Type Here to Get Search Results !

Acts Eighteen 18 Bible Quiz Questions with Answers Tamil | அப்போஸ்தலர் நடபடிகள் 18 கேள்வி பதில்கள் | Jesus Sam

==============
Book of ACTS Chapter Eighteen  (18)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் பதினெட்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டு போகும்படி கட்டளையிட்டது யார்?
A) இராயன்
B) கிலவுதியுராயன்
C) கல்லியோன்
Answer: B) கிலவுதியுராயன்
    (அப்போஸ்தலர் 18:2)

02. இத்தாலியிலிருந்து வந்த பொந்து தேசத்தான் யார்?
A) யுஸ்து
B) அப்பொல்லோ
C) ஆக்கில்லா
Answer: C) ஆக்கில்லா
    (அப்போஸ்தலர் 18:2)

03. ஆக்கில்லாவின் மனைவி பெயர் என்ன?
A) பிரிஸ்கிலா
B) பிரிஸ்கில்லா
C) பிரிஸ்டில்லா
Answer: B) பிரிஸ்கில்லா
    (அப்போஸ்தலர் 18:2)

04. கூடாரம் பண்ணுகிற தொழிலாளிகள் யார்?
A) பவுல்
B) பிரிஸ்கில்லா
C) ஆக்கில்லா
Answer: A) பவுல், B) பிரிஸ்கில்லா, C) ஆக்கில்லா
    (அப்போஸ்தலர் 18:3)

05. உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின் மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன் என்றது யார்?
A) பவுல்
B) அப்பொல்லோ
C) கல்லியோன்
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 18:6,5)


06. யாருடைய வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது?
A) யுஸ்து
B) ஆக்கில்லா
C) கிறிஸ்பு
Answer: A) யுஸ்து
    (அப்போஸ்தலர் 18:7)

07. கொரிந்து பட்டணத்து ஜெப ஆலய தலைவன் யார்?
A) யுஸ்து
B) ஆக்கில்லா
C) கிறிஸ்பு
Answer: C) கிறிஸ்பு
    (அப்போஸ்தலர் 18:8,1)

08. 'நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே' என்று கர்த்தர் பவுலோடு சொன்ன இடம் எது?
A) துரோவா
B) கெங்கிரேயா
C) கொரிந்து
Answer: C) கொரிந்து
    (அப்போஸ்தலர் 18:9,1)

09. பவுல் கொரிந்து பட்டணத்தில் எத்தனை நாட்கள் உபதேசம் பண்ணினார்?
A) ஆறு மாதம்
B) ஒரு வருஷம் ஆறு மாதம்
C) இரண்டு வருஷம் ஆறு மாதம்
Answer: B) ஒரு வருஷம் ஆறு மாதம்
    (அப்போஸ்தலர் 18:11,1)

10. அகாயா நாட்டின் அதிபதி யார்?
A) இராயன்
B) கிலவுதியுராயன்
C) கல்லியோன்
Answer: C) கல்லியோன்
    (அப்போஸ்தலர் 18:12)


11. ஜெப ஆலயத் தலைவனாகிய சொஸ்தேனேயை நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தது யார்?
A) யூதர்
B) கிரேக்கர்கள்
C) ரோமர்
Answer: B) கிரேக்கர்கள்
    (அப்போஸ்தலர் 18:17)

12. பவுல் தலைச்சவரம் பண்ணிக்கொண்ட பட்டணம் எது?
A) எபேசு
B) கெங்கிரேயா
C) சீரியா
Answer: B) கெங்கிரேயா
    (அப்போஸ்தலர் 18:18)

13. வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்க வேண்டும் என்றது யார்?
A) சீலா
B) தீமோத்தேயு
C) பவுல்
Answer: C) பவுல்
    (அப்போஸ்தலர் 18:21,18)

14. அலெக்சந்திரியா பட்டணத்தான், சாதுரியவான், வேதாகமங்களில் வல்லவன் யார்?
A) யுஸ்து
B) அப்பொல்லோ
C) கிறிஸ்பு
Answer: B) அப்பொல்லோ
    (அப்போஸ்தலர் 18:24)

15. ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாவும் தேவனுடைய மார்க்கத்தை யாருக்கு விவரித்து காண்பித்தார்கள்?
A) பவுல்
B) அப்பொல்லோ
C) கல்லியோன்
Answer: B) அப்பொல்லோ
    (அப்போஸ்தலர் 18:26,24)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.