01. நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற
கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று நெகேமியாவை அழைத்தது
யார்?
A) சன்பல்லாத்து, கேஷேம்
B) சன்பல்லாத்து, தொபியா
C) தொபியா, கேஷேம்
Answer: A) சன்பல்லாத்து, கேஷேம்
(நெகேமியா
6:2)
02. சன்பல்லாத்தும், கேஷேமும் எதற்காக
நெகேமியாவை அழைத்தார்கள்?
A) உதவி செய்ய
B) பொல்லாப்பு செய்ய
C) யுத்தம் செய்ய
Answer: B) பொல்லாப்பு செய்ய
(நெகேமியா
6:2)
03. முத்திரை போடாத கடிதத்தை நெகேமியாவிடம்
கொண்டு வந்தது யார்?
A) கேஷேமின் வேலைக்காரன்
B) சன்பல்லாத்தின் வேலைக்காரன்
C) தொபியாவின் வேலைக்காரன்
Answer: B) சன்பல்லாத்தின் வேலைக்காரன்
(நெகேமியா
6:5)
04. சல்பல்லாத்து நாம் ஒருவரையொருவர்
கண்டு போசுவோம் என்று சொல்லி நெகேமியாவை எத்தனை முறை அழைத்தான்?
A) மூன்று
B) ஐந்து
C) பத்து
Answer: B) ஐந்து
(நெகேமியா
6:5)
05. நெகேமியா யூதாவின் மேல் ராஜாவாகப்
போகிறான் என்று யார் எழுதிய கடிதத்தில் இருந்தது யார்?
A) தொபியா
B) யூதாவிலுள்ள பெரிய மனுஷர்
C) சன்பல்லாத்து
Answer: C) சன்பல்லாத்து
(நெகேமியா
6:5,6)
06. நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில்
ஒன்றும் நடக்கவில்லை. அவைகள் உம்முடைய மனோராஜ்யமே
ஒழிய வேறல்ல என்றது யார்?
A) நெகேமியா
B) யூதாவின் பெரிய மனுஷர்
C) சன்பல்லாத்து
Answer: A) நெகேமியா
(நெகேமியா
6:8)
07. நெகேமியாவிற்கு விரோதமாக தீர்க்கதரிசனம்
சொன்னது யார்?
A) செமாயா
B) பெரகியா
C) மல்கியா
Answer: A) செமாயா
(நெகேமியா
6:10,12)
08. நெகேமியாவிற்கு விரோதமாக தீர்க்கதரிசனம்
சொல்லுமாறு செமாயாவுக்கு கூலி கொடுத்தது யார்?
A) சன்பல்லாத்து, தொபியா
B) யூதரின் பெயரி மனுஷர், பெரகியா
C) செக்கனியா, மெசுல்லாம்
Answer: A) சன்பல்லாத்து, தொபியா
(நெகேமியா
6:12)
09. நெகேமியாவிடம் வந்து உம்மை கொன்றுபோட
வருகிறார்கள். நாம் உயிர்பிழைக்க தேவாலயத்திலே
போய் பதுங்குவோம் என்றது யார்?
A) செமாயா
B) மெசுல்லாம்
C) யோகனான்
Answer: A) செமாயா
(நெகேமியா
6:10,11)
10. நொவதியாள் ஒரு
---------------- .
A) இளவரசி
B) பெண் தீர்க்கதரிசி
C) அடிமை பெண்
Answer: B) பெண் தீர்க்கதரிசி
(நெகேமியா
6:14)
11. அலங்கத்தை கட்டிமுடிக்க எத்தனை
நாட்கள் ஆனது?
A) இருபத்து ஐந்து நாட்கள்
B) ஐம்பத்து இரண்டு நாட்கள்
C) என்பத்து இரண்டு நாட்கள்
Answer: B) ஐம்பத்து இரண்டு நாட்கள்
(நெகேமியா
6:15)
12. அலங்கம் கட்டிமுடிக்கப்பட்ட மாதம்,
தேதி என்ன?
A) எலூல் மாதம், இருபதாம் தேதி
B) கிஸ்லேயு மாதம், இருபதாம் தேதி
C) எலூல் மாதம், பன்னிரண்டாம் தேதி
Answer: A) எலூல் மாதம், இருபதாம் தேதி
(நெகேமியா
6:15)
13. யூதாவிலுள்ள பெரிய மனுஷருக்கு கடிதங்களை
அனுப்பியது யார்?
A) கெஷேம்
B) சன்பல்லாத்து
C) தொபியா
Answer: C) தொபியா
(நெகேமியா
6:17)
14. ஆராகின் குமாரனாகிய செகனியாவின்
மருமகன் யார்?
A) தொபியா
B) சன்பல்லத்து
C) யோகனான்
Answer: A) தொபியா
(நெகேமியா
6:18)
15. தொபியாவின் குமாரன் பெயர் என்ன?
A) செமாயா
B) சன்பல்லாத்து
C) யோகனான்
Answer: C) யோகனான்
(நெகேமியா
6:18)
16. யோகனான் யாருடைய குமாரத்தியை விவாகம்
பண்ணினான்?
A) செமாயா
B) மெசுல்லாம்
C) கேஷேம்
Answer: B) மெசுல்லாம்
(நெகேமியா
6:18)
17. நெகேமியாவுக்கு பயமுண்டாக கடிதங்களை
அனுப்பியது யார்?
A) கேஷேம்
B) சன்பல்லாத்து
C)தொபியா
Answer: C)தொபியா
(நெகேமியா
6:19)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.