Type Here to Get Search Results !

Introduction | Junior Church VBS 2026 | சிகரம் | The Summit | Jesus Sam

C.S.I. Diocese of Madurai - Ramnad
JUNIOR CHURCH MINISTRY
JC VBS 2026

தலைப்பு: சிகரம்
Topic: The Summit
Moving with Vision (Philippians 3:14)
10 Days Heading & Memory Words in English (KJV)
Day-1: Highest Aspiration

I press toward the mark for the prize of the high calling of God in Christ Jesus.
Philippians 3:14

Day-2: Barriers to Effort
If it be possible, as much as lieth in you, live peaceably with all men.
Romans 12:18

Day-3: Hope in Adversity
The LORD is nigh unto them that are of a broken heart; And saveth such as be of a contrite spirit.
Psalm 34:18

Day-4: The Right Choice
He that walketh uprightly walketh surely: But he that perverteth his ways shall be known.
Proverbs 10:9

Day-5: Composure Amidst Obstacles
A soft answer turneth away wrath: But grievous words stir up anger.
Proverbs 15:1

Day-6: Progress in Patience
But they that wait upon the LORD shall renew their strength; they shall mount up with wings as eagles; they shall run, and not be weary; and they shall walk, and not faint.
Isaiah 40:31

Day-7: Readiness for Opportunities
The thoughts of the diligent tend only to plenteousness; But of every one that is hasty only to want.
Proverbs 21:5

Day-8: Leading to Serve
For even the Son of man came not to be ministered unto, but to minister, and to give his life a ransom for many.
Mark 10:45

Day-9: The Summit of Forgiveness
And be ye kind one to another, tenderhearted, forgiving one another, even as God for Christ's sake hath forgiven you.
Ephesians 4:32

Day-10: Service at its Peak
But as for you, ye thought evil against me; but God meant it unto good, to bring to pass, as it is this day, to save much people alive.
Genesis 50:20


பத்து நாள் தலைப்பு மற்றும் வசனம்
நாள்-1: உயர்ந்த இலக்கு
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். (பிலிப்பியர் 3:14)

நாள்-2: முயற்சிக்கு தடை
கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். (ரோமர் 12:18)

நாள்-3: தாழ்வுநிலையில் நம்பிக்கை
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். (சங்கீதம் 34:18)

நாள்-4: சரியான தேர்வு
உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான் கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். (நீதிமொழிகள் 10:9)

நாள்-5: தடைகளில் தன்னடக்கம்
மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். (நீதிமொழிகள் 15:1)

நாள்-6: காத்திருப்பில் வளர்ச்சி
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள். (ஏசாயா 40:31)

நாள்-7: வாய்ப்புகளுக்கான தயார்நிலை
ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும். (நீதிமொழிகள் 21:5)

நாள்-8 : சேவைக்கான தலைமை
...மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய 'ஜீவனை கொடுக்கவும் வந்தார் என்றார். (மாற்கு 10:45)

நாள்-9: மன்னிப்பு என்கிற உச்சம்
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (எபேசியர் 4:32)

நாள்-10: சிகரத்தின் சேவை
நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள் தேவனோ, இப்பொழுது நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். (ஆதியாகமம் 50:20)



ஆசிரியர் ஆயத்தக் கூடுகை
I. ஆரம்ப மன்றாட்டு:

II. பாடல்
கடந்த ஆண்டு விடுமுறை வேதாகமப் பள்ளியின் ஏதேனும் ஓர் பாடல்

III. திருமறைப் பகுதி

IV. அருளுரை
வரலாறு
விடுமுறை வேதாகமப் பள்ளியானது 1952 ஆம் ஆண்டு, மிஷனரி Mrs. Mary Hamiltion என்பவரால் கோயில்பட்டி என்ற இடத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. இந்த முதல் விடுமுறை வேதாகமப் பள்ளியில் 72 பிள்ளைகளும், 5 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்

மைய வசனம்
இணைச்சட்டம் 6:7 (திருவிவிலியம்)
நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போதும், எழும்பும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.

உபாகமம் 6:7
நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்து பேசி,
இவ்வாறாக தொடங்கப்பட்ட விடுமுறை வேதாகமப் பள்ளி இன்று சுமார் 13 மாநிலங்களில், 17 மொழிகளில் நடைபெற்று வருகிறது.

