Type Here to Get Search Results !

17 MATTHEW Bible Quiz in Tamil | மத்தேயு அதிகாரம் 17 பைபிள் கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam

===================================
மத்தேயு அதிகாரம் பதினேழு (17)
கேள்வி பதில்கள் தமிழில்
====================
MATTHEW Chapter - 17
Bible Qui Question With Answer Tamil

===================================


01. ஆறு நாளைக்குப் பின்பு இயேசு யாரைக் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலைக்குப் போனார்?

A) பேதுரு

B) பேதுரு, யோவான்

C) பேதுரு, யோவான், யாக்கோபு

Answer: C) பேதுரு, யோவான், யாக்கோபு

      (மத்தேயு 17: 1)

 

02. யாருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது?

A) தேவன்

B) இயேசு கிறிஸ்து

C) பரிசுத்த ஆவி

Answer: B) இயேசு கிறிஸ்து

      (மத்தேயு 17: 2)

 

03. யாருடைய வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று?

A) தேவன்

B) இயேசு கிறிஸ்து

C) பரிசுத்த ஆவி

Answer: B) இயேசு கிறிஸ்து

      (மத்தேயு 17: 2)

 

04. மலையில் இயேசு மறுரூபமானபோது யாரோடு பேசினார்?

A) எலியா, எலிசா

B) மோசே, எலியா

C) ஏசாயா, எரேமியா

Answer: B) மோசே, எலியா

      (மத்தேயு 17: 3)

 

05. ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது.  உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றது யார்?

A) பேதுரு

B) யாக்கோபு

C) யோவான்

Answer: A) பேதுரு

      (மத்தேயு 17: 4)

 


06. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்ற சத்தம் எங்கிருந்து உண்டானது?

A) வானத்திலிருந்து

B) மோகத்திலிருந்து

C) மலையிலிருந்து

Answer: B) மோகத்திலிருந்து

      (மத்தேயு 17: 5)

 

07. எலியா முந்தி வரவேண்டும் என்று சொல்லுகிறது யார்?

A) பரிசேயர்

B) ஆசாரியர்

C) வேதபாரகர்

Answer: C) வேதபாரகர்

      (மத்தேயு 17: 10)

 

08. சீஷர்கள் அற்புதம் செய்ய முடியாமல் இருக்க காரணம் என்ன?

A) பயம்

B) பெறுமை

C) அவிசுவாசம்

Answer: C) அவிசுவாசம்

      (மத்தேயு 17: 20)

 

09. மனுஷகுமாரன் எத்தனையாவது நாளில் உயிர்த்தெழுவார்?

A) இரண்டாம் நாள்

B) மூன்றாம் நாள்

C) நான்காம் நாள்

Answer: B) மூன்றாம் நாள்

      (மத்தேயு 17: 23)

 

10. வரிப்பணம் வாங்குகிறவர்கள்: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று யாரிடம் கேட்டார்கள்?

A) பேதுரு

B) யாக்கோபு

C) அந்திரேயா

Answer: A) பேதுரு

      (மத்தேயு 17: 24)

 


11. இயேசு வரி செலுத்திய இடம் எது?

A) கலிலேயா

B) எருசலேம்

C) கப்பர்நகூம்

Answer: C) கப்பர்நகூம்

      (மத்தேயு 17: 24)

 

12. பூமியிலே ராஜாக்கள் தீர்வையையும், வரியையும் யாரிடத்தில் வாங்குகிறார்கள்?

A) மூப்பர்களிடத்தில்

B) அந்நியரியரிடத்தில்

C) தம்முடைய பிள்ளைகளிடத்தில்

Answer: B) அந்நியரியரிடத்தில்

      (மத்தேயு 17: 26)

 

13. கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்தது யார்?

A) பேதுரு

B) யாக்கோபு

C) யோவான்

Answer: A) பேதுரு

      (மத்தேயு 17: 27)

 

14. தூண்டில் போட்டு பிடித்த மீனின் வாயில் இருந்தது என்ன?

A) ஒரு வைரக்கல்

B) ஒரு தங்க நாணயம்

C) ஒரு வெள்ளிப்பணம்

Answer: C) ஒரு வெள்ளிப்பணம்

      (மத்தேயு 17: 27)

 

15. மீனின் வயிற்றில் இருந்த வெள்ளிப்பணத்தில் யாருக்காக வரி கொடுத்தார்கள்?

A) இயேசு கிறிஸ்து, பேதுரு

B) பேதுரு, யோவான்

C) யாக்கோபு, அந்திரேயா

Answer: A) இயேசு கிறிஸ்து, பேதுரு

      (மத்தேயு 17: 27)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.