Type Here to Get Search Results !

நெகேமியா பதினொன்றாம் 11 அதிகாரம் கேள்வி பதில்கள் தமிழில் | Nehemiah Chapter 11 Bible Quiz Question With Answer in Tamil | Jesus Sam

================
நெகேமியா அதிகாரம் ஏழு (11)
பைபிள் கேள்வி பதில்கள்
Book of NEHEMIAH Bible Quiz
Nehemiah Bible Quiz Question & Answer Chapter Leven (11)
==================

01. எருசலேமிலே குடியிருந்தது யார்?
Answer: ஜனத்தின் அதிகாரிகள்
    (நெகேமியா 11:1)

02. ஜனங்களில் எத்தனை பேரில் ஒருவரை எருசலேமில் குடியிருக்கப் பண்ணினார்கள்?
Answer: பத்து பேரில் ஒருவர்
    (நெகேமியா 11:1)

03. பத்துப்பேரில் ஒருவர் எருசலேமில் குடியிருக்கப்பண்ண என்ன செய்தார்கள்?
Answer: சீட்டுப்போட்டார்கள்
    (நெகேமியா 11:1)

04. எங்கே குடியிருக்க மனப்பூர்வமாய் சம்மதித்த மனுஷர்களை ஜனங்கள் வாழ்த்தினார்கள்?
Answer: எருசலேமில்
    (நெகேமியா 11:2)

05. இஸ்ரவேலரும், ஆசாரியரும், லேவியரும், நிதனீமியரும், சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரும் எங்கு குடியிருந்தார்கள்?
Answer: யூதா பட்டணத்தில் குடியிருந்தார்கள்
    (நெகேமியா 11:3)

06. யூதா புத்திரரில் சிலரும், பென்யமீன் புத்திரரில் சிலரும் எங்கு குடியிருந்தார்கள்?
Answer: எருசலேமில் குடியிருந்தார்கள்
    (நெகேமியா 11:4)

07. எருசலேமில் குடியிருந்த பேரேன் பராக்கிரமசாலிகள் மொத்தம் எத்தனை பேர்?
Answer: நானூற்று அறுபத்தெட்டு பேர் (468 பேர்)
    (நெகேமியா 11:6)

08. எருசலேமில் குடியிருந்த பென்யமீனின் குமாரர் மொத்தம் எத்தனை பேர்?
Answer: தொளாயிரத்து இருபத்தெட்டு பேர் (928 பேர்)
    (நெகேமியா 11:8)

09. சிக்ரியின் குமாரன் பெயர் என்ன?
Answer: யோவேல்
    (நெகேமியா 11:9)

10. செனுவாவின் குமாரன் பெயர் என்ன?
Answer: யூதா
    (நெகேமியா 11:9)

11. யோயாரிபின் குமாரன் பெயர் என்ன?
Answer: யெதாயா
    (நெகேமியா 11:10)

12. ஆலயத்தில் பணிவிடை செய்கிற அகிதூபின் சகோதரர் எத்தனை பேர்?
Answer: எண்ணூற்று இருபத்திரண்டு பேர் (822 பேர்)
    (நெகேமியா 11:12)

13. மல்கியாவின் சகோதரர் எத்தனை பேர்?
Answer: இருநூற்று நாற்பத்திரண் பேர் (242 பேர்)
    (நெகேமியா 11:12,13)

14. இம்மேரின் பராக்கிரமசாலிகள் மொத்தம் எத்தனை பேர்?
Answer: நூற்று இருபத்தெட்டு பேர் (128 பேர்)
    (நெகேமியா 11:14)

15. இம்மேரின் பராக்கிரமசாலிகளின் விசாரிப்புக்காரனாயிருந்தது யார்?
Answer: சப்தியேல்
    (நெகேமியா 11:14)

16. தேவனுடைய ஆலயத்தின் வெளி வேலையை விசாரிக்கிற லேவியரின் தலைவர்கள் யார்?
Answer: சபெதாயு, யோசபாத்
    (நெகேமியா 11:16)

17. ஜெபத்தில் ஸ்தோத்திரப் பாட்டை துவங்குகிறவன் யார்?
Answer: ஆசாப்
    (நெகேமியா 11:17)

18. பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர்கள் மொத்தம் எத்தனை பேர்?
Answer: இருநூற்று எண்பத்து நாலு பேர்
    (நெகேமியா 11:18)

19. எருசலேமில் குடியிருந்த வாசல் காவலர்கள் மொத்தம் எத்தனை பேர்?
Answer: நூற்று எழுபத்திரண்டு பேர் (172 பேர்)
    (நெகேமியா 11:19)

20. நிதனீமியர்கள் எங்கு குடியிருந்தார்கள்?
Answer: ஓபேல்
    (நெகேமியா 11:21)

21. நிதனீமியருடையர்கள் மேல் தலைவனாயிருந்தது யார்?
Answer: சீகா, கிஸ்பா
    (நெகேமியா 11:21)

22. எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் பெயர் என்ன?
Answer: ஊசி
    (நெகேமியா 11:22)

23. ஊசி யாருடைய சந்ததியான்?
Answer: ஆசாபின் சந்ததியான்
    (நெகேமியா 11:22)

24. ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நிற்பது யார்?
Answer: பெத்தகியா
    (நெகேமியா 11:24)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.