Type Here to Get Search Results !

JC VBS 2024 | எண்ணுகிறேன் | பாடல் வரிகள் | Song Lyrics | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி

JC VBS – 2024
தலைப்பு: எண்ணுகிறேன் (பிலிப்பியர் 3:11)


பாடல் 1
இயேசு பெரியவர் என்பதை
அறியும் அறிவின் மேன்மைக்கு
பவுல்போல் நானும் எல்லாமே
நஷ்டமென்று எண்ணுகிறேன்
எண்ணுகிறேன் நான் எண்ணுகிறேன் (2)

அவருக்காக எல்லாவற்றையும்
நஷ்டமென்று விட்டேனே (2)
நஷ்டம் நஷ்டம் குப்பை குப்பை
என்று நான் எண்ணுகிறேன் - 2
எண்ணுகிறேன் நான் எண்ணுகிறேன் - 2


பாடல் 2
பவுல் மாமா போல இயேசுவுக்காய் வாழ
எண்ணுகிறேன் நான் எண்ணுகிறேன் (2)

தீய சவுலும் தூயவராய்
இயேசுவுக்காய் வாழ்ந்தாரே (2)

அவர் போல வாழ்ந்திட எண்ணுகிறேன்
இயேசுவுக்காய் வாழ்ந்திட தீர்மானித்தேன் (2)

தில்லேலே தில்லேலே தில்லாலங்கடி தில்லேலே - 2


பாடல் 3
இயேசுவின் இரட்சிப்பை பெற்றுக்கொண்ட சகேயு
இலாபமான பணத்தை திரும்பத் தந்தாரே (2)

பணமோ பொருளோ அது இலாபமில்லை
இயேசு தரும் இரட்சிப்பிற்கு அது இணையே இல்லை (2)

இயேசுவின் இரட்சிப்பில் சந்தோஷமே
இயேசுவின் இரட்சிப்பில் ஆனந்தமே (2)


பாடல் 4
ஒன்றுமில்லை எனக்குள் ஒன்றுமில்லை
நான் நினைத்ததெல்லாம் ஒன்றுமில்லை (2)

பட்டம், புகழ், உயர்வெல்லாம் ஒன்றுமில்லை
பெயர், புகழ் சுய பெலன் ஒன்றுமில்லை (2)

கிறிஸ்துவே எனக்கு ஆதாயம்
அவரே என் வாழ்வின் புதுபெலன் (2)

கிறிஸ்துவே எனக்கு இரட்சகர்
அவரே என் வாழ்வின் மீட்பர் (2)


பாடல் 5
Mid Night-டுல இயேசுவை Meet பண்ண
நிக்கோதேமு வந்தார் இயேசுவோடு பேசினார் (2)

Doubt எல்லாம் கேட்டாரே
இயேசுவுக்கு Friend ஆனாரே (2)

இயேசுவின் அன்பிற்காக எது வந்தாலும் வாழ்ந்தார்
இயேசுவை நம்பியே சீஷனாக மாறினார் (2)


பாடல் 6
வழிகாட்டும் வல்லவா எம் வாழ்வின் நாயகா
வருந்தி உம்மிடம் வருகிறேன்
என்னை முழுவதும் தருகிறேன் (2)

பாவக்கரை நீங்க என்னை ஒப்புவித்தேன்
பரிசுத்தமாய் வாழ முழுவதும் ஒப்படைத்தேன் (2)

புதுமாற்றம் எனக்குள் தாரும் - 2

என்னுள்ளத்தில் என் இருதயத்தில் - 2
    - வழிகாட்டும் வல்லவா..........


