Type Here to Get Search Results !

Acts Fifteen 15 Bible Questions with Answers Tamil | அப்போஸ்தலர் நடபடிகள் 15 கேள்வி பதில்கள் | Bible Study in Tamil | Jesus Sam

==============
Book of ACTS Chapter Fifteen (15)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் பதினைந்தாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. எங்கிருந்து வந்தவர்கள் 'நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனமடையாவிட்டால் இரட்சிக்கப்பட மாட்டீர்கள்' என்றார்கள்?
A) யூதேயா
B) எருசலேம்
C) சமாரியா
Answer: A) யூதேயா
    (அப்போஸ்தலர் 15:1)

02. தேவன் புறஜாதியாருக்கு காட்சியளித்ததை முதல் முதலில் அப்போஸ்தலருக்கு சொன்னது யார்?
A) பேதுரு
B) யாக்கோபு
C) சிமியோன்
Answer: C) சிமியோன்
    (அப்போஸ்தலர் 15:14)

03. ஓய்வு நாள் தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்ட ஆகமம் எது?
A) சுவிசேஷ ஆகமம்
B) தீர்க்கதரிசன ஆகமம்
C) மோசேயின் ஆகமம்
Answer: C) மோசேயின் ஆகமம்
    (அப்போஸ்தலர் 15:21)

04. பவுல் பர்னபாவோடு அந்தியோகியாவுக்கு யாரை அனுப்பினார்கள்?
A) சீலா, யூதா
B) மாற்கு, யோவான்
C) மத்தியா, பர்னபா
Answer: A) சீலா, யூதா
    (அப்போஸ்தலர் 15:22)

05. பர்சபா என்பவரின் மற்றொரு பெயர் என்ன?
A) சீலா
B) பர்னபா
C) யூதா
Answer: C) யூதா
    (அப்போஸ்தலர் 15:22)


06. அப்போஸ்தலர் எந்த பட்டணத்துக்கு நிறுபங்களை எழுதினார்கள்?
A) சீரியா
B) அந்தியோகியா
C) சிலிசியா
Answer: A) சீரியா, B) அந்தியோகியா, C) சிலிசியா
    (அப்போஸ்தலர் 15:23)

07. இயேசு கிறிஸ்துவுக்காக தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்க துணிந்தவர்கள் யார்?
A) சீலா, யூதா
B) மாற்கு, யோவான்
C) பவுல், பர்னபா
Answer: C) பவுல், பர்னபா
    (அப்போஸ்தலர் 15:25)

08. அந்தியோகியாவிற்கு நிறுபங்களை கொண்டு சென்ற நால்வரில் தீர்க்கதரிசிகள் யார்?
A) சீலா, யூதா
B) மாற்கு, யோவான்
C) பவுல், பர்னபா
Answer: A) சீலா, யூதா
    (அப்போஸ்தலர் 15:32)

09. அந்தியோகியாவிலே தரித்திருக்கிறது யாருக்கு நலமாய் கண்டது?
A) சீலா
B) மாற்கு
C) பவுல்
Answer: A) சீலா
    (அப்போஸ்தலர் 15:34)

10. மாற்குவை நம்மோடு அழைத்துக்கொண்டு போக வேண்டும் என்றது யார்?
A) சீலா
B) பர்னபா
C) பவுல்
Answer: B) பர்னபா
    (அப்போஸ்தலர் 15:37)


11. பவுல் பர்னபாவின் பிரிவிற்கு காரணமாயிருந்தது யார்?
A) சீலா
B) மாற்கு
C) யூதா
Answer: B) மாற்கு
    (அப்போஸ்தலர் 15:37-39) 

12. பம்பிலியா நாட்டில் பவுல் பர்னபாவை விட்டு பிரிந்து சென்றது யார்?
A) சீலா
B) மாற்கு
C) யூதா
Answer: B) மாற்கு
    (அப்போஸ்தலர் 15:38)

13. பவுலும் பர்னபாவும் கோபங்கொண்டு ஒருவரையொருவர் விட்டு பிரிந்த இடம் எது?
A) சீரியா
B) அந்தியோகியா
C) சிலிசியா
Answer: B) அந்தியோகியா
    (அப்போஸ்தலர் 15:35,39)

14. சீப்புரு தீவுக்கு பர்னபாவோடு சென்றது யார்?
A) சீலா
B) மாற்கு
C) பவுல்
Answer: B) மாற்கு
    (அப்போஸ்தலர் 15:39)

15. சீரியா, சிலிசியா பட்டணங்களுக்கு பவுல் தன்னோடு யாரை அழைத்துச் சென்றார்?
A) சீலா
B) மாற்கு
C) யூதா
Answer: A) சீலா
    (அப்போஸ்தலர் 15:40,41)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.