Type Here to Get Search Results !

Genesis 31 Thirty One Bible Quiz in Tamil | Question & Answer | ஆதியாகமம் 31 வினா விடைகள் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Thirty One (31)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பது ஒன்றாம் (31) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. யாருடைய முகம் நேற்று முந்தைய நாள் இருந்ததைவிட வேறுபட்டிருந்தது?
    A) லாபான்
    B) லாபானின் குமாரர்
    C) யாக்கோபு
Answer: A) லாபான்
    (ஆதியாகமம் 31:2)

02. யாக்கோபின் சம்பளத்தை லாபான் எத்தனை முறை மாற்றினான்?
    A) மூன்று
    B) ஏழு
    C) பத்து
Answer: C) பத்து
    (ஆதியாகமம் 31:7,41)

03. தங்கள் தகப்பனால் அந்நியராய் என்னப்பட்ட குமாரத்திகள் யார்?
    A) ராகேல், லேயாள்
    B) சாராள், ரெபேக்காள்
    C) சில்பாள், பில்காள்
Answer: A) ராகேல், லேயாள்
    (ஆதியாகமம் 31:14,15)

04. யாக்கோபு தன் மனைவியையும் பிள்ளைகளையும் எதின்மேல் ஏற்றி கொண்டு போனான்?
    A) குதிரை
    B) கழுதை
    C) ஒட்டகம்
Answer: C) ஒட்டகம்
    (ஆதியாகமம் 31:17)

05. லாபான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கையில் அவன் சுரூபங்களை திருடியது யார்?
    A) ராகேல்
    B) யாக்கோபு
    C) லேயாள்
Answer: A) ராகேல்
    (ஆதியாகமம் 31:19)

 

06. யாக்கோபு ஓடிப்போனது எத்தனையாவது நாளில் லாபானுக்கு அறிவிக்கப்பட்டது?
    A) மூன்று
    B) ஏழு
    C) பத்து
Answer: A) மூன்று
    (ஆதியாகமம் 31:22)

07. லாபான் எத்தனை நாள் பிரயாணம் பண்ணி கீலேயாத் மலையில் யாக்கோபை கண்டான்?
    A) மூன்று
    B) ஐந்து
    C) ஏழு
Answer: C) ஏழு
    (ஆதியாகமம் 31:23)

08. யாக்கோபு லாபானிடத்தில் எத்தனை வருஷம் இருந்தான்?
    A) பத்து வருஷம்
    B) பதினான்கு வருஷம்
    C) இருபது வருஷம்
Answer: C) இருபது வருஷம்
    (ஆதியாகமம் 31:38,41)

09. பகலில் வெளிலும், இரவில் __________ யாக்கோபை‌ பட்சித்தது.
    A) பனி
    B) குளிர்
    C) பயம்
Answer: B) குளிர்
    (ஆதியாகமம் 31:40)

10. நித்திரை யாருடைய கண்களுக்கு தூரமாயிருந்தது?
    A) ராகேல்
    B) யாக்கோபு
    C) லாபான்
Answer: B) யாக்கோபு
    (ஆதியாகமம் 31:40)

 

11. ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் ___________ தேவன் என்று யாக்கோபு சொன்னான்?
    A) பரிசுத்தமுள்ள
    B) பயபக்திக்குறிய
    C) உண்மையுள்ள
Answer: B) பயபக்திக்குறிய
    (ஆதியாகமம் 31:42,53)

12. யாக்கோபும் லாபானும் உடன்படிக்கை பண்ணின கல்லுக்கு லாபான் வைத்த பெயர் என்ன?
    A) மிஸ்பா
    B) ஜெர்சகதூதா
    C) கலயெத்
Answer: B) ஜெர்சகதூதா
    (ஆதியாகமம் 31:47)

13. யாக்கோபும் லாபானும் உடன்படிக்கை பண்ணின கல்லுக்கு யாக்கோபு வைத்த‌ பெயர் என்ன?
    A) மிஸ்பா
    B) ஜெர்சகதூதா
    C) கலயெத்
Answer: C) கலயெத்
    (ஆதியாகமம் 31:47)

14. இந்த குவியல் எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னதால் அவ்விடத்தின் பெயர் என்ன?
    A) மிஸ்பா
    B) ஜெர்சகதூதா
    C) கலயெத்
Answer: C) கலயெத்
    (ஆதியாகமம் 31:48)

15. பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னதால் அவ்விடத்தின் பெயர் என்ன?
    A) மிஸ்பா
    B) ஜெர்சகதூதா
    C) கலயெத்
Answer: A) மிஸ்பா
    (ஆதியாகமம் 31:50)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.