JC VBS 
தென்னிந்திய திருச்சபை மதுரை இராமநாதபுரம் திருமண்டிலத்தின் இளையோர் திருச்சபை (JC) திருப்பணி மூலமாக நடத்தப்படும் விடுமுறை வேதாகமப்பள்ளி கடந்த 2011-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 
JC VBS 2011 - பாக்கியமான வாழ்வு
JC VBS 2012 - துதியின் உடை
JC VBS 2013 - ஜீவனுள்ள கற்கள்
JC VBS 2014 - நிலைத்திருங்கள்
JC VBS 2015 - வாழ்வு தரும் நீரூற்று
JC VBS 2016 - எவ்வளவு அழகானவைகள்
JC VBS 2017 - மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே
JC VBS 2018 - எல்லாவற்றிலும் சுகமாயிரு
JC VBS 2019 - வழிபடுவோம் வாழ்ந்து காட்டுவோம்
JC VBS 2020 - Cure 91
JC VBS 2021 - அதிகமாய்
JC VBS 2022 - காண்பாய்
JC VBS 2023 - உறுதி
JC VBS 2024 - எண்ணுகிறேன்
JC VBS 2025 - ஒளிர்ந்திடு 
இவ்வாறாக கடந்த 15 ஆண்டுகாக JC VBS தொடர்ந்து சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்று வருகிறது. 

JC VBS கருப்பொருள் வசனம்
எபேசியர் 3:21
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

நோக்கம்
இந்த நவீன உலகில் இன்று விடுமுறை வேதாகமப் பள்ளி ஏன் தேவை?
  • இந்தியாவில் 39% சிறுவர்கள் இருக்கிறார்கள்
  • தமிழ்நாட்டில் 24% சிறுவர்கள் இருக்கிறார்கள்
  • உலக அளவில் 27% சிறுவர்கள் இருக்கிறார்கள்
இந்த கணக்குப்படி சுமார் 3-இல் ஒரு பங்கு சிறார்கள் இருக்கிறார்கள்.
  • 30 வயதிற்கு மேல் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்கள் 4%
  • 30 வயதிற்குள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் 80% 
திருச்சபைகள் 4 % மக்களை இரட்சிப்புக்குள்ளாக வழிநடத்த வேண்டும் என்று எடுக்கும் முயற்சிகளில் சிறிதளவு கூட, 80% மக்களை இரட்சிப்புக்குள்ளாக வழிநடத்துவதற்கு முயற்சிகள் எடுப்பதில்லை.

பல திருச்சபைகள் சுகமளிக்கும் ஆராதனை, அபிஷேக கூட்டங்கள், கன்வென்ஷன் கூட்டங்கள், எழும்புதல் துதி ஆராதனை இவை அனைத்தையும் சிறப்பாய் நடத்துகிறார்கள். சிறுவர் ஊழியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

உபாகமம் 6:7
நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்து பேசி,
இங்கே கடவுள் சொல்லும்போது, உன் பிள்ளைகளுக்கு கருத்தாய் போதி என்று கற்றுக்கொடுக்கிறார். நேரம் இருந்தால் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடு என்று ஆண்டவர் சொல்லவில்லை, கற்றுக்கொடுக்க விரும்பினால் கற்றுக்கொடு என்று சொல்லாமல், கருத்தாய் போதி என்று ஓர் கட்டளையாக சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். ஆண்டவர் கட்டளையாகச் சொன்ன இந்த வார்த்தை, இன்று Optional ஆக மாறிவிட்டது. மற்ற ஊழியங்களுக்கு திருச்சபை செலவு செய்வதை விட, சிறுவர் ஊழியத்திற்கென்று செலவு செய்யும் அளவு மிகக் குறைவாகவே இருக்கிறது. காரணம் என்ன? சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
இயக்குநர் வந்தால் தங்க வைப்பதற்கு இடம் இல்லை. எனவே, எங்கள் திருச்சபையில் விடுமுறை வேதாகமப் பள்ளி நடைபெறவில்லை என்று சொல்லும் திருச்சபைகள் இன்றும் இருக்கிறது.

1. அழைப்பு
எபிரெயர் 5:4
மேலும், ஆரோனைப் போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறவதில்லை.
இப்படிப்பட்ட சூழலில் கடவுள் இந்த சிறார் திருப்பணிக்காக உங்களையும் என்னையும் அழைத்ததை எண்ணி, நாம் மகிழ்ச்சி அடைவோம். கடவுள் நம்மை அழைத்த நோக்கத்தை உணர்ந்தவர்களாக, உண்மையோடும் உத்தமத்தோடும் இந்த திருப்பணியை செய்ய கடவுள் நம்மை உற்சாகப்படுத்துவாராக. 

