Type Here to Get Search Results !

உயிர்த்தெழுந்த பண்டிகை பாடல்கள் | Easer Service Song Lyrics | Jesus Sam

============
உயிர்த்தெழுந்த பண்டிகை
ஆராதனைப் பாடல்கள்
===========
பாடல் அட்டவனை
1) யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
2) உயிரோடு எழுந்தவரே
3) மரித்த இயேசு உயிர்த்து விட்டார் 
4) சர்வ வல்லவர் என் சொந்தமானார்
5) உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
6) என் மீட்பர் உயிரோடிருக்கையிலே


பாடல் 1
யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே – யூத

2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனைத் துதித்திடவே – யூத

3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத

4. எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத

5. மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்

6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை

7. பாவத்திற்கென்று ஒரு தரம் மரித்தார்
அவர் மரித்தார் ஒரே தரம் மரித்தார்

8. கிறிஸ்தவரே நாம் அவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம


பாடல் 2
உயிரோடு எழுந்தவரே
உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்

அல்லேலூயா ஓசன்னா -4

மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்

அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆராதனை செய்கிறோம்


பாடல் 3
மரித்த இயேசு உயிர்த்து விட்டார்
மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா
மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா

அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே
யூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே
சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு

2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்
கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்
கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்
கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்

3. எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்
இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்
அப்பம்பிட்டு கண்களையே திறந்து வைத்தார்
அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்

4. அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே
இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்
நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவேன்
நாள்தோறும் புதுபெலனால் நிரம்பிடுவோம்


பாடல் 4
சர்வ வல்லவர் என் சொந்தமானார்
சர்வ வல்லவர் என் சொந்தமானார்
சாவை வென்றவர் என் ஜீவனானார்
ஆ.. ஆ.. இது அதிசயம் தானே
ஓ.. இது உண்மைதானே

1. கண்டு கொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசு தான் என் இரட்சகர்
இயேசு தான் என் ராஜா

2. சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதம்மா
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்

3. பரலோகத்தில் எனதுபெயர்
எழுதிவிட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வதுதான்

4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
ஜீவிக்கிறார் என் இயேசு
சீக்கிரமாய் வந்திடுவார்


பாடல் 5
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே

1. கல்லறைத் திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்லப் பிதாவின் செயலிதுவே

2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே

3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கின தாலே
எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே
எல்லையில்லாப் பரமானந்தமே

4. மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்

5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

6. பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே


பாடல் 6
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே

என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
விண்ணுல குயர்ந்தோர்
உன்னதஞ் சிறந்தோர்
மித்திரனே சுகபத்திரமருளும்

பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ
பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்

ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்
மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்

கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்
பரமபதவியினுள் என்றனை எடுப்பார்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.