Type Here to Get Search Results !

Genesis 44 Forty Four Bible Quiz Question & Answer in Tamil | ஆதியாகமம் 44 வினா விடைகள் தமிழில் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Forty Four (44)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து நான்காம் (44) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. யோசேப்பு யாருடைய சாக்கில் வெள்ளி பாத்திரத்தை வைக்கச் சொன்னான்?
    அ) ரூபன்
    ஆ) சிமியோன்
    இ) பென்யமீன்
Answer: இ) பென்யமீன்
    (ஆதியாகமம் 44:2,12)

02. யோசேப்பு தன் சகோதரர் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய் தானியத்தை நிரப்பி எப்போது அனுப்பினான்?
    அ) அதிகாலை
    ஆ) மதியம்
    இ) சாயங்காலம்
Answer: அ) அதிகாலை
    (ஆதியாகமம் 44:2,3)

03. நீங்கள் நன்மைக்கு தீமை செய்தது என்ன? என்று யோசேப்பின் சகோதரரிடம் கேட்டது யார்?
    அ) யோசேப்பு
    ஆ) வீட்டு விசாரனைக்காரன்
    இ) இஸ்ரவேல்
Answer: ஆ) வீட்டு விசாரனைக்காரன்
    (ஆதியாகமம் 44:4)

04. யோசேப்பின் சகோதரர் இப்படிப்பட்ட காரியத்துக்கும் எங்களுக்கும் __________ என்றார்கள்.
    அ) தூரம்
    ஆ) சம்பந்தம் ஏது
    இ) வெகுதூரம்
Answer: அ) வெகுதூரம்
    (ஆதியாகமம் 44:7)

05. யோசேப்பின் சகோதரர் நாங்கள் உம்முடைய எஜமானின் வீட்டிலிருந்து ________ ________ ஐ திருடிக்கொண்டு போவோமா என்றார்கள்.
    அ) பாத்திரத்தையும், ரசத்தையும்
    ஆ) கழுதையையும், குதிரையையும்
    இ) வெள்ளியையும், பொன்னையும்
Answer: இ) வெள்ளியையும், பொன்னையும்
    (ஆதியாகமம் 44:8)


06. எவனிடத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்படுமோ அவனை என்ன செய்ய வேண்டும் என்று வீட்டு விசாரனைக்காரன் சொன்னான்?
    அ) அடிமையாக வேண்டும்
    ஆ) சிறையில் அடைக்கப்பட வேண்டும்
    இ) கொலைசெய்யப்பட வேண்டும்
Answer: அ) அடிமையாகவேண்டும்
    (ஆதியாகமம் 44:10)

07. பென்யமீனின் சாக்கிலே பாத்திரம் இருந்ததை கண்டு வஸ்திரங்களை கிழித்துக்கொண்டது யார்?
    அ) யோசேப்பு
    ஆ) வீட்டு விசாரனைக்காரன்
    இ) யோசேப்பின் சகோதரர்
Answer: இ) யூதாவின் சகோதரர்
    (ஆதியாகமம் 44:12,13)

08. ஞானதிருஷ்டியினால் எனக்கு காரியம் தெரியும் என்று யோசேப்பின் சகோதரரிடம் சொன்னது யார்?
    அ) யோசேப்பு
    ஆ) வீட்டு விசாரனைக்காரன்
    இ) பார்வோன்
Answer: அ) யோசேப்பு
    (ஆதியாகமம் 44:15)

09. பாத்திரத்தை வைத்திருக்கிறவனும், நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றது யார்?
    அ) யூதா
    ஆ) சிமியோன்
    இ) ரூபன்
Answer: அ) யூதா
    (ஆதியாகமம் 44:16)

10. அப்படிப்பட்ட செய்கை எனக்கு தூரமாயிருப்பதாக என்றது யார்?
    அ) யோசேப்பு
    ஆ) வீட்டு விசாரனைக்காரன்
    இ) இஸ்ரவேல்
Answer: அ) யோசேப்பு
    (ஆதியாகமம் 44:17)

 

11. எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ அவனே எனக்கு அடிமையாயிருப்பான் என்றது யார்?
    அ) யோசேப்பு
    ஆ) வீட்டு விசாரனைக்காரன்
    இ) பார்வோன்
Answer: அ) யோசேப்பு
    (ஆதியாகமம் 44:17)

12. யூதா யோசேப்பை பார்த்து நீர் யாருக்கு ஒப்பாயிருக்கிறீர் என்றான்?
    அ) தேவன்
    ஆ) எங்கள் தகப்பன்
    இ) பார்வோன்
Answer: இ) பார்வோன்
    (ஆதியாகமம் 44:18)

13. எகிப்திலே யூதா யோசேப்பை எப்படி அழைத்தான்?
    அ) எஜமான்
    ஆ) ஆண்டவர்
    இ) பார்வோன்
Answer: ஆ) ஆண்டவர்
    (ஆதியாகமம் 44:18,20,22)

14. யோசேப்பு தன் சகோதரரிடம் உங்களுக்கு தகப்பனாவது, ________ உண்டா என்று கேட்டான்.
    அ) தாயாவது
    ஆ) சகோதரியாவது
    இ) சகோதரனாவது
Answer: இ) சகோதரனாவது
    (ஆதியாகமம் 44:19)

15. யோசேப்பிடம் பென்யமீனுக்காக நான் உம்மிடம் அடிமையாயிருக்கிறேன் என்றது யார்?
    அ) யூதா
    ஆ) சிமியோன்
    இ) ரூபன்
Answer: அ) யூதா
    (ஆதியாகமம் 44:33,18)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.