Type Here to Get Search Results !

JC VBS 2023 | Day 3 | செம்மையானவைகளில் உறுதி | Assured in Pure Things | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி
விடுமுறை வேதாகமப்பள்ளி – 2023

நாள் – 3
தலைப்பு: செம்மையானவைகளில் உறுதி

செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும். (சங்கீதம் 112:4)

நோக்கம்:
    கடவுளின் வழியில் செம்மையான நோக்கமுடையவர்களாயும், உள்ளத்தில் தூய்மையான எண்ணமுடையவர்களாயும், கடவுளின் விருப்பத்தில் செம்மையாய் நாமும் வாழும்போது அவர் நம்மை பலப்படுத்துகின்றார். நிலை நிறுத்துகின்றார். உறுதியாய் வாழ உதவி செய்கின்றார்.

வேதபகுதி:
    1 சாமுவேல் 24:8-10, 1 சாமுவேல் 26:7-11 என் ஆண்டவர் மேல் என் கை போடேன், அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவர்.
    2 சாமுவேல் 1:1-27, 2 சாமுவேல் 2:1-7, 2 சாமுவேல் 5:1-5 சவுலின் மரணத்தில் களிகூறாத தாவீது, சவுலின் மரணத்திற்காக துக்கிக்கிறார்.
    1 சாமுவேல் 16:11-13 புதிய அரசராக தாவீது நியமனம்

மனப்பாட வசனம்:
யோபு 17:9
    நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான். சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும், பலத்துப்போவான்.

வேதபாட முன்னேற்றம்:
    செம்மையானவர்கள் என்றால் சரியான, நேர்த்தியான காரியங்களில் ஈடுபடுபவர். மனதில் கலப்படமில்லாத உணர்வுள்ள இருதயத்துடன், மாய்மாலமில்லாமல் செம்மையாய் நடந்து கொள்பவர் என்று அர்த்தம்.

    1. சவுல் தாவீதிற்கு விரோதமாய் செயல்பட்டாலும், தாவீது சவுலின் மேல் ஒருபோதும் உள்ளத்திலும், செயலிலும் விரோதத்தையோ, வெறுப்பையோ காட்டவில்லை.
    2. சவுலின் மரணத்தை கேள்விபட்ட தாவீது அதில் களிகூரவில்லை. மாறாக துக்கமடைந்தார்.
    3. சவுலுக்கு கொடுக்கவேண்டிய கனத்தையும், மரியாதையையும் தாவீது கொடுத்தார்.
    4. புதிய அரசராக தாவீது தேவனுடைய திட்டம் நிறைவேறத்தக்கதாக ராஜாவாகிறார்.

தலைப்பு அறிமுகம்:
    நாம் மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளுவதன் காரணம் என்ன?
    நம்மீது ஒருவர் பொறாமை கொண்டால் நாம் எவ்விதம் அதை கையாளலாம்.
    எ.கா: பந்தை சுவற்றில் எறிந்தால் அது நம்மிடம் திரும்பி வரும் இதை குறித்து நாம் சிந்திக்க வேண்டும். நாம் மற்றவர்களுக்கு எதை திரும்ப செய்யபோகிறோம் அல்லது செய்கிறோம்.


பாட விளக்கம்:
    தாவீதின் வெற்றி, திறமைகளை ஏற்றுக்கொள்ள முடியாத சவுல் அவர் மீது பொறாமை கொண்டார். அவரைக் கொல்ல பலவிதங்களில் முறச்சித்தார் என்பதை நாம் அறிவோம். ஆனால் தாவீதுக்கோ சவுலின் மீது எந்தவிதமான வெறுப்பும் கோபமும் ஏற்படவில்லை. சவுல் தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட போதும் தாவீது அதில் மகிழ்ச்சியடைவில்லை. மேலும் தாவீது, சவுல் தன்னைக் கொல்வதற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தபடியால் இஸ்ரவேல் தேசத்தை விட்டு பெலிஸ்தரின் நாட்டிற்குச் சென்றுவிட்டார். சவுல் தனது தவற்றை திருத்திக்கொள்ளாமல் வாழ்ந்தபடியால் ஆண்டவர் அவரைக் கைவிட்டுவிட்டார். ஆனால் சவுல் மீது தாவீது வைத்திருந்த மதிப்பு என்றும் குறையவில்லை. பின்பு பெலிஸ்தருடன் நடைபெற்ற யுத்தத்தில் சவுல் கொல்லப்பட்டுவிட்டார். இது தாவீதுக்கு மகிழ்ச்சிதரும் செய்தியாக இருக்கும் என்றும், அவரைக் கொன்றது நான் எனக்கூறினால் தனக்கு பரிசு கிடைக்கும் என்றும் நினைத்த ஒரு அமலேக்கிய வாலிபன் தாவீதிடம் வந்து, யுத்தத்தில் தோல்வியடைந்ததால் சவுல் தற்கொலைக்கு முயன்றார். அவரது உயிர்போகாமல் வேதனைப்பட்டபோது தன்னை கொன்றுபோட கேட்டுக்கொண்டார். ஆகவே அவரைக் கொன்று அவரது கையில் இருந்த காப்பையும் தலையில் இருந்த மகுடத்தையும் கொண்டுவந்தேன் என்று கூறினான்.