பாடல் 7
சிக்கு புக்கு சிக்கு புக்கு - 2 கூகூ - 2

நான் இயேசுவைத் தொடர்கிறேன்
உறுதியாய் தொடர்கிறேன் (2)

அவர் என்னைப் பிடித்துக் கொண்டார்
நான் விலகிடாமல் காத்திடுவார் (2)

இயேசு என்னைப் பிடித்துக்கொண்டார்
அவரையே தொடர்ந்திடுவேன் (2)

சிக்கு புக்கு சிக்கு புக்கு - 2 கூகூ - 3


பாடல் 8
இயேசுவாலே மீட்கப்பட்டு - அவரால
பிடிக்கப்பட்ட பிள்ளை நானுங்கோ
இயேசுவின் பிள்ளை நானுங்கோ (2)

மீட்டெடுத்தார் என்னை மாற்றி விட்டார்
அவருக்கு பிரியமாய் மாற்றிவிட்டார் (2)

பாவத்தில் தடுமாறி விழுந்தேனே
வெளியேற முடியாமல் தவித்தேனே (2)

தம் ஜீவன் கொண்டென்னை தூக்கிவிட்டாரே
அவருக்கு பிரியமாய் மாற்றிவிட்டாரே (2) 
    - மீட்டெடுத்தார்...........

லலலலல்லாலே லாலே லலலலல்லாலே
லால்லலல்லாலே லாலா லால்லலல்லாலே (2)


பாடல் 9
மறந்திடு தம்பி மறந்திடு தங்கை
பழைய பாவ வாழ்வை மறந்து வாழ்ந்திடு (2)

பாவ வாழ்வு என்றுமே கசப்புதான்
இயேசு தரும் நித்திய வாழ்வு இனிப்பு தான் (2)

கசப்பான வாழ்வு வேண்டாமே
இயேசு தரும் இன்பம் போதுமே (2)


பாடல் 10
Wash your Thoughts
Wash your Heart
With the Holy Bible (2)

Read the Bible Everyday
Pray Pray Pray Everyday (2)

Forget the sins Don't Forget the Lord
Jesus Will Give Holy Life to you (2)

பாடல் 11
பிரியமே என் ஆசையே - 2

உம் பரிசுத்த வேதம் எனது பிரியமே
உம் பரிசுத்த வேதம் எனது ஆசையே (2)

வேத வசனம் தினமும் படிப்பேன்
வேதத்தின் வழியில் தினமும் நடப்பேன் (2)

பொன்னிலும் வேதம் எனக்கு பிரியமே
பசும் பொன்னிலும் வேதம் எனக்கு பிரியமே (2)


பாடல் 12
நன்றியோடு வாழ எண்ணுகிறேன்
நன்மை செய்திட எண்ணுகிறேன்
நல்லவராம் இயேசுவில் மேன்மையாய்
நன்றியோடு வாழ்ந்திட எண்ணுகிறேன் (2)

நன்றி சொல்ல எண்ணுகிறேன்
நன்மை செய்வதை மேன்மையாய் எண்ணுகிறேன் (2)

வாழ்ந்த வாழ்க்கையை எண்ணுகிறேன்
இன்றைய வாழ்வையும் எண்ணுகிறேன்
வாழப்போகும் வாழ்க்கையை மேன்மையாக எண்ணுகிறேன் (2)

நன்றி சொல்ல எண்ணுகிறேன்
நன்மை செய்வதை மேன்மையாக எண்ணுகிறேன் (2)


பாடல் 13
தந்தன தானே தனனானே - 4

என் வாழ்வில் இயேசுவையே நம்பி
அவரையே முழுவதுமாய் நம்பி (2)

பயணம் போகிறேன் - அவரை
நம்பி செல்கிறேன் (2)

என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்
இனி வெற்றி தான் (2)

தந்தன தானே தனனானே - 4


பாடல் 14
பிள்ளைகளா அன்பு பிள்ளைகளா
பிசாசை நடுங்க செய்ய ஆசையா (2)

விசுவாசி இயேசுவை விசுவாசி
விசுவாசி வீரராம் ஜெயம் நமக்கே (2)

பிசாசும் நம்மைக் கண்டு நடுநடுங்கும்
அற்புதத்தை பெற்றுத் தரும் விசுவாசமே (2)

விசுவாசி இயேசுவை விசுவாசி
விசுவாச வீரராம் ஜெயம் நமக்கே (2)


பாடல் 15
நல்ல காலம் பொறக்குது - 2
இயேசுவிடம் வந்தா நல்ல காலம் பொறக்குது (2)

பெறந்தாச்சு பெறந்தாச்சு
நல்ல காலம் பெறந்தாச்சு (2)

இயேசுவின் கரத்திலே என்
எதிர் காலம் இருக்குது (2)

