Type Here to Get Search Results !

Genesis 02 Two Bible Quiz Question Answer in Tamil | ஆதியாகமம் 2 பைபிள் வினா விடைகள் தமிழில் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Two (2)
Question & Answer
ஆதியாகமம் இரண்டாம் (2) அதிகாரம்
கேள்வி பதில்கள்
==================
01. தேவன் ஓய்ந்திருந்த நாள் எது?
A) ஆறாம் நாள்
B) ஏழாம் நாள்
C) எட்டாம் நாள்
Answer: C) எட்டாம் நாள்
    (ஆதியாகமம் 2:2)

02. தேவன் ஆசீர்வதித்து பரிசுத்தமாக்கிய நாள்?
A) ஆறாம் நாள்
B) ஏழாம் நாள்
C) எட்டாம் நாள்
Answer: B) ஏழாம் நாள்
    (ஆதியாகமம் 2:3)

03. தேவனாகிய கர்த்தர் மனுஷனை எதினாலே உண்டாக்கினார்?
A) மண்
B) வார்த்தை
C) களிமண்
Answer: A) மண்
    (ஆதியாகமம் 2:7)

04. ஏதேன் தோட்டம் இருந்த திசை எது?
A) கிழக்கு
B) மேற்கு
C) வடக்கு
Answer: A) கிழக்கு
    (ஆதியாகமம் 2:8)

05. ஜீவவிருட்சமும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும் தோட்டத்தில் எங்கு இருந்தது?
A) கிழக்குப் பகுதியில்
B) தோட்டத்தின் நடுவில்
C) தெற்கு பகுதியில்
Answer: B) தோட்டத்தின் நடுவில்
    (ஆதியாகமம் 2:9)


06. ஏதேனிலிருந்து எத்தனை ஆறுகள் பிரிந்தது?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
Answer: C) நான்கு
    (ஆதியாகமம் 2:10)

07. ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றும் ஆற்றின் பெயர் என்ன?
A) கீகோன்
B) இதெக்கேல்
C) பைசோன்
Answer: C) பைசோன்
    (ஆதியாகமம் 2:11)

08. பொன் விளையும் தேசம் எது?
A) ஆவிலா தேசம்
B) எத்தியோப்பியா தேசம்
C) ஆசியா தேசம்
Answer: A) ஆவிலா தேசம்
    (ஆதியாகமம் 2: 11)

09. பிதோலாகும், கோமேதகக்கல்லும் இருக்கும் தேசம் எது?
A) ஆவிலா தேசம்
B) எத்தியோப்பியா தேசம்
C) ஆசியா தேசம்
Answer: A) ஆவிலா தேசம்
    (ஆதியாகமம் 2: 12)

10. எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றும் ஆற்றின் பெயர் என்ன?
A) கீகோன்
B) ஐபிராத்து
C) பைசோன்
Answer: A) கீகோன்
    (ஆதியாகமம் 2:13)


11. ஆசியாவுக்கு கிழக்கே ஓடும் ஆற்றின் பெயர் என்ன?
A) கீகோன்
B) இதெக்கேல்
C) பைசோன்
Answer: B) இதெக்கேல்
    (ஆதியாகமம் 2:14)

12. நாலாம் ஆற்றின் பெயர் என்ன?
A) கீகோன்
B) இதெக்கேல்
C) ஐபிராத்து
Answer: C) ஐபிராத்து
    (ஆதியாகமம் 2:14)

13. தேவன் ஆதாமிடம் எந்த கனியை புசிக்க வேண்டாம் என்றார்?
A) ஜீவ விருட்சம்
B) நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்
C) அழகான விருட்சம்
Answer: B) நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்
    (ஆதியாகமம் 2:17)

14. எந்த எழுப்பினால் தேவன் மனுஷியை உண்டாக்கினார்?
A) தாடை எழும்பு
B) தொடை எலும்பு
C) விலா எலும்பு
Answer: C) விலா எலும்பு
    (ஆதியாகமம் 2:22)

15. ஆதாமும், ஏவாளும் நிர்வாணிகளாயிருந்தும் ________ .
A) பயப்படாதிருந்தார்கள்
B) கவலைப்படாதிருந்தார்கள்
C) வெட்கப்படாதிருந்தார்கள்
Answer: C) வெட்கப்படாதிருந்தார்கள்
    (ஆதியாகமம் 2:25)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.