    நாம் பொதுவாக நமக்கு துன்பத்தை தருபவர்களுக்கு ஒரு கஷடம் வந்துவிட்டால் மகிழ்ச்சியடைவோம். சில நேரங்களில் அந்த மகிழ்ச்சியை வெளியே காண்பிக்காவிட்டாலும் மனதுக்குள் சந்தோஷப்படுவோம் அப்படித்தானே? ஆனால் தாவீதோ சவுல் தனக்கு பலவித துன்பங்களை தந்திருந்தாலும் அவரது மரணத்தால் மகிழ்ச்சியடையவில்லை. மாறாக வேதனைப்பட்டார். இது பிறரது அநுதாபத்தைப் பெறுவதற்காகவோ அல்லது சவுலைச் சார்ந்தவர்களினிமித்தமான பயத்தினாலோ அல்ல. தாவீதின் மனம் மாய்மாலமற்றதாகவும், செம்மையானதாகவும் இருந்தது. சவுல் அரசன், கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டவர். சவுல் அதற்கு ஏற்றவாறு வாழாவிட்டாலும் தாவீதின் மனதில் சவுலைக் குறித்த இந்த மரியாதை உணர்வும் கர்த்தருக்கு கனம் தரும் சிந்தனையும் மேலோங்கி இருந்தது. தாவீது சவுலின் மரணத்தில் மகிழாமல் இருந்ததுடன் அவரது வருத்தத்தை புலம்பலின் பாடலாகவும், சவுலின் பெருமைகளை வெளிப்படுத்தும் பாடலாகவும் பாடினார்.

    இன்று உயர் பதவிகளை பெருவதற்காக பலர் பிறர் மீது பழிபோடுவது, பிறரைக் குறித்து அவதூறான செய்திகளை பரப்புவது பிறரை கொலைசெய்வது என்பன போன்ற பல்வேறு குறுக்கு வழிகளை கையாளுவதைப் பார்க்கிறோம். சவுல் உயிருடன் இருக்கும்போதே சாமுவேல் தீர்க்கதரிசியால் தாவீது அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டார். சவுல் கர்த்தரால் கைவிடப்பட்டபோதிலும் அவர் உயிருடன் இருக்குவரை தன்னை அரசனாக்கிக்கொள்வதற்கு தாவீது விரும்பவில்லை. தன்னைக் கொல்லவந்த சவுல் தன் கையால் கொல்லப்படுவதற்கான வாய்ப்பு கிட்டியபோதும், தாவீதுடன் இருந்தவர்கள் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே என்று சொன்னபோதும் தாவீது சவுலை கொல்ல முயற்சிக்கவில்லை. நமது ஆண்டவர் இயேசுவும் தன்னை அவமதித்தவர்கள் தனக்கு வேதனையைக் கொடுத்தவர்களிடம் எவ்விதமான வெறுப்பையும் காண்பிக்கவில்லை. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அல்ல அவர்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்றே ஜெபித்தார்.

    நாமும் கிறிஸ்துவின் சிந்தையைப் பெற்றுக்கொண்டவர்களாக தாவீதைப்போல செம்மையான மனதுடன் வாழ நம்மை அர்ப்பணிப்போம்.

