Type Here to Get Search Results !

luke 24 | லூக்கா சுவிசேஷம் பைபிள் வினா போட்டிகள் | the gospel bibel quiz games tamil | jesus sam

==========================
லூக்கா நற்செய்தி நூல் வினா விடைகள்
லூக்கா இருபத்து நான்காம் அதிகாரம்
The Gospel Of Luke Bible Question And Answer Tamil
Luke Chapter - 24 Bible Quiz
==========================
01. ஸ்திரீகள் கந்தவர்கங்களையும் எடுத்துக்கொண்டு கல்லறைக்கு வந்த நாள் எந்த நாள்?
A) ஓய்வு நாள்
B) வாரத்தின் முதல் நாள்
C) ஆயத்த நாள்
Answer: B) வாரத்தின் முதல் நாள்
    (லூக்கா 24:1)

02. பிரகாசமுள்ள வஸ்திரம் தரித்த எத்தனை பேர் கல்லரையினுள் நின்றார்கள்?
A) ஒன்று பேர்
B) இரண்டு பேர்
C) மூன்று பேர்
Answer: B) இரண்டு பேர்
    (லூக்கா 24:4)

03. இயேசு உயிர்த்தெழுந்தை அப்போஸ்தலர்களுக்கு சொன்னது யார்?
A) ஸ்திரீகள்
B) போர்ச்சேவகர்கள்
C) தேவ தூதர்கள்
Answer: A) ஸ்திரீகள்
    (லூக்கா 24:10)

04. கல்லரையினிடத்திற்கு ஓடி சீலைகள் தனிப்பட வைத்திருக்கக் கண்டு ஆச்சரியப்பட்ட சீஷன் யார்?
A) பேதுரு
B) யோவான்
C) யாக்கோபு
Answer: A) பேதுரு
    (லூக்கா 24:12)

05. எருசலேமிலிருந்து எம்மாவு கிராமத்துக்கு போனவர்கள் எத்தனை பேர்?
A) இரண்டு பேர்
B) மூன்று பேர்
C) நான்கு பேர்
Answer: A) இரண்டு பேர்
    (லூக்கா 24:13)

06. எருசலேமிலிருந்து எம்மாவு என்ற கிராமம் எத்தனை மைல் தூரம்?
A) ஆறு அல்லது ஏழு மையில் தூரம்
B) ஏழு அல்லது எட்டு மையில் தூரம்
C) எட்டு அல்லது ஒன்பது
Answer: B) ஏழு அல்லது எட்டு மையில் தூரம்
    (லூக்கா 24:13)

07. எம்மாவு கிராமத்துக்கு சென்ற இருவரில் ஒருவன் பெயர் என்ன?
A) சீமோன்
B) கிலெயோப்பா
C) யோசேப்பு
Answer: B) கிலெயோப்பா
    (லூக்கா 24:18)

08. இயேசுவை: தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கும் முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசி என்று சொன்னது யார்?
A) பிலாத்து
B) கிலெயோப்பா
C) யோசேப்பு
Answer: B) கிலெயோப்பா
    (லூக்கா 24:19)

09. தீர்க்கதரிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்கு புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே என்றது யார்?
A) பேதுரு
B) யோவான்ஸ்நானன்
C) இயேசு கிறிஸ்து
Answer: C) இயேசு கிறிஸ்து
    (லூக்கா 24:25)

10. எம்மாவு கிராமத்துக்கு போன இருவர் இயேசு யாருக்கு தரிசனமானதை கேள்விப்பட்டார்கள்?
A) சீமோன்
B) அப்போஸ்தலர்கள்
C) ஸ்திரீகள்
Answer: A) சீமோன்
    (லூக்கா 24:34)



11. உயிர்த்த கிறிஸ்து சீஷர்களை பார்த்து சொன்ன முதல் வார்த்தை எது?
A) பயப்படாதிருங்கள்
B) ஆசீர்வாதமுண்டாவதாக
C) உங்களுக்கு சமாதானம்
Answer: C) உங்களுக்கு சமாதானம்
    (லூக்கா 24:36)

12. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கு சாப்பிட சீஷர்கள் என்ன கொடுத்தார்கள்?
A) பொரித்த மீன்கண்டம், புளிப்பில்லாத அப்பம்
B) பொரித்த மீன்கண்டம், தேன்கூட்டுத் துணிக்கை
C) தேன்கூட்டுத் துணிக்கை, இறைச்சி
Answer: B) பொரித்த மீன்கண்டம், தேன்கூட்டுத் துணிக்கை
    (லூக்கா 24:42)

13. இயேசு சீஷர்களிடம் உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரை எங்கு இருக்க சொன்னார்?
A) நாசரேத்
B) கலிலேயா
C) எருசலேம்
Answer: C) எருசலேம்
    (லூக்கா 24:49)

14. இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இடம்?
A) எருசலேம்
B) பெத்தானியா
C) கலிலேயா
Answer: 
    (லூக்கா 24:50,51)

15. இயேசு பரலோகம் சென்ற பின்பு சீஷர்கள் எங்கு சென்றனர்?
A) எருசலேம்
B) கலிலேயா
C) பெத்லகேம்
Answer: A) எருசலேம்
    (லூக்கா 24: 52)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.