Type Here to Get Search Results !

Acts Nineteen 19 Bible Questions with Answers Tamil | அப்போஸ்தலர் 19 வினா விடைகள் தமிழில் | Bible Study in Tamil | Jesus Sam

==============
Book of ACTS Chapter Nineteen (19)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் பத்தொன்பாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. மேடான தேசங்கள் வழியாக எபேசுவுக்கு வந்தது யார்?
A) பவுல்
B) அப்பொல்லோ
C) எரஸ்து
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 19:1)

02. பரிசுத்த ஆவி உண்டென்று நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றது எந்த பட்டணத்தார்?
A) எபேசு
B) அகாயா
C) ஆசியா
Answer: A) எபேசு
    (அப்போஸ்தலர் 19:2,1)

03. எபேசுவிலே பவுலால் பரிசுத்த ஆவியைப் பெற்று தீர்க்கதரிசனம் சொன்னது எத்தனை பேர்?
A) ஏழு
B) பனிரெண்டு
C) பதினைந்து
Answer: B) பனிரெண்டு
    (அப்போஸ்தலர் 19:7,6,1)

04. எபேசியருடைய ஜெப ஆலயத்தில் பவுல் பிரசங்கித்தது எத்தனை மாதம்?
A) ஒரு மாதம்
B) இரண்டு மாதம்
C) மூன்று மாதம்
Answer: C) மூன்று மாதம்
    (அப்போஸ்தலர் 19:8,1)

05. திறன்னு என்பவனுடைய வித்தியாசாலையிலே பவுல் எத்தனை வருடம் சம்பாஷித்தார்?
A) ஒரு வருஷம்
B) இரண்டு வருஷம்
C) மூன்று வருஷம்
Answer: B) இரண்டு வருஷம்
    (அப்போஸ்தலர் 19:9,10)


06. யாருடைய கச்சைகளையும், உறுமால்களையும் வியாதிக்காரர் மேல் போட்டார்கள்?
A) பவுல்
B) பிலிப்பு
C) பேதுரு
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 19:11,12)

07. பொல்லாத ஆவி பிடித்தவர்களிடம் பேசிய ஏழு பேர் யாருடைய குமாரர்?
A) ஸ்கேவா
B) அலெக்சந்தா
C) தெமேத்திரியு
Answer: A) ஸ்கேவா
    (அப்போஸ்தலர் 19:13,14)

08. தேசாந்திரிகளாய் திரிகிற மந்திரவாதிகளின் தகப்பன் யார்?
A) ஸ்கேவா
B) அப்பொல்லோ
C) எரஸ்து
Answer: A) ஸ்கேவா
    (அப்போஸ்தலர் 19:13,14)

09. ஸ்கேவா என்பவன் ஒரு _______ .
A) தேசாதிபதி
B) ஜெப ஆலயத் தலைவன்
C) பிரதான ஆசாரியன்
Answer: C) பிரதான ஆசாரியன்
    (அப்போஸ்தலர் 19:14)

10. எபேசு பட்டணத்தில் மாயவித்தை காரர்களிடம் இருந்த புத்தகங்களின் தொகை எவ்வளவு?
A) ஐம்பதினாயிரம்
B) அறுபதினாயிரம்
C) எழுபதினாயிரம்
Answer: A) ஐம்பதினாயிரம்
    (அப்போஸ்தலர் 19:19)


11. தீமோத்தேயும், எரஸ்தும் யாருக்கு உதவியாக இருந்தார்கள்?
A) பவுல்
B) யோவான்
C) பேதுரு
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 19:22,21)

12. தியானாள் கோவிலைப் போல வெள்ளியிலே சிறிய கோவிலை செய்தது யார்?
A) ஸ்கேவா
B) தெமேத்திரியு
C) அலெக்சந்தா
Answer: B) தெமேத்திரியு
    (அப்போஸ்தலர் 19:24)

13. தட்டான் என்று அழைக்கப்பட்டது யார்?
A) ஸ்கேவா
B) தீமோத்தேயு
C) தெமேத்திரியு
Answer: C) தெமேத்திரியு
    (அப்போஸ்தலர் 19:24)

14. பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கெதோனியர் யார்?
A) காயு
B) அரிஸ்தர்க்கு
C) எரஸ்து
Answer: A) காயு, B) அரிஸ்தர்க்கு
    (அப்போஸ்தலர் 19:29)

15. எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று எவ்வளவு நேரம் சத்தமிட்டார்கள்?
A) இரண்டு மணி நேரம்
B) மூன்று மணி நேரம்
C) நான்கு மணி நேரம்
Answer: A) இரண்டு மணி நேரம்
    (அப்போஸ்தலர் 19:34)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.