Type Here to Get Search Results !

Genesis Twenty Three 23 Bible Quiz Question Answer Tamil | ஆதியாகமம் 23 வினா விடைகள் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Twenty Three (23)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் இருபத்து மூன்றாம் (23) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. சாராள் எத்தனை வருஷம் உயிரோடிருந்தாள்?
    A) 127
    B) 152
    C) 175
Answer: A) 127
    (ஆதியாகமம் 23:1)

02. சாராள் எந்த தேசத்தில் மரித்தாள்?
    A) எகிப்து
    B) மோரியா
    C) கானான்
Answer: C) கானான்
    (ஆதியாகமம் 23:2)

03. எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவில் மரித்தது யார்?
    A) சாராள்
    B) ஆபிரகாம்
    C) லோத்து
Answer: A) சாராள்
    (ஆதியாகமம் 23:2)

04. நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன் என்றது யார்?
    A) லோத்து
    B) ஆபிரகாம்
    C) எலியேசர்
Answer: B) ஆபிரகாம்
    (ஆதியாகமம் 23:4)

05. எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு என்று ஆபிரகாமிடம் சொன்னது?
    A) எமோரியர்
    B) ஏத்தின் புத்திரர்
    C) வேலைக்காரர்
Answer: B) ஏத்தின் புத்திரர்
    (ஆதியாகமம் 23:6)

 

06. ஏத்தின் புத்திரருக்கு வந்தனம் செய்தது யார்?
    A) மம்ரே
    B) ஆபிரகாம்
    C) எலியேசர்
Answer: B) ஆபிரகாம்
    (ஆதியாகமம் 23:7,12)

07. ஆபிரகாம் ஏத்தின் புத்திரருக்கு எத்தனை முறை வந்தனம் செய்தான்?
    A) ஒன்று
    B) இரண்டு
    C) மூன்று
Answer: B) இரண்டு
    (ஆதியாகமம் 23:7,12)

08. சோகாருடைய குமாரன் பெயர் என்ன?
    A) மக்பேலா
    B) எப்பெரோன்
    C) நாகோர்
Answer: B) எப்பெரோன்
    (ஆதியாகமம் 23:8)

09. அப்படியல்ல என் ஆண்டவனே என் வார்த்தைகளை கேளும் என்றது யார்?
    A) ஆபிரகாம்
    B) ஏத்தின் புத்திரர்
    C) எப்பெரோன்
Answer: C) எப்பெரோன்
    (ஆதியாகமம் 23:10,11)

10. மக்பேலா நிலத்தின் விலை எவ்வளவு?
    A) 400 சேக்கல் பொன்
    B) 400 சேக்கல் வெள்ளி
    C) 400 சேக்கல் தங்கம்
Answer: B) 400‌ சேக்கல் வெள்ளி
    (ஆதியாகமம் 23:15)

 

11. மக்பேலா நிலத்தில் உள்ள குகை மற்றும் _____ ஆபிரகாமுக்கு சொந்தமானது.
    A) வீடுகள்
    B) தோட்டங்கள்
    C) மரங்கள்
Answer: C) மரங்கள்
    (ஆதியாகமம் 23:17)

12. மக்பேலா நிலம் யாருடைய நிலத்திற்கு எதிரே இருந்தது?
    A) மம்ரே
    B) ஆபிரகாம்
    C) நாகோர்
Answer: A) மம்ரே
    (ஆதியாகமம் 23:17,19)

13. மக்பேலா நிலம் எந்த தேசத்தில் இருந்தது?
    A) எகிப்து
    B) மோரியா
    C) கானான்
Answer: C) கானான்
    (ஆதியாகமம் 23:19)

14. சாராள் அடக்கம் பண்ணப்பட்ட இடம்?
    A) எகிப்து
    B) மெசொப்பொத்தாமியா
    C) மக்பேலா
Answer: C) மக்பேலா
    (ஆதியாகமம் 23:19)

15. யாருடைய புத்திரரிடத்தில் ஆபிரகாம் கல்லறையை வாங்கினான்?
    A) ஏத்
    B) லோத்து
    C) மம்ரே
Answer: A) ஏத்
    (ஆதியாகமம் 23:20)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.