Type Here to Get Search Results !

Acts Thirteen 13 Bible Questions with Answers Tamil | அப்போஸ்தலர் நடபடிகள் 13 கேள்வி பதில்கள் | Jesus Sam

==============
Book of ACTS Chapter Thirteen (13)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் பதிமூன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. பர்னபா, சிமியோன், லூகியு, மனாயீன், சவுல் ஆகியோர் எங்கு போதகராயிருந்தார்கள்?
A) பாப்போ
B) அந்தியோகியா
C) செலூக்கியா
Answer: B) அந்தியோகியா
    (அப்போஸ்தலர் 13:1)

02. மாயவித்தைக்காரனும் கள்ளதீர்க்கதரிசியுமான யூதன் யார்?
A) பர்யேசு
B) செர்கியுபவுல்
C) யோவான்
Answer: A) பர்யேசு
    (அப்போஸ்தலர் 13:6)

03. பர்யேசு எந்த பட்டணத்தை சேர்ந்தவர்?
A) பெர்கே
B) செலூக்கியா
C) பாப்போ
Answer: C) பாப்போ
    (அப்போஸ்தலர் 13:6)

04. செர்கியுபவுல் எந்த பட்டணத்தின் அதிபதியாயிருந்தார்?
A) சாலமி
B) அந்தியோகியா
C) பாப்போ
Answer: C) பாப்போ
    (அப்போஸ்தலர் 13:7)

05. பவுலால் சிலகாலம் குருடனாக்கப்பட்டது யார்?
A) பர்யேசு
B) செர்கியுபவுல்
C) யோவான்
Answer: A) பர்யேசு
    (அப்போஸ்தலர் 13:11)


06. பெர்கே பட்டணத்தில் பவுல், பர்னபாவை விட்டு எருசலேமிற்கு திரும்பியது யார்?
A) யோவான்
B) சிம்சோன்
C) மனாயீன்
Answer: A) யோவான்
    (அப்போஸ்தலர் 13:13)

07. இஸ்ரவேலர் பரதேசிகளாய் சஞ்சரித்த இடம் எது?
A) எகிப்து
B) பாலைவனம்
C) கில்காள்
Answer: A) எகிப்து
    (அப்போஸ்தலர் 13:17)

08. இஸ்ரவேலர் கானான் தேசத்தை சுதந்தரிக்க எத்தனை ஜாதிகளை அழித்தார்கள்?
A) ஏழு ஜாதிகள்
B) பதினொன்று ஜாதிகள்
C) பதினேழு ஜாதிகள்
Answer: A) ஏழு ஜாதிகள்
    (அப்போஸ்தலர் 13:19)

09. நியாயாதிபதிகள் எத்தனை வருடம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார்கள்?
A) முன்னூறு வருஷம்
B) நானூற்றைம்பது வருஷம்
C) அறுநூறு வருஷம்
Answer: B) நானூற்றைம்பது வருஷம்
    (அப்போஸ்தலர் 13:20)

10. இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதி யார்?
A) சிம்சோன்
B) சாமுவேல்
C) ஓத்னியேல்
Answer: B) சாமுவேல்
    (அப்போஸ்தலர் 13:20)
    (I சாமுவேல் 8:1-5)


11. சவுல் ராஜா எந்த கோத்திரத்தை சார்ந்தவர்?
A) யூதா கோத்திரம்
B) பென்யமீன் கோத்திரம்
C) ரூபன் கோத்திரம்
Answer: B) பென்யமீன் கோத்திரம்
    (அப்போஸ்தலர் 13:21)

12. சவுல் இஸ்ரவேலை எத்தனை வருடம் அரசாண்டார்?
A) இருபது வருஷம்
B) முப்பது வருஷம்
C) நாற்பது வருஷம்
Answer: C) நாற்பது வருஷம்
    (அப்போஸ்தலர் 13:21)

13. தேவன் தன் இருதயத்திற்கு ஏற்றவன் என்று யாரை சொன்னார்?
A) சவுல்
B) சாமுவேல்
C) தாவீது
Answer: C) தாவீது
    (அப்போஸ்தலர் 13:22)

14. யாருடைய சந்ததியில் தேவன் இயேசு கிறிஸ்துவை எழும்பப்பண்ணினார்?
A) சவுல்
B) சாமுவேல்
C) தாவீது
Answer: C) தாவீது
    (அப்போஸ்தலர் 13:22,23)

15. எந்த பட்டணத்தில் பவுலும், பர்னபாவும் தங்கள் கால்களில் இருந்த தூசியை உதரிப்போட்டார்கள்?
A) பெர்கே
B) அந்தியோகியா
C) பாப்போ
Answer: B) அந்தியோகியா
    (அப்போஸ்தலர் 13:14,50,51)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.