Type Here to Get Search Results !

16 MATTHEW | மத்தேயு நற்செய்தி நூல் அதிகாரம் பதினாரு (16) வேதாகம வினா விடைகள் | Jesus Sam

=================
மத்தேயு நற்செய்தி நூல் அதிகாரம் பதினாரு (16)
வேதாகம வினா விடைகள்
====================
THE GOSPEL OF MATTHEW CHAPTER - 16
BIBLE QUIZ IN TAMIL
========================


 01. பரிசேயர், சதுசேயர் இயேசுவை சோதிக்கும்படி எங்கிருந்து அடையாளம் காண்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள்?

A) பூமி

B) வானம்

C) ஆலயம்

Answer: B) வானம்

     (மத்தேயு 16: 1)

 

02. வானத்தின் தோற்றத்தை நிதானிப்பது யார்?

A) பரிசேயர், சதுசேயர்

B) வேதபாரகர், பரிசேயர்

C) ஆசாரியர், வேதபாரகர்

Answer: A) பரிசேயர், சதுசேயர்

     (மத்தேயு 16: 1-3)

 

03. இயேசு பரிசேயர், சதுசேயருக்கு கொடுத்த அடையாளம்?

A) யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்

B) எலியா தீர்க்கதரிசியின் அடையாளம்

C) எரேமியா தீர்க்கதரிசியின் அடையாளம்

Answer: A) யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்

     (மத்தேயு 16: 4)

 

04. அப்பங்களைக் கொண்டுவர மறந்தது போனது யார்?

A) பரிசேயர்

B) இயேசுவின் சீஷர்கள்

C) ஜனங்கள்

Answer: B) இயேசுவின் சீஷர்கள்

     (மத்தேயு 16: 5)

 

05. யாருடைய புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்?

A) பரிசேயர், சதுசேயர்

B) வேதபாரகர், பரிசேயர்

C) ஆசாரியர், வேதபாரகர்

Answer: A) பரிசேயர், சதுசேயர்

     (மத்தேயு 16: 6)

 


06. ஐந்து அப்பத்தை எத்தனை பேருக்கு பகிர்ந்தார்கள்?

A) நாலாயிரம் பேர்

B) ஐயாயிரம் பேர்

C) ஏழாயிரம் பேர்

Answer: B) ஐயாயிரம் பேர்

     (மத்தேயு 16: 9)

 

07. ஏழு அப்பத்தை எத்தனை பேருக்கு பகிர்ந்தார்கள்?

A) நாலாயிரம் பேர்

B) ஐயாயிரம் பேர்

C) ஏழாயிரம் பேர்

Answer: A) நாலாயிரம் பேர்

     (மத்தேயு 16: 10)

 

08. ஜனங்கள் யோவான்ஸ்நானகன், எலியா, எரேமியா, தீர்க்கதரிசி என்று யாரை சொன்னார்கள்?

A) பரிசேயர்

B) சீஷர்கள்

C) மனுஷ குமாரன்

Answer: C) மனுஷ குமாரன்

     (மத்தேயு 16: 14)

 

09. ”நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றது யார்?

A) யோவான்

B) யாக்கோபு

C) சீமோன் பேதுரு

Answer: C) சீமோன் பேதுரு

     (மத்தேயு 16: 16)

 

10. சீமோனின் தகப்பன் பெயர் என்ன?

A) யோனா

B) யோசேப்பு

C) அல்பேயு

Answer: A) யோனா

     (மத்தேயு 16: 17)

 


11. பரலோக ராஜ்யத்தின் திறவுகோலை இயேசு யாருக்கு கொடுத்தார்?

A) பேதுரு

B) யோவான்

C) மத்தேயு

Answer: A) பேதுரு

     (மத்தேயு 16: 19)

 

12. தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு இயெசு யாருக்கு கட்டளையிட்டார்?

A) ஜனங்களுக்கு

B) இயேசுவின் சீஷர்களுக்கு

C) பரிசேயர், சதுசேயர்களுக்கு

Answer: B) இயேசுவின் சீஷர்களுக்கு

     (மத்தேயு 16: 20)

 

13. இயேசு கிறிஸ்து மூப்பராலும், பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, எத்தனையாவது நாள் எழுந்திருப்பதாக தம்முடைய சீஷர்களுக்கு சொன்னார்?

A) இரண்டாம் நாள்

B) மூன்றாம் நாள்

C) நான்காம் நாள்

Answer: B) மூன்றாம் நாள்

     (மத்தேயு 16: 21)

 

14. இயேசுவை கடிந்துகொண்ட சீஷன் பெயர் என்ன?

A) யூதாஸ்

B) பேதுரு

C) யோவான்

Answer: B) பேதுரு

     (மத்தேயு 16: 22)

 

15. இயேசுவால் சாத்தான் என்று சொல்லப்பட்ட சீஷன் பெயர் என்ன?

A) பேதுரு

B) யோவான்

C) யாக்கோபு

Answer: A) பேதுரு

     (மத்தேயு 16: 23)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.