Type Here to Get Search Results !

பரிசுத்த மெய் விவாக ஆராதனை முறைமை | Holy Ma Order of Service | திருமண ஆராதனை ஒழுங்கு முறை | Merrage or Wedding Service | Jesus Sam

பரிசுத்த மெய் விவாக ஆராதனை முறைமை


ஜெயம்: ஆயர்

மங்கள இசை: மணப்பென்னை தேவாலயத்திற்குள் அழைத்து வருதல்

(அனைவரும் எழுந்து நின்று)

பாடல் 1
1. ஏதேனில் ஆதி மணம்
உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம்
மாறாதிருக்குமே

2. இப்போதும் பக்தியுள்ளோர்
விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னமாவார்
மும்முறை வாழ்த்துண்டாம்

3. ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே,
இம்மாப்பிள்ளைக்குப் பெண்ணை
கொடுக்க வாருமே

4. இருதன்மையும் சேர்ந்த
கன்னியின் மைந்தனே
இவர்கள் இருகையும்
இணைக்க வாருமே

5. மெய் மணவாளனான
தெய்வ குமாரர்க்கே
சபையாம் மனையாளை
ஜோடிக்கும் ஆவியே

6. நீரூம் இந்நேரம் வந்து
இவ்விரு பேரையும்
இணைத்து அன்பாய் வாழ்த்தி
மெய் பாக்கியம் ஈந்திடும்

7. கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்
எத்தீங்கில் நின்றும் காத்து
பேர் வாழ்வு ஈந்திடும்
    ஆமென்


முகவுரை
ஆயர்: மணமக்கள் நிற்கவும் சபையார் யாவரும் அமரவும்.

ஆயர்: பிரியமானவர்களே, கிதியோன் ஜெபக்குமார்-யும் செல்வமணி-யும் திருமணத்தில் இணைப்பதற்காகக் கடவுள் முன்னிலையில் நாம் கூடி வந்திருக்கிறோம். திருமண வாழ்க்கை கடவுளால் நியமிக்கப்பட்டது. எல்லா மனிதரும் இதை மேன்மையானதாகக் கொள்ள வேண்டுமென்று திருமறை கட்டளையிடுகிறது. நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து கலிலேயாவில் உள்ள கானா ஊரில் தம்முடைய பிரசன்னத்தால் இதை ஆசீர்வதித்தார்.

திருமண வாழ்க்கையைக் குறித்து நமது ஆண்டவர் சொல்லுவதைக் கேளுங்கள்:
    சிருஷ்டிப்பு முதல், கடவுள் அவர்களை ஆணும், பெண்ணுமாகப் படைத்தார். இதினிமித்தம் ஒருவன், தன் தகப்பனையும், தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான். இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆகவே, இனி அவர்கள் இருவரல்ல, ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். இப்படியிருக்க, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக.

    ஆகையால திருமணத்தை ஒருவரும் அற்பாக எண்ணி யோசனையின்றிச் செய்யாமல், கருத்தோடும், ஜெபத்தோடும் திருணம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நோக்கங்களைச் சிந்தித்து அதைச் செய்வது அவசியம்.

    கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் இன்பத்திலும், துன்பத்திலும், தங்கள் வாழ்நாள் முழுவதும் தோழமையும், உதவியும் ஆதரவும் அளிக்கவும்;

    கடவுள் தாமே படைத்து, இயேசு கிறிஸ்துவில் மீட்டுக்கொண்ட மனித சுபாவ உணர்ச்சிகளை அவரே தூய்மைப்படுத்தி வழி நடத்தவும்;

    குடும்பங்களில் பிள்ளைகள் பிறந்து, கடவுளுக்கு மகிமையாக நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவில் வளர்க்கப்படவும்;

    இவ்விதமாய்த் திருமணத்தை மேன்மையுள்ளதாகக் கருதுவதால் மனுக்குலம் உறுதியான அடிப்படையில் நிற்கவுமே, திருமணம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.