இரட்சிப்பின் சிந்தனை:
    கிறிஸ்துவை வெளிக்காட்டும் ஒவ்வொரு பிள்ளைகளும் செம்மையான செயல்களில் உறுதியாகயிருக்க வேண்டும். நம்முடைய சிந்தனை, எண்ணங்கள், ஆவிக்குரிய கனிகளாய் கிறிஸ்துவுக்காக வாழ்ந்து காட்ட வேண்டும்.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

கதை
1. தாவீது சிறுவனாக இருக்கும்போதே அபிஷேகிக்கப்படுதல்
    தாவீது சிறுவனாக இருக்கும்போதே சாமுவேல் தீர்க்கதரிசியால் அபிஷேகம் செய்யப்பட்டார்.  சாமுவேல் இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதி.  ஆசாரியனாகவும் செயல்பட்டார்.  மிகப்பெரிய தீர்க்கதரசி.  மனிதர்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட ஒருவார்.
    சவுல் கர்த்தருடைய வார்த்தைப்படி நடக்காததால், ஆண்டவர் ஈசாயின் எட்டாவது மகன் தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய்தார்.
    சாமுவேல் தீர்க்கதரிசி ஈசாயிடம் வந்து, உன் குமாரரில் ஒருவனை இஸ்ரவேலுக்கு ராஜாவாக அபிஷேகம் செயய வேண்டும் என்று சொன்னபோது, ஈசாய் தன் முத்த ஏழு குமாரர்களை அழைத்து காட்டுகிறான்.  முதல் ஏழு பிள்ளைகளையும் கர்த்தர் நிராகரித்துவிட்டார்.
    சாமுவேல் ஈசாயிடம் உனக்கு வேறு பிள்ளைகள் உண்டா என்று கேட்ட போது, ஈசாய் இன்னும் ஒருவன் இருக்கிறான்.  அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்று சொன்னார்.
    அதற்கு சாமுவேல் சீக்கிரமாய் அவனை அழைத்து வர ஆட்களை அனுப்பு என்று சொன்னார்.  தாவீது வீட்டிற்கு வந்தபோது, மிகப்பெரிய தீர்க்கதரிசியாகிய சாமுவேல் சிறுவன் தாவீதுக்கு முன்பாக எழுந்து நின்றார்.
    தாவீது அங்கேயே அபிஷேகம் செய்யப்பட்டார்.  தாவீது அபிஷேகம செய்யப்படும்போது அவரது வயது பதினாறு அல்லது பதினேழாக இருக்கலாம்.
    தாவீதை சாமுவேல் அபிஷேகம் பண்ணும்போது சவுல் மரித்த பின்பு நீ இஸ்ரவேலின் ராஜாவாய் ஏற்படுத்தப்படுவாய் என்று சொல்லவில்லை.  இன்றே நீ இஸ்ரவேலின் ராஜா என்று அபிஷேகம் பண்ணினார்.
    தாவீது அபிஷேகம் பண்ணப்பட்ட நாளில் தாவீதுக்குள்ளாக ஆவியானவர் இறங்கினார்.  சவுலுக்குள்ளாக கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி இருந்தது.
    தாவீது ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட பிறகும், வளக்கத்தின்படியே ஆடுகளை மேய்த்து வந்தார்.  அந்த அளவிற்கு தாவீதிடம் பொறுமையும், தாழ்மையும் இருந்தது.
    சவுலுக்குள் இருந்த பொல்லாத ஆவியை விரட்ட வேண்டும் என்பதற்காக தாவீது இசைக்கருவிகளை வாசித்துக்கொண்டிருந்தார்.  பொல்லாத ஆவியை துரத்த இஸ்ரவேலின் ராஜா இசை வாசித்தார்.  


2. தாவீது சவுலுக்கு தீங்கு செய்ய நினைக்கவில்லை
    சவுல் தாவீதின் மேல் கொண்ட பொறாமையின் நிமித்தமாக தாவீதை கொலை செய்ய பாலமுறை முயறச்சி செய்தார். ஏறக்குறை பதினெட்டு முறை இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல், சாதாரண மேய்ப்பனாகிய தாவீதை கொலை செய்ய வகைதேடினான்.
    தாவீது கீத வாத்தியங்களை வாசிக்கும்போது சவுல் ஈட்டியை எடுத்து எறிந்தார்.  தாவீதோடு கர்த்தர் இருந்ததால், தாவீது ஈட்டிக்கு தப்பினார்.  அதைப்போலவே தாவீது கல்லை எறிந்தபோது கோழியாத்தினால் கல்லுக்கு தப்ப முடியவில்லை.  காரணம் தாவீதோடு கர்த்தர் இருந்தார், கோலியாத்தோடு கர்த்தர் இல்லை.
    தாவீது சவுலுக்கு முன்பாக இசைக்காருவிகளை வாசிக்கும்போது, அந்த அரையில் தாவீதையும், சவுலையும் தவிற யாரும் இருக்க மாட்டார்கள்.   சவுல் தூக்கம் வராத நேரத்தில் தான் தாவீதை அழைத்து இசை வாசிக்க சொல்லுவார்.  அப்படி தாவீது வாசித்துக்கொண்டிருக்கும்போது, சவுல் ஈட்டியை எடுத்து எரிந்தார்.  சவுலின் ஈட்டிக்கு தப்பின தாவீது அதே ஈட்டியால் சவுலை குத்தி கொலை செய்துவிட்டு, சவுல் தற்கொலை செய்துகொண்டார், என்று சொன்னால் அனைவரும் நம்பியிருப்பார்கள்.  ஆனால் தாவீது அப்படி செய்யவில்லை.  செம்மையானவைகளை செய்வதில் உறுதியாய் இருந்தார்.

