உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
==================
ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் என்னைப் பார்க்கும்படி வந்திருந்தார். ஐயா சொல்லுங்கள் என்று விவரம் அறிந்தேன். அவர் அருகாமையில் நின்று கொண்டிருந்த 6 வயது நிரம்பிய மூத்த மகனுக்கு இரத்தத்தில் கேன்சர் உள்ளது என்றும், அவன் தும்மினாலோ அல்லது இருமினாலோ மற்றவர்களுக்கு பரவும் என்றும், அதனால் தான் வெளியே நின்று கொண்டிருக்கிறேன் என்றும், என் பிள்ளைகளுக்காக ஜெபிப்பீர்களா? என்றும் வேதனை நிறைந்த குரலில் தன் இரண்டு கண்களிலிருந்தும் கண்ணீர் வடிய என்னிடம் கூறினார். நான் எத்தனையோ டாக்டர்களிடமும் எத்தனையோ கோவில்களுக்கெல்லாம் சென்றுவிட்டேன் என் மகனுக்கு சரீர சுகம் கிடைக்கவில்லை ஆனால் சமீப நாட்களாக நான் இயேசுவை குறித்தும், அவர் செய்த அற்புதங்களைக் குறித்தும் கேள்விப்பட்டிருக்கிறேன். என் மகனுக்காக ஜெபியுங்கள் என்றார். நான் உடனே அந்த இடத்திலேயே இயேசுவின் வல்லமையுள்ள வார்த்தைகளை சொல்லி ஜெபித்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அற்புதம் செய்வார் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
சில மாதங்கள் கழித்து அவரை சந்திக்க நேர்ந்தது. குழந்தையைப் பற்றியும் அவரது குடும்ப சூழ்நிலையைப் பற்றியும் விசாரித்தேன். அவ்வளவு தான் அவருக்கு அளவில்லாத சந்தோஷம், முற்றிலுமாக ஒரு பெரிய மாற்றத்தைக் காண முடிந்தது. குழந்தை நன்றாக இருக்கிறான். பள்ளியில் சேர்த்துள்ளோம். முற்றிலுமாக இயேசு அற்புதம் செய்துவிட்டார் என்று மகிழ்ச்சியோடு சொன்னார். எனக்கு மிகுந்த சந்தோஷம். ஆண்டவர் அற்புதம் செய்துவிட்டார். இதற்கு காரணம் என்ன தெரியுமா? முதலாவது இயேசுவால் அற்புதம் செய்ய முடியும் என்று அவர்கள் விசுவாசித்தார்கள். மகனுக்கு சரீர சுகத்தை பெற்றுக்கொண்டார்கள்.
எத்தனையோ டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெற்று விட்டேன் ஒன்றும் என் சரீரத்தில் உள்ள தீராத நோயை குணப்படுத்த முடியவில்லை என்று மிகுந்த மன வேதனை, துக்கம் தாளாமல் ஒவ்வொரு நாளையும் ஒரு வருடம் போல் கழித்து கொண்டு இருக்கிறீர்களா? எத்தனையோ கோவில்களுக்குச் சென்று குறைகளை முறையிட்டு விட்டேன்! எவ்வளவோ பரிகாரங்களையும் செய்து விட்டேன், ஆனால் எனக்கு உதவி செய்வார் யாரும் இல்லையே! வீட்டில் கூட யாரிடமும் சகஜமாகப் பழக முடியவில்லையே எல்லோரும் என்னை ஒரு புழுவைப் போல் பார்க்கிறார்களே என்று உடைந்த உள்ளத்தோடு இருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார்.
அந்த சிறுவனுக்கு செய்த அற்புதத்தை எனக்கும் செய்வார் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நம்பிக்கை வைக்கும்போது அவர் நிச்சயம் உங்களை மாற்றுவார். இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொண்டு, நம் துக்கங்களையெல்லாம் சுமந்தார். நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டார். நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டு நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணினார்.
நம்முடைய நிந்தைகளையும் / கண்ணீரையும் போக்கவே இயேசு இந்த உலகத்தில் வந்தார். எண்ணிலடங்கா நன்மைகளையும் / சுகத்தையும் / ஆசீர்வாதத்தையும் உலகத்தில் கோடிக்கணக்கானோர் பெற்று இன்றும் ஆசீர்வாதத்தோடு வாழ்கின்றனர்.
இயேசு கிறிஸ்துவே இந்த உலகத்தில் கோடிக்கணக்கானோர் வாழ்வில் ஆசீர்வாதங்களையும் அற்புதங்களையும் செய்துள்ளார் என்று அவர்மீது நம்பிக்கை வைத்து, இயேசுவாகிய நீரே என்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி என்னை அழிவுக்கு தப்புவிப்பீர் என்று நிச்சயம் நம்புகிறேன். சுகம் கொடுத்து என்னை ஆசீர்வதியும் என்று ஜெபம் செய்யுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதித்து விட்டார். சுகத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். இயேசுவிடம் நீங்கள் பெற்றுக் கொண்ட நன்மைகளை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள். ஆமென்.
தொடர்புக்கு,
வல்லமையுள்ள இயேசு ஊழியங்கள்,
57/29, பம்மல் நல்லதம்பி தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை. – 600 078
செல்: 9382157309
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.