Type Here to Get Search Results !

Acts Fourteen 14 Quiz Questions with Answers Tamil | அப்போஸ்தலர்கள் 14 வினா விடைகள் | Jesus Sam

==============
Book of ACTS Chapter Fourteen (14)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் பதினான்காம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. எந்த பட்டணத்தில் ஜனங்கள் பிரிந்து சிலர் அப்போஸ்தலரையும் சிலர் யூதரையும் சேர்ந்துகொண்டார்கள்?
A) லீஸ்திரா
B) அந்தியோகியா
C) இக்கோனியா
Answer: C) இக்கோனியா
    (அப்போஸ்தலர் 14:4)

02. லீஸ்திராவும், தெர்பையும் எந்த நாட்டில் உள்ள பட்டணங்கள்?
A) பிசீத்தியா
B) லிக்கவோனியா
C) பம்பிலியா
Answer: B) லிக்கவோனியா
    (அப்போஸ்தலர் 14:6)

03. சப்பாணியிடம் இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் உண்டென்று கண்டது யார்?
A) பவுல்
B) யோவான்
C) பேதுரு
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 14:9)

04. லீஸ்திராவிலே சப்பாணியை எழுந்து காலூன்றி நிற்க செய்தது யார்?
A) பவுல்
B) பிலிப்பு
C) பேதுரு
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 14:10)

05. பவுல் பர்னபாவை பார்த்து தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று சொன்னது யார்?
A) லீஸ்திரா பட்டணத்தார்
B) அந்தியோகியா பட்டணத்தார்
C) இக்கோனியா பட்டணத்தார்
Answer: A) லீஸ்திரா பட்டணத்தார்
    (அப்போஸ்தலர் 14:11)


06. லீஸ்திரா பட்டணத்தார் பர்னபாவை எப்படி அழைத்தார்கள்?
A) பூப்பித்தர்
B) மெர்க்கூரி
C) யூப்பித்தர்
Answer: C) யூப்பித்தர்
    (அப்போஸ்தலர் 14:12)

07. லீஸ்திரா பட்டணத்தார் பவுலை எப்படி அழைத்தார்கள்?
A) பூப்பித்தர்
B) மெர்க்கூரி
C) யூப்பித்தர்
Answer: B) மெர்க்கூரி
    (அப்போஸ்தலர் 14:12)

08. பிரசங்கத்தை நடத்தினபடியால் மெர்க்கூரி என்று அழைக்கப்பட்டது யார்?
A) பவுல்
B) பர்னபா
C) பேதுரு
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 14:12)

09. லீஸ்திரா பட்டணத்தின் முன்னே இருந்த கோயிலின் பெயர் என்ன?
A) பூப்பித்தர்
B) மெர்க்கூரி
C) யூப்பித்தர்
Answer: C) யூப்பித்தர்
    (அப்போஸ்தலர் 14:13)

10. யூப்பித்தருடைய கோயில் பூஜாசாரி எருதுகளையும், பூமாலைகளையும் கொண்டு வந்து யாருக்கு பலியிட மனதாயிருந்தார்?
A) பவுல், பர்னபா
B) பேதுரு, யோவான்
C) பிலிப்பு, அந்திரேயா
Answer: A) பவுல், பர்னபா
    (அப்போஸ்தலர் 14:13)


11. அப்போஸ்தலர்களில் தங்கள் வஸ்திரங்களை கிழித்துக்கொண்டது யார்?
A) பவுல், பர்னபா
B) பேதுரு, யோவான்
C) பிலிப்பு, அந்திரேயா
Answer: A) பவுல், பர்னபா
    (அப்போஸ்தலர் 14:14)

12. நாங்களும் உங்களை போல‌ பாடுள்ள மனுஷர் தானே என்றது?
A) பவுல், பர்னபா
B) பேதுரு, யோவான்
C) பிலிப்பு, அந்திரேயா
Answer: A) பவுல், பர்னபா
    (அப்போஸ்தலர் 14:15)

13. எந்த பட்டணத்தில் பவுலை கல்லெறிந்தார்கள்?
A) லீஸ்திரா
B) அந்தியோகியா
C) இக்கோனியா
Answer: A) லீஸ்திரா
    (அப்போஸ்தலர் 14:8,19)

14. எந்த பட்டணத்தார் சவுலை கல்லெறிந்தார்கள்?
A) லீஸ்திரா, இக்கோனியா
B) அந்தியோகியா, இக்கோனியா
C) லீஸ்திரா, அந்தியோகியா
Answer: B) அந்தியோகியா, இக்கோனியா
    (அப்போஸ்தலர் 14:19)

15. லீஸ்திரா, இக்கோனியா, அந்தியோகியாவில் மூப்பரை ஏற்படுத்தியது?
A) பவுல், பர்னபா
B) பேதுரு, யோவான்
C) பிலிப்பு, அந்திரேயா
Answer: A) பவுல், பர்னபா
    (அப்போஸ்தலர் 14:23)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.