Type Here to Get Search Results !

Acts Seventeen 17 Quiz Questions with Answers | அப்போஸ்தலர் நடபடிகள் 17 வினா விடைகள் | Jesus Sam

==============
Book of ACTS Chapter Seventeen (17)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் பதினேழாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. உலகத்தை கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள் என்று சொன்னது எந்த பட்டணத்தார்?
A) பெரோயா
B) தெசலோனிக்கே
C) அத்தேனே
Answer: B) தெசலோனிக்கே
    (அப்போஸ்தலர் 17:6,1)

02. தெசலோனிக்கே பட்டணத்தில் பவுலை ஏற்றுக்கொண்டது யார்?
A) யாசோன்
B) தியொனீசியு
C) கிறிஸ்பு
Answer: A) யாசோன்
    (அப்போஸ்தலர் 17:7,1)

03. ஜாமீன் வாங்கிக்கொண்டு விடுவிக்கப்பட்டது யார்?
A) பவுல்
B) தியொனீசியு
C) யாசோன்
Answer: C) யாசோன்
    (அப்போஸ்தலர் 17:9)

04. மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டது எந்த பட்டணத்தார்?
A) பெரோயா
B) அப்பொலோனியா
C) தெசலோனிக்கே
Answer: A) பெரோயா
    (அப்போஸ்தலர் 17:10,11)

05. தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகள் யார்?
A) பெரோயா
B) அம்பிபோலி
C) அத்தேனே
Answer: A) பெரோயா
    (அப்போஸ்தலர் 17:11,10)


06. எங்கிருந்து வந்த யூதர்கள் பெரோயா பட்டணத்து ஜனங்களை பவுலுக்கு விரோதமாக கிளப்பிவிட்டார்கள்?
A) அத்தேனே
B) தெசலோனிக்கே
C) எருசலேம்
Answer: B) தெசலோனிக்கே
    (அப்போஸ்தலர் 17:13)

07. சீலா, தீமோத்தேயுவிற்காக பவுல் எந்த பட்டணத்தில் காத்துக் கொண்டிருந்தார்?
A) பெரோயா
B) தெசலோனிக்கே
C) அத்தேனே
Answer: C) அத்தேனே
    (அப்போஸ்தலர் 17:15,16)

08. எந்த பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு பவுல் ஆவியிலே மிகுந்த வைராக்கியமடைந்தார்?
A) பெரோயா
B) தெசலோனிக்கே
C) அத்தேனே
Answer: C) அத்தேனே
    (அப்போஸ்தலர் 17:16)

09. எப்பிக்கூரரும், ஸ்தோயிக்கருமான ஞானிகள் பவுலோடு வாக்குவாதம் பண்ணின இடம் எது?
A) பெரோயா
B) அம்பிபோலி
C) அத்தேனே
Answer: C) அத்தேனே
    (அப்போஸ்தலர் 17:18,16)

10. எந்த பட்டணத்தில் உள்ள மார்ஸ் மேடையில் பவுல் பிரசங்கித்தார்?
A) பெரோயா
B) அப்பொலோனியா
C) அத்தேனே
Answer: C) அத்தேனே
    (அப்போஸ்தலர் 17:19,16)


11. நவமான காரியங்களை சொல்லுகிறதிலும் கேட்கிறதிலும் பொழுது போக்குகிறவர்கள் எந்த பட்டணத்தார்?
A) பெரோயா
B) அம்பிபோலி
C) அத்தேனே
Answer: C) அத்தேனே
    (அப்போஸ்தலர் 17:21)

12. எந்த பட்டணத்தில் இருந்த பலிபீடத்தில் 'அறியப்படாத தேவனுக்கு' என்று எழுதப்பட்டிருந்தது?
A) பெரோயா
B) தெசலோனிக்கே
C) அத்தேனே
Answer: C) அத்தேனே
    (அப்போஸ்தலர் 17:23,21)

13. அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே என்று சொன்னது யார்?
A) பவுல்
B) தீமோத்தேயு
C) பேதுரு
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 17:27)

14. மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவர் யார்?
A) யுஸ்து
B) தியொனீசியு
C) யாசோன்
Answer: B) தியொனீசியு
    (அப்போஸ்தலர் 17:34)

15. மார்ஸ் மேடையில் இருந்த ஸ்திரியின் பெயர் என்ன?
A) தாமரி
B) லீதியாள்
C) ரோதை
Answer: A) தாமரி
    (அப்போஸ்தலர் 17:34)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.