Type Here to Get Search Results !

Genesis 37 Thirty Seven Question Answer | ஆதியாகமம் 37 கேள்வி பதில்கள் | Book of Genesis Quiz in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Thirty Seven (37)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பது ஏழாம் (37) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. தன் சகோதரருடைய துன்மார்க்கத்தை தன் தகப்பனிடம் சொன்னது யார்?
    அ) ரூபன்
    ஆ) யோசேப்பு
    இ) பென்யமீன்
Answer: ஆ) யோசேப்பு
    (ஆதியாகமம் 37:2)

02. இஸ்ரவேல் பலவருணமான அங்கியை யாருக்கு செய்வித்தான்?
    அ) சிமியோன்
    ஆ) யோசேப்பு
    இ) பென்யமீன்
Answer: ஆ) யோசேப்பு
    (ஆதியாகமம் 37:3)

03. சூரியனும், சந்திரனும் பதினெரு நட்சத்திரங்களும் என்னை வணங்கியது என்றது யார்?
    அ) ரூபன்
    ஆ) யோசேப்பு
    இ) இஸ்ரவேல்
Answer: ஆ) யோசேப்பு
    (ஆதியாகமம் 37:9)

04. யோசேப்பின் சொப்பணத்தின் நிமித்தம் அவனை கடிந்துகொண்டது யார்?
    அ) லேயாள்
    ஆ) இஸ்ரவேல்
    இ) சகோதரர்
Answer: ஆ) இஸ்ரவேல்
    (ஆதியாகமம் 37:10)

05. யோசேப்பின் சொப்பணத்தின் நிமித்தம் அவனை பகைத்து, அவன்மேல் பொறாமைகொண்டது யார்?
    அ) லேயாள்
    ஆ) இஸ்ரவேல்
    இ) சகோதரர்
Answer: இ) சகோதரர்
    (ஆதியாகமம் 37:5,8,11)


06. சகோதரரையும் ஆடுமாடுகளையும் பார்க்கும்படி இஸ்ரவேல் யாரை அனுப்பினான்?
    அ) ரூபன்
    ஆ) யோசேப்பு
    இ) பென்யமீன்
Answer: ஆ) யோசேப்பு
    (ஆதியாகமம் 37:13)

07. யோசேப்பின் சகோதரர் எங்கு ஆடுமேய்த்துக் கொண்டிருந்தார்கள்?
    அ) சீகேம்
    ஆ) அதுல்லாம்
    இ) தோத்தான்
Answer: இ) தோத்தான்
    (ஆதியாகமம் 37:17)

08. யோசேப்பை சொப்பணக்காரன் என்றது யார்?
    அ) சகோதரர்
    ஆ) மீதியானியர்
    இ) இஸ்ரவேல்
Answer: அ) சகோதரர்
    (ஆதியாகமம் 37:19)

09. யோசேப்பை அவன் சகோதரர்கள் கைக்கு தப்புவித்தது யார்?
    அ) யூதா
    ஆ) சிமியோன்
    இ) ரூபன்
Answer: இ) ரூபன்
    (ஆதியாகமம் 37:21,22)


10. கந்தவர்க்கங்களையும், பிசின் தைலத்தையும், வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள் மேல் ஏற்றிக்கொண்டு போனது யார்?
    அ) எகிப்தியர்
    ஆ) கானானியர்
    இ) இஸ்மவேலர்
Answer: இ) இஸ்மவேலர்
    (ஆதியாகமம் 37:25)


11. இஸ்மவேலர் எங்கிருந்து எங்கு சென்றார்கள்?
    அ) சீகேம் - எகிப்து
    ஆ) கீலேயாத் - எகிப்து
    இ) கானான் - எகிப்து
Answer: ஆ) கீலேயாத் - எகிப்து
    (ஆதியாகமம் 37:25)

12. யோசேப்பை இஸ்மவேலரிடம் விற்றுப்போடுவோம் என்றது யார்?
    அ) யூதா
    ஆ) சிமியோன்
    இ) ரூபன்
Answer: அ) யூதா
    (ஆதியாகமம் 37:26)

13. யோசேப்பை இஸ்மவேலரிடம் எத்தனை வெள்ளிக்காசிற்கு விற்றார்கள்?
    அ) இருபது
    ஆ) முப்பது
    இ) நாற்பது
Answer: அ) இருபது
    (ஆதியாகமம் 37:28)

14. பார்வோனின் பிரதானியும், தலையாரிகளுக்கு அதிபதியுமாயிருந்தது யார்?
    அ) ஆஸ்நாத்
    ஆ) யோசேப்பு
    இ) போத்திபார்
Answer: இ) போத்திபார்
    (ஆதியாகமம் 37:36)

15. மீதியானியர் யோசேப்பை யாரிடம் விற்றார்கள்?
    அ) பார்வோன்
    ஆ) போத்திபார்
    இ) தலையாரி
Answer: ஆ) போத்திபார்
    (ஆதியாகமம் 37:36)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.