Type Here to Get Search Results !

Genesis 24 Bible Quiz Question & Answer in Tamil | ஆதியாகமம் 24 கேள்விகளும் பதில்களும் | Bible Study in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Twenty Four (24)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் இருபத்து நான்காம் (24) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. நீ உன் கையை என் தொடையின் கீழ் வை என்றது யார்?
    A) ஈசாக்கு
    B) ஆபிரகாம்
    C) எலியேசர்
Answer: B) ஆபிரகாம்
    (ஆதியாகமம் 24:4)

02. ஆபிரகாமின் ஊழியக்காரன் பெண் பார்க்க எத்தனை ஒட்டகங்களில் சென்றான்?
    A) ஒன்று
    B) ஐந்து
    C) பத்து
Answer: C) பத்து
    (ஆதியாகமம் 24:10)

03. மெசொப்பொத்தாமியாவில் தண்ணீர் துரவண்டையில் நின்று கொண்டிருந்தது?
    A) நாகோர்
    B) ஆபிரகாமின் ஊழியக்காரன்
    C) லாபான்
Answer: B) ஆபிரகாமின் ஊழியக்காரன்
    (ஆதியாகமம் 24:10,11)

04. மகா ரூபவதி யார்?
    A) சாராள்
    B) ரெபேக்காள்
    C) ராகேல்
Answer: B) ரெபேக்காள்
    (ஆதியாகமம் 24:16,15)

05. குடியும் என் ஆண்டவனே, உம்முடைய ஒட்டகங்களும் குடித்து தீருமட்டும் வார்ப்பேன் என்றது யார்?
    A) சாராள்
    B) ரெபேக்காள்
    C) ராகேல்
Answer: B) ரெபேக்காள்
    (ஆதியாகமம் 24:18,19)

 

06. ஆபிரகாமின் ஊழியக்காரன் ரெபேக்காளுக்கு என்ன கொடுத்தான்?
    A) இரண்டு கடகம்
    B) அரை சேக்கல் பொற்காதணி
    C) பத்து சேக்கல் பொன்
Answer: A) இரண்டு கடகம் B) அரை சேக்கல் பொற்காதணி C) பத்து சேக்கல் பொன்
    (ஆதியாகமம் 24:22)

07. ரெபேக்காளின் சகோதரன் பெயர் என்ன?
    A) லாபான்
    B) பெத்துவேல்
    C) நாகோர்
Answer: A) லாபான்
    (ஆதியாகமம் 24:29)

08. கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உள்ளே வாரும் என்றது யார்?
    A) லாபான்
    B) பெத்துவேல்
    C) மில்க்காள்
Answer: A) லாபான்
    (ஆதியாகமம் 24:31)

09. நான் வந்த காரியத்தை சொல்லும் முன்னே புசிக்க மாட்டேன் என்றது யார்?
    A) ஈசாக்கு
    B) ஆபிரகாமின் ஊழியக்காரன்
    C) ஆபிரகாம்
Answer: B) ஆபிரகாமின் ஊழியக்காரன்
    (ஆதியாகமம் 24:33)

 

10. வடது புறத்தையாகிலும், இடது புறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றது யார்?
    A) லாபான்
    B) ஆபிரகாமின் ஊழியக்காரன்
    C) பெத்துவேல்
Answer: B) ஆபிரகாமின் ஊழியக்காரன்
    (ஆதியாகமம் 24:49)

11. இந்த காரியம் கர்த்தரால் வந்தது என்றது யார்?
    A) லாபான்
    B) பெத்துவேல்
    C) மில்க்காள்
Answer: A) லாபான் B) பெத்துவேல்
    (ஆதியாகமம் 24: 50)

12. ரெபேக்காள் பத்து நாளாகிலும் எங்களோடிருக்கட்டும் என்றது யார்?
    A) லாபான்
    B) பெத்துவேல்
    C) மில்க்காள்
Answer: A) லாபான் C) மில்க்காள்
    (ஆதியாகமம் 24:55)

13. ஈசாக்கு தியானம் பண்ண சென்ற நேரம் எது?
    A) அதிகாலை
    B) மத்தியானம்
    C) சாயங்காலம்
Answer: C) சாயங்காலம்
    (ஆதியாகமம் 24:63)

14. ஆபிரகாமின் ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் யாருக்கு விவரித்து சொன்னான்?
    A) ஈசாக்கு
    B) வேலைக்காரர்
    C) ஆபிரகாம்
Answer: A) ஈசாக்கு
    (ஆதியாகமம் 24:66)

15. ஈசாக்கின் மனைவி பெயர் என்ன?
    A) ராகேல்
    B) ரெபேக்காள்
    C) ரேயுமாள்
Answer: B) ரெபேக்காள்
    (ஆதியாகமம் 24:67)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.