Type Here to Get Search Results !

Genesis 42 Forty Two Question & Answer | ஆதியாகமம் 42 அதிகாரம் கேள்வி பதில்கள் | Bible Quiz Questions Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Forty Two (42)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து இரண்டாம் (42) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ன? என்று கேட்டது யார்?
    அ) பார்வோன்
    ஆ) யோசேப்பு
    இ) யாக்கோபு
Answer: இ) யாக்கோபு
    (அதியாகமம் 42:1)

02. எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்பட்டது யார்?
    அ) யாக்கோபு
    ஆ) இஸ்மவேலர்
    இ) ஏதோமியர்
Answer: அ) யாக்கோபு
    (அதியாகமம் 42:2)

03. யாக்கோபு தானியங்கொள்ள எகிப்துக்கு எத்தனைபேரை அனுப்பினான்?
    அ) ஏழு
    ஆ) பத்து
    இ) பதினொன்று
Answer: ஆ) பத்து
    (அதியாகமம் 42:3)

04. யாக்கோபின் குமாரரோடு கடினமாய் பேசியது யார்?
    அ) பார்வோன்
    ஆ) போத்திபார்
    இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
    (அதியாகமம் 42:7,30)

05. பார்வோனின் ஜீவனைக் கொண்டு ஆணையிட்டு சொல்லுகிறேன் என்றது யார்?
    அ) யூதா
    ஆ) யோசேப்பு
    இ) ரூபன்
Answer: ஆ) யோசேப்பு
    (அதியாகமம் 42:15,16)


06. யோசேப்பு தன் சகோதரரை எத்தனை நாள் காவலில் வைத்தான்?
    அ) மூன்று
    ஆ) நான்கு
    இ) ஐந்து
Answer: அ) மூன்று
    (அதியாகமம் 42:17)

07. யாக்கோபின் குமாரரை பார்த்து நீங்கள் சாவதில்லை என்றது யார்?
    அ) பார்வோன்
    ஆ) யோசேப்பு
    இ) யாக்கோபு
Answer: ஆ) யோசேப்பு
    (அதியாகமம் 42:20)

08. யோசேப்பின் இரத்தபழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றது யார்?
    அ) யூதா
    ஆ) சிமியோன்
    இ) ரூபன்
Answer: இ) ரூபன்
    (அதியாகமம் 42:22)

09. யாக்கோபின் குமாரரிடத்தில் துபாசியைக்கொண்டு பேசியது யார்?
    அ) பார்வோன்
    ஆ) போத்திபார்
    இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
    (அதியாகமம் 42:23)

10. யோசேப்பு பென்யமீனை கூட்டிக்கொண்டு வரும்வரை யாரை பிடித்து கட்டுவித்தான்?
    அ) யூதா
    ஆ) சிமியோன்
    இ) ரூபன்
Answer: ஆ) சிமியோன்
    (அதியாகமம் 42:24)


11. யாக்கோபின் குமாரருக்கு வழிக்கு வேண்டிய ஆகாரத்தை கொடுக்க சொன்னது யார்?
    அ) பார்வோன்
    ஆ) போத்திபார்
    இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
    (அதியாகமம் 42:25)

12. யோசேப்பின் சகோதரர் தானியத்தை எதின்மேல் வைத்து ஏற்றிக்கொண்டு போனார்கள்?
    அ) குதிரை
    ஆ) கழுதை
    இ) ஒட்டகம்
Answer: ஆ) கழுதை
    (அதியாகமம் 42:26)

13. அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்ததை கண்டு பயந்தது யார்?
    அ) யாக்கோபு
    ஆ) யாக்கோபின் குமாரரின் பிள்ளைகள்
    இ) யோசேப்பின் சகோதரர்
Answer: அ) யாக்கோபு இ) யோசேப்பின் சகோதரர்
    (அதியாகமம் 42:35)

14. பென்யமீனை உம்மிடத்தில் கொண்டுவராவிட்டால் என் இரண்டு குமாரரை கொன்றுபோடும் என்றது யார்?
    அ) யூதா
    ஆ) இசக்கார்
    இ) ரூபன்
Answer: இ) ரூபன்
    (அதியாகமம் 42:37)

15. நீங்கள் என் நரைமயிரை சஞ்சலத்தோடே பாதாளத்தில் இரங்கப்பண்ணுவீர்கள் என்றது யார்?
    அ) பார்வோன்
    ஆ) யோசேப்பு
    இ) யாக்கோபு
Answer: இ) யாக்கோபு
    (அதியாகமம் 42:38)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.