Type Here to Get Search Results !

Daniel Six 6 Question with Answer | தானியேல் புத்தகத்தின் கேள்வி பதில்கள் | Daniel Quiz in Tamil | Jesus Sam

===============
தானியேல் ஆறாம் (6) அதிகாரம்
வேதாகம கேள்வி பதில்கள்
Book of DANIEL Question & Answer
==============
01. தரியு தன் ராஜ்யத்தில் எத்தனை தேசாதிபதிகளை ஏற்ப்படுத்தினான்?
A) எழுபது
B) நூற்றிருபது
C) நூற்றைம்பது
Answer: B) நூற்றிருபது
  (தானியேல் 6:1)

02. தரியு தனக்கு நஷ்டம் வராதபடிக்கு தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிப்பதற்காக எத்தனை பிரதானிகளை ஏற்ப்படுத்தினான்?
A) மூன்று
B) பனிரெண்டு
C) இருபது
Answer: A) மூன்று
  (தானியேல் 6:2)

03. பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்ப்பட்டவன் யார்?
A) தரியு
B) தானியேல்
C) மேல்ஷார்
Answer: B) தானியேல்
  (தானியேல் 6:3)

04. ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடியது யார்?
A) கல்தேயர்
B) தேசாதிபதிகள்
C) பிரதானிகள்
Answer: B) தேசாதிபதிகள் இ) பிரதானிகள்
  (தானியேல் 6:4)

05. தரியு எத்தனை நாள்வரை தன்னைத்தவிர மற்ற தெய்வங்களை வணங்கக்கூடாது என்று கட்டளையிட்டான்?
A) பத்து
B) முப்பது
C) ஐம்பது
Answer: C) முப்பது
  (தானியேல் 6:7,12)


06. தானியேல் தினமும் எத்தனை வேலை ஜெபம் செய்து வந்தான்?
A) இரண்டு
B) மூன்று
C) ஏழு
Answer: B) மூன்று
  (தானியேல் 6:10,13)

07. அந்த காரியம் மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படி உறுதியாக்கப்பட்டதே என்றது யார்?
A) தரியு
B) தேசாதிபதிகள்
C) தானியேல்
Answer: A) தரியு
  (தானியேல் 6:12)

08. தரியு யாரை தப்புவிக்க சூரியன் அஸ்தமிக்கு மட்டும் பிரயாசப்பட்டான்?
A) தானியேல்
B) தேசாதிபதிகள்
C) பிரதானிகள்
Answer: A) தானியேல்
  (தானியேல் 6:14)

09. "நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்" யார்? யாரிடம் சொன்னது?
A) தரியு – தானியேல்
B) பெல்ஷாத்சார் - தானியேல்
C) தானியேல் - தரியு
Answer: A) தரியு
  (தானியேல் 6:16)

10. தானியேலைப் பற்றின தீர்மானம் மற்றப்படாதபடிக்கு கெபியின் வாசலில் இருந்த கல்லில் முத்திரை போட்டது யார்?
A) தரியு
B) தேசாதிபதிகள்
C) பிரபுக்கள்
Answer: A) தரியு B) பிரபுக்கள்
  (தானியேல் 6:17)


11. தானியேல் சிங்கக்கெபியில் இருந்தபோது உன்னாமலும் உரங்காமலும் இருந்தது யார்?
A) தரியு ராஜா
B) சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ
C) தேசாதிபதிகள், பிரதானிகள்
Answer: A) தரியு ராஜா
  (தானியேல் 6:18)

12. தேவன் யாரை அனுப்பி சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார்?
A) ராஜா
B) தானியேல்
C) தூதன்
Answer: C) தூதன்
  (தானியேல் 6:22)

13. தானியேல் ராஜாவுக்கு முன்பாக _______ செய்ததில்லை.
A) பாவம்
B) நீதிகேடு
C) குற்றம்
Answer: B) நீதிகேடு
  (தானியேல் 6: 22)

14. அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறார்.  அவருடைய ராஜ்யம் அழியாதது, அவருடைய கர்த்தர்த்துவம் முடிவுபரியந்தம் நிற்கும் என்றது யார்?
A) தரியு
B) தானியேல்
C) மேஷாக்
Answer: A) தரியு
  (தானியேல் 6:26)

15. யாருடைய ராஜ்யபார காலத்தில் தானியேலின் காரியம் ஜெயமாய் இருந்தது?
A) தரியு
B) நேபுகாத்நேச்சார்
C) கோரேஸ்
Answer: A) தரியு இ) கோரேஸ்
  (தானியேல் 6:28)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.