2. பாராட்டு
அதிகமாக பாராட்டுக்கள் கிடைக்கப்படாத ஊழியம் இந்த சிறுவர் ஊழியம். நான் எவ்வளவு முயற்சி செய்து, கடின உழைப்பை செலுத்தி பிள்ளகைளுக்கு பாடம் கற்றுக்கொடுத்தாலும், எனக்கான பாராட்டும், அங்கிகாரமும் கிடைக்கப்படாத ஊழியம் இந்த சிறுவர் ஊழியம். 
மற்றவர்கள் என்னை பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காக அல்ல, என்னை அழைத்த கடவுளுக்கு நான் உண்மையுள்ளவனாய் இந்த திருப்பணியை செய்ய வேண்டும்.

திமிர்வாதக்காரனை கொண்டு வந்த நான்கு வாலிபர்களுடைய பெயர் கூட திருமறையில் இல்லை. (மாற்கு 2)

ஒரு பெண் விலைமதிப்பற்ற நலதம் என்னும் உத்தம தைலத்தை இயேசுவின் பாதத்தில் ஊற்றினால், அந்த பெண்ணின் பெயர் திருமறையில் இல்லை. ஆனால், அந்த வீட்டின் உரிமையான் ஓர் குஷ்டரோகி என்றும், அவர் பெயர் சீமோன் என்றும் குறிப்பு உள்ளது. (மாற்கு 14:3)
5 அப்பம், 2 மீன் அற்புதத்தில் சிறுவனிடமிருந்து வாங்கிச் சென்ற பிலிப்புவின் பெயர் இடம் பெற்றிருக்கும், ஆனால், அந்த சிறுவனின் பெயர் இடம் பெற்றிருக்காது. 

3. ஒற்றுமை 
இந்த சிறுவர் ஊழியத்தில் ஒற்றுமை மிக மிக முக்கியமானதாகும்.


V. இயக்குநர் அறிமுகம்:

VI. ஆசிரியர் அறிமுகம்

VII. நேரம்:
(Chokalinga Nagar Church)
08:30 - 08:50 - Teacher's Devotion
08:50 - 09:00 - Line Up
09:00 - 09:45 - General Assembly I
09:45 - 10:30 - Class Section I
10:30 - 11:20 - Class Section II & Work Book
11:20 - 12:00 - General Assembly II
12:00 - 12:30  Teacher's Sharing Time


VIII. சிறப்பு நாட்கள்:
(Chokalinga Nagar Church)
01/05/2026 - Inaugural Day
02/05/2026 - Friendship Day
03/05/2026 - VBS - Sunday
04/05/2026 - Green Day
05/05/2026 - Exhibition Day
06/05/2026 - Giving Day
07/05/2026 - Love Feast
08/05/2026 - Cleaning Day
09/05/2026 - Witness Day & Exam
10/05/2026 - Final Day

IX. இதர காரியங்கள்
  1. Notes of Lession & Chat Work Check 
  2. ஒவ்வொரு குழுவிற்கும் என்ன பெயர் வைக்கலாம்?
  3. கடைசி நாள் ஆசிரியர்கள், Inter, Senior-க்கு திருமறைத் தேர்வு நடத்தலாமா?
  4. தினம் ஒரு பொதுவான திருமறைக் கேள்வி கேட்டு பரிசு கொடுக்க வேண்டும்

X. Class Team
  • Stage 1 - அரும்புகள் - KG, 1,2
  • Stage 2 - முகிழ்கள் - 3,4
  • Stage 3 - மொட்டுக்கள் - 5,6
  • Stage 4 - மலர்கள் - 7,8
  • Stage 5 - கனிகள் - 9,10
  • Stage 6 - விதைகள் - 11,12

XI. நிறைவு மன்றாட்டு


யோசேப்பின் "சிகரம்" பயணம்
ஏமி கார்மைக்கேல் - கடவுளின் சேவை பயணம் யோசேப்பின் வாழ்க்கை

ஒவ்வொரு பாடமும் ஏமி கார்மைக்கேலின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, யோசேப்பின் வேதாகம பகுதியோடு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டி நூலை எப்படி பயன்படுத்துவது?
ஒவ்வொரு நாளும் கீழ்க்கண்ட கட்டமைப்பில் அமைந்துள்ளது:

பகுதி
ஏமி கார்மைக்கேல் கதை
விபரங்கள்
வாழ்க்கை நிகழ்வு
நோக்கம்
பிள்ளைகளை பாடத்திற்கு ஆயத்தப்படுத்தல்


பகுதி
மையக்கருத்து
விபரங்கள்
பாடத்தின் மூன்று முக்கிய சொற்கள்
நோக்கம்
இயக்குநர் மனம் பதியச்செய்துகொள்ள


பகுதி
வேதாகம பகுதி
விபரங்கள்
ஆதியாகமப் பகுதிகள் (தொடக்க நூல்)
நோக்கம்
தினசரி திருமறைப் பகுதியோடு இணைத்தல்