திருமண அறிக்கை
ஆயர்: கிதியோன் ஜெபக்குமார் – செல்வமணி இவ்விருவரும் இந்த தூய நிலைமையில் ஒன்றாக்கப்படுவதற்காக இங்கே வந்திருக்கிறார்கள். ஆனால், உங்களில் யாருக்காவது திருச்சபையின் நியமப்படியும், இந்திய தேசச் சட்டப்படியும், இவ்விருவருக்கும் திருணம் நடத்தக் கூடாதென்று நியாயமான தடை ஏதாவது தெரியுமானால் அதை இப்பொழுதே தெரிவிக்க வேண்டும்.

    இல்லாவிட்டால் இனி இதைக் குறித்து ஒருவரும் ஒன்றுஞ் சொல்லக்கூடாது

(மணமக்களைப் பார்த்து)
    நீங்கள் இருவரும் திருமணத்தில் ஒன்றாய் இணைக்கப்படக் கூடாதபடி உங்கள் இருவரில் யாருக்காவது, ஏதாவது காரணமிருந்தால், அதை இப்பொழுதே தெரிவிக்கக் கடவுள் முன்னிலையில் உங்கள் இருவருக்கும் கட்டளையிடுகிறேன்.

(தடையொன்றுஞ் சொல்லப்படவில்லையானால், இப்பொழுது மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவருக்கொருவர் மாலையிடலாம். மாலையிட்ட பின், குரு ஏறெடுக்கும் ஜெபம்)

    சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுள்ள பிதாவே, உம்முடைய உதவியின்றி நாங்கள் யாதொன்றையும் தகுந்த முறையில் செய்யத் திராணியற்றவர்கள். இவ்விருவரையும் உமது பராமரிப்பின்படி இங்கே அழைத்து வந்தீர். ஆதலால் இவர்களிருவரும் உம்முன் திருமண ஒப்பந்தத்தில் உடன்படவும், இவர்கள் கொடுக்கப்போகும் வாக்குறுதிகளை உண்மையாய்ப் பாதுகாக்கவும், உம்முடைய பேரருளை இவர்களில் பெருகச் செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

ஆயர்: மனமகனைப் பார்த்து
    கிதியோன் ஜெபக்குமார் நீர் செல்வமணி-ஐ உம் மனைவியாக ஏற்றுக் கொண்டு அவரை மாத்திரம் பற்றிக் கொள்வீரா?
மனமகன் விடை: ஆம் பற்றிக்கொள்வேன்.

ஆயர்: மகமகளைப் பார்த்து
    செல்வமணி நீர் கிதியோன் ஜெபக்குமார்-ஐ உம் கணவனாக ஏற்றுக்கொண்டு அவரை மாத்திரம் பற்றிக்கொள்வீரா?
மணமகள் விடை: ஆம் பற்றிக்கொள்வேன்.

ஆயர்: இந்த மணமக்களை திருமணத்திற்காகக் கொடுப்பவர்கள் யார்?
(பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெண்ணின் வலது கையை மாப்பிள்ளையின் வலது கையில் கொடுப்பார்)

(ஆயர் சொல்ல, அவருக்குப்பின் மணமகன் சொல்லுவது)
    கிதியோன் ஜெபக்குமார் ஆகிய நான் செல்வமணி ஆகிய உம்மை என் மனைவியாக ஏற்றுக் கொண்டு, இன்று முதல் நன்மையிலும் தீமையிலும், வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் சுகவீனத்திலும், வாழ்வின் இறுதி வரை கடவுளுடைய தூய நியமப்படி உம்மை நேசிக்கவும், காப்பாற்றவும், உம்மோடு இணங்கி வாழவும் வாக்குக் கொடுக்கிறேன்.

(ஆயர் சொல்ல, அவருக்குப்பின் மணமகள் சொல்லுவது)
    செல்வமணி ஆகிய நான் கிதியோன் ஜெபக்குமார் ஆகிய உம்மை என் கணவராக ஏற்றுக்கொண்டு இன்று முதல் நன்மையிலும் தீமையிலும், வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் சுகவீனத்திலும் வாழ்வின் இறுதி வரை கடவுளுடைய தூய நியமப்படி உம்மை நேசிக்கவும், காப்பாற்றவும் உம்மோடு இணங்கி வாழவும் வாக்குக் கொடுக்கிறேன்.

