Type Here to Get Search Results !

luke 23 bibel question with answer in tamil | இயேசுவின் சிலுவையை சுமந்து சென்றது யார்? | லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதில்கள் | jesus sam

===================
லூக்கா சுவிசேஷம் வினா விடைகள்
லூக்கா இருபத்து மூன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
The Gospel Of Luke Bible Question And Answer
Luke Chapter 23 Bible Quiz
===================
01. நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டது யார்?
A) ஏரோது
B) பிரதான ஆசாரியன்
C) பிலாத்து
Answer: C) பிலாத்து
    (லூக்கா 23:3)

02. இயேசு கலிலேயர் என்பதை அறிந்த பிலாத்து அவரை யாரிடம் அனுப்பினான்?
A) ஏரோது
B) இராயன்
C) பிலிப்பு
Answer: A) ஏரோது
    (லூக்கா 23:6,7)

03. இயேசுவை நிந்தித்து பரியாசம் பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தியது யார்?
A) ஏரோது
B) போர்ச்சேவகர்
C) நூற்றுக்கு அதிபதி 
Answer: A) ஏரோது
    (லூக்கா 23:11)

04. இயேசுவை சிலுவையில் அறைந்த நாளில் சிநேகிதரான இருவர் யார்?
A) பிலாத்து, ஏரோது
B) அண்ணா, காய்பா
C) யோவான், யாக்கோபு
Answer: A) பிலாத்து, ஏரோது
    (லூக்கா 23:12)

05. கலகத்தின் நிமித்தமும் கொலை பாதகத்தின் நிமித்தமும் காவலில் வைக்கப்பட்டது யார்?
A) யூதாஸ்
B) பரபாஸ்
C) மல்குஸ்
Answer: B) பரபாஸ்
    (லூக்கா 23:19)


06. இயேசுவின் சிலுவையை சுமந்து சென்றது யார்?
A) சீமோன் பேதுரு
B) அரிமத்தியா ஊரான் யோசேப்பு
C) சிரேனே ஊரான் சீமோன்
Answer: C) சிரேனே ஊரான் சீமோன்
    (லூக்கா 22:26)

07. இயேசுவை சிலுவையில் அறைந்த இடத்தின் பெயர் என்ன?
A) கெத்சமனே
B) கபாலஸ்தலம்
C) ஒலிவ மலை
Answer: B) கபாலஸ்தலம்
    (லூக்கா 23:33)

08. இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால் தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ளட்டும் என்றது யார்?
A) ஜனங்கள்
B) போர்ச்சேவகர்கள்
C) அதிகாரிகள்
Answer: A) ஜனங்கள்
    (லூக்கா 23:35)

09. நீ யூதரின் ராஜாவானால் உன்னை இரட்சித்துக்கொள் என்றது யார்?
A) ஜனங்கள்
B) போர்ச்சேவகர்
C) அதிகாரிகள்
Answer: B) போர்ச்சேவகர்
    (லூக்கா 23:36,37)

10. இவன் யூதருடைய ராஜா என்று எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது?
A) கிரேக்கம்
B) லத்தின்
C) எபிரேயு
Answer: A) கிரேக்கம், B) லத்தின், C) எபிரேயு
    (லூக்கா 23:38)

11. இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசியிலிருப்பாய் என்று இயேசு சொன்ன நேரம் எது?
A) ஏறக்குறைய மூன்றாம் மணி நேரம்
B) ஏறக்குறைய ஆறாம் மணி நேரம்
C) ஏறக்குறைய ஒன்பதாம் மணி நேரம்
Answer: B) ஏறக்குறைய ஆறாம் மணி நேரம்
    (லூக்கா 23:43,44)

12. எந்த மணி நேரம் வரை பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று?
A) ஏறக்குறைய மூன்றாம் மணி நேரம்
B) ஏறக்குறைய ஆறாம் மணி நேரம்
C) ஏறக்குறைய ஒன்பதாம் மணி நேரம்
Answer: C) ஏறக்குறைய ஒன்பதாம் மணி நேரம்
    (லூக்கா 23:44)

13. இயேசுவை பார்த்து மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரன் என்று சொல்லி தேவனை மகிமைப்படுத்தியது யார்?
A) ஸ்தானாபதி
B) நூற்றுக்கு அதிபதி
C) போர்ச்சேவகன்
Answer: B) நூற்றுக்கு அதிபதி
    (லூக்கா 23:47)

14. பிலாத்துவினிடத்தில் போய் இயேசுவின் சரீரத்தை கேட்டு வாங்கியது யார்?
A) சீமோன்
B) யாக்கோபு
C) யோசேப்பு
Answer: C) யோசேப்பு
    (லூக்கா 23:50,52)

15. ஸ்திரீகள் கந்தவர்கங்களையும், பரிமளதைலங்களையும் ஆயத்தம் பண்ணின நாள்?
A) ஓய்வு நாள்
B) வாரத்தின் முதல் நாள்
C) ஆயத்த நாள்
Answer: A) ஓய்வு நாள்
    (லூக்கா 23:56)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.