Type Here to Get Search Results !

Genesis 30 Thirty Bible Question And Answer | ஆதியாகமம் 30 பைபிள் வினா விடைகள் | Bible Study in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Thirty (30)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பதாம் (30) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. தன் சகோதரியின் மேல் பொறாமை கொண்டது யார்?
    A) ராகேல்
    B) ரெபேக்காள்
    C) லேயாள்
Answer: A) ராகேல்
    (ஆதியாகமம் 30:1)

02. எனக்கு பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றது யார்?
    A) ராகேல்
    B) பில்காள்
    C) லேயாள்
Answer: A) ராகேல்
    (ஆதியாகமம் 30:1)

03. பில்காளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தது யார்?
    A) ராகேல்
    B) லேயாள்
    C) லாபான்
Answer: A) ராகேல்
    (ஆதியாகமம் 30:3,4)

04. ராகேல் 'தேவன் என் வழக்கை தீர்த்து, என் சத்தத்தை கேட்டார்' என்று சொல்லி பில்காளின் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?
    A) காத்
    B) நப்தலி
    C) தாண்
Answer: C) தாண்
    (ஆதியாகமம் 30:6)

05. ராகேல் 'நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன்' என்று சொல்லி பில்காளின் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?
    A) காத்
    B) நப்தலி
    C) ஆசேர்
Answer: B) நப்தலி
    (ஆதியாகமம் 30:8)

 

06. தாண்‌, நப்தலி இவர்களின் தாய் பெயர் என்ன?
    A) ராகேல்
    B) பில்காள்
    C) சில்பாள்
Answer: B) பில்காள்
    (ஆதியாகமம் 30:6,8)

07. யாக்கோபுக்கு பில்காள் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தது யார்?
    A) ராகேல்
    B) பில்காள்
    C) லேயாள்
Answer: A) ராகேல்
    (ஆதியாகமம் 30:6,8)

08. சில்பாளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தது யார்?
    A) ராகேல்
    B) லேயாள்
    C) லாபான்
Answer: B) லேயாள்
    (ஆதியாகமம் 30:9)

09. லேயாள் 'ஏராளமாகிறது' என்று சொல்லி சில்பாளின் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?
    A) காத்
    B) இசக்கார்
    C) ஆசேர்
Answer: A) காத்
    (ஆதியாகமம் 30:11)

10. லேயாள் 'நான் பாக்கியவதி' என்று சொல்லி சில்பாளின் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?
    A) ஆசேர்
    B) செபுலோன்
    C) இசக்கார்
Answer: A) ஆசேர்
    (ஆதியாகமம் 30: 13)

 

11. காத், ஆசேர் இவர்களின் தாய் பெயர் என்ன?
    A) லேயாள்
    B) பில்காள்
    C) சில்பாள்
Answer: C) சில்பாள்
    (ஆதியாகமம் 30:11,13)

12. யாக்கோபு சில்பாள் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தது யார்?
    A) ராகேல்
    B) சில்பாள்
    C) லேயாள்
Answer: C) லேயாள்
    (ஆதியாகமம் 30:11,13)

13. யாக்கோபிடம் வந்து தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன் என்றது யார்?
    A) ராகேல்
    B) லேயாள்
    C) லாபான்
Answer: B) லேயாள்
    (ஆதியாகமம் 30:16)

14. லேயாள் 'என் வேலைக்காரியை என் புருஷனுக்கு கொடுத்த பலனை தேவன் எனக்கு தந்தார்' என்று சொல்லி தன் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?
    A) இசக்கார்
    B) செபுலோன்
    C) யோசேப்பு
Answer: A) இசக்கார்
    (ஆதியாகமம் 30:18)

15. லேயாள் 'தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்' என்று சொல்லி தன் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?
    A) யோசேப்பு
    B) பென்யமீன்
    C) செபுலோன்
Answer: C) செபுலோன்
    (ஆதியாகமம் 30:20)


16. யாக்கோபுக்கு ஒரு குமாரத்தியைப் பெற்றது யார்?
    A) ராகேல்
    B) சில்பாள்
    C) லேயாள்
Answer: C) லேயாள்
    (ஆதியாகமம் 30:21)

17. ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், தீனாள் இவர்களின் தாய் பெயர் என்ன?
    A) ராகேல்
    B) சில்பாள்
    C) லேயாள்
Answer: C) லேயாள்
    (ஆதியாகமம் 29:32,33,34,35)
    (ஆதியாகமம் 30:18,20,21)

18. யாக்கோபுக்கு லேயாள் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தது யார்?
    A) ராகேல்
    B) யாக்கோபு
    C) லேயாள்
Answer: C) லேயாள்
    (ஆதியாகமம் 29:32,33,34,35)
    (ஆதியாகமம் 30:18,20,21)

19. ராகேல் 'தேவன் என் நிந்தையை நீக்கினார், இன்னும் ஒரு குமாரனை தருவார்' என்று சொல்லி தன் மகனுக்கு என்ன பெயர் வைத்தாள்?
    A) ரூபன்
    B) பென்யமீன்
    C) யோசேப்பு
Answer: C) யோசேப்பு
    (ஆதியாகமம் 30:24)

20. யோசேப்பு, பென்யமீன் இவர்களின் தாய் பெயர் என்ன?
    A) ராகேல்
    B) பில்காள்
    C) சில்பாள்
Answer: A) ராகேல்
    (ஆதியாகமம் 30:24)
    (ஆதியாகமம் 35:18)

 

21. யாக்கோபுக்கு ராகேல் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தது யார்?
    A) ராகேல்
    B) யாக்கோபு
    C) லேயாள்
Answer: A) ராகேல்
    (ஆதியாகமம் 30:24)
    (ஆதியாகமம் 35:18)

22. புள்ளியும், வரியும், கறுப்புமுள்ள _________ ஆடுகளை யாக்கோபு பிரித்தான்?
    A) வெள்ளாடு
    B) செம்மறியாட்டுக்கடா
    C) செம்மறியாடு
Answer: C) செம்மறியாடு
    (ஆதியாகமம் 30:32)

23. வரியும், புள்ளியும் உள்ள ________ ஆடுகளை யாக்கோபு பிரித்தான்?
    A) வெள்ளாடு
    B) வெள்ளாட்டுக்கடா
    C) செம்மறியாடு
Answer: A) வெள்ளாடு
    (ஆதியாகமம் 30:32)

24. 'நீ சொன்னபடியே ஆகட்டும்' என்றது யார்?
    A) ராகேல்
    B) யாக்கோபு
    C) லாபான்
Answer: C) லாபான்
    (ஆதியாகமம் 30:34)

25. யாக்கோபு மற்றும் லாபானின் மந்தைக்கு இடையே இருந்த தூரம் எவ்வளவு?
    A) இரண்டு நாள்
    B) மூன்று நாள்
    C) நான்கு நாள்
Answer: B) மூன்று நாள்
    (ஆதியாகமம் 30:36)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.