Type Here to Get Search Results !

18 MATTHEW | மத்தேயு சுவிசேஷம் கேள்வி பதில்கள் பதினெட்டாம் அதிகாரம் | Bible Quiz Question Answer Tamil | Jesus Sam

=============================
மத்தேயு சுவிசேஷம் கேள்வி பதில்கள்
பதினெட்டாம் அதிகாரம் (18)
The Gospel Of MATTHEW Bible Quiz (18)
==============================

01. இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டது யார்?

A) இயேசுவின் சீஷர்கள்

B) நியாயசாஸ்திரி

C) பரிசேயர், சதுசேயர்

Answer: A) இயேசுவின் சீஷர்கள்

     (மத்தேயு 18: 1)

 

02. பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாய் இருப்பான்?

A) வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவன்

B) தன்னைத் தாழ்த்துகிறவன்

C) இரட்சிக்கப்பைப் பெற்றுக்கொண்டவன்

Answer: B) தன்னைத் தாழ்த்துகிறவன்

     (மத்தேயு 18: 4)

 

03. இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது __________?

A) கூடாது

B) பாவம்

C) அவசியம்

Answer: C) அவசியம்

     (மத்தேயு 18: 7)

 

04. தறித்து எறிந்து போட வேண்டியது எது?

A) கண், காது

B) காது, மூக்கு

C) கை, கால்

Answer: C) கை, கால்

     (மத்தேயு 18: 8)

 

05. பிடுங்கி எறிந்து போட வேண்டியது?

A) கண்

B) காது

C) கை

Answer: A) கண்

     (மத்தேயு 18: 9)

 


06. யாரை அற்பமாய் எண்ணாதபடி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்?

A) மூப்பர்

B) ஊழியர்

C) சிறியோர்

Answer: C) சிறியோர்

     (மத்தேயு 18: 10)

 

07. கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தது யார்?

A) தேவன்

B) மனுஷகுமாரன்

C) ஆவியானவர்

Answer: B) மனுஷகுமாரன்

     (மத்தேயு 18: 11)

 

08. யார் கெட்டுப்போவது பிதாவின் சித்தமல்ல?

A) சிறியோர்

B) ஊழியர்

C) ஜனங்கள்

Answer: A) சிறியோர்

     (மத்தேயு 18: 14)

 

09. ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும் என்று கேட்டது?

A) பேதுரு

B) ஜனங்கள்

C) ஆசாரியர்

Answer: A) பேதுரு

     (மத்தேயு 18: 21)

 

10. சகோதரனை எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்?

A) ஏழு தரம்

B) எழுபது தரம்

C) ஏழெழுபது தரம்

Answer: C) ஏழெழுபது தரம்

     (மத்தேயு 18: 21, 22)

 


11. ராஜாவினிடத்தில் வேலைக்காரன் பட்ட கடன் தொகை எவ்வளவு?

A) நூறு வெள்ளி

B) ஐநூறு சேக்கல்

C) பதினாயிரம் தாலந்து

Answer: C) பதினாயிரம் தாலந்து

     (மத்தேயு 18: 24)

 

12. தாழ விழுந்து வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும் எல்லாவற்றையும் உமக்கு கொடுத்து தீர்க்கிறேன் என்றது யார்?

A) ராஜா

B) ஊழியக்காரன்

C) உடன் வேலைக்காரன்

Answer: B) ஊழியக்காரன்

     (மத்தேயு 18: 26,)

 

13. வேலைக்காரனிடத்தில் உடன் வேலைக்காரன் பட்ட கடன் தொகை?

A) நூறு வெள்ளி

B) ஆயிரம் சேக்கல்

C) பதினாயிரம் தாலந்து

Answer: A) நூறு வெள்ளி பணம்

     (மத்தேயு 18: 28)

 

14. வேலைக்காரன் உடன் வேலைக்காரனுக்கு கொடுத்த தண்டனை?

A) காவலில் போடுவித்தான்

B) தூக்கில் போட்டான்

C) உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான்

Answer: A) காவலில் போடுவித்தான்

     (மத்தேயு 18: 30)

 

15. ராஜா வேலைக்காரனுக்கு கொடுத்த தண்டனை?

A) காவலில் போடுவித்தான்

B) தூக்கில் போட்டான்

C) உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான்

Answer: C) உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான்

     (மத்தேயு 18: 34)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.