அவரையே நம்புவேன்
அளவில்லா கிருபை கிடைக்குமே (2)


பாடல் 16
உனக்கு யார் மாடல் தம்பி
உனக்கு யார் மாடல் தங்கை (2)

Cricket வீரரா Football Player ஆ
உலக Actor ஆ உனது நண்பனா? - 2 (2)

இயேசுவைப் போல் நல்ல மாடல் இங்கே யாருண்டு - 2
அவரை Follow பண்ணு Happy-யாக வாழ்ந்திடு 


பாடல் 17
Beautiful Wings-ம் Holy-யான Dress-ம்
இயேசு எனக்கு தருவார் மறுரூபமாக்குவார் (2)

ஆஹா Joly Joly ஓஹா Holy Holy - 4

அழிவில்லா Crown-ம் Holy ஆன Life-ம்
இயேசு எனக்கு தருவார் பரலோக வாழ்வில் தருவார் (2)

ஆஹா Joly Joly ஓஹா Holy Holy - 4


சிறப்புப் பாடல்கள்
பாடல் 18
எறும்பைப் பாரு - தம்பி
எறும்மைப் பாரு - தங்கை

சுறுசுறுப்பாய் வேலை செய்யுது பாரு - அது
துடிதுடிப்பாய் ஊர்ந்து செல்லுது பாரு (2)

எண்ணிப்பாரு நீயும் எண்ணிப்பாரு
இயேசுவுக்காய் என்ன செய்தாய் எண்ணிப்பாரு (2)

இயேசுவுக்காய் வாழ்ந்திடு சுறுசுறுப்பாய் வாழ்ந்திடு 
இயேசுவுக்காய் வாழ்ந்திடு துடிதுடிப்பாய் வாழ்ந்திடு (2)


பாடல் 19
Left Right - 3 Left - 2
புறப்படு நீ புறப்படு - 2

இரட்சண்ய சேனையாய் புறப்படு இன்றே புறப்படு - 2

நித்திய வாழ்வை பெற்றிட
விசுவாச கேடயத்தோடு எழும்பிடு (2)

ஜீவ கிரீடம் பெற்றிட - இயேசுவில்
உன்னை அர்ப்பணித்திடு (2)

Left Right - 3 Left - 2


பாடல் 20
பொம்மையம்மா - 2 தலையாட்டும் பொம்மை
பொம்மையம்மா - 2 தஞ்சாவூரு பொம்மை

வேண்டாம் தம்பி பாவம்
அது பொல்லாத சுபாவம்
வேண்டாம் தங்கை பாவம்
நம்மை மூழ்கடிச்சிடும் கவனம் (2)

மந்திரும்பனும் என்ற எண்ணம் கொண்டு
இயேசுவின் மீட்பை பெற்று செல்லுவோம் (2)
    - பொம்மையம்மா.....



பாடல் 21
ஆசிரியர் பாடல்கள்
நீர்தந்த கனமான ஊழியத்தை
உம்மைப்போல தியாகத்தோடு நிறைவேற்றுவேன் (2)

இயேசுவே என்னை அர்ப்பணித்தேன்
உம் விருப்பத்தை நிறைவேற்றுவேன்
இயேசுவே என்னை அர்ப்பணித்தேன்
உம் சித்தம் போல செயல்படுவேன் (2)

1. எம் திருச்சபையின் பிள்ளைகளை
உமக்குள் அர்ப்பணிக்க உழைத்திடுவேன் (2)
வருங்கால திருச்சபைக்கு சாட்சியாக நிறுத்திடுவேன் - 2
    - இயேசுவே என்னை...

2. என் சுயசிந்தையை அகற்றிடுவேனே
எல்லாமே குப்பையாய் எண்ணிடுவேன் (2)
இலாபத்தை நஷ்டமாய் எண்ணி சீடராய் வாழ்ந்திடுவேன் - உலக - 2
    - இயேசுவே என்னை...



தொடர்புக்கு
இயக்குநர்,
இளையோர் திருச்சபை திருப்பணி,
1/1, இரட்சண்ய புரம்,
மூன்றுமாவடி,
மதுரை - 07.

தொடர்பு எண்: 9486461717

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.