Type Here to Get Search Results !

Daniel Seven 7 Quiz Question & Answer | தானியேல் வினா விடைகள் | Book of DANIEL Study | Jesus Sam

==========
தானியேல் ஏழாம் (7) அதிகாரம்
வேதாகம கேள்வி பதில்கள்
Book of Daniel Quiz in Tamil
============
01. தானியேலின் தரிசனத்தில் சமுத்திரத்திலிருந்து எழும்பின மிருகங்கள் எத்தனை?
A) மூன்று
B) நான்கு
C) ஏழு
Answer: B) நான்கு
(தானியேல் 7:3)

02. தானியேல் கண்ட முதலாம் மிருகத்தின் சாயல் எதைப்போலிருந்தது?
A) கரடி
B) சிவிங்கி
C) சிங்கம்
Answer: C) சிங்கம்
(தானியேல் 7:4)

03. எந்த மிருகத்திற்கு கழுகின் செட்டைகள் கொடுக்கப்பட்டது?
A) கரடியைப் போலிருந்த மிருகம்
B) சிவிங்கியைப் போலிருந்த மிருகம்
C) சிங்கத்தைப் போலிருந்த மிருகம்
Answer: C) சிங்கத்தைப் போலிருந்த மிருகம்
(தானியேல் 7:4)

04. எந்த மிருகத்திற்கு மனுஷ இருதயம் கொடுக்கப்பட்டது?
A) கரடியைப் போலிருந்த மிருகம்
B) சிவிங்கியைப் போலிருந்த மிருகம்
C) சிங்கத்தைப் போலிருந்த மிருகம்
Answer: C) சிங்கத்தைப் போலிருந்த மிருகம்
(தானியேல் 7:4)

05. தானியேல் கண்ட இரண்டாம் மிருகத்தின் சாயல் எதைப்போலிருந்தது?
A) கரடி
B) சிவிங்கி
C) சிங்கம்
Answer: A) கரடி
(தானியேல் 7:5)


06. எந்த மிருகத்திற்கு எழும்பி வெகு மாம்சம் தின்னென்று சொல்லப்பட்டது?
A) கரடியைப் போலிருந்த மிருகம்
B) சிவிங்கியைப் போலிருந்த மிருகம்
C) சிங்கத்தைப் போலிருந்த மிருகம்
Answer: A) கரடியைப் போலிருந்த மிருகம்
(தானியேல் 7:5)

07. தானியேல் கண்ட மூன்றாம் மிருகத்தின் சாயல் எதைப்போலிருந்தது?
A) கரடி
B) சிவிங்கி
C) சிங்கம்
Answer: B) சிவிங்கி
(தானியேல் 7:6)

08. எந்த மிருகத்திற்கு ஆளுகை கொடுக்கப்பட்டது?
A) கரடியைப் போலிருந்த மிருகம்
B) சிவிங்கியைப் போலிருந்த மிருகம்
C) சிங்கத்தைப் போலிருந்த மிருகம்
Answer: B) சிவிங்கியைப் போலிருந்த மிருகம்
(தானியேல் 7:6)

09. எந்த மிருகத்திற்கு நாலு தலைகள் உண்டாயிருந்தது?
A) கரடியைப் போலிருந்த மிருகம்
B) சிவிங்கியைப் போலிருந்த மிருகம்
C) சிங்கத்தைப் போலிருந்த மிருகம்
Answer: B) சிவிங்கியைப் போலிருந்த மிருகம்
(தானியேல் 7:6)

10. தானியேல் கண்ட எத்தனையாவது மிருகத்திற்கு பத்து கொம்புகள் இருந்தது?
A) இரண்டாம் மிருகம்
B) மூன்றாம் மிருகம்
C) நான்காம் மிருகம்
Answer: C) நான்காம் மிருகம்
(தானியேல் 7:7)


11. அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும், ________ வாயும் இருந்தது?
A) அநியாயத்தைப் பேசும்
B) பெருமையானவைகளைப் பேசும்
C) உண்மையைப் பேசும்
Answer: B) பெருமையானவைகளைப் பேசும்
(தானியேல் 7:8)

12. சிங்காசனத்தில் வீற்றிருந்தது யார்?
A) மனுஷகுமாரன்
B) நீண்ட ஆயுசுள்ளவர்
C) உன்னதமானவர்
Answer: B) நீண்ட ஆயுசுள்ளவர்
(தானியேல் 7:9)

13. நீண்ட ஆயுசுடையவரை எத்தனை பேர் சேவித்தார்கள்? எத்தனை பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்?
A) நூறாயிரம் பேர், ஆயிரமாயிரம் பேர்
B) ஆயிரமாயிரம் பேர், கோடாகோடி பேர்
C) கோடாகோடி பேர், ஆயிரமாயிரம் பேர்
Answer: B) ஆயிரமாயிரம் பேர், கோடாகோடி பேர்
(தானியேல் 7:10)

14. நாலு பெரிய மிருகங்களும் யாரைக் குறிக்கிறது?
A) தேவன்
B) அந்திக்கிறிஸ்து
C) ராஜாக்கள்
Answer: C) ராஜாக்கள்
(தானியேல் 7:17)

15. நீண்ட ஆயுசுடையவர் வருமட்டும் நியாயவிசாரிப்பு யாருக்கு கொடுக்கப்பட்டது?
A) மனுஷகுமாரனுக்கு
B) பரிசுத்தவான்களுக்கு 
C) உன்னதமானவருக்கு
Answer: B) பரிசுத்தவான்களுக்கு
(தானியேல் 7:21)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.