===============
திருமறை தேர்வு (யோவான் நற்செய்தி)
===============
I. சரியா? தவறா? என எழுதுக1. இயேசுவும், அவருடைய சீஷரும் அந்த கானா ஊர் கல்யாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
2. நிக்கொதேமு ஒரு பரிசேன்
3. பெதஸ்தாகுளத்திற்கு ஏழு மண்டபங்களுண்டு
4. பிறவிக் குருடனாகிய மனுஷன், குருடனாய் பிறந்தது, அவன் செய்த பாவத்தினால் என்று இயேசு கூறினார்.
5. நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
6. லாசரு மரித்து மூன்று நாளாயிற்று என்று மார்த்தாள் கூறினாள்.
7. “நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்“ என்று தீர்க்கதரிசனம் உரைத்தார் யோவேல்
8. யூதாஸ் இயேசுவை மறுதலித்தான்.
9. இயேசு மரித்து அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
10. யோனாவின் குமாரன் யோவான்.
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. யோவான் அந்த -------------------- குறித்துச் சாட்சிகொடுக்க வந்தான்.
2. இயேசு சமாரியாவிலுள்ள --------------- என்னப்பட்ட ஊருக்கு வந்தார்.
3. ---------------- கிராமத்தில் மார்த்தாளும், மரியாளும் வசித்தனர்
4. நீங்கள் மனந்திரும்பிப் ----------- போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்.
5. பேதுருவின் காதை வெட்டிய வேலைக்காரனின் பெயர் -------------
6. வாரத்தின் முதல் நாள், கல்லறையினிடத்திற்கு அதிக இருட்டோடே வந்தது ---------------------
7. ஆண்டவரே நான் ----------------- மனுஷன் என்று பேதுரு கூறினான்.
8. சத்தியம் உங்களை ------------------- .
9. ---------------- மோசேயினால் வனாந்திரத்தில் உயர்த்தப்பட்டது.
10. ஆவியானவர் பாவத்தைக் குறித்தும், ------------------ குறித்தும், ------------- குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
III. சுருக்கமான விடையளி
1. யோவான் சுவிஷேசம் எழுதப்பட்டதன் நோக்கம் என்ன?
2. இயேசு செய்த முதலாம் அற்புதத்தை பற்றி எழுதுக.
3. ஜீவத்தண்ணீர் யார்?
4. நானே என்று கிறிஸ்து தன்னைக்குறித்து சொன்ன 5 காரியங்களை எழுது?
5. நல்ல மேய்ப்பனின் குணங்கள் யாவை?
6. பெத்தானியாவில் நடந்த அற்புதம் என்ன?
7. கூடாரப் பண்டிகையைப் பற்றி எழுதுக.
8. யோவான் இயேசுவை குறித்து கூறியதென்ன?
9. ஓசன்னா என்பதின் பொருள் என்ன? யார் அப்படி வாழ்த்தியது?
10. சகமடைந்த குருடன் கொடுத்த சாட்சி என்ன?
IV. விரிவான விடையளி
1. பரிசுத்த ஆவியானவர் என்ன செய்வார்?
2. பேதுருவின் மறுதலிப்பும், மனந்திரும்புதலையும் விவரி.
3. நிக்கொதெமுவுக்கு இயேசுவின் போதனைகளை விவரி.
4. இயேசு 5000 பேரை போஷித்த சம்பவத்தை விளக்கு.
5. சிலுவையிலிருந்து இயேசு மொழிந்த வார்த்தைகளை விவரி.
V. மனன வசனங்கள்
1. யோவான் 1:14
2. வெளிப்படுத்தல் 3:20
3. யோவான் 15:5
4. 1 பேதுரு 2:23
5. .எபிரெயர் 7:25
=================
யோவான் சுவிசேஷம (கேள்விகள்)
===============
1. பிலிப்பென்பவன் எந்த பட்டணத்தான்? 2. நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமா என்று சொன்னது யார்?
3. யோவானுடைய சீஷரில் சிலருக்கும், யூதருக்கும் எதைக் குறித்து வாக்குவாதம் உண்டாயிற்று?
4. உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்கள் பிதாவை -----------------, -------------- தொழுது கொள்ளுங்காலம் வரும்.
5. பெதஸ்தா குளத்திற்கு எத்தனை மண்டபங்களுண்டு?
6. யாருக்கு நித்திய ஜீவன் உண்டு?
7. எது தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது?
8. உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான், அவன் யார்?
9. ---------------- படி தீர்ப்புச் செய்யாமல் -------------- படி தீர்ப்பு செய்யுங்கள்.
10. சீலோவாம் என்பதற்கு அர்த்தம் என்ன?
11. நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக என்ன செய்கிறான்?
12. பிரதான ஆசாரியர்கள், ஏன் லாசருவையும், கொலை செய்ய ஆலோசனை பண்ணினார்கள்?
13. கனி கொடுக்கிற கொடியைப் பிதா ஏன் சுத்தம் பண்ணுகிறார்?
14. உம்முடைய ------------ அவர்களைப் பரிசுத்தமாக்கும், உம்முடைய ------------ சத்தியம்.
15. பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் பெயர் என்ன?
16. இயேசுவின் சிலுவையினருகே நின்று கொண்டிருந்த பெண்கள் யார்?
17. உயிர்த்தெழுந்த இயேசு, மரியாளைப் பார்த்து என்ன கேட்டார்?
18. இயேசு உயிர்த்தெழுந்த பின்பு தம்முடைய சீஷருக்கு அருளின மூன்றாவது தரிசனம் எங்கு நடந்தது?
19. வலதுபுறமாக வலையைப் போட்டபோது, எத்தனை மீன்கள் அகப்பட்டன?
20. இயேசு ஆயத்தம் பண்ணி வைத்திருந்த காலை உணவு எது?
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.