Type Here to Get Search Results !

Genesis 33 Thirty Three Bible Quiz Question Answer | ஆதியாகமம் 33 அதிகாரம் கேள்வி பதில்கள் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Thirty Three (33)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பது மூன்றாம் (33) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. ஏழு விசை தரைமட்டும் குனிந்து வணங்கியது யார்?
    A) ஏசா
    B) யாக்கோபு
    C) லாபான்
Answer: B) யாக்கோபு
    (ஆதியாகமம் 33:3)

02. ஏசா யாருடைய கழுத்தை கட்டிக்கொண்டு முத்தஞ் செய்தான்?
    A) ஈசாக்கு
    B) யாக்கோபு
    C) லாபான்
Answer: B) யாக்கோபு
    (ஆதியாகமம் 33:4)

03. கழுத்தை கட்டிக்கொண்டு அழுத சகோதரர் யார்?
    A) ஏசா, யாக்கோபு
    B) ஈசாக்கு, இஸ்மவேல்
    C) ரூபன், சிமியோன்
Answer: A) ஏசா, யாக்கோபு
    (ஆதியாகமம் 33:4)

04. யாக்கோபு ஏசாவை சந்திக்கையில் ஏசாவை கடைசியாக வணங்கியது யார்?
    A) ராகேல்
    B) யோசேப்பு
    C) யாக்கோபு
Answer: A) ராகேல் B) யோசேப்பு
    (ஆதியாகமம் 33:7)

05. யாக்கோபு யாரை பார்த்து தேவனுடைய முகத்தை கண்டது போல் இருக்கிறது என்றான்?
    A) ஏசா
    B) லாபான்
    C) ஈசாக்கு
Answer: A) ஏசா
    (ஆதியாகமம் 33:10)

 
06. என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று ஏசாவிடம் வருந்திக் கேட்டுக்கொண்டது யார்?
    A) லாபான்
    B) ஏமோரின் புத்திரர்
    C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
    (ஆதியாகமம் 33:11)

07. என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவு கிடைத்தால் போதும் என்றது யார்?
    A) ஏசா
    B) யாக்கோபு
    C) லாபான்
Answer: B) யாக்கோபு
    (ஆதியாகமம் 33:15)

08. யாக்கோபு ஏசா சந்தித்த பிறகு ஏசா சென்ற இடம்?
    A) சேயீர்
    B) பதான் ஆராம்
    C) சுக்கோத்
Answer: A) சேயீர்
    (ஆதியாகமம் 33:16)

09. யாக்கோபு ஏசா சந்தித்த பிறகு யாக்கோபு சென்ற இடம்?
    A) சீகேம்
    B) சுக்கோத்
    C) சேயீர்
Answer: B) சுக்கோத்
    (ஆதியாகமம் 33:17)

10. யாக்கோபு சுக்கோத்தில் யாருக்காக கொட்டாரம் போட்டான்?
    A) பிள்ளைகள்
    B) மிருகஜீவன்கள்
    C) மனைவிகள்
Answer: B) மிருகஜீவன்கள்
    (ஆதியாகமம் 33:17)

 

11. சாலேம் என்னும் சீகேம் பட்டணம் எந்த தேசத்தில் இருந்தது?
    A) சீரியா
    B) கானான்
    C) எகிப்து
Answer: B) கானான்
    (ஆதியாகமம் 33:18)

12. யாக்கோபு பதான் ஆராமிலிருந்து வந்து எந்த பட்டணத்திற்கு எதிரே கூடாரம் போட்டான்?
    A) சீகேம்
    B) சுக்கோத்
    C) சேயீர்
Answer: A) சீகேம்
    (ஆதியாகமம் 33:18)

13. சீகேமின் தகப்பன் யார்?
    A) ஆரான்
    B) சாலேம்
    C) ஏமோர்
Answer: C) ஏமோர்
    (ஆதியாகமம் 33:19)

14. யாக்கோபு ஏமோரின் புத்திரரிடத்தில் நிலத்தை எத்தனை வெள்ளிக்காசிற்கு வாங்கினான்?
    A) நூறு
    B) இருநூறு
    C) முந்நூறு
Answer: A) நூறு
    (ஆதியாகமம் 33:19)

15. யாக்கோபு பலிபீடம் கட்டி அதற்கு வைத்த பெயர் என்ன?
    A) மிஸ்பா
    B) ஏல்எல்லோகே இஸ்ரவேல்
    C) லகாயிரோயீ
Answer: B) ஏல்எல்லோகே இஸ்ரவேல்
    (ஆதியாகமம் 33:20)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.