பகுதி
மனப்பாட வசனம்
விபரங்கள்
குழந்தைகள் மனப்பாடம் செய்ய வசனம்
நோக்கம்
வாரம் முழுவதும் பயன்படுத்த


பகுதி
இலக்குகள்
விபரங்கள்
பாடத்தின் முடிவிலே அடைய வேண்டியவை
நோக்கம்
செயல்பாடுகள்


பகுதி
வலியுறுத்த / தவிர்க்க வேண்டியது
விபரங்கள்
செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது
நோக்கம்
தெளிவான வழிநடத்துதல்


பகுதி
கற்றல் நோக்கம்
விபரங்கள்
மூன்று முக்கிய திறமை வளர்ச்சி திறன்கள்
நோக்கம்
பாட முடிவை மதிப்பீடு செய்ய


பகுதி
வழிகாட்டி கேள்வி
விபரங்கள்
தலைவர் கேட்கும் ஒரு செயல்முறை கேள்வி
நோக்கம்
மாணவர்கள் தங்கள் சிந்தனை கொள்ள


இயக்குநர்களுக்கான முக்கிய அறிவுரைகள்
  • ஒவ்வொரு பாடத்தையும் விளக்கும் முன் ஏமி கார்மைக்கேல் கதையைக் குழந்தைகளுக்கு சரியான விதத்தில் சொல்லுங்கள் அல்லது நடித்துக்காட்டுங்கள். (If possible use projector to screen)
  • மனப்பாட வசனம் ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும், முடிவிலும் பிள்ளைகளுடன் இணைந்து சொல்லுங்கள்.
  • வழிகாட்டி கேள்வியை கலந்துரையாடலுக்கு பயன்படுத்துங்கள்.
  • வலியுறுத்த வேண்டியது மற்றும் தவிர்க்க வேண்டிதை இயக்குநர்கள் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டாம்.
  • கற்றல் நோக்கம் பகுதியை பாடத்தின் முடிவில் மாணவர்கள் செய்த தீர்மானங்களை செயல்படுத்த திறன் கொண்டுள்ளார்களா? என சிந்திப்பதற்கு பயன்படுத்துங்கள். 


வசனம் கற்பித்தல்
  • சைகை முறையில் கற்றுக் கொடுக்கலாம்.
  • Mute, Voice என்ற இரண்டு தலைப்பிற்கு ஏற்ப இரண்டு புகைப்படங்களை தயார் செய்ய வேண்டும். Mute படத்தைக் காட்டும் போது, சைகை மட்டும் காட்ட வேண்டும். Voice படத்தைக் காட்டும் போது, சத்தமாக சொல்ல வேண்டும். இரண்டையும் காட்டும் போது, சைகை செய்து கொண்டு சத்தமாக சொல்ல வேண்டும்.
  • வசனத்தை பெரிய அட்டையில் ஒரு அட்டையில் ஒரு வார்த்தை என்ற விதத்தில் எழுத வேண்டும். எத்தனை அட்டை வருகிறதோ அத்தனை பிள்ளைகளை முன்பாக அழைத்து, அவர்களை வரிசையாக நிற்க வைத்து, கற்றுக் கொடுக்கலாம்.
  • வசனத்தை சிறிய காகிதத்தில் எழுதி, பலூனுக்குள் போட வேண்டும். அதை சிறார்களை அழைத்து ஊதி, வெடிக்கச் செய்ய வேண்டும். அவர்கள் மூலமாக வசனத்தை கற்றுக் கொடுக்கலாம்.
  • வசனத்தை சிறு காகிதத்தில் எழுதி, ஆங்காங்கே ஒலித் வைக்க வேண்டும். எங்கே இருக்கிறது என்று, ஒரு சிறு காகிதத்தில் எழுதி, அதை பலூனுக்குள் போட்டு சிறு பிள்ளைகளை உடைத்து, வசனம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கச் செய்ய வேண்டும். 
  • வசனத்தை சிறு சிறு காகிதத்தில் எழுதி, அதை ஒவ்வொரு ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும். அந்த ஆசிரியர் எடுக்கும் குழுவின் பெயரை எழுதி, பலூனுக்குள் வைக்க வேண்டும். சிறார்களை முன்பதாக அழைத்து, பலூனை உடைத்து ஆசிரியர் யார் என்று கண்டுபிடித்து, அந்த வசன அட்டைகளை வாங்கி வந்து, வசனத்தை கற்றுக் கொடுக்கலாம்.
  • Buppt மூலமாக கற்றுக் கொடுக்கலாம்.

தலைப்பு அறிமுகம்
  • தலைப்பை சிறு சிறு காகிதத்தில் எழுதி, ஏதேனும் குழுவினரை அழைத்து தலைப்பை கண்டுபிடிக்கச் செய்யலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.