ஆயர்: இவ்வாக்குறுதியைக் கடவுள் கேட்டார். நாங்களும் கேட்டோம்.

திருமாங்கல்யம் ஆசீர்வதிக்கப்படுதல்
(முழங்காலில் நின்று பாடுதல்)

பாடல் 2
1. புத்திக்கெட்டாத அன்பின்வாரீ பாரும்
உம் பாதம் அண்டினோமே தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்

2. ஆ ஜீவ ஊற்றே இவரில் உம் நேசம்
நல் நம்பிக்கையும், வாழ்வு தாழ்விலும்
உம்பேரில் சாரும் ஊக்க விசுவாசம்
குன்றாத தீரமும் தந்தருளும்

3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்
வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
நிறைந்த ஜீவன் அன்பும் நல்குவீர்
ஆமென்

ஆயர்: திருமாங்கல்யத்தை ஆசீர்வதித்து ஏறெடுக்கும் ஜெபம்.
    இரக்கமுள்ள ஆண்டவரே, இந்தத் திருமாங்கல்யத்தை அளிக்கும் கிதியோன் ஜெபக்குமார்-ம் இதை ஏற்றுக்கொள்ளும் செல்வமணி-ம் ஒருவருக்கொருவர் உண்மையாயிருக்கவும், தங்கள் ஆயுள் முழுவதும் அன்பில் நிலைத்திருக்கவும், நீர் இத்திருமாங்கல்யத்தையும், இம்மணமக்களையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.

திருமாங்கல்யம் அணிதல்
(ஆயர் சொல்ல, அவருக்குப் பின்னால் மணமகன் சொல்வது: )
    உறுதியான நம்பிக்கைக்கும் நிலையான அன்பிற்கும் அடையாளமாக இந்தத் திருமாங்கல்யத்தை உமக்கு அணிவிக்கிறேன். என்னுடைய சரீரத்தால் உம்மை கனப்படுத்துகிறேன். என் உலகச் சம்பத்து அனைத்தும் உம்மோடு பகிர்ந்து கொள்கிறேன்.

(ஆயர் சொல்ல, அவருக்குப் பின்னால் மணமகள் சொல்வது)
    உறுதியான நம்பிக்கைக்கும் நிலையான அன்பிற்கும் அடையாளமாக இந்தத் திருமாங்கல்யத்தை ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய சரீரத்தால் உம்மை கனப்படுத்துகிறேன். என் உலகச் சம்பத்து அனைத்தையும் உம்மோடு பகிர்ந்து கொள்கிறேன்.

(ஆயர் இருவர் கைகளையும் இணைத்துச் சொல்வது)
    கிதியோன் ஜெபக்குமார்செல்வமணி கடவுளுக்கு முன்பாகவும் இந்த திருச்சபைக்கு முன்பாகவும் ஒருவருக்கொருவர் தங்கள் வாக்குறுதியைத் தெரிவித்திருக்கிறபடியால், இவர்கள் கடவுளுடைய நியமப்படியும், திருச்சபை ஒழுங்கின்படியும், இந்திய நாட்டின் சட்டப்படியும், கணவனும், மனைவியுமாய் இருக்கிறார்கள் என்று பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே தெரிவிக்கிறேன். – ஆமென்.

    ஆகையால் கடவுள் இணைத்தவர்களை மனிதன் பிரிக்காதிருப்பானாக. 

ஆயர்: ஜெபம் செய்வோம் (முழங்காலில் நிற்க)

    மகா இரக்கமும் கிருபையுமுள்ள கடவுளே, பரலோகத்திலும், பூலோகத்திலுமுள்ள முழுக் குடும்பத்துக்கும் நாமகாரணராயிருக்கிற எங்கள் பிதாவே, இப்பொழுதும் உமது நாமத்தில் நாங்கள் ஆசீர்வதிக்கிற கிதியோன் ஜெபக்குமார் - செல்வமணி என்னும் இவர்கள் மேல் உமது ஆசீர்வாதத்தை அனுப்பியருளும், இவர்கள் உண்மையாய் இசைந்து வாழ்ந்து தங்களுக்குள் செய்து கொண்ட உடன்படிக்கையையும், வாக்குறுதியையும் திட்டமாய்ப் பாதுகாத்து, உமது நியமங்களின்படி நடக்க அருள்புரிவீராக. எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டிக்கொள்கிறோம். – ஆமென்.

