளில் Assembly நேரத்தில் கற்றுக்கொடுக்க வேண்டிய தலைப்பு, வசனம், பாடல், கதை, குறு நாடகம் எல்லாவற்றையும் ஆசிரியர்கள் மாத்திரமே நடத்த வேண்டும்.

விடுமுறை வேதாகமப் பள்ளி நடைபெறும் நாட்களில் குறைந்தது ஒரு ஞாயிற்றுக் கிழமை வரும்.  ஞாயிற்றுக் கிழமை அன்று விடுமுறை வேதாகமப்பள்ளியை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று திட்டமிட வேண்டும்.


Advertisement - விளம்பரம்
உலகத்தில் உள்ள ஒவ்வொரு நிறுவனங்களும் தாங்கள் தயாரித்த பொருட்களை விளம்பரம் செய்வதற்காக எத்தனையோ முறைகளைக் கையாளுகிறார்கள்.  அதற்கென கோடிக்கனக்கில் பணத்தை செலவு செய்கிறார்கள்.
எ.கா
    Mobile Phone Companies
    சோப்பு, பவுடர், எண்ணை போன்ற பொருட்கள் தயாரிக்கும் நிருவனங்கள்.
    தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள்.

விளம்பரம் செய்தாலொழிய மக்களுக்கு அதைப்பற்றி தெரியாது.

சபையின் ஆயர் சபையில் அறிவிப்பு கொடுத்திருப்பார்.

ஞாயிறு பள்ளி ஆசிரியராக இருப்பவர்கள் உங்கள் பிள்ளைகளிடம் விடுமுறை வேதாகமப் பள்ளியைக் குறித்து சொல்லியிருப்பீர்கள்.

மற்ற எந்த விதங்களிலெல்லாம் நான் JC VBS-யைக் குறித்து மற்றவர்களுக்கு சொல்லியிருக்கிறேன்.  (விளம்பரம் செய்திருக்கிறேன்)  பெற்றோர் பிள்ளைகளை அனுப்பிவைக்கலாம், அனுப்பாமல் இருக்கலாம்.  ஆனால் விடுமுறை வேதாகமப் பள்ளி நடைபெறுகிறது என்று அனைத்து பெற்றோருக்கும் தகவல் தெரிவிப்பது ஆசிரியரின் கடமை

எனது திருச்சபையில் இந்த தேதி முதல் இந்த தேதி வரை விடுமுறை வேதாகமப்பள்ளி நடைபெறுகிறது.  பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை உற்சாகமாக அனுப்பிவையுங்கள், பிள்ளைகளே உற்சாகமாக கலந்து கொள்ளுங்கள் என்று நாம் விடுமுறை வேதாகமப் பள்ளியைக் குறித்து மற்றவர்களோடு பேசியிருக்கிறேனா?

JC VBS குறித்து விளம்பரம் செய்யும் வழிமுறைகள்
1) கிராமப் புரமாக இருக்கமானால், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந் மாலை நேரத்தில் அனைத்து வீடுகளுக்கும் சென்று உங்கள் பிள்ளைகளை கட்டாயம் JC VBS-க்கு அனுப்பிவையுங்கள் என்று சொல்லலாம்.  (சொல்வதோடு விட்டுவிடாமல், உங்கள் வீட்டில் எத்தனை சிறுவர்கள் இருக்கிறார்கள், அவர்களின் பெயர்கள் என்ன? என்று கேட்டு அறிந்து, ஒரு குறிப்பேட்டில் எழுதும்போது, எனது பெயரையும் எழுதியிருக்கிறார்கள், என் பிள்ளையின் பெயரையும் எழுதியிருக்கிறார்கள்.  அதற்காகவாவது என் பிள்ளையை JC VBS-க்கு அனுப்புவேன் என்ற எண்ணம் பெற்றோரின் உள்ளத்திலும், பிள்ளைகளின் உள்ளத்திலும் எழும்பும்.

2) JC VBS Theme Banner அல்லது நமது திருச்சபையில் இந்த தேதி முதல் இந்த தேதி வரை விடுமுறை வேதாமப் பள்ளி நடைபெறுகிறது என்ற தகவலை ஒரு Visiting Card போல் உருவாக்கு, அந்த Card-ன் புகைப்படத்தை Whatsapp போன்ற இணையதளங்கள் மூலம் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பலாம்.  விடுமுறை வேதாகமப் பள்ளி நடைபெறும் அனைத்து நாட்களும் நமது WhatsApp Status-ல் பதிவிடலாம்.
இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நமது பகுதியில் உள்ளவர்கள் மாத்திரம் அல்ல, மற்ற இடங்களில் வாழ்பவர்களும் இந்த நாளில் இந்த இடத்தில் விடுமுறை வேதாகமப் பள்ளி நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வார்கள்.  ஏன் வெளிநாடுகளில் வாழ்கின்ற நமது உறவுகளும் கூட அறிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.
இந்த Visiting Card-ஐ பார்க்கின்ற அனைவரும் விடுமுறை வேதாகமப்பள்ளிக்கு வரமாட்டார்கள், அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைக்க மாட்டார்கள்.  ஆனால், எப்படியாவது அறிவிப்பது நமது கடமை.

3) ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை வேதாகமப்பள்ளியின் கடைசி நாள் பிள்ளைகள் அனைவரையும் வரிசையாக நிற்கச் செய்து. வீதிகளில் பவனி வருவது நமது வழக்கம்.  ஏன் நாம் அப்படி செய்கிறோம் என்று யோசிக்க அழைக்கப்படுகிறோம்.

இத்தனை நாட்களாக நாங்கள் விடுமுறை வேதாகமப்பள்ளியில் கலந்துகொண்டோம் என்று அப்பகுதி மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நாம் பவனி செல்வது வழக்கம்.

அதற்கு மாறாக, விடுமுறை வேதாகமப்பள்ளியின் இரண்டாவது அல்லது மூன்றாவது நாள் நாம் பவனி செல்வோமானால், அதைப் பார்க்கின்ற மற்றவர்கள் இந்த ஆலயத்தில் விடுமுறை வேதாகமப்பள்ளி நடைபெறுகிறது என்றே தெரியாத மக்களும் அறிந்து கொள்ள, தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைக்க அது வாய்ப்பாக இருக்குமோ என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

சிறப்பு நாட்கள் - Special Days:
1. துவக்க நாள் அல்லது அறிமுக நாள்
2. நண்பர்கள் தினம்
3. மிஷனெரிகள் தினம்
4. தூய்மையின் நாள்
5. ஜெப நாள்
6. பசுமை தினம்
7. ஆசிரியர் தினம்
8. அன்பின் விருந்து
9. தேர்வு நாள் (இன்டர், சீனியர் மற்றும் ஆசிரியர்கள்)
10. கடைசி நாள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.