    ஒரு முறை சவுல் மாகோன் வனாந்திரத்தில் தாவீதை கொலை செய்ய அவனை பின்தொடர்ந்தான். சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள். சவுலும் அவன் மனுஷரும், தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத்தக்கதாக சுற்றி வளைந்துகொண்டார்கள்.

    சவுல் தாவீதைப் பிடிக்க கிட்டி நெருங்கியபோது, ஒரு மனுஷன் சவுலிடம் வந்து: நீர் சீக்கிரம் வாரும்; பெலிஸ்தியர் தேசத்தின் மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்.

    அப்பொழுது சவுல் தாவீதை பின்தொடருவதை விட்டு, பெலிஸ்தியர்களை எதிர்க்கும்படி போனான். தாவீது எங்கேயிருக்கிறான் என்று அறியும்படியாக சவுல் ஆங்காங்கே வேவுக்காரரை வைத்திருந்தான்.

    சவுல் பெலிஸ்தியரை இஸ்ரவேலிலிருந்து துரத்திவிட்ட பின்பு, தாவீது என்கேதின் வனாந்திரத்தில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டு, மூவாயிரம்பேரை தெரிந்துகொண்டு தாவீதைப் பிடிப்பதற்காக புறப்பட்டான்.

    சவுல் மூவாயிரம் பேரோடு தாவீதைத் தேடி என்கேதின் வனாந்திரத்திற்கு வந்தான். சவுல் தாவீதைத் தேடிய கலைப்பில் சற்று இளைப்பாறும்படியாக கெபி ஒன்றிற்குள் பிரவேசித்தான்.

    சவுல் தன் வீரர்களை அனைவரையும் வெளியே ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, தனக்கு நெருக்கமான ஒருசில வீரர்களோடு கெபிக்குள் ஓய்வெடுக்க வந்தான். அந்த கெபிக்குள் தாவீதும் அவனது ஆட்களும் ஒளிந்திருந்ததை சவுல் அறியாதிருந்தான்.

    1 சாமுவேல் 24:3-ல் மலஜலாதிக்கப்போனான் என்பதன் அர்த்தம் சற்று இளைப்பாறும்படி போனான் (அமர்ந்துகொண்டு உறங்குதல்) என்பதாகும்.