ஆசீர்வாதம்
    பிதாவாகிய கடவுள், குமாரனாகிய கடவுள், பரிசுத்த ஆவியாகிய கடவுள் உங்களை ஆசீர்வதித்துப் பராமரித்துப் பாதுகாப்பாராக. ஆண்டவர் உங்களை இரக்கமாய்க் கண்ணோக்கி, நீங்கள் இவ்வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதால் மறுமையில் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள, உங்களை சகல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாலும், கிருபையாலும் நிரப்புவாராக. – ஆமென்.

Choral Blessing
The Lord Bless Thee and Keep thee
Tho Lord make His face shine upon Thee
And be gracious unto Thee (2)
The Lord Lift up His Countenance upon Thee
And give thee peace     – Amen

பாடல் 3
பயந்து கர்த்தரின் தூய வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்கிய மேன்மை காண்பான்
- பயந்து

1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
எண்ணரும் நலன்கள் இல்லத்தில் புரிவாள்
- பயந்து

2. ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
மெலிவிலா நல்ல பாலருன் பாலே
மிகவும் களித்து வாழ்வார் அன்பாலே
- பயந்து

3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
- பயந்து

திருமறைப் பாடம்:

அருளுரை:

காணிக்கைப் பாடல் (திருமணப் பதிவு)
பாடல் 4
ஆசீர்வதியும் கர்த்தரே, ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே, நித்தம் மகிழவே
வீசிரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜானும்
ஆசீர்வதித்திடும்

1. இம்மண மக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின் சென்றும்
ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடன் பாக்ய சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கமருளுமே
- வீசிரோ

2. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏக ராஜனாய்
உற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே
- வீசிரோ

3. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்துதித்தும்மை பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமே
- வீசிரோ

ஜெபம் செய்வோம்

ஆயர்: கர்த்தாவே எங்களுக்கு இரங்கும்

சபையர்: கிறிஸ்துவே எங்களுக்கு இரங்கும்.

ஆயர்: கர்த்தாவே எங்களுக்கு இரங்கும்

அனைவரும்: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு விரோதமாய் குற்றஞ் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்க பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. – ஆமென்.

ஆயர்: கர்த்தாவே, உமது அடியானையும் உமது அடியாளையும் இரட்சியும்.

சபையர்: இவர்கள் உம்மையே நம்பி இருக்கிறார்கள்.

ஆயர்: கர்த்தாவே, பரத்திலிருந்து ஒத்தாசை அனுப்பியருளும்

சபையார்: இவர்களை என்றென்றைக்கும் காப்பாற்றியருளும்.

ஆயர்: இவர்களுக்கு பலத்த அரணாயிரும்.

சபையார்: பகைவரினின்று இவர்களைத் தப்புவியும்

ஆயர்: கர்த்தாவே எங்கள் ஜெபத்தை கேட்டருளும்.

சபையார்: எங்கள் விண்ணப்பம் உம்மிடத்தில் சேருவதாக.

    சர்வ வல்லவரே, நித்திய பிதாவே, திருமணமாகிய நியமத்தை மனுக்குடும்பத்துக்குக் கொடுத்து, உம்முடைய ஆசீர்வாதங்களால் அதை தூய்மைப்படுத்துகிறவரே, கணவனும் மனைவியுமாய் இப்பொழுது சேர்த்திணைக்கப்பட்டிருக்கும் உமது அடியார்களான, கிதியோன் ஜெபக்குமார் – செல்வமணி இவர்களை ஆசீர்வதியும். ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, ஒருவர் மகிழ்ச்சியை ஒருவர் பகிர்ந்து, தங்கள் வீட்டின் கடமைகளைச் சேர்ந்து நிறைவேற்றி, அன்பிலும், உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதிலும், இவர்கள் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாயிருக்க இவர்களுக்கு அருள் புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

    ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவே, நாசரேத்தில் குடும்ப வாழ்க்கையில் பங்கு கொண்டவரே, இந்த உமது அடியாருடைய வீட்டில் ஆண்டவரும், அரசனுமாய் ஆட்சிபுரியும். நீர் மனிதருக்கு சேவை செய்தபடியே இவர்களும் பிறருக்குச் சேவை புரிய அருள்தாரும். சொல்லாலும், செயலாலும் இவர்கள் அயலகத்தாருக்கு, உம்முடைய மீட்பின் அன்புக்குச் சாட்சிகளாயிருக்க அருள் புரியும். பிதாவோடும், பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாய் என்றென்றைக்கும் ஜீவித்து அரசாளுகிற உமது பரிசுத்த நாமத்திலே வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

    இரக்கமுள்ள ஆண்டவரே, கிருபையின் ஈவால், மனுக்குலத்தைத விருத்தியடைய செய்கிற பரமப்பிதாவே, இந்த உம் அடியார்கள் புத்திர பாக்கியம் பெற்று உமக்குத் துதியும் கனமும் உண்டாக, இந்தப் பிள்ளைகள் கிறிஸ்து மார்க்கத்துக்கேற்றவர்களாய் வளருவதை கண்டு, களிகூருமளவும் தெய்வ அன்பும் அபிமானமுள்ளோராய் ஒருமித்து வாழ, இவ்விருவருக்கும் உமது ஆசீர்வாதத்தை அருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டிக் கொள்கிறோம். – ஆமென்.

    சர்வ வல்லமையுள்ள ஆண்டவரே, நித்திய கடவுளே, எங்கள் உள்ளங்களையும் சரீரங்களையும் உமது கட்டளைகளின் வழியிலும், உமது கற்பனைகளுக்கடுத்த வேலையிலும் திருப்பி, பரிசுத்தப்படுத்தி வழிநடத்த வேண்டுமென்று உம்மை வேண்டிக் கொள்கிறோம். இங்கும், எல்லாக் காலத்திலும் நாங்கள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பாதுகாக்கப்பட உமது வல்லமையான ஆதரவைத்தாரும். எங்கள் ஆண்டவரும், இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டிக்கொள்ளுகிறோம். – ஆமென்
    நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், பிதாவாகிய கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியின் ஐக்கியமும், உங்கள் அனைவரோடும் இருப்பதாக. – ஆமென்.

(அல்லது)

    சமாதானத்தோடே உலகத்திற்குள் புறப்பட்டுப் போங்கள்; திடமனதாயிருங்கள்; நன்மையானவைகளைப் பற்றிக்கொள்ளுங்கள்; யாவருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; சோர்ந்து போனவர்களை பலப்படுத்துங்கள்; பலவீனரைத் தாங்குங்கள்; துன்பப்படுகிறவர்களுக்கு உதவி புரியுங்கள்; பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் சந்தோஷித்து ஆண்டவரில் அன்பு கூர்ந்து கர்த்தரையே சேவிப்பீர்களாக!
    பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவராகிய சர்வ வல்லமையுள்ள கடவுளுடைய ஆசீர்வாதம் உங்கள் மேல் தங்கி என்றென்றைக்கும் உங்களோடே நிலைத்திருக்கக்கடவது. – ஆமென்.

பாடல் 5
மங்களம் செழிக்க கிருபையருளும்
மங்கள நாதனே

1. மக்கள நித்திய மக்களம் நீ
மக்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவமெத்த மகத்துவ
அத்தனுக்கத்தனாம் ஆபிராம் தேவன் நீர்
- மங்களம்

2. மங்கள மணமகன் கிதியோன் ஜெபக்குமார்-க்கும்
மக்கள மணமகள் செல்வமணி-க்கும்
மானுவேலர்க்கும் மகானுபாவர்க்கும்
பத்தியுடன் புத்தி முக்தியளித்திடும் நித்தியனே உம்மை
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்
- மங்களம்

Wedding March

Thank You

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.