என்கேதின் வனாந்திரம்:
    என்கேதின் வனாந்திரத்தில் அநேக குகைகள் இருந்தன. என்கேதின் வனந்திரம் மிகப்பெரிய வனாந்திரம். மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை ஓட்டிக்கொண்டு வரும்போது மந்தைகளை வெளியே விட்டு கெபிக்குள் வந்து சற்று இளைப்பாருவார்கள். மழை, வெயில் போன்றவற்றிற்கு இக்கெபி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். இயற்கையான அந்த கெபியில், அங்கே வந்து தங்குபவர்கள் தங்கள் வசதிக்கேற்ப அதை சுத்தம் செய்த அங்கே இளைப்பாறிக்கொள்வார்கள். பெரும்பாலும் மேய்ப்பர்களே இந்த கெபிகளை பயன்படுத்தினார்கள்.
    தாவீது அந்த கெபிக்குள் ஒளிந்திருக்கிறான் என்பதை அறியாமல், சவுல் சற்று ஓய்வெடுக்கும்படியாக குகைக்குள் வந்தான். அப்பொழுதுது தாவீதோடு இருந்தவர்கள். சவுல் தனியாய் இருக்கிறான். கர்த்தர் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். ஈட்டியினால் அவரை குத்தி கொன்றுபோடும் என்று ஆலோசனை கொடுத்தார்கள்.
    அப்பொழுது தாவீது கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவரை நான் தொடமாட்டேன் என்று சொன்னான். சவுலை கொலையும் வாய்ப்பு தாவீதுக்கு கிடைத்திருந்தும், தாவீது தன்னை கொலை செய்யவில்லை என்பதை சவுல் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, தாவீது மெல்ல எழுந்திருந்துபோய் சவுலின் சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்தான்.
    சவுல் தாவீதை கொலை செய்ய அநேக முயற்சிகளை மேற்கொண்டான். ஒவ்வொரு முறையும் தாவீது தன் உயிரை பணையம் வைத்து ஓடி பிழைத்துக்கொண்டான். மரணத்திற்கும் எனக்கு ஒரு அடி தூரம் மாத்திரம் இருந்தது என்று தாவீது மிகவும் வேதனையோடு சொல்லுகிறார். (1 சாமுவேல் 20:3) இப்படியாக தன்னை கொடுமைப்படுத்தின, தன் உயிரை வாக்கத் துடித்த கொலைபாதகனை கொலைசெய்யும் வாய்ப்பு தாவீதுக்கு கிடைத்த போது தாவீதின் மனதிற்கு அது செம்மையாய் தோன்றியிருக்கலாம். நாம் சவுலை கொலைசெய்துவிட்டால் இனி நான் நின்மதியாக இருப்பேன், பயந்து, பயந்து ஓடி ஓலிய தேவையில்லை. சவுலை கொலை செய்வதுதான் செம்மையான வழி என்று தாவீது நினைத்திருக்கலாம்.
    சவுலை கொலை செய்வது தனக்கு செம்மையானதாக இருந்தாலும், கடவுளுக்கு அவை செம்மையானதாக இருக்காது என்பதை தாவீது உணர்ந்து, சவுலை கொலைசெய்யாமல் விட்டுவிட்டான். இப்படியாக தாவீது தன் வாழ்வில் தனக்கு செம்மையாய் தோன்றுகின்ற வழிகளை விட, கடவுளுக்கு செம்மையாய் தோன்றுகின்ற காரியங்கையே செய்தார்.
    நாமும் தாவீதைப்போல நமக்கு செம்மையாய் தோன்றும் அனைத்து காரியங்களையும் செய்யாமல், கடவுளுக்கு செம்மையாய் தோன்றுகின்ற காரியங்களையே செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார்.

2. சவுலின் மரணம் தாவீதுக்கு துக்கம் அல்ல:
    இஸ்ரவேலின் இராணுவமும், பெலிஸ்தியர்களும் யுத்தம் செய்தபோது பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களை முறியடித்தார்கள்.  கில்போவா மலையில் இஸ்ரவேல் படையின் வீரர்கள் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்.
    சவுலின் மகனாகிய யோனத்தானும், அபினதாபும், மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள்.  எல்லோரும் கொலைசெய்யப்பட்டார்கள்.  நாம் தோல்வியடைந்துவிட்டோம் என்பதை அறிந்த சவுல், தன் ஆயுததாரியை நோக்கி: நான் பெலிஸ்தியர் (விருத்தசேதனமில்லாதவர்கள்) கையில் அகப்பட்டு, அவமானப்படாதபடி, நீ உன் பட்டயத்தை உருவி என்னை குத்திப்போடு என்று சொன்னான்.
    சவுலின் ஆயுததாரிய நான் அப்படி செய்யமாட்டேன் என்று சொன்னதினால், சவுல் பட்டயத்தை தரையிலே நட்டு அதின்மேல் விழுந்தான்.  சவுல் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த சவுலின் ஆயுததாரி தானும் தற்கொலைசெய்து கொண்டான்.  
     சவுல் ஈட்டியின் மேல் விழுந்தபோது, அவனது உயிர் அவனைவிட்டு பிரியவில்லை, உயிர் பிரியாததால் மிகவும் வேதனைப்பட்டான் சவுல்.  யாராவது வந்து என்னை கொன்றுபோடமாட்டார்களா என்று ஏங்கினான்.  அந்தவழியாய் அமலேக்கியன் ஒருவன் வந்தான்.  அப்பொழுது அமலேக்கியனை அழைத்து, நான் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றேன், என்னை குத்தி கொன்றுபோடு என்று மிகவும் வருந்தி கேட்டுக்கொண்டான்.  சவுலின் வார்த்தைக்கு இனங்க அமலேக்கியன் சவுலின் மேல் விழுந்துஅவனை கொலை செய்தான்.  அந்த அமலுக்கியன் சவுலின் தலையிலிருந்த கிரீடத்தையும், புயத்தில் இருந்த கடகத்தையும் கழற்றி, அதை தாவீதிடம் கொடுக்கும்படியாகவும், சவுல் மரித்த செய்தியை தாவீதுக்கு அறிவிக்கும்படியாகவும் தாவீதிடம புறப்பட்டான்.
    (சவுல் தன்னை அமலேக்கியன் கொலைசெய்யும்போது தான் செய்த தவறை நினைவுகூர்ந்திருப்பான்.  யுத்தம் பெலிஸ்தியர்களுக்கும், இஸ்ரவேலருக்குமே நடைபெற்றது.  காரணம் இல்லாமல் ஒரு அமலேக்கியன் அங்கு வருகின்றான்.  கடவுள் சவுலிடம் அமலேக்கியர் முழுவதையும் அழிக்கும்படி கட்டளையிட்டார்.  (1 சாமுவேல் 15:3)  சவுல் அமலேக்கின் ராஜாவையும், சில மனுஷரையும், கால்நடைகளையும் உயிரோடே வைத்து கடவுளின் கட்டளையை மீறினார்.  சவுல்  செய்த தவறினால் மீந்திருந்த அந்த அமலேக்கியனாலேயே சவுல் கொலைசெய்யப்பட்டார்)
    அமலேக்கியன் தான் சவுலை கொலைசெய்த செய்தியை கேட்ட தாவீது, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு மிகவும் புலம்பி அழுதான்.  சவுல் தன்னை கொலைசெய்ய தேடிய ஒருவனாக இருந்தாலும், தனக்கு எதிராக எத்தனையோ சதித்திட்டங்களை செய்திருந்தாலும் சவுலின் மரணம் தாவீதுக்கு மகிழ்ச்சியாக இருக்கவி்ல்லை.  சவுல் மரித்த செய்தியை கேட்ட தாவீது மிகவும் புலம்பி அழுதார்.

    நம்முடன் படிக்கின்ற நண்பன் ஒருவன் கீழே விழுந்தால் நாம் எப்படியாக சிறிக்கின்றோம்.  ஒருவனுக்கு தீமை நடந்துவிட்டால், இவன் செயலுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று நினைக்கின்றோம்.  அவன் அநியாயம், அக்கிரமம் செய்தபடியினாலேயே இந்த கஷ்டத்தை அனுபவிக்கின்றான் என்று மனதிற்குள் நினைக்கின்றோம்.
    ஆனால் தாவீது அப்படிப்பட்டவன் அலல, தனக்கு எதிராக செயல்பட்ட சவுல் மரித்தபோது மிகவும் கவலைப்பட்டு கலங்கினான்.  புலம்பி அழுதான்.  நாமும் மற்றவர்களுக்கு நடைபெறுகின்ற துன்பங்களைக் கண்டு மகிழாமல், அவர்களுடைய துக்கத்தில் நாமும் பங்கடைய வேண்டும்.  இதுவே செம்மையான காரியம்.  இதையே கடவுளும் விரும்புகின்றான்.
    உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், நிந்திக்கிறவர்களுக்காகவும், துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபியுங்கள் என்றே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கற்றக்கொடுக்கின்றார். (மத்தேயு 5:44)
    ஒரு குற்றமும் செய்யாத இயேசு கிறிஸ்துவே பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், மூப்பரும் சிலுவை மரத்தில் தூக்கி கொலை செய்தார்கள்.  நாம் குற்றம் செய்யாமல் இருக்கும்போது தண்டனை அனுபவிப்போமானால், அதற்கு காரணமான அனைவரையும் சபிப்போம், ஆனால், இயேசு கிறிஸ்து தனக்கு விரோதமாய் செயல்பட்டு, தன்னை கொலைசெய்த அத்துனை நபர்களையும் மனதார மன்னித்தார். (லூக்கா 34:34)
    நாமும் தாவீதைப்போல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்போல நமக்கு துரோகம் செய்தவர்களையும், நம்மை பகைத்தவர்களையும் மனதார மன்னிக்க வேண்டும்.  அதுவே நாம் செம்மையானவைகளில் உறுதியாய் இருக்கிறோம் என்று வெளிப்படுத்தும்.

3. தாவீது அரசனாக நியமனம்:
    கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷர் சவுலை அடக்கம்பண்ணினார்கள்.  அதைக் கேள்விப்பட்ட தாவீது, கர்த்தரின் பெயரால் அவர்களை ஆசீர்வதித்தான்.  
    சவுல் மரித்த செய்தியை கேள்விப்பட்ட யூதாவின் மனுஷர் தாவீதை எப்ரோனிலே வைத்து யூதாவின் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். (2 சாமுவேல் 3:4)  தாவீது ஏழு வருஷமும் ஆறு மாதமும் யூதா கோத்திரத்திற்கு மாத்திரமே ராஜாவாக இருந்தான்.  தாவீது ராஜாவாகிறபோது முப்பது வயதுடையவனாய் இருந்தான்.
    மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் இஸ்போசேத் எஎன்ற இடத்தில் சவுலின் மகனாகிய இஸ்போசேத்தை ராஜாவாக்கினார்கள்.  இஸ்போசேத் கொலைசெய்யப்பட்ட போது, அப்னேரும், இஸ்ரவேலின் மூப்பர் அனைவரும் தாவீதிடம் வந்து, சவுல் ராஜாவாய் இருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டு போனவரும், நடத்திக்கொண்டு வந்தவரும் நீரே; என் ஜனமாகிய இஸ்வேலை ஆட்சிசெய்யும் பொருப்பை கர்த்தர் உம்மிடத்திலேயே கொடுத்திருகு்கிறார் என்று சொல்லி, தங்கள் மேல் ராஜாவாய் இருக்கும்படி இஸ்ரவேலின் மூப்பர் அனைவரும் எப்ரோனிலே தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள்.  (2 சாமுவெல் 5:3)  தாவீது யூதாவின்மேல் ஏழு வருஷமும் ஆறு மாதமும், சமஸ்த இஸ்ரவேலின்மேல் முப்பத்து மூன்று வருஷமும் ராஜ்யபாரம்பண்ணினான்.  (2 சாமுவேல் 5:5)
    தாவீது யூதா மனுஷரும், இஸ்ரவேலின் முப்பரும் ராஜாவாக அபிஷேகம்செய்யவில்லை.  சவுல் உயிரோடிருக்கும்போதே, சிறுவனாகிய தாவீது சாமுவேல் தீர்க்கதரிசியினால் அபிசேஷம் பண்ணப்பட்டார்.  சவுலை தோற்கடித்து தான் ராஜாவாகும் திறமை தாவீதுக்கு இருந்தபோதும், தாவீது மிகவும் பொறுமையுள்ளவராக, தான் ராஜாவாக ஜனங்களால் ஏற்படுத்தப்படும்வரை பொறுமையோடு காத்திருந்தார்.  
    சாமுவேல் தீர்க்கதரிசியால் தாவீது அபிஷேகம்பண்ணப்பட்ட உடனேயே கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கினார்.  (1 சாமுவேல் 16:13)  கர்த்தருடைய ஆவி தாவீதுக்குள் இறங்கின உடனேயே, சவுலுக்குள் இருந்த கர்த்தருடைய ஆவியானவர் சவுலை விட்டு நீங்கினார்.  கடவளால் வரவிடப்பட்ட பொல்லாத ஆவியே சவுலுக்குள் இருந்தது.  (1 சாமுவேல் 16:14).
    கர்த்தருடைய அபிஷேகத்தைப்பெற்றவன் தாவீது, பொல்லாத ஆவி பிடித்தவன் சவுல்.  தாவீது நினைத்திருந்தால் பொல்லாத ஆவிபிடித்த சவுலை நிங்காசனத்தை விட்டு இரக்கிவிட்டு தாவீது ராஜாவாக மாறியிருக்கலாம்.
    தான் ராஜா என்பதற்கான எல்லா தகுதிகளும் இருந்தாலும், கடவுளால் கொடுத்த அபிஷேகம் இருந்தாலும் தாவீது செம்மையானவைகளை செய்வதில் உறுதியாய் இருந்தார்.  ஏற்ற நேரத்தில் கடவுள் உயர்த்துவார்.  நான் குறுக்கு வழியை பயன்படுத்த மாட்டேன், செம்மையான வழியிலேயே நடப்பேன் என்பதில் மிகவும் உறுதியாய் இருந்தார்.
    நாமும் கூட தாவீதைப்போல எல்லா சூழ்நிலைகளிலும், கஷ்டத்தின் மத்தியிலும், பாடுகளின் மத்தியிலும், துன்பங்களின் மத்தியிலும், நமக்கு செம்மையாய் தோன்றுகின்ற காரியங்களில் ஈடுபடாமல் கர்த்தருக்கு செம்மையாய் தோன்றுகின்ற காரியங்களில் ஈடுபடவேண்டும் என்று கர்த்தர் விரும்புகின்றார்.

மனன வசனம்:
    கேடகம் போன்ற வரைபடத்தை சிறியதாக வரைந்து அதில் மனன வசனத்தை ஒவ்வொரு கேடகத்திலும் ஒரு வார்த்தை என்ற வீதத்தில் எழுதவும். D A V I D என்ற எழுத்துக்களில் துவங்குகின்ற நபர்களை முன்தாக அழைத்து அவர்கள் கையில் வசனம் எடுதப்பட்ட கேடகம் போன்ற வரைபடத்தை கொடுத்து மனன வசனத்தை கற்றுக்கொடுக்கலாம்.




நாடகம்:
    ஒரு தகப்பனுக்கு இரண்டு குமாரர்கள். மூத்த மகன் சிறந்த கல்வி ஞானம் படைத்தர். ஓவியங்களை சிறப்பாக வரைகிறவர். இதற்கு எதிர்மறையாக இளைய மகன் இருந்தார். தன் அண்ணனை கோபப்படுத்துவதே தம்பியின் வேலையாய் இருந்தது. தன் அண்ணன் படிக்கும் புத்தகங்களை விற்றுவிடுவார் அல்லது குப்பையில் தூக்கி போட்டுவிடுவார். அண்ணன் அழகாக ஓவியம் வரைந்து வைத்திருந்தால் அதை கிழித்துப்போட்டுவிடுவார். ஒரு நாள் தகப்பனின் அனுமதியின்றி அண்ணனின் இருசக்கர வாகனத்தை எடுத்து நண்பர்களோடு சுற்றுவதற்காக புறப்பட்டார். அண்ணன் உனக்கு இருசக்கர வாகனம் ஓட்டத்தெரியாது என்று சொன்னபோதும் தம்பி கேட்கவில்லை. வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது ஒரு குழியில் விழுந்துவிட்டார். தன்னைக் காப்பாற்ற யாரும் இல்லை என்று கலங்கினபோது தூரத்தில் தன் அண்ணன் வருபத்தை பார்த்த தம்பி, என் அண்ணனுக்கு நான் எவ்வளவோ துரோகம் செய்திருக்கிறேன். அவன் என்னை மன்னிக்க மாட்டான், காப்பாற்ற மாட்டான் என்று நினைத்தான். ஆனால் அண்ணனோ தன் தம்பி குழியில் விழுந்திருப்பதை பார்த்த உடன் அவனை தூக்கிவிடுகின்றான்.

    நாமும் தீமை செய்தவர்களுக்கும் செம்மையானவைகளை, நீதியானவைகளை செய்ய வேண்டும் என்று பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.


Activities:
    எல்லோருடைய கைகளிலும் ஒரு காகிதத்தை கொடுத்து, அவர்கள் அநேக நாட்களாக விரோதித்திருந்த (எதிரி) நபர்களின் பெயர்களை எழுத சொல்லவும். பின்பு அந்த காகிதத் கிழித்துப்போட சொல்லவும். அதைப்போலவே அவர்களிடம் உள்ள பகையையும் பறந்து அவர்களோடு நல்லுவறை ஏற்படுத்த கற்றுக்கொடுக்கவும்.


விளையாட்டு:
    1. பலூன் சிலவற்றை எடுத்துக்கொள்ளவும்.  சில வாலிபரை முன்பதாக அழைத்து பலுனை ஊத சொல்லவும்.  அவர்கள் கையில் ஊக்கு ஒன்றை கொடுக்கவும்.  யார் கடைசி வரை பலூனை உடைக்காம் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் என்று சொல்லவும்.  அவர்கள் போட்டிபோட்டுகொண்டு மற்றவர் பலுனை உடைப்பார்கள்.
    கடைசியில் ஒருவர் வெற்றி பெறுவார்.  அப்பொழுது நாம் சொல்ல வேண்டும்.  எல்லோரும் பலுகை உடைக்காமல் வைத்திருந்தால், எல்லோரும் வெற்றியளர்கள் தானே.  நீங்கள் செம்மையானவைகளை செய்ய வேண்டும்.  மற்றவர் பலூன் உடைய வேண்டும் என் பலூன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுயநல எண்ணம் கொள்ளுகிறீர்கள்.
    செம்மையானவை என்றால், எல்லோருடைய பலுனும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    2. இரண்டு நபர்கள் தங்கள் கைகளை ஒன்றா இணைத்து, ஒருவர் கட்டை விரலை மற்றவர் மடக்கி பிடிக்க வேண்டும். இந்த விளையாட்டை சிறிது நேரம் விளையாடச் சொல்லி பிள்ளைகளை உற்சாகப்